search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருந்து"

    குழந்தைகளின் மரணத்தை தள்ளிபோடும் மருந்தை சுவிட்சர்லாந்தின் ‘நோவார்டிஸ்’ நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. #SpinalMuscularAtrophy
    ஜெனீவா:

    சுவிட்சர்லாந்தில் ‘டைப்’ ஸ்பைனல் மஸ்குலர் அட்ரோபி எனப்படும் முதுகு தண்டுவட அரிய நோயுடன் ஆண்டுக்கு 8 முதல் 12 குழந்தைகள் பிறக்கின்றன. இதனால் அவதிப்பட்டு பிறந்து ஓராண்டுக்குள் மரணம் அடைகின்றன. இந்த நிலையில் சுவிட்சர்லாந்தின் ‘நோவார்டிஸ்’ நிறுவனம் அதற்கான மருந்தை கண்டுபிடித்துள்ளது.



    இந்த மருந்தை ஒருமுறை எடுத்துக் கொண்டால் தொடர்ந்து 13 ஆண்டுகள் மரணத்தை தள்ளிப் போட முடியும். இந்த மருந்தின் விலை 40 லட்சம் பிராங்குகள். ஆனால் சுவிட்சர்லாந்து அரசை பொறுத்தவரை எந்த வகை அரிய மருந்தாக இருந்தாலும் ஒரு லட்சம் பிராங்குகளாகவே இருக்க வேண்டும். எனவே இதற்கு அரசின் அனுமதி கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. #SpinalMuscularAtrophy
    முறையான உரிமம் மற்றும் அனுமதியை பெற்ற நிறுவனங்கள் ஆன்-லைன் மூலம் மருந்து விற்பனை செய்ய தடை இல்லை என ஐகோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டார். #ChennaiHighCourt #OnlineDrugs
    சென்னை:

    ஆன்-லைன் மூலம் மருந்து, மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மருந்தாளர்கள் சங்கம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், ஆன்-லைன் மூலம் மருந்துகளை விற்பனை செய்ய நேற்று முன்தினம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

    இந்த நிலையில், நீதிபதி ஆர்.மகாதேவன் நேற்று வழக்குகளை விசாரிக்க தொடங்கினார். அப்போது வக்கீல் எஸ்.வர்ஷா ஆஜராகி, ‘ஆன்-லைன் மூலம் மருந்துகளை விற்பனை செய்ய என் கட்சிக்காரர் நிறுவனம் முறையான உரிமம் மற்றும் அனுமதியை பெற்றுள்ளது. இந்த ஐகோர்ட்டு ஆன்-லைன் மூலம் மருந்து விற்பனை செய்ய தடை விதித்துள்ளதால், நிறுவனத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது’ என்றார்.

    அதற்கு பதில் அளித்த நீதிபதி, ‘முறையான உரிமம் மற்றும் அனுமதியை பெற்ற நிறுவனங்கள் ஆன்-லைன் மூலம் மருந்து விற்பனை செய்ய தடை இல்லை. சட்டவிரோதமாக, உரிமம் எதுவும் பெறாத நிறுவனங்களுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது’ என்று கூறினார்.

    அதேபோல, ஐகோர்ட்டு விதித்துள்ள தடையை நீக்கக்கோரி ஆன்-லைன் மூலம் மருந்துகளை விற்பனை செய்யும் நிறுவனங்கள் சில மனு தாக்கல் செய்துள்ளன. இந்த மனுக்கள் அனைத்தையும் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.
    நாடு முழுவதும் ‘ஆன்-லைன்’ மூலம் மருந்துகளை விற்பனை செய்ய இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #ChennaiHighCourt #OnlineDrugs
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில், தமிழ்நாடு மருந்தாளர்கள் சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:-

    எங்கள் சங்கத்தில் மருந்து வினியோகஸ்தர்கள், மொத்தம் மற்றும் சில்லரை விற்பனையாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். தற்போது நாட்டில் ‘ஆன்-லைன்’ மூலம் பொருட்கள் வாங்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது.

    இதுவரை, வீட்டு உபயோகப் பொருட்களை தான் ‘ஆன்-லைனில்’ பல நிறுவனங்கள் விற்பனை செய்து வந்தன. இப்போது, சில தனியார் நிறுவனங்கள், மருந்து மாத்திரைகளையும் விற்பனை செய்ய தொடங்கிவிட்டன. இதை அனுமதித்தால், பொதுமக்களுக்கு மிகப்பெரிய தீங்கு ஏற்படும்.



    ஏனென்றால், போலியான, காலாவதியான, கெட்டுப்போன மற்றும் தரம் குறைந்த மருந்துகளை அந்த நிறுவனம், பொதுமக்களுக்கு விற்பனை செய்யலாம். மேலும், மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம், விதிகள் மற்றும் மருந்துக்கடைச் சட்டப்படி இதுபோல மருந்துகளை ‘ஆன்-லைன்’ மூலம் விற்பனை செய்ய முடியாது.

    இந்த விற்பனை முறையினால், லட்சக்கணக்கான மருந்துக்கடை உரிமையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இப்போது இணையதளம் மூலம் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்களின் அலுவலகங்கள் எல்லாம் வெளிநாடுகளில் உள்ளன.

    அந்த நிறுவனங்கள், இந்திய சட்டவிதிகளை பின்பற்றுவது இல்லை. மருந்துகளை விற்பனை செய்ய சட்டப்படியாக உரிமமும் பெறவில்லை. எனவே, ஆன்-லைன் மூலம் மருந்துகளை விற்பனை செய்ய அனுமதிக்கக்கூடாது என்று மத்திய அரசுக்கு கடந்த ஜூன் மாதம் இரு மனுக்களையும் அனுப்பினோம். எந்த நடவடிக்கையும் எடுக்காததால், ஆன்-லைன் மூலம் மருந்துகளை விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும். மருந்துகளை விற்பனை செய்யும் இணையதளத்தை முடக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    இந்த மனுவை நீதிபதி ஆர்.மகாதேவன் விசாரித்தார். பின்னர், நாடு முழுவதும் ‘ஆன்-லைன்’ மூலம் மருந்துகளை விற்பனை செய்ய வருகிற 9-ந் தேதி வரை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். 
    டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருந்து, மாத்திரைகள் இருப்பில் உள்ளதாக அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.#NationalDengueAwarenessDay #TNGovt #TNHM #Vijayabaskar
    சென்னை:

    சென்னை எழும்பூரில் உள்ள மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநல பயிற்சி நிலையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் தேசிய டெங்கு விழிப்புணர்வு நாள் கலந்தாய்வு கூட்டமும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனை டாக்டர்களுக்கு காய்ச்சல் சிகிச்சை குறித்த பயிலரங்கமும் நேற்று நடந்தது.

    அப்போது காய்ச்சல் மேலாண்மை மற்றும் டெங்கு விழிப்புணர்வு கையேடு, குறுந்தகடுகளை டாக்டர் சி.விஜயபாஸ்கர் வழங்கினார். நிகழ்ச்சியில் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேசியதாவது:-

    ஒவ்வொரு மாவட்டத்திலும் வட்டார அளவிலான விரைவு செயல்பாட்டு குழுக்கள் காய்ச்சல் ஏற்பட்டுள்ள பகுதிக்கு சென்று, காய்ச்சலின் காரணத்தை கண்டறிந்து நோய் தடுப்பு பணிகளை மேற்கொள்வதுடன், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிய சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.

    வீடு, வீடாக சென்று கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அழிக்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருந்து-மாத்திரைகள், ரத்த தட்டணுக்கள், பரிசோதனை கருவிகள், மருந்துகள், ரத்தக்கூறுகள் மற்றும் ரத்தம் ஆகியவை போதிய அளவில் இருப்பில் உள்ளன.

    காய்ச்சல் கண்காணிப்பு பணி 2,800 அரசு மருத்துவமனைகள் மற்றும் குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 24 மணி நேர காய்ச்சல் சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இயற்கையான முறையில் காய்ச்சல் குணமடைய நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலைச்சாறு மற்றும் மலைவேம்பு இலைச்சாறு தொடர்ச்சியாக அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படுகிறது.

    டெங்கு மற்றும் சிக்குன் குனியா காய்ச்சலுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கல் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் ரூ.1.80 கோடி செலவிலும், கொசு ஒழிப்பு பணிகள் ரூ.13.95 கோடி செலவிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க திட்ட இயக்குனர் டாக்டர் செந்தில்ராஜ், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குனர் டாக்டர் குழந்தைசாமி, மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் எட்வின் ஜோ, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் டாக்டர் இன்பசேகரன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.#NationalDengueAwarenessDay #TNGovt #TNHM #Vijayabaskar
    ×