search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 150190"

    இலங்கைக்கு எதிரான கொழும்பு டெஸ்டிற்கான இங்கிலாந்து அணியில் இருந்து ஜேம்ஸ் ஆண்டர்சன், சாம் குர்ரான் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. #SLvENG
    இலங்கை - இங்கிலாந்து இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. காலே, பல்லேகெலேயில் நடைபெற்ற போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. 3-வது டெஸ்ட் நாளைமறுநாள் (23-ந்தேதி) கொழும்பில் தொடங்குகிறது.

    முதல் இரண்டு போட்டிக்கான ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான வகையில் தயார் செய்யப்பட்டிருந்தது. இதனால் ஜேம்ஸ் ஆண்டர்சன், சாம் குர்ரான் ஆகியோர் தலா ஒரு விக்கெட் மட்டுமே எடுத்தார்கள். சுழற்பந்து வீச்சாளர்கள்தான் அசத்தினார்கள்.

    கொழும்பு டெஸ்டிற்கான ஆடுகளமும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான வகையில்தான் தயார் செய்யப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வேகப்பந்து வீச்சாளர்களான ஜேம்ஸ் ஆண்டர்சன், சாம் குர்ரான் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. ஆண்டர்சனுக்குப் பதிலாக ஸ்டூவர்ட் பிராட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். சாம் குர்ரானுக்குப் பதில் பேர்ஸ்டோவ் அணியில் இடம்பிடித்துள்ளார்.
    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸில் நடால், காஸ்குயட், ஷபோவாலோவ், கே ஆண்டர்சன் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ளனர்.
    பிரெஞ்ச் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. இன்று ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஒரு ஆட்டத்தில் முதல் நிலை வீரரான ரபெல் நடால் சிமோன் பொலேல்லியை எதிர்கொண்டார். இதில் நடால் முதல் இரண்டு செட்டுகளையும் 6-4, 6-3 என எளிதில் கைப்பற்றினார். ஆனால் 3-வது செட் ‘டை பிரேக்கர்’ வரை சென்றது. இறுதியில் நடால் 7 (11) - 6 (9) என கைப்பற்றி வெற்றி பெற்றார்.


    ஷபோவாலோவ்

    6-ம் நிலை வீரரான கெவின் ஆண்டர்சன் தரம் நிலை பெறாத பயோலோ லாரென்சியை எதிர்கொண்டார். இதில் ஆண்டர்சன் 6-1, 6-2, 6-4 என எளிதில் வெற்றி பெற்றார்.

    3-ம் நிலை வீரரான மரின் சிலிச் 6-3, 7-5, 7(7) - 6(4) என டக்வொர்த்தை வீழ்த்தினார். 19 வயதே ஆன கனடாவின் இளம் வீரரான டெனிஸ் ஷபோவாலோவிற்கு இதுதான் அறிமுக பிரெஞ்ச் ஓபன் ஆகும். முதல் சுற்றில் மில்மானை எதிர்கொண்டார். இதில் ஷபோவாலோவ் 7-5, 6-4, 6-2 என வெற்றி பெற்றார்.
    ×