search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிபந்தனைகள்"

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்க 25 நிபந்தனைகள் விதிக்க நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழு பரிந்துரை செய்துள்ளது. #NGT #NationalGreenTribunal #SterliteCase
    புதுடெல்லி:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்க நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழு பரிந்துரை செய்துள்ள முக்கிய நிபந்தனைகள் வருமாறு:-

    * ஸ்டெர்லைட் நிர்வாகம், ஆலை வளாகம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீரில் ஆர்சீனிக், காட்மியம், வெள்ளி, தாமிரம், ப்ளூரைடு ஆகியவை அடங்கியுள்ளனவா என்பதை ஆய்வு செய்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மாதம் ஒருமுறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இதற்கான சோதனை மாதிரிகளை தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் முன்னிலையில் எடுக்க வேண்டும்.

    * ஆலையில் வெளியேறும் திடக்கழிவுகளை கண்காணிக்க மாவட்ட கலெக்டர், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், நிபுணர்கள் ஆகியோரைக் கொண்ட ஒரு குழுவை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அமைக்க வேண்டும்.

    இந்த குழுக்களின் அறிக்கைகள் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் பரிந்துரைகள் செயல்படுத்தப்பட வேண்டும்.

    * உப்பாறு நதிப் படுகையில் 11 இடங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ள தாமிர துகள்கள் அகற்றப்படவேண்டும்.

    * எந்தவகையான கழிவுகளையும் அகற்றுவதற்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெறவேண்டும்.

    * ஸ்டெர்லைட் ஆலை இயங்கும் இடத்தை சுற்றி 25 மீட்டர் சுற்றளவுக்கு பல்வேறு மரங்களை நட்டு பசுமைப்பகுதியை உருவாக்க வேண்டும்.



    * ஆலையை சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் கிராமங்களில் உள்ள மக்கள் புகார் அளித்துள்ளபடி அந்தப் பகுதிகளில் பரவலாக உள்ள நோய்கள் பற்றிய புள்ளிவிவரங்களை தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சேகரிக்க வேண்டும்.

    * கடந்த ஆகஸ்டு 20-ந்தேதி தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய உத்தரவில் குறிப்பிட்ட மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அளித்துள்ள பரிந்துரைகளை ஆலை கடைப்பிடிக்க வேண்டும்.

    இவை உள்ளிட்ட 25 நிபந்தனைகளை விதித்து ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கலாம் என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  #NGT #NationalGreenTribunal #SterliteCase
    விநாயகர் ஊர்வலம் மற்றும் சிலைகள் கரைப்பு தொடர்பான நிபந்தனையை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்குகளை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. #GaneshChaturthi #GaneshIdols #HC
    சென்னை:

    தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் வைப்பதற்கும், பூஜைகள் முடிந்த பிறகு சிலைகளை கரைப்பதற்கும் பல்வேறு நிபந்தனைகள் விதித்து அரசாணை வெளியிடப்பட்டது. இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரியும், நிபந்தனைகளை தளர்த்தக் கோரியும் உயர்நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.



    இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது விநாயகர் சிலைகள் வைக்க ஒற்றை சாளர முறைப்படி, விண்ணப்பித்த 3 நாட்களில் அனுமதி வழங்கப்படும் என்று தமிழக அரசு தகவல் அளித்தது. சிலைகள் வைக்கும் இடத்துக்கான மின் இணைப்பை வீடுகள், கடைகளில் பெற ஆட்சேபமில்லை என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    விநாயகர் சிலை பந்தலுக்கு மின்சார இணைப்புகளை நேரடியாக கொக்கி போட்டு எடுக்க கூடாது என்றும் அவ்வாறு திருட்டுத்தனமாக மின்சாரம் எடுத்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிபதி எச்சரித்தார். பின்னர் விநாயகர் சதுர்த்தி தொடர்பாக விதிக்கப்பட்ட நிபந்தனைகளை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பை ஒத்திவைத்தார்.

    இந்த வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான தமிழக அரசு வெளியிட்ட அரசாணைக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். உயர்நீதிமன்ற உத்தரவுப்படியே நிபந்தனைகள் வகுக்கப்பட்டிருப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட 2 பொதுநல வழக்குகளையும் தள்ளுபடி செய்தனர்.

    விதிகளை எதிர்த்து மற்ற அமைப்புகள் சார்பில் தொடரப்பட்ட வழக்குகள் மீதான விசாரணை நாளை நடைபெறும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது. #GaneshChaturthi #GaneshIdols #HC
    ×