search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெனீவா"

    சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில் மிக அழகிய இளஞ்சிவப்பிலான வைரக்கல் ரூ.370 கோடிக்கு ஏலம் போனது. #pinkdiamond #GenevaAuction
    ஜெனீவா:

    சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில் மிக அழகிய இளஞ்சிவப்பு வைரக்கல் ஏலம் நடைபெற்றது. இதை கிறிஸ்டி, ஏல மையம் நடத்தியது.

    10 காரட் எடை கொண்ட இந்த வைரக்கல் சுமார் ரூ.370 கோடிக்கு (50 மில்லியன் டாலர்) ஏலம் போனது. இது நீள் சதுரவடிவம் கொண்டது. பளிச்சென்ற இளஞ்சிவப்பு நிறம் கொண்டது.

    இந்த வைரத்தை பலர் போட்டி போட்டு ஏலம் கேட்டனர். முடிவில் ஒருவர் அதிக விலை கொடுத்து வாங்கினார். அவரின் பெயரை வெளியிட கிறிஸ்டி ஏல மையம் மறுத்து விட்டது.

    கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1920-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்க சுரங்கத்தில் இது கண்டு பிடிக்கப்பட்டது. பொதுவாக வைரங்கள் வெள்ளை நிறத்தில்தான் இருக்கும். ஆனால் இந்த வைரம் அரிய இளஞ்சிவப்பு நிறத்தில் ஜொலிக்கிறது. #pinkdiamond #GenevaAuction
    ஐநா முன்னாள் பொதுச்செயலாளர் கோபி அன்னான் மறைவையடுத்து ஜெனீவா சென்று அவரது குடும்பத்தினரை சந்திப்பதற்காக சசி தரூருக்கு டெல்லி கோர்ட் அனுமதி அளித்துள்ளது. #ShashiTharoor #Delhicourt
    புதுடெல்லி:

    சுனந்தா புஷ்கர் மரண வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள அவரது கணவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான சசி தரூர் டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் ஜாமீன் வழங்கியது. பின்னர் அவர் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு அனுமதி கேட்டு மனு தாக்க்ல செய்தார். அதனை ஏற்ற நீதிமன்றம், அமெரிக்கா, கனடா, ஜெர்மனி உள்ளிட்ட 5 நாடுகளுக்கு செல்ல அனுமதி வழங்கியது.



    தற்போது ஜெர்மனியில் உள்ள அவர், ஜெனீவா செல்வதற்கு அனுமதி கேட்டு தனது வழக்கறிஞர் மூலம் டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஐநா முன்னாள் பொதுச்செயலாளர் கோபி அன்னான் மறைவையடுத்து அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக ஜெனீவா பயணம் மேற்கொள்ள உள்ளதாக மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனு கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் சமர் விஷால் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சசி தரூர் தரப்பு வழக்கறிஞர் கூறும்போது, சசி தரூரின் நெருங்கிய நண்பரும் ஆலோசகருமான கோபி அன்னான் கடந்த சனிக்கிழமை மறைந்ததாக தெரிவித்து, சசி தரூர் பயணம் செய்ய அனுமதிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

    இதையடுத்து ஜெனீவா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் ஆகஸ்ட் 20 மற்றும் 21ஆகிய தேதிகளில் பயணம் மேற்கொள்ள நீதிபதி அனுமதி அளித்தார்.  #ShashiTharoor #Delhicourt
    சமூக வலைத்தளமான டுவிட்டரில் அதிக நபர்களால் பின்தொடரப்படும் தலைவர்களுக்கான பட்டியலில் அமெரிக்க அதிபர் டிரம்ப் முதலிடம் பிடித்துள்ளார். #Twitter #Trump #Modi
    ஜெனீவா:

    உலக நாடுகளில் உள்ள பெரும்பாலான தலைவர்கள் சமூக வலைத்தளங்களான பேஸ்புக், டுவிட்டரில் கணக்கு வைத்துள்ளனர். நாட்டு நடப்புகள் மற்றும் தன்னை பாதித்த விஷயங்கள் குறித்த தனது கருத்துக்களை அதில் பதிவிட்டு வருகின்றனர்.  

    இந்நிலையில், சமூக வலைத்தளமான டுவிட்டரில் அதிக நபர்களால் பின்தொடரப்படும் தலைவர்கள் பற்றி சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வு கடந்த 12 மாத இடைவெளியில் நடத்தப்பட்டது. அந்த ஆய்வு முடிவுகளின் விவரம் வருமாறு:

    சமூக வலைத்தளமான டுவிட்டரில் அதிக நபர்களால் பின்தொடரப்படும் தலைவர்களுக்கான பட்டியலில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

    டொனால்ட் டிரம்ப்பை டுவிட்டரில் 5.2 கோடிக்கும் அதிகமான நபர்கள் பின்தொடர்கின்றனர். இவருக்கு அடுத்தபடியாக, இந்த பட்டியலில் 4.75 கோடிக்கும் அதிகமான நபருடன் போப் பிரான்சிஸ் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.

    இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். இவரை சுமார் 4.3 கோடி நபர்கள் பின்தொடர்கின்றனர்.

    முதல் 10 இடங்களுக்கான பட்டியலில் இந்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ, ஜோர்டான் நாட்டு ராணி ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர்.

    வெளியுறவு துறை மந்திரிகளிலேயே மிக அதிகமாக பின்தொடர்பவர்கள் பட்டியலில் சுஷ்மா சுவராஜ் முன்ன்னிலையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #Twitter #Trump #Modi
    ×