search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அர்ச்சனை"

    ஆண்டவனுக்கு செய்யப்படும் ஆறுவகை உபசாரங்களுள் அர்ச்சனையே முக்கியத்துவம் பெறுகிறது. அந்த உபசாரங்கள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    இறைவனுக்கு ஆறுவகையான உபசாரங்கள் செய்யப்படுகின்றன.

    1. அபிஷேகம்: தண்ணீர், பால், தேன், தயிர், பன்னீர், இளநீர் மற்றும் பல பொருட்களால் செய்யப்படுவது.
    2. அலங்காரம்: பட்டு பீதாம்பரத்தாலும், பொன்னாலும், மலர் மாலைகளாலும், தங்க நகைகளாலும், வைர வைடூரியங்களாலும் அழகுபடுத்துவதாகும்.
    3. அர்ச்சனை: பூக்களாலும், பாக்களாலும் செய்யப்படுவது.

    4. நைவேத்தியம்: பல்வேறு உணவு வகைகள், பால், பழம் முதலியவற்றை படைப்பது.
    5. ஆராதனை: தூபம் காட்டுதல், தீபம் காட்டுதல்.
    6. உற்சவம்: பெரு விழா நடத்தி மூர்த்தியை வலமாக வீதிகளில் கொண்டு செல்லுதல்.
    இறைவனை மனதில் பக்தியோடு, மலர்களை அர்ப்பணித்தாலே போதுமானது. பூக்களைக் கொண்டு இறைவனை அர்ச்சிப்பதை விட சிறப்பான வழிபாடு எதுவும் இல்லை.
    இறைவனுக்கு மிகப்பெரிய செலவில் எதையும் செய்யத் தேவையில்லை. மனதில் பக்தியோடு, மலர்களை அர்ப்பணித்தாலே போதுமானது. பூக்களைக் கொண்டு இறைவனை அர்ச்சிப்பதை விட சிறப்பான வழிபாடு எதுவும் இல்லை. அதே நேரத்தில் பழைய பூக்கள், மலராத மொட்டுக்கள், தூய்மை இல்லாத பூக்களைக் கொண்டு இறைவனை அர்ச்சனை செய்யக்கூடாது.

    அர்ச்சனை செய்த பூக்கள், கோவிலில் சாமிக்கு போட்ட மாலைகளை காலில் மிதிபடாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். முடிந்தால் தூய்மையான ஓடுகின்ற தண்ணீரில் விடலாம். அல்லது தூய்மையான இடத்தில் குழி தோண்டி போட்டு மூடிவிடலாம். கோவிலில் சாமிக்கு போட்ட மாலைகளை வாகனங்களில் முன்பக்கம் கட்டுவது கூடாது.

    திருமாலுக்கு, பவளமல்லி, மரிக்கொழுந்து, துளசி ஆகிய மலர்களும், சிவனுக்கு வில்வ இலை, செவ்வரளிப் பூ ஆகியவையும் சிறப்பு வாய்ந்தவை. முருகப்பெருமானுக்கு முல்லை, செவ்வந்தி, ரோஜா சூட்டலாம். அம்பாளுக்கு வெள்ளை நிறப் பூக்களை சாத்தி வழிபடுவது மகத்துவம் வாய்ந்தது.

    எந்தெந்த மலர்கள் என்ன சிறப்புகளைத் தரும் என்பதைப் பார்க்கலாம்.

    அல்லிப்பூ - செல்வம் பெருகும்

    பூவரசம்பூ - உடல் நலம் பெருகும்

    வாடாமல்லி - மரணபயம் நீங்கும்

    மல்லிகை - குடும்ப அமைதி கிடைக்கும்

    செம்பருத்தி - ஆன்ம பலம் கூடும்

    காசாம்பூ - நன்மைகள் சேரும்



    அரளிப்பூ - கடன்கள் அகலும்

    அலரிப்பூ - இன்பமான வாழ்க்கை

    ஆவாரம் பூ - நினைவாற்றல் பெருகும்

    கொடிரோஜா - குடும்ப ஒற்றுமை

    ரோஜா பூ - நினைத்தது நடக்கும்

    மரிக்கொழுந்து - குலதெய்வம் அருள்

    சம்பங்கி - இடமாற்றம் கிடைக்கும்

    செம்பருத்தி பூ - நோயற்ற வாழ்வு

    நந்தியாவட்டை - குழந்தை குறை நீங்கும்

    சங்குப்பூ (வெள்ளை) - சிவப்பூஜைக்கு சிறந்தது

    சங்குப்பூ (நீலம்) - விஷ்ணு பூஜைக்கு சிறந்தது

    மனோரஞ்சிதம் - குடும்ப ஒற்றுமை

    தாமரைப்பூ - செல்வம் பெருகும், அறிவு வளர்ச்சி பெறும்

    நாகலிங்கப்பூ - லட்சுமி கடாட்சம், ஆரோக்கியம்

    முல்லை பூ - தொழில் வளர்ச்சி, புதிய தொழில்கள் உண்டாகும்

    பட்டிப்பூ (நித்திய கல்யாணி பூ) - முன்னேற்றம் பெருகும்

    தங்க அரளி (மஞ்சள் பூ) - குருவின் அருள், பெண்களுக்கு மாங்கல்ய பலம் கிடைக்கும்.

    பவள மல்லி - இது தேவலோக புஷ்பமாகும். இந்த செடியினை வீட்டில் வளர்ப்பது மிக அவசியமாகும். இதன்மூலம் தேவர்கள் மற்றும் ரிஷிகளின் அருளும், ஆசியும் கிடைக்கும். 
    ×