search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிஆர்எஸ்"

    மத்தியில் பாஜக அரசையும் தெலுங்கானாவில் டிஆர்எஸ் அரசையும் தேர்தலில் தோற்கடித்து காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என்று ராகுல் காந்தி பேசினார். #TelenganaElections #Rahul
    கோடங்கல்:

    தெலுங்கானா மாநிலத்தில் வரும் 7-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் தலைவர்கள் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றனர். அவ்வகையில் விகாராபாத் மாவட்டம் கோடங்கல் பகுதியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:-

    பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே வேற்றுமையை உருவாக்கி உள்ளார். அதையே தெலுங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவ் செய்துள்ளார். மத்திய பாஜக அரசாங்கமும் சரி, தெலுங்கானாவில் ராஷ்டிரிய சமிதி அரசாங்கமும் சரி மக்களின் தேவைகளை நிறைவேற்றத் தவறிவிட்டன.



    2019 பாராளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான மோடி அரசாங்கத்தை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும். அதேபோல் வரும் டிசம்பர் 7-ம் தேதி நடக்க உள்ள தெலுங்கானா தேர்தலில் டிஆர்எஸ் அரசாங்கத்தை வீழ்த்தி ஆட்சிக்கு வரும்.

    காங்கிரஸ் ஆட்சியின்போது தெலுங்கானா பகுதியில் நீர்ப்பாசன திட்டங்கள் தொடங்கப்பட்டது. அந்த திட்டங்களை டிஆர்எஸ் அரசாங்கம் மறுவடிவமைத்து பெயர்களையும் மாற்றியது. அத்துடன் கமிஷன் பெறுவதற்காக செலவையும் அதிகரித்தது.

    தெலுங்கானாவில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால், மூன்றே மாதங்களில் 1 லட்சம் வேலைவாய்ப்புகள் வழங்கி, மக்களின் கனவுகள் நிறைவேற்றப்படும். 2 லட்சம் ரூபாய் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். முதியோர் பென்சன் 2000 ரூபாய் வழங்கப்படும்.

    இவ்வாறு ராகுல் காந்தி பேசினார். #TelenganaElections #Rahul
    பாகிஸ்தானுக்கு எதிராக போட்டியில் டிஆர்எஸ் முறையை துல்லியமாக கணிக்கும் டோனியின் அறிவாற்றலை டுவிட்டர்வாசிகள் வெகுவாக பாராட்டியுள்ளனர். #Dhoni #DRS
    கிரிக்கெட் போட்டியில் மைதான நடுவர்கள் அவுட் கொடுப்பதில் சில நேரங்களில் சர்ச்சையை ஏற்படுத்தும். ஒரு வெற்றியை நோக்கி சென்றுக் கொண்டிருக்கும்போது நடுவரின் தவறான முடிவால் அந்த அணியின் வெற்றி கேள்விக்குறியாகி விடும். இதனால் நடுவர் தீர்பை எதிர்த்து அப்பீல் செய்யும் நோக்கி நடுவர் முடிவை எதிர்த்து முறையிடும் டிஆர்எஸ் (Decision Review System).

    நடுவர் தீர்ப்பில் சந்தேகம் இருந்தால் அதை எதித்து பேட்ஸ்மேன் அல்லது பீல்டிங் அணி கேப்டன் ரிவியூ கேட்கலாம். பந்து வீச்சு அணி ரிவியூ ஆப்சன் கேட்கும்போது, பந்து வீச்சாளரும், விக்கெட் கீப்பரும்தான் முக்கிய பங்கு வகிப்பார்கள். இவர்களுக்குத்தான் பந்து லைனில் பிட்ச் ஆனதா? பந்து பேட்டில் பட்டதா? ஸ்டம்பை தாக்குமா? ஸ்டம்பிற்கு மேல் செல்லுமா? என்பதை இவர்கள்தான் சரியாக கணிக்க வேண்டும்.

    இதில் இந்திய அணி விக்கெட் கீப்பர் டோனி வல்லவர். இவர் ரிவியூ ஆப்சனை கேட்க சொன்னால், கட்டாயம் அது அவுட்டாகத்தான் இருக்கும். ஒருமுறை ஜடேஜா டோனி பேச்சை கேட்காமல் ரிவியூ கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால், டிஆர்எஸ் வெற்றி பெறவில்லை. இதனால் டோனி ஜடேஜா மீது கடும் கோபம் கொண்டார்.

    பெரும்பாலும் டிஆர்எஸ் என்பது டோனி ரிவியூ சிஸ்டம் என்று அவரது ரசிகர்கள் அழைப்பதுண்டு. நேற்று இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ‘சூப்பர் 4’ ஆட்டம் நடைபெற்றது. பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது. முதல் 7 ஓவரில் பாகிஸ்தான் விக்கெட்டை இழக்கவில்லை.

    8-வது ஓவரை சாஹல் வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தை இமாம் உல் ஹக் முன்னாள் வந்து தடுத்து ஆட முயன்றார். அப்போது பந்து பேடை தாக்கியது. மிக அதிக தூரம் முன்னாள் வந்து ஆடியதால் பந்து ஸ்டம்பிற்கு மேல் சென்று விடுமோ? என்ற சந்தேகம் சாஹலுக்கும் ரோகித் சர்மாவிற்கும் இருந்தது.

    ஆனால் டோனி எதையும் பற்றி யோசிக்காமல் டிஆர்எஸ் கேட்க ரோகித் சர்மாவிற்கு சிக்னல் கொடுத்தார். முக்கியமான நபரிடம் இருந்து சிக்னல் வந்ததும் யோசிக்காமல் ரோகித் சர்மா ரிவியூ கேட்டார். அதில் எந்தவித சந்தேகமும் இல்லாம் இமாம் உல் ஹக் அவுட் என்பது தெரியவந்தது.

    இதனால் டிஆர்எஸ் முறையில் டோனியின் அறிவாற்றல் குறித்து டுவிட்டர்வாசிகள் புகழ்ந்து வருகிறார்கள். பெரும்பாலானோர் டிஆர்எஸ் என்றாலே டோனி ரிவியூ சி்ஸ்டம்தான் என்று பாராட்டியுள்ளனர்.
    ×