search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிவகுமார்"

    கஜா புயல் பாதிப்பால் டெல்டா மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நடிகர் சிவகுமார், சூர்யா உள்ளிட்ட அவர்களது குடும்பத்தினர் சார்பில் ரூ.50 லட்சம் தொண்டு நிறுவனம் மூலம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #GajaCyclone
    தமிழகத்தின் கடலோர மாவட்டங்களை சூறையாடிய கஜா புயலின் தாக்கம் இன்னமும் நீங்கவில்லை. தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டிணம், புதுக்கோட்டை உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் கஜா புயலின் கோர தாண்டவத்தில் இருந்து மக்கள் இன்னும் மீளவில்லை. வீடு, தொழில்களை இழந்து மக்கள் தவித்து வருகின்றனர்.

    திருத்துறைப்பூண்டி, பேராவூரணி, முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் உள்பட பல ஊர்கள் கடுமையான சேதத்தை சந்தித்திருப்பதால், மக்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

    கஜா புயலால் வீடுகள், பயிர்கள், மரங்கள், கால்நடைகள், மின்சார கம்பங்கள் என அனைத்து தரப்பிலும் கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது. தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் 150 கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. பல்வேறு கிராமங்களில் மக்கள் உணவு, குடிநீரின்றி தவித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.



    இவ்வாறாக கஜா புயல் டெல்டா மாவட்டங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பலரும் தொண்டு நிறுவனங்கள் மூலமாக உதவி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சிவகுமார், சூர்யா, கார்த்தி, ஜோதிகா, 2டி என்டர்டெயின்மெண்ட் சார்பில் தொண்டு நிறுவனத்தின் மூலம் ரூ.50 லட்சம் நிதி அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #GajaCycloneRelief #GajaCyclone  #LetsAllJoinHands #prayfordelta #Suriya #Sivakumar

    செல்பி எடுத்தவரின் செல்போனை தட்டி விட்டது தவறு என்று பெருவாரியான மக்கள் நினைக்கும் பட்சத்தில் என் செயலுக்காக உளமாற நான் வருத்தம் தெரிவித்து கொள்வதாக நடிகர் சிவகுமார் தெரிவித்துள்ளார். #Sivakumar
    மதுரையில் நடந்த விழா ஒன்றில் பங்கேற்பதற்காக சென்ற நடிகர் சிவகுமார், செல்பி எடுத்தவரின் செல்போனை தட்டிவிட்ட சம்பவம், சமூக வலைதளங்களில் அதிகமாக பரவியது. இதற்கு எதிர்மறை விமர்சனங்கள் வந்தன. எனவே அந்த சம்பவத்துக்கு விளக்கம் அளிக்கும் வகையில், நடிகர் சிவகுமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்த நிலையில், வருத்தம் தெரிவித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

    அதில் சிவக்குமார் கூறியிருப்பதாவது,

    `ஆர்வம் மிக்க ரசிகர்கள் கட்டுக்கடங்காத கூட்டத்தில் அப்படித்தான் உணர்ச்சிவசப்பட்டு நடந்து கொள்வார்கள். ஒரு பிரபல கலைஞன் அதை பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும். என்ன இருந்தாலும் சிவக்குமார், செல்போனை தட்டிவிட்டது தவறு என்று பெருவாரியான மக்கள் நினைக்கும் பட்சத்தில் என் செயலுக்காக உளமாற நான் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்'. என்று பேசினார். #Sivakumar

    சிவகுமார் பேசிய வீடியோவை பார்க்க: 

    பெண்களை சந்நிதானத்துக்குள் வரவே கூடாது என்று தடுப்பது தவறு என்று நடிகர் சிவகுமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். #Sivakumar #Sabarimala
    சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பும், ஆதரவும் கிளம்பியது. இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டதை அடுத்து, பெண்கள் கோவிலுக்குள் நுழைய முயன்றனர்.

    இவர்களை நுழைய விடாமல் தடுக்கும் போராட்டம் வலுத்த நிலையில் சபரிமலையை சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடைஉத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இன்று ஐயப்பன் கோயிலுக்கு செல்ல முயன்ற இரு பெண்களை போலீசார் தடுத்து திருப்பி அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக நடிகர் சிவகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நூறு வருடங்களுக்கு முன்னர் வரை சபரிமலை தற்போது உள்ளதை விட மேலும் அடர்ந்த வனப்பகுதியாக இருந்தது. சந்நிதானத்துக்கு செல்ல சரியான பாதை வசதி இல்லை. விலங்குகள் தாக்கும் அபாயம் அதிகமாயிருந்தது. எனவே ஆண்கள் மட்டும் கூட்டம் கூட்டமாக கோஷம் போட்டுக் கொண்டே சென்று வழிபட்டனர். 

    பெண்களுடைய உதிர போக்கு மோப்ப சக்தி கொண்ட விலங்குகளை ஈர்க்கும் சக்தி கொண்டதால் அவர்களை ஆண்கள் உடன் அழைத்து செல்வதில்லை. தற்போது காலம் நவீனமயமாகி விட்டது. பழைய காலத்து அச்சங்கள் இப்போது இல்லை. நீதிமன்றமும் அனுமதி வழங்கி விட்டது. 

    இனியும் பெண்களை சந்நிதானத்துக்குள் வரவே கூடாது என்று தடுப்பது தவறு. விரத காலங்களை தவிர்த்து வேறு நாட்களில் பெண்களும் வந்து வழிபாடு செய்யுமாறு ஒரு ஏற்பாடும் உடன்பாடும் உருவாகவேண்டும்’.

    இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    பல்லடத்தில் பொன்னி ஆஸ்பத்திரி புதிய கட்டிடத்தை திறந்து வைத்த நடிகர் சிவகுமார், டீ, காபி குடிப்பதை யார் கற்றுத்தந்தது என்று பேசியிருக்கிறார். #Sivakumar
    பல்லடத்தில் உள்ள பொன்னி ஆஸ்பத்திரி தனது மருத்துவ சேவையை மேலும் பல சிறப்பு வசதிகளுடன் விரிவாக்கம் செய்து புதிய கட்டிடத்தை 100 படுக்கைகளுடன் நவீன வசதிகளுடன் அமைத்துள்ளது.

    இதன் திறப்புவிழா நடைபெற்றது பொன்னி ஆஸ்பத்திரி டாக்டர் கே.சிவக் குமார் அனைவரையும் வரவேற்றார். புதிய கட்டி டத்தை நடிகர் சிவகுமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது,-

    பல்லடம் நகரில் பெரிய ஆஸ்பத்திரியை பொன்னி ஆஸ்பத்திரி நிர்வாகம் உருவாக்கி உள்ளது.உங்கள் ஆரோக்கியம் உங்களிடம் தான் உள்ளது நமது முன் னோர்கள் பழைய சோறு சாப்பிட்டனர். நாம் காபி, டீ குடிக்கிறோம். யார் கற்றுத்தந்தது இந்த பழக்கம். காலையில் பழைய சோறுடன் மோர் கலக்கி 5 வெங்காயம் சேர்த்து சாப்பிட்டால் குடல் நோய் நீங்கும். காபி, டீ குடித்தால் பின்னாளில் வயிறு கெட்டுப்போகும். சாப்பிடும்போது தரையில் அமர்ந்து சம்மனம் போட்டு சாப்பிட வேண்டும்,



    குனிந்து கோலமிட வேண்டும், மாவு ஆட்ட வேண்டும், இவையெல்லாம் அடிப்படையான நமது வழக்கங்கள். இவைகளை மறந்துபோனதால் உடல் நலம் கெட்டது.

    இவ்வாறு நடிகர் சிவகுமார் பேசினார்.
    காவேரி மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு நடிகர் சிவகுமார் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். #RIPKarunanidhi #Karunanidhi #DMK
    காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த 11 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று மாலை 6.10 மணியளவில் திமுக தலைவர் கருணாநிதி காலமானார்.

    இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், தொண்டர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், நடிகர் சிவகுமார் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அதில், பெரியார், ராஜாஜிக்கு பிறகு 95 வயது வரை புகழோடு வாழ்ந்த அகில இந்திய அரசியல் தலைவர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள்.

    2. பெரியார் - எந்த ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட மக்களின் எதிர்காலத்துக்கு திட்டங்கள் தீட்டினாரோ அவற்றை கலைஞர் அவர்கள் ஆட்சி பீடத்தில் அமர்ந்த உடனே நிறைவேற்றினார்.

    3. அண்ணா அவர்கள் துவங்கிய திராவிட முன்னேற்ற கழகத்தை கிட்டத்தட்ட 70 ஆண்டுகள் கட்டிக்காத்தவர்.

    4. அரசியலில் சாதித்ததற்கு இணையாக - கலை இலக்கியத்திலும் 60 ஆண்டுகளுக்கு மேல் சாதனை புரிந்தவர்.

    5. 1950களில் தமிழ் சினிமாவில் நல்ல தமிழ் ஒலிக்க காரணமானவர்களில் முதன்மையானவர்.

    6. குறளோவியம், சங்கத்தமிழ், தொல்காப்பியப்பூங்கா - போன்றவை அவரது புலமைக்குச்சான்றானது.

    7. பாசப்பறவைகள், பாடாத தேனீக்கள் - அவர் வசனம் பேசி நடித்தேன்.

    8. என் ஓவியங்களை பார்க்க 30 ஆண்டுகளுக்கு முன் எங்கள் இல்லம் வந்து 2 மணி நேரம் இருந்தார்.

    9. சூர்யாவின் முதல் படம் நேருக்கு நேர் - கார்த்தி - முதல் படம் பருத்திவீரன் பார்த்து ஆசி கூறியவர்.

    10. தமிழகத்தில் அவர் இடம் என்றும் காலியாகவே இருக்கும். 

    அன்னாரது ஆத்மா சாந்தியடையவும் / பிரார்த்திப்பதோடு அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் ஆறுதலை தெரிவித்து கொள்கிறேன்.

    இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    பா.ஜ.க.வின் ‘ஆபரே‌ஷன் கமலா’ திட்டத்தை முறியடிக்க குமாரசாமி, சிவகுமார் மற்றும் ஜமீர் அகமத் இணைந்து பா.ஜ.க சேர்ந்த 12 எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்க முழு மூச்சாக செயல்பட்டு வருகின்றனர்.
    பெங்களூரு:

    மதசார்பற்ற ஜனதா தள தலைவரும், முன்னாள் முதல் மந்திரியுமான குமாரசாமி, காங்கிரஸ் பிரமுகரும் முன்னாள் மின்சார துறை மந்திரியுமான டி.கே.சிவகுமார் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சியில் இருந்து காங்கிரசுக்கு தாவிய ஜமீர் அகமத் ஆகிய 3 பேரும் முன்பு எலியும், பூனையும் போல் எதிரிகளாக இருந்தனர்.

    தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தால், இந்த மூவரும் இணைந்து செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு, தங்களுக்குள் கூட்டணி அமைத்து உள்ளனர்.

    இதையடுத்து எம்.எல்.ஏ.க்கள் தங்கி இருந்த பிடதி ஈகிள்டன் ரிசார்ட்டிலும், ஐதராபாத்துக்கு எம்.எல்.ஏ.க்களை அழைத்து செல்வதிலும் குமாரசாமி, சிவகுமார் மற்றும் ஜமீர் அகமத் ஆகியோர் பரஸ்பரம் சிரித்துக் கொண்டு, பம்பரமாக சுற்றி அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டதை கண்டு, சக எம்.எல்.ஏ.க்களே ஆச்சரியத்தில் மூழ்கினார்.

    மேலும், பா.ஜனதா கட்சியின் ‘‘ஆபரே‌ஷன் கமலா’’ திட்டத்தை முறியடிக்க இவர்கள் 3 பேரும் பாரதீய ஜனதாவை சேர்ந்த 12 எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்கவும் முழு மூச்சாக செயல்பட்டு வருகின்றனர். இந்த மூவர் கூட்டணி, கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ×