search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நவக்கிரகம்"

    நவக்கிரகங்கள் என்று போற்றப்படும் ஒன்பது கிரகங்களும், நமக்கு ஒவ்வொரு விதத்தில் நன்மைகளை வழங்குகின்றன. எந்தக் கிரகத்தை வணங்குவதால் என்ன பலன் நமக்கு கிடைக்கும் என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
    நவக்கிரகங்கள் என்று போற்றப்படும் ஒன்பது கிரகங்களும், நமக்கு ஒவ்வொரு விதத்தில் நன்மைகளை வழங்குகின்றன. எந்தக் கிரகத்தை வணங்குவதால் என்ன பலன் நமக்கு கிடைக்கும் என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

    சூரியன் - ஆரோக்கியம், தலைமைப் பதவி, அரசு வேலை

    சந்திரன் - கீர்த்தி, சிந்தனாசக்தி, கற்பனை வளம்

    அங்காரகன் - செல்வம், வீரம், விவேகம், தன்னம்பிக்கை

    புதன் - அறிவு, வெளிநாட்டுயோகம், நகைச்சுவை உணர்வு

    வியாழன் - நன்மதிப்பு, போதிக்கும் ஆற்றல், மரியாதை

    சுக்ரன் - அழகு, அந்தஸ்து, நல்வாழ்க்கை, குணமான வாழ்க்கைத் துணை

    சனி - சந்தோஷம், ஆயுள் விருத்தி, ஆரோக்கியம்

    ராகு - பகைவர் பயம் நீங்குதல், பணவரவு அதிகரித்தல்

    கேது - குல அபிவிருத்தி, ஞான மார்க்கம், ஆன்மிக வாழ்வு.
    நவகிரகங்களால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு எந்த கோவிலில் வழிபாடு செய்ய வேண்டும், வழிபாடு செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பது பற்றி அறிந்து கொள்ளலாம்.
    கிரகம்: சூரியன்
    ஸ்தலம்: சூரியனார் கோவில்
    நிறம்: சிவப்பு
    தானியம்: கோதுமை
    வாகனம்: ஏழு குதிரை பூட்டிய தேர்
    மலர்: செந்தாமரை
    உலோகம்: தாமிரம்
    நாள்: ஞாயிறு
    ராசிகற்கள்: மாணிக்கம்
    பலன்கள்: காரிய சித்தி.
    சூரியனார் கோவில் தொடர்பு எண்: 0435 -2472349.


    கிரகம்: சந்திரன்
    ஸ்தலம்: திங்களூர்
    நிறம்: வெள்ளை
    தானியம்: அரிசி
    வாகனம்: வெள்ளை குதிரை
    மலர்: வெள்ளரளி
    உலோகம்: ஈயம்
    நாள்: திங்கள்
    ராசிகற்கள்: முத்து
    பலன்கள்: தடங்கல் நீங்கும், முன்னேற்றம் ஏற்படும்.


    கிரகம்: குரு
    ஸ்தலம்: ஆலங்குடி
    நிறம்: மஞ்சள்
    தானியம்: கொண்டை கடலை
    வாகனம்: அன்னம்
    மலர்: வெண்முல்லை
    உலோகம்: பொன்
    நாள்: வியாழன்
    ராசிகற்கள்: புஷ்பராகம்
    பலன்கள்: சகல சம்பந்துக்கள், மற்றும் வித்தைகள் தேர்ச்சி
    கோவில் தொடர்பு எண்: 04374 -269407.


    கிரகம்: ராகு
    ஸ்தலம்: திருநாகேஸ்வரம்
    நிறம்: கரு நிறம்
    தானியம்: உளுந்து
    வாகனம்: ஆடு
    மலர்: மந்தாரை
    உலோகம்: தாமிரம் மற்றும் கருங்கல்
    நாள்: ஞாயிறு
    ராசிகற்கள்: கோமேதகம்
    பலன்கள்: எந்த காரியத்திலும் ஜெயம் அடைதல்
    கோவில் தொடர்பு எண்: 0435 - 2463354.


    கிரகம்: புதன்
    ஸ்தலம்: திருவென்காடு
    நிறம்: பச்சை
    தானியம்: பச்சைபயிர்
    வாகனம்: குதிரை
    மலர்: வெண்காந்தல்
    உலோகம்: பித்தளை
    நாள்: புதன்
    ராசிகற்கள்: மகரந்தம்
    பலன்கள்: சகல சாஸ்திரம் மற்றும் ஞானம்
    கோவில் தொடர்பு எண்: 04364 - 256424.


    கிரகம்: சுக்கிரன்
    ஸ்தலம்: கஞ்சனூர்
    நிறம்: வெள்ளை
    தானியம்: மொச்சை
    வாகனம்: கருடன்
    மலர்: வெண்தாமரை
    உலோகம்: வெள்ளி
    நாள்: வெள்ளி
    ராசிகற்கள்: வைரம்
    பலன்கள்: விவாகம் மற்றும் பிராப்தம் செளபாக்கியம் மலட்டுத்தன்மை நீங்கும்
    கோவில் தொடர்பு எண்: 0435 - 2473737.


    கிரகம்: கேது
    ஸ்தலம்: கீழ்பெரும் பள்ளம்
    நிறம்: பல நிறம்
    தானியம்: கொள்ளு
    வாகனம்: சிங்கம்
    மலர்: செவ்வள்ளி
    உலோகம்: கருங்கல்
    நாள்: ஞாயிறு
    ராசிகற்கள்: வைடூரியம்
    பலன்கள்: வறுமை, வியாதிகள் நீங்கும்.
    கோவில் தொடர்பு எண்: 04364 - 275222.


    கிரகம்: சனி
    ஸ்தலம்: திருநள்ளாறு
    நிறம்: கருப்பு
    தானியம்: எள்
    வாகனம்: காகம்
    மலர்: கருங்குவளை
    உலோகம்: இரும்பு
    நாள்: சனி
    ராசிகற்கள்: நீலம்
    பலன்கள்: வியாதிகள், பயம், மற்றும் தீராத கடன்கள் நீங்கும்
    கோவில் தொடர்பு எண்: 04368 - 236530.


    கிரகம்: செவ்வாய்
    ஸ்தலம்: வைதீஸ்வரன் கோவில்
    நிறம்: சிவப்பு
    தானியம்: துவரை
    வாகனம்: ஆட்டுக்கடா
    மலர்: செண்பகம்
    உலோகம்: செம்பு
    நாள்: செவ்வாய்
    ராசிகற்கள்: பவழம்
    பலன்கள்: பகைவர்களை வெற்றி கொள்ளுதல், சகல சாஸ்திர ஞானம்
    கோவில் தொடர்பு எண்: 04364 - 279423
    நவக்கிரங்களுக்கு உகந்த இந்த காயத்ரி மந்திரங்களை சனிக்கிழமைகளில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் நவக்கிரகங்களால் ஏற்படும் தொல்லைகளை படிப்படியாக நீங்கும்.
    நவக்கிரங்களுக்கு உகந்த இந்த காயத்ரி மந்திரங்களை சனிக்கிழமைகளில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் நவக்கிரகங்களால் ஏற்படும் தொல்லைகளை படிப்படியாக நீங்கும்.

    1.) ஸ்ரீ சூரியன் காயத்ரி:-ஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே: பாச ஹஸ்தாய தீமஹிதன்னோ சூர்ய ப்ரயோதயாத்.

    2.) ஸ்ரீ சந்திரன் காயத்ரி:- ஓம் பத்ம த்வஜாய வித்மஹே: ஹேம ரூபாய தீமஹி தன்னோ ஸோம ப்ரயோதயாத்.

    3.) ஸ்ரீ செவ்வாய் காயத்ரி:- ஓம் வீர த்வஜாய வித்மஹே: விக்ன ஹஸ்தாய தீமஹி தன்னோ பௌம ப்ரயோதயாத்.

    4.) ஸ்ரீ புதன் காயத்ரி:- ஓம் கஜ த்வஜாய வித்மஹே: சுக ஹஸ்தாய தீமஹி தன்னோ புத ப்ரயோதயாத்.

    5.) ஸ்ரீ குரு காயத்ரி:- ஓம் விருஷப த்வஜாய வித்மஹே: க்ருணி ஹஸ்தாய தீமஹி தன்னோ குரு ப்ரயோதயாத்.

    6). ஸ்ரீ சுக்கிரன் காயத்ரி:- ஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே: தநுர் ஹஸ்தாய தீமஹி தன்னோ சுக்கிர ப்ரயோதயாத்.

    7.) ஸ்ரீ சனீஸ்வரர் காயத்ரி:- ஓம் காக த்வஜாய வித்மஹே: கட்க ஹஸ்தாய தீமஹி தன்னோ மந்த ப்ரயோதயாத்.

    8.) ஸ்ரீ ராகு காயத்ரி:- ஓம் நாக த்வஜாய வித்மஹே: பத்ம ஹஸ்தாய தீமஹி தன்னோ ராகு ப்ரயோதயாத்.

    9.) ஸ்ரீ கேது காயத்ரி:- ஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே: சூல ஹஸ்தாய தீமஹி தன்னோ கேது ப்ரயோதயாத்.
    மனித வாழ்வில் நவக்கிரகங்களின் செயல்பாடு முக்கியமானது என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. அப்படிப்பட்ட நவக்கிரகங்களுக்குரிய அம்சங்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.
    மனித வாழ்வில் நவக்கிரகங்களின் செயல்பாடு முக்கியமானது என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. அப்படிப்பட்ட நவக்கிரகங்களுக்குரிய அம்சங்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.

    சூரியன்

    இவர் காசியப முனிவரின் குமாரர் ஆவார். ஒளிப்பிழம்பானவர். நவக்கிரகங்களில் முதன்மை ஸ்தானம் பெற்றவர். சிம்ம ராசிக்கு அதிபதியான இவர், நவக்கிரகங்களில் நடுவில் அமர்ந்திருப்பார்.

    திக்கு - கிழக்கு
    அதிதேவதை - அக்னி
    ப்ரத்யதி தேவதை - ருத்திரன்
    தலம் - சூரியனார் கோவில்
    நிறம் - சிவப்பு
    வாகனம் - ஏழு குதிரைகள் பூட்டிய ரதம்
    தானியம் - கோதுமை
    மலர் - செந்தாமரை, எருக்கு
    வஸ்திரம் - சிவப்பு
    ரத்தினம் - மாணிக்கம்
    அன்னம் - கோதுமை, ரவா,
    சர்க்கரைப் பொங்கல்

    சந்திரன்

    பாற்கடலில் இருந்து தோன்றியவர் இவர். தண்ணொளி உடையவர். வளர்பிறையில் சுபராகவும், தேய்பிறையில் பாபராகவும் விளங்கும் தன்மை கொண்டவர். இவர் கடக ராசிக்கு அதிபதியாவார்.

    திக்கு - தென்கிழக்கு
    அதிதேவதை - ஜலம்
    ப்ரத்யதி தேவதை - கவுரி
    தலம் - திருப்பதி
    நிறம் - வெள்ளை
    வாகனம் - வெள்ளைக் குதிரை
    தானியம் - நெல்
    மலர் - வெள்ளை அரளி
    வஸ்திரம் - வெள்ளாடை
    ரத்தினம் - முத்து
    அன்னம் - தயிர் சாதம்

    அங்காரகன் (செவ்வாய்)

    இவர் வீரபத்திரரின் அம்சமாக தோன்றியவர். சுப்ரமணியரை தெய்வமாகக் கொண்ட இவர், பாவ பலனைக் கொடுக்கும் குரூரர். மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளுக்கு அதிபதியானவர்.

    திக்கு - தெற்கு
    அதிதேவதை - நிலமகள்
    ப்ரத்யதி தேவதை - ஷேத்திரபாலகர்
    தலம் - வைத்தீஸ்வரன் கோவில்
    நிறம் - சிவப்பு
    வாகனம் - ஆட்டுக்கிடா
    தானியம் - துவரை
    மலர் - செண்பகப்பூ,சிவப்பு அரளி
    வஸ்திரம் - சிவப்பு ஆடை
    ரத்தினம் - பவளம்
    அன்னம் - துவரம் பருப்பு பொடி சாதம்

    புதன்

    இவர் நவக்கிரகங்களில் ஒருவரான சந்திரனின் குமாரர் ஆவார். தீய கிரகங்கள் விளைவிக்கும் பீடைகளை அழிக்கும் ஆற்றல் இவருக்கு உண்டு. இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளுக்கு அதிபதியாக விளங்குபவர்.

    திக்கு - வடகிழக்கு
    அதிதேவதை - விஷ்ணு
    ப்ரத்யதி தேவதை - நாராயணன்
    தலம் - மதுரை
    நிறம் - வெளிர் பச்சை
    வாகனம் - குதிரை
    தானியம் - பச்சைப் பயறு
    மலர் - வெண்காந்தள்
    வஸ்திரம் - வெண்ணிற ஆடை
    ரத்தினம் - மரகதம்
    அன்னம் - பாசிப்பருப்பு பொடி சாதம்



    குரு

    தேவலோகத்தின் தலைவனான இந்திரன் முதலான அனைத்து தேவர்களுக்கும் குருவாக விளங்குபவர். இதனால் ‘தேவ குரு’ என்னும் பட்டத்தைப் பெற்றவர். இவருடைய பார்வையால், தோஷங்கள் அனைத்தும் நீங்கும். இவர் ஒரு பூரண சுப தன்மைக் கொண்டவர். தனுசு மற்றும் மீன ராசிகளுக்கு அதிபதியாக விளங்குபவர்.

    திக்கு - வடக்கு
    அதிதேவதை - பிரம்மா
    ப்ரத்யதி தேவதை - இந்திரன்
    தலம் - திருச்செந்தூர்
    நிறம் - மஞ்சள்
    வாகனம் - மீனம்
    தானியம் - கடலை
    வஸ்திரம் - மஞ்சள் நிற ஆடை
    ரத்தினம் - புஷ்பராகம்
    அன்னம் - கடலைப் பொடி சாதம், சுண்டல்

    சுக்ரன்

    இவர் அசுரர்களுக்கு குருவாக விளங்குபவர். இவரை ‘மழைக்கோள்’ என்றும் அழைப்பர். குரு கிரகத்தைப் போல இவருக்கு சுப கிரகமாக விளங்குபவர். இவர் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளுக்கு அதிபதி ஆவார்.

    திக்கு - கிழக்கு
    அதிதேவதை - இந்திராணி
    ப்ரத்யதி தேவதை - இந்திர மருத்துவன்
    தலம் - ஸ்ரீரங்கம்
    வாகனம் - முதலை
    தானியம் - மொச்சை
    மலர் - வெண் தாமரை
    வஸ்திரம் - வெள்ளாடை
    ரத்தினம் - வைரம்
    அன்னம் - மொச்சைப் பொடி சாதம்

    சனி

    நவக்கிரகங்களில் முதன்மையானவரான சூரியனின் மகன் இவர். பாவ- புண்ணிய பலன் தருவதில் ஈஸ்வர பட்டம் பெற்றவர். ‘சனியைப் போல கெடுப்பாரும் இல்லை, கொடுப்பாரும் இல்லை’ என்பது பழமொழியாகும். இவர் மகரம் மற்றும் கும்ப ராசிகளுக்கு அதிபதி.

    திக்கு - மேற்கு
    அதிதேவதை - எமன்
    ப்ரத்யதி தேவதை - பிரஜாபதி
    தலம் - திருநள்ளாறு
    நிறம் - கருமை
    வாகனம் - காகம்
    தானியம் - எள்
    மலர் - கருங்குவளை, வன்னி
    வஸ்திரம் - கருப்பு நிற ஆடை
    ரத்தினம் - நீலம்
    அன்னம் - எள்ளுப்பொடி சாதம்

    ராகு

    இவர் அசுரத் தலையும், நாக உடலும் பெற்றவர். மிகுந்த வீரம் கொண்டவர். ‘கருநாகம்’ என்று அழைக்கப்படுபவர். இவர் ஒரு நிழல் கிரகமாவார். இவர் எந்த ராசிக்கும் அதிபதி அல்ல.

    திக்கு - தென் மேற்கு
    அதிதேவதை - பசு
    ப்ரத்யதி தேவதை - பாம்பு
    தலம் - காளத்தி
    நிறம் - கருமை
    வாகனம் - நீல சிம்மம்
    தானியம் - உளுந்து
    மலர் - மந்தாரை
    வஸ்திரம் - கருப்பு நிற ஆடை
    ரத்தினம் - கோமேதகம்
    அன்னம் - உளுத்தம் பருப்புப்பொடி சாதம்

    கேது


    இவர் நாக தலையும், அசுர உடலும் கொண்டவர். ‘செந்நாகம்’ என்று அழைக்கப்படுபவர். இவரது ராகுவைப் போலவே நிழல் கிரகம் ஆவார். இவரும் எந்த ராசிக்கும் அதிபதியாக இல்லை.

    திக்கு - வட மேற்கு
    அதிதேவதை - சித்திரகுப்தன்
    ப்ரத்யதி தேவதை - பிரமன்
    தலம் - காளத்தி
    நிறம் - செம்மை
    வாகனம் - கழுகு
    தானியம் - கொள்ளு
    மலர் - செவ்வல்லி
    வஸ்திரம் - பல நிற ஆடை
    ரத்தினம் - வைடூரியம்
    அன்னம் - கொள்ளுப்பொடி சாதம் 
    நவக்கிரக தோஷங்களைப் போக்க சில பொதுவாக வழிமுறைகள் இருக்கின்றன. இவை எல்லாராலும் கடைப்பிடிக்கக் கூடிய எளிய முறையிலான பரிகார வழிபாடாகும்.
    நவக்கிரக தோஷங்களைப் போக்க சில பொதுவாக வழிமுறைகள் இருக்கின்றன. இவை எல்லாராலும் கடைப்பிடிக்கக் கூடிய எளிய முறையிலான பரிகார வழிபாடாகும்.

    * வெள்ளிக்கிழமைகளில் பசுக்களுக்கு புல் கொடுப்பது, பையில் சிறிய வெள்ளிக்கட்டி வைத்திருப்பது, கையில் வெள்ளி வளையம் அணிவது, காய்ச்சாத பசும்பாலை ஏதேனும் ஒரு கோவிலுக்கு தொடர்ந்து 15 நாட்கள் கொடுப்பது, நீர் அருந்துவதற்கு வெள்ளி டம்ளர்களை பயன்படுத்துவது போன்றவை சுக்ரனின் தோஷத்தில் இருந்து காப்பாற்றும்.

    * நீலம் மற்றும் பச்சை நிறத்தினால் ஆன ஆடைகளை தவிர்ப்பதன் மூலமாக சனி மற்றும் புதன் கிரகங்களினால் ஏற்படும் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.

    * தினமும் நெற்றியில் மஞ்சள் திலகம் அணிந்து கொண்டால், குருவருள் கிடைக்க வழிபிறக்கும். அதே போல் வியாழக்கிழமைகளில் கோவில்களில் லட்டு வழங்குவது குரு பலத்தை அதி கரிக்கும்.

    * கண் தெரியாதவர்களுக்கு இனிப்புகள் வழங்குவதன் மூலமும், தோலில் செய்த மணிபர்சை பணம் வைக்க பயன்படுத்தாமல் இருப்பதும், சனியின் கிரக பாதிப்பை ஓரளவு குறைக்கும்.

    * கைப்பிடி அரிசியை எடுத்து, அதனை அருகில் உள்ள நதி அல்லது ஏரியில் விடுவதன் மூலம், சந்திரன் பலன் அதிகரிக்கும்.

    * வீட்டில் சூரியனுக்குரிய யாகங்கள் செய்வது, தினமும் சூரியனுக்கு நீர் படைப்பது போன்றவை சூரிய பலத்தை அதிகரிக்கச் செய்யும்.

    * தினமும் சரஸ்வதி மந்திரம் ஜெபிப்பது, புதன் பலத்தைக் கூட்டும், பிள்ளைகளின் கல்வியை மேம்படுத்தும்.

    * 16 நாட்கள் கோவிலில் கொள்ளு தானம் செய்வது கேது பிரீதிக்கு உகந்தது. அதே போல் உளுந்து தானம் செய்தால் ராகு பிரீதிக்கு உகந்தது.

    * சர்க்கரை, கடலைப் பருப்பு, நெய், அரிசி ஆகியவற்றை தானமாக அளித்தால், செவ்வாய் கிரக பாதிப்பு விலகும். வீட்டில் அன்னபூரணியின் கடாட்சம் கிட்டும். 
    நவக்கிரகங்களும் விநாயகரின் உடலில் ஒவ்வொரு பாகத்தில் இடம் பெறறுள்ளனர். விநாயகரை வழிபட்டால் அவர்களையும் வழிபட்டதாகவே பொருள்.
    நவக்கிரகங்களும் விநாயகரின் உடலில் ஒவ்வொரு பாகத்தில் இடம் பெறறுள்ளனர். விநாயகரை வழிபட்டால் அவர்களையும் வழிபட்டதாகவே பொருள். எனவே விநாயகரை வழிபடுபவர்களை நவக்கிகரங்கள் இம்சிப்பதில்லை, மாறாக நன்மையே செய்வார்கள் என்பது ஐதீகம்.

    நெற்றி     - சூரியன்
    நாபி     - சந்திரன்
    வலது தொடை - செவ்வாய்
    இடது தொடை - கேது
    வலது கையின் மேல்    - சனி
    வலது கையின்கீழ்     - புதன்
    இடது கையின் மேல் - ராகு
    இடது கையின் கீழ்    - சுக்கிரன்
    தலையில்     - வியாழன்

    ஆகிய கிரகங்கள் உள்ளதாக விநாயக புராணம் கூறுகின்றது. இந்த அமைப்பில் விநாயகரைக் காண கும்பகோணம் மடத்துத் தெருவில் உள்ள பகவத் விநாயகர் கோவிலுக்குச் செல்ல வேண்டும். இவரை வழிபடுபவதால் நவக்கிரக தோஷங்கள் நீங்கி நல்வாழ்வு பெறலாம்.
    ×