search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேறு"

    ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு செல்லும் மண் சாலையை தார்ச்சாலையாக மாற்ற வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    கீழப்பழுவூர்:

    அரியலூர் மாவட்டம் அண்ணிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பாளயபாடி கிராமத்தில் திருமானூர் பாசன வாய்க்கால் கரையில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த பள்ளிக்கு செல்லும் சாலையானது கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு மண் சாலையாக அமைக்கப்பட்டு இருந்தது.

    தற்போது பெய்த மழையின் காரணமாக இந்த மண் சாலை மிகவும் மோசமான நிலையில் சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இந்த சாலையின் வழியாக நேற்று நடந்து சென்ற ஆசிரிய- ஆசிரியைகள், மாணவ- மாணவிகள் பெரிதும் சிரமப்பட்டனர். பள்ளிக்கு செல்லும் மாணவ- மாணவிகள் இந்த சேற்றில் தவறி விழுந்து விடுகின்றனர். மேலும் ஆங்காங்கே சாலையில் பள்ளம் ஏற்பட்டு அதில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கருத்தில் கொண்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு செல்லும் மண் சாலையை தார்ச்சாலையாக மாற்ற வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ×