search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்கேன்"

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் டிசம்பர் 15-ம் தேதிவரை ஸ்கேன் எடுக்க கட்டணம் வசூலிக்க கூடாது என சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. #GajaCyclone #Gajaaffecteddistricts #Scanchargeswaived
    சென்னை:

    கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் வீடு இடிந்து விழுந்தும், மரம் சாய்ந்தும் காயமடைந்துள்ளனர். இவர்களில் மிக சிலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், இதற்காக சிகிச்சைக்கு செல்பவர்களிடம் ஸ்கேன் எடுப்பதற்கு அரசு மருத்துவமனைகள் கட்டணம் வசூலிப்பதாகவும் சமீபத்தில் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.



    அடுத்தவேளை சோற்றுக்கு வழியறியாமல் நிர்கதியாக தவிக்கும் மக்களிடம் தயவு, தாட்சண்யம் காட்டாத அரசுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கண்டனக் குரல்கள் பரவ தொடங்கின.

    இந்நிலையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஸ்கேன் எடுக்க வரும் நோயாளிகளிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது என தமிழக சுகாதாரத்துறை இன்று உத்தரவிட்டுள்ளது. #GajaCyclone #Gajaaffecteddistricts  #Scanchargeswaived
    கர்ப்ப காலத்தில் வயிற்றில் உள்ள கரு எவ்வளவு ஆரோக்கியமாக உள்ளது, தாயின் உடல்நிலை எப்படி உள்ளது என்பவற்றை அறிந்த கொள்ள ஸ்கேன் பரிசோதனை உதவுகின்றன.
    ஆரோக்கியமான கர்ப்பிணிகள் என்றால் பொதுவாக கருவுற்ற 11-14 வாரங்களில் எடுக்கலாம். ஆனால், கருவுற்றிருப்பவர்களுக்கு வயிற்றுவலி இருந்தாலோ சிறிய அளவிலான உதிரக்கசிவு இருந்தாலோ உடனடியாக ஸ்கேன் எடுக்க வேண்டும். 5, 6 வாரங்களில் டேட்டிங் ஸ்கேன் எடுக்கப்படுகிறது.

    ஏற்கெனவே கருச்சிதைவு ஏற்பட்டிருந்தாலோ அபார்ஷன் செய்திருந்தாலோ இதற்கு முன்பான கர்ப்பத்தில் குழந்தை சரியாக கருப்பையில் அமராமல் டியூபிலேயே தங்கியிருந்தாலோ கர்ப்பம் அடைந்தவுடன் ஒரு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்வது நல்லது. கர்ப்பம் அடையும் முன் மாதவிடாய் சுழற்சி சரியாக மாதா மாதம் வராமல் இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஏற்பட்டிருந்தால் அவர்கள் கர்ப்பம் அடைந்தவுடன் ஸ்கேன் எடுப்பது நல்லது.

    இதன் மூலம் பிரசவ தேதியை சரியாகக் குறிக்க முடியும். சிலருக்கு வயிறு வழியாக அல்லாமல், பிறப்புறுப்பு  வழியாகவும் (Vaginal Scan) எடுக்க வேண்டியதாய் இருக்கும். இதனால் கருவுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. சிலருக்கு அவர்கள் உடல்வாகு, கருவின் உடல் நிலைக்கு ஏற்ப முதல் மாதத்திலேயே இரண்டு, மூன்று முறை ஸ்கேன் எடுக்க நேரிடலாம்.

    சில சமயங்களில் முதல் முறை பார்க்கும்போது குழந்தையின் இதயத்துடிப்பை சரியாக கணிக்க முடியவில்லை என்றால் இரண்டு வாரங்கள் கழித்து மீண்டும் ஸ்கேன் செய்து பார்க்க வேண்டியது இருக்கும். தொடர்ந்து சிறிய அளவிலான உதிரக் கசிவு இருந்தால் குழந்தையின் ஆரோக்கியத்தைக் கண்காணிக்க அடிக்கடி ஸ்கேன் எடுக்க வேண்டியது இருக்கும். இதனால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது.

    11 முதல் 14 வாரங்களில் எடுக்கப்படும்  ஸ்கேனில் குழந்தையின் முழு உருவத்தையும் பார்க்கலாம். கர்ப்பத்தில் உள்ள சிசுவின் தலை, முகம், கால், முதுகெலும்பு, இதயம், வயிறு ஆகியவற்றைப் பார்க்க முடியும். சென்ற பகுதியில் சொன்னது போல முதல் மும்மாதத்திலேயே இந்த உறுப்புகள் எல்லாம் உருவாகிவிடும்.

    இதற்குப் பிறகான மாதங்களில் இவை வளர்ச்சி அடையத் தொடங்கும் என்பதால் முதல் மும்மாத ஸ்கேனிலேயே குழந்தைக்கு உடல் ஊனம் ஏதும் இருந்தாலும் கண்டறிய இயலும். முதல் மும்மாதத்தில் கழுத்துக்குப் பின்புறம் இருக்கும் தோலின் தடிமனை அளப்பார்கள். (Nucheal thickness).

    தோலின் தடிமன் குறிப்பிட்ட அளவுக்கு மேல் இருந்தால் குழந்தைக்கு சில குறைபாடுகள் இருக்க வாய்ப்பு உண்டு என்பதால் இந்தப் பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும், டவுன் சிண்ட்ரோம் போன்ற மரபணு குறைபாடுகள் ஏதேனும் உள்ளதா என்பதையும் இந்தப் பரிசோதனை மூலம் கண்டறிய முடியும்.
    சென்னை அரசு பொது மருத்துவமனையில் ஸ்கேன், எக்ஸ்ரே எடுக்க நோயாளிகள் நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
    சென்னை:

    சென்னை சென்ட்ரலில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை ஆசியாவிலேயே மிகப் பெரிய அரசு பொது மருத்துவமனை ஆகும். இங்கு 3,500 படுக்கைகள், 800 மருத்துவர்கள், 890 நர்சுகள், 750 உதவியாளர்கள் பணிபுரிகிறார்கள். தினமும் 13 ஆயிரம் நோயாளிகள் சிகிச்சைக்கு வருகிறார்கள்.

    இங்கிருக்கும் சிகிச்சை கட்டிடங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிகிச்சைக்காக பிரிக்கப்பட்டுள்ளன. 2 பிரம்மாண்ட டவர் கட்டி டங்களும் உள்ளன.

    டவர்-1 பொது சிகிச்சைக்காகவும், மருந்து- சிகிச்சை, பரிசோதனைக்காகவும், டவர்-2 கட்டிடம் அறுவை சிகிச்சைக்காகவும் உள் நோயாளிகளுக்காகவும் செயல்பட்டு வருகிறது.

    பொதுமருத்துவம், சிறுநீரக நோய்கள், இதய நோய்கள், மூட்டு தசை, இணைப்பு திசு, காது, மூக்கு, தொண்டை, பிரச்சினைகள், புற்று நோய், நாளமில்லா சுரப்பிகள், எலும்பு நோய்கள், ரத்த நாளங்கள், நரம்பு நோய்கள், இரைப்பை, குடல் நோய்கள், கல்லீரல், சர்க்கரை நோய், நெஞ்சக நோய்கள் உள்பட அனைத்து நோய்களுக்கும் தனித்தனி சிகிச்சை பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.

    தினமும் அனைத்து வகையான நோய்களுக்கும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் உள், வெளி நோயாளிகளாக வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.

    இந்த நிலையில் ஸ்கேன், டிஜிட்டல் எக்ஸ்ரே, டாப்ளர் ஸ்கேன், மேமோகிராம் உள்ளிட்ட ஸ்கேன் எடுக்க தினமும் நீண்ட வரிசையில் நோயாளிகள் கூட்டம் காணப்படுகிறது. மணிக்கணக்கில் நோயாளிகள் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

    அல்ட்ரா சவுண்ட், டிஜிட்டல் எக்ஸ்ரே, டாப்ளர் ஸ்கேன், மேமோகிராம் எடுக்க குறைந்தது 4-5 மணி நேரம் நோயாளிகள் காத்திருக்கிறார்கள்.

    இதனால் நோயாளிகள் மிகவும் சோர்ந்து விடுகிறார்கள். ஆங்காங்கே நோயாளிகள் கவலையுடன் அமர்ந்து இருப்பது பரிதாபமாக உள்ளது. மருத்துவமனை ஊழியர்கள், நர்சுகள் நோயாளிகளிடம் சரிவர பதில் கூறாமல் காத்திருக்க வைக்கின்றனர்.

    இதுகுறித்து சிகிச்சை பெற வந்த நோயாளிகளில் ஒருவர் கூறியதாவது:-

    எக்ஸ்ரே, ஸ்கேன் எடுக்க காலையிலேயே வந்து விட்டேன். மருத்துவமனை ஊழியர்கள் நீண்ட நேரமாக காத்திருக்க வைக்கிறார்கள். இங்கு ஸ்கேன் எடுக்க 4 மணி நேரத்துக்கு மேலாக காத்திருக்கும் அவல நிலை உள்ளது.

    நோயாளிகளுக்கு ஸ்கேன், எக்ஸ்ரே எடுக்க கூடுதல் எந்திரங்கள் அரசு அமைத்து தர வேண்டும். நோயாளிகளை மணிக்கணக்கில் காத்திருக்க வைக்க கூடாது. இதுகுறித்து ஆஸ்பத்திரி நிர்வாகமும், அரசும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×