search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 148549"

    சார்க் மாநாட்டில் கலந்துகொள்ளும்படி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு அனுப்பப்படும் என்று பாகிஸ்தான் வெளியுறவு செய்தி தொடர்பாளர் முகம்மது பைசல் கூறினார். #Saarc #Pakistan #Modi
    இஸ்லாமாபாத்:

    சார்க் மாநாட்டை 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு உறுப்பு நாடு பொறுப்பேற்று நடத்தும். அதன்படி இந்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ள சார்க் மாநாட்டில் கலந்துகொள்ளும்படி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு அனுப்பப்படும் என்று பாகிஸ்தான் வெளியுறவு செய்தி தொடர்பாளர் முகம்மது பைசல் கூறினார்.



    கடைசியாக 2014-ம் ஆண்டு காத்மாண்டுவில் நடைபெற்ற சார்க் மாநாட்டில் மோடி பங்கேற்றார். 2016-ம் ஆண்டு பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் மாநாடு நடைபெற இருந்தது. அந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உரியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 19 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனால் இந்தியா மாநாட்டில் பங்கேற்க முடியாத நிலையை விளக்கியது. வங்காளதேசம், பூடான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளும் பங்கேற்க மறுத்துவிட்டதால் சார்க் மாநாடு நிறுத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. #Saarc #Pakistan #Modi 
    வாடிகனில் உள்ள போப் ஆண்டவர் பிரான்சிஸ் வடகொரியா வருமாறு அதிபர் கிம் ஜாங் அன் அழைப்பு விடுத்துள்ளதாக தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #NorthKorea #KimJongUn #PopeFrancis #SouthKorea #MoonJaeIn #Vatican
    பியாங்யாங்:

    2000-ம் ஆண்டு அப்போதைய அதிபரான கிம் ஜாங் இல் அப்போதைய போப் ஆண்டவரான இரண்டாம் ஜான் பாலுக்கு அழைப்பு விடுத்து இருந்தார். அவரது அழைப்பை ஏற்று வடகொரியா வந்தார் இரண்டாம் ஜான் பால். இதுவே வரலாற்றில் வடகொரியாவுக்கு போப் ஆண்டவர் வந்த முதலும் கடைசியுமான நிகழ்வு ஆகும்.

    இந்நிலையில், தற்போதைய போப் ஆண்டவருக்கு வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பை அடுத்த வாரம் வாடிகன் செல்ல இருக்கும் தென்கொரிய அதிபர் மூன் ஜே போப் ஆண்டவரிடம் தெரிவிப்பார் என தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    வாடிகனுக்கும் வடகொரியாவுக்குமான புதிய உறவை ஏற்படுத்துவதற்காக இந்த அழைப்பு விடுக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. #NorthKorea #KimJongUn #PopeFrancis #SouthKorea #MoonJaeIn #Vatican
    ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் ரெயில் நிலையத்துக்குள் சென்று பயணிகளை தங்களது வாகனத்தில் பயணிக்குமாறு அழைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரெயில்வே பாதுகாப்பு படை ஐ.ஜி. தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் ரெயில் நிலையத்திற்குள் சென்று பயணிகளிடம் பேரம் பேசி தங்களது வாகனத்தில் பயணம் செய்யுமாறு அழைப்பதாகவும், இதனால் பயணிகளுக்கு தொந்தரவு ஏற்படுவதாகவும் சில நாட்களாக புகார்கள் வருகின்றன. சமீபத்தில் இது தொடர்பாக ஆட்டோ, டாக்சி டிரைவர்களுக்கும், ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது.

    இந்த நிலையில் இதுகுறித்து தெற்கு ரெயில்வேயின் ரெயில்வே பாதுகாப்பு படை ஐ.ஜி. பிரேந்திரகுமார் சென்னை, திருச்சி, சேலம், மதுரை, பாலக்காடு மற்றும் திருவனந்தபுரம் கோட்டத்தில் பணியாற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர்கள் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    ரெயில் நிலையங்களின் உள்ளே பயணிகள் அமரும், நடமாடும் இடங்களுக்கு சென்று ஆட்டோ டிரைவர்கள் சிலர் பயணிகளை தங்கள் ஆட்டோவில் பயணம் செய்ய வருமாறு அழைப்பு விடுப்பதாகவும், இதனால் பயணிகளுக்கு தொந்தரவு ஏற்படுவதாகவும் ஏராளமான புகார்கள் வருகிறது. ஆட்டோ மற்றும் டாக்சி டிரைவர்கள் ரெயில் நிலைய வளாகத்தில் பயணிகள் நடமாடும் இடத்துக்கு சென்று, தங்கள் வாகனங்களில் பயணம் செய்யுமாறு அழைக்க அனுமதி இல்லை.

    அதாவது டாக்சி மற்றும் ஆட்டோ டிரைவர்கள் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட நிறுத்தங்களில் தான் நிற்க வேண்டும். அதனையும் மீறி ரெயில் நிலையத்துக்குள் ரெயில் பயணிகளுக்கான இடத்துக்கு சென்று அவர்களை அழைத்தால் ரெயில்வே சட்டத்தில் உள்ள பிரிவுகளின்படி டாக்சி மற்றும் ஆட்டோ டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம்.

    எனவே இதுபோன்ற நடைமுறையை தடுப்பதற்கான நடவடிக்கையை எடுங்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    அமைதிப்பேச்சு நடத்த இந்தியாவுக்கு பாகிஸ்தான் புதிய பிரதமர் இம்ரான்கான் அழைப்பு விடுத்து உள்ளார். முன்னேற்றப்பாதையில் செல்வதற்கு இது அவசியம் என அவர் கூறி இருக்கிறார். #India #Pakistan #ImranKhan
    இஸ்லாமாபாத்:

    இந்தியாவுடன் ஒரு பக்கம் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு இன்னொரு பக்கம் எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதல்களை முந்தைய நவாஸ் ஷெரீப் அரசு ஊக்குவித்ததால், அந்த நாட்டுடனான அமைதி பேச்சுவார்த்தையை இந்தியா நிறுத்திக்கொண்டது.

    இந்த நிலையில் அங்கு தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு உள்ளது. இதுவரை அங்கு பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி (நவாஸ்), பாகிஸ்தான் மக்கள் கட்சி என இரு கட்சிகளும் மாறி மாறி ஆட்சிக்கு வந்த நிலை மாறி, இம்ரான்கான் தலைமையில் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி ஆட்சிக்கு வந்து உள்ளது.

    இந்த நிலையில் பாகிஸ்தான் புதிய பிரதமர் இம்ரான்கான், இந்தியாவும், பாகிஸ்தானும் மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்து உள்ளார்.

    இது தொடர்பாக நேற்று அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “இந்தியாவும், பாகிஸ்தானும் முன்னேற்றப்பாதையில் செல்வதற்கு கண்டிப்பாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். காஷ்மீர் உள்ளிட்ட மோதல்களை தீர்த்துக்கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டு உள்ளார்.

    மேலும், “வறுமையை ஒழித்துக்கட்டி விட்டு, துணைக்கண்டத்தில் உள்ள மக்களை முன்னேற்றம் அடையச்செய்வதற்கு நமது கருத்து வேறுபாடுகளை தீர்த்துக்கொண்டு, வர்த்தகத்தை தொடங்குவதுதான் சிறந்த வழி” என்றும் கூறி உள்ளார்.

    இம்ரான்கான் பதவி ஏற்பு விழாவில் அவரது முன்னாள் நண்பரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பஞ்சாப் மாநில சுற்றுலாத்துறை மந்திரியுமான நவ்ஜோத் சிங் சித்து கலந்து கொண்டதும், பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் கமர் ஜாவத் பஜ்வாவை தழுவிக்கொண்டதும் இந்தியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் விழாவில் சித்து கலந்து கொண்டதற்கு இம்ரான்கான் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

    இது தொடர்பாக அவர் டுவிட்டரில் குறிப்பிடுகையில், “சித்து அமைதித் தூதர். பாகிஸ்தான் மக்கள் அவர்மீது மிகுந்த அன்பையும், நேசத்தையும் வாரி வழங்கினர். இந்தியாவில் அவரை குறி வைத்து விமர்சிப்பவர்கள், துணைக்கண்டத்தில் அமைதி ஏற்படுவதற்கு மிகப்பெரிய தீங்கு செய்கிறார்கள்” என்று கூறி உள்ளார்.

    பாகிஸ்தானின் புதிய வெளியுறவு மந்திரி ஷா மக்மூத் குரேஷி, “இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், சாகச செயல்களை நிறுத்துவதற்கு நாம் ஒன்றுபடுவது அவசியம். பிரச்சினைகள் கடுமையானவை என்பதையும், ஒரே நாளில் தீர்க்க முடியாது என்பதையும் அறிவோம். அதே நேரத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம்” என ஏற்கனவே கூறியது நினைவுகூரத்தக்கது.  #India #Pakistan #ImranKhan
    2019-ம் ஆண்டு குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். #PMModi #RepublicDay #Trump
    புதுடெல்லி:

    ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 26-ம் தேதி இந்திய குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி பதவியேற்றவுடன், அமெரிக்காவுடனான நல்லுறவை மேம்படுத்தி வருகிறார். அதன்படி, கடந்த 2015-ம் ஆண்டு அப்போது அமெரிக்க அதிபராக இருந்த ஒபாமாவை குடியரசு தின சிறப்பு விருந்தினராக அழைத்து கவுரவித்தார்.



    அதேபோல், 2019-ம் ஆண்டு குடியரசு தின விழாவில் தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். மோடியின் 5 ஆண்டுகால ஆட்சி முடிவு பெற்று, தேர்தல் வரும் சூழலில் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    மோடியின் இந்த அழைப்பு தொடர்பாக இதுவரை எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை என ட்ரம்ப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #PMModi #RepublicDay #Trump
    பாகிஸ்தானில் ஆகஸ்ட் 11-ம் தேதி இம்ரான் கான் பதவியேற்பார் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், பதவியேற்பு விழாவில் வெளிநாட்டு தலைவர்களுக்கு அழைப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. #Pakistan #ImranKhan
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் கடந்த மாதம் 25-ம் தேதி நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி முதன்முறையாக அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் நிலையில் உள்ளது. இருப்பினும் தனிப்பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் கைவசம் இல்லாததால், சுயேட்சை மற்றும் சிறு கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது.

    இதையடுத்து, பாகிஸ்தான் பிரதமராக முன்னாள் கிரிக்கெட் வீரரும், தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் ஆகஸ்ட் 11-ம் தேதி பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த பதவியேற்பு விழாவில் இந்திய பிரதமர் மோடி உட்பட பல்வேறு வெளிநாட்டு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

    மோடிக்கு அழைப்பு விடுப்பதன் மூலம் இந்தியா பாகிஸ்தான் இடையேயான உறவு மேம்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.



    இந்நிலையில், பதவியேற்பு விழாவில் வெளிநாட்டு தலைவர்களுக்கு அழைப்பு இல்லை என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அந்நாட்டு ஊடகங்களில் பேசிய தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ஃபவத் சவுத்ரி, முன்னர் இம்ரான் கானின் நண்பர்களான சுனில் கவாஸ்கர், கபில் தேவ், நவ்ஜோத் சித், மற்றும் இந்தி நடிகர் அமீர் கான் ஆகியோருக்கும், இந்தியா, சீனா உட்பட சார்க் கூட்டமைப்பில் உள்ள அனைத்து நாட்டு தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கலாம் என முடிவு செய்யப்பட்டிருந்தது.

    இதையடுத்து தற்போது அந்த முடிவு மாற்றப்பட்டுள்ளதாவும், வெளிநாட்டு தலைவர்களை விடுத்து, நண்பர்களை மட்டும் அழைத்து, தனது பதவியேற்பு விழாவை எளிமையாக நடத்த இம்ரான் கான் விரும்புவதாவும் ஃபவத் சவுத்ரி தெரிவித்துள்ளார். #Pakistan #ImranKhan
    அடுத்த ஆண்டு ஜனவரி 26-ந்தேதி நடைபெறும் குடியரசு தினவிழாவில் கலந்து கொள்ளுமாறு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.
    புதுடெல்லி:

    ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26-ந்தேதி நடைபெறும் குடியரசு தினவிழாவில் வெளிநாட்டு தலைவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்கிறார்கள்.

    அடுத்த ஆண்டு ஜனவரி 26-ந்தேதி நடைபெறும் குடியரசு தினவிழாவில் கலந்து கொள்ளுமாறு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.

    டிரம்ப்புக்கு முன்பு அமெரிக்க அதிபராக இருந்த ஒபாமா டெல்லி வந்து இந்தியாவின் குடியரசு தினவிழாவில் பிரதமர் மோடியுடன் கலந்து கொண்டார். தற்போது டிரம்ப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக இந்திய தூதரகம் மூலம் அமெரிக்காவுக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டு உள்ளன. பல சுற்றுக்களாக கடிதப்பரிமாற்றம் நடைபெற்று வருகிறது.

    இந்தியாவின் அழைப்பை ஏற்பது பற்றியோ, டிரம்ப் வருகை பற்றியோ இன்னும் அமெரிக்கா அதிகாரப்பூர்வ தகவல் எதையும் வெளியிடவில்லை. என்றாலும் டிரம்ப் இந்தியா வருவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.


    டிரம்ப் அமெரிக்க அதிபரான பின்பு அவருடன் பிரதமர் மோடி நல்லுறவு வைத்திருந்தார். பல முறை அமெரிக்காவுக்கு சென்று டிரம்ப்பை சந்தித்து பேச்சு நடத்தி இருக்கிறார். வெளிநாடுகளில் பல்வேறு மாநாடுகளில் சந்தித்த போதும் இருவரும் நட்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

    எனவே அதிபர் டிரம்ப் இந்தியா வருகைக்கான சாதகமான முடிவை எடுப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது. #DonaldTrump  #RepublicDay
    தி.மு.க. சார்பில், மாநில சுயாட்சி மாநாட்டில் பங்கேற்க ராகுல்காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பல்வேறு மாநில கட்சி தலைவர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். #MKStalin
    சென்னை:

    தி.மு.க. சார்பில், மாநில சுயாட்சியை வலியுறுத்தும் மாநாடு தமிழ்நாட்டில் ஆகஸ்டு மாதம் 30-ந் தேதி நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ளுமாறு ராகுல்காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பல்வேறு மாநில கட்சி தலைவர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

    நாடாளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் இப்போதே தேர்தல் வேலைகளை தொடங்கி விட்டன. பா.ஜனதா தலைவர் அமித்ஷா நாடு முழுவதும் கட்சி பிரமுகர்கள் மற்றும் தொண்டர்களை சந்தித்து தேர்தல் வியூகம் வகுத்து வருகிறார். காங்கிரஸ் கட்சி அந்தந்த மாநிலங்களில் நிலவும் தற்போதைய சூழலை தங்களுக்கு சாதகமாக்கும் பணிகளில் ஈடுபட்டு உள்ளது.

    இதற்கிடையே, பா.ஜனதா, காங்கிரசுக்கு மாற்றாக 3-வது அணி உருவாக்கும் முயற்சியில் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் ஆகியோர் ஈடுபட்டு உள்ளனர். இதனைத்தொடர்ந்து சந்திரசேகரராவ், சமீபத்தில் சென்னை வந்து தி.மு.க. தலைவர் கருணாநிதி, செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தார். அப்போது மாநில கட்சிகளின் அதிகாரத்தை நிலைநிறுத்துவது பற்றி அவர்கள் பேசிக்கொண்டதாக தெரிகிறது.

    இந்தநிலையில் மாநில சுயாட்சியை வலியுறுத்துவது தொடர்பான மாநாட்டை தமிழ்நாட்டில் நடத்த தி.மு.க. திட்டமிட்டு உள்ளது. அதன்படி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 30-ந் தேதி அந்த மாநாடு நடைபெறுகிறது.

    இந்த மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். நேரிலும் கடிதம் வழங்கப்பட உள்ளது.

    ஏற்கனவே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்தும் மாநாட்டில் பங்கேற்குமாறு ராகுல்காந்தியை திருமாவளவன் நேரில் அழைத்த நிலையில், மு.க.ஸ்டாலினும் ராகுல்காந்திக்கு தனியாக அழைப்பு விடுத்திருப்பது தமிழக அரசியலில் பல யூகங்களுக்கு வழி வகுக்கிறது. 
    ஜூன் 22-ந் தேதி பிரிவு உபசார விழாவில் கலந்து கொள்ள ஓய்வு பெறும் நீதிபதி செல்லமேஸ்வரரை பார் அசோசியேஷன் நிர்வாகிகள் சந்தித்து அழைப்பு விடுத்தபோது அவர் அதை ஏற்க மறுத்து விட்டார். #Justice #Chelameswar
    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதி ஜே.செல்லமேஸ்வர், ஜூன் 22-ந் தேதி ஓய்வு பெறுகிறார். அதனால், கோடை விடுமுறைக்கு முந்தைய கடைசி வேலைநாளான மே 18-ந் தேதி, அவருக்கு பிரிவு உபசார விழா நடத்த சுப்ரீம் கோர்ட்டு பார் அசோசியேஷன் முன்வந்துள்ளது.

    இதுதொடர்பாக, கடந்த வாரம், நீதிபதி செல்லமேஸ்வரை பார் அசோசியேஷன் நிர்வாகிகள் சந்தித்து அழைப்பு விடுத்தபோது, அவர் அதை ஏற்க மறுத்து விட்டார். பார் அசோசியேஷன் செயற்குழு உறுப்பினர்கள், நேற்று நீதிபதியை அவரது இல்லத்தில் சந்தித்து அவரது மனதை மாற்ற முயன்றனர். ஆயினும், அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக வர இயலாது என்று கூறி விட்டார்.

    இத்தகவல்களை சுப்ரீம் கோர்ட்டு பார் அசோசியேஷன் தலைவர் விகாஸ் சிங் கூறினார். நீதிபதி செல்லமேஸ்வர், தொடர்ந்து 3-வது புதன்கிழமையாக நேற்று சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்லவில்லை. வழக்குகள் ஒதுக்கீடு தொடர்பாக, தலைமை நீதிபதிக்கு எதிராக பேட்டி அளித்தவர் நீதிபதி செல்லமேஸ்வர் என்பது குறிப்பிடத்தக்கது.  #Justice #Chelameswar 
    ×