என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 152455
நீங்கள் தேடியது "காசா"
காசா எல்லையில் இருந்து இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதேபோல் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் 8 பேர் பலியாகினர். #PalestianianRocketFire #Isreal
ஜெருசலேம்:
இஸ்ரேல் நாட்டுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையில் உள்ள காசா எல்லையில் ஆதிக்கம் செலுத்திவரும் ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் அரசுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகின்றனர். அவ்வப்போது இஸ்ரேல் பகுதிக்குள் ஏவுகணைகளை வீசி அதிரடியாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதேபோல் இஸ்ரேல் படைகளும் அவர்களுக்கு எதிராக தொடந்து ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பாலஸ்தீனர்கள் வசிக்கும் பகுதிகளிலும் தாக்குதல் நடத்தப்படுகிறது.
போராளிகள் நடத்திய ராக்கெட் தாக்குதலில் இஸ்ரேலின் தெற்கு பகுதியில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கட்டிடம் இடிந்து விழுந்ததில் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் உயிரிழந்தார். ஒரு பெண் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதேபோல் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதல்களைத் தொடர்ந்து காசா எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. #PalestianianRocketFire #Isreal

இந்நிலையில், காசா எல்லையில் இருந்து போராளிகள் இஸ்ரேல் பகுதிக்குள் நேற்று மாலை முதல் ராக்கெட்டுகளை வீசி உக்கிரமான தாக்குதல் நடத்தினர். 300க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள் வீசப்பட்டதாகவும், இதையடுத்து இஸ்ரேல் சிறப்பு படைகள் போர் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
போராளிகள் நடத்திய ராக்கெட் தாக்குதலில் இஸ்ரேலின் தெற்கு பகுதியில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கட்டிடம் இடிந்து விழுந்ததில் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் உயிரிழந்தார். ஒரு பெண் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதேபோல் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதல்களைத் தொடர்ந்து காசா எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. #PalestianianRocketFire #Isreal
காசா எல்லையில் இஸ்ரேல் நிகழ்த்திய வான்தாக்குதலில் 12 முதல் 14 வயதுக்கு உட்பட்ட பாலஸ்தீன சிறுவர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். #Gaza #Palestinian #IsraeliStrike
காஷா:
இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே நீண்டகாலமாக எல்லை பிரச்சினை நீடித்து வருகிறது. இதன் காரணமாக இருநாடுகளின் எல்லையில் எப்போதும் பதற்றமான சூழல் நிலவும்.
இந்த நிலையில், பாலஸ்தீன அகதிகள் இஸ்ரேலில் உள்ள தங்களின் மூதாதையர்களின் இல்லங்களுக்கு திரும்ப உரிமை வழங்கப்பட்டிருப்பதற்கு ஆதரவு தெரிவித்து, காசா எல்லை பகுதியில் பாலஸ்தீனர்கள் பல மாதங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தின் போது பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் படையினர் வன்முறையை கட்டவிழ்த்து விடுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. அதோடு பாலஸ்தீனர்களை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல்களையும் நடத்தி வருகிறது. அந்த வகையில், போராட்டம் தொடங்கிய நாள் முதல் தற்போது வரை 200-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் இஸ்ரேல் படையினரால் கொல்லப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில், காசாவில் உள்ள கான் யூனிஸ் நகரில் இஸ்ரேல் போர் விமானம் குண்டு மழை பொழிந்தது. இந்த தாக்குதலில் 12 முதல் 14 வயதுக்கு உட்பட்ட 3 சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். அதே சமயம் பாலஸ்தீன சிறுவர்கள் 3 பேரும், இஸ்ரேல் எல்லை பகுதியில் உள்ள வேலிக்கு அருகே வெடிகுண்டுகளை வைக்க முயன்றதாகவும், அதனால் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு கொல்லப்பட்டதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்து உள்ளது. #Gaza #Palestinian #IsraeliStrike

காசாமுனையில் ஹமாஸ் இயக்கத்தினரை குறிவைத்து நேற்று இஸ்ரேல் குண்டு வீச்சு நடத்தியது. இதில் ஹமாஸ் இயக்கத்தினர் 2 பேர் பலியாகினர்.
காசா:
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனுக்கும் இடையே நெடுங்காலமாக மோதல் போக்கு இருந்து வருகிறது.
பாலஸ்தீனைப் பொறுத்தவ ரயில், அங்கு ஹமாஸ் இயக்கம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இஸ்ரேல் ராணுவத்தினர் மீது தொடர் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிற ஹமாஸ் இயக்கம், பாலஸ்தீன மக்களிடையே செல்வாக்கு பெற்று உள்ளது.
பாலஸ்தீனர்களுக்கு இஸ்ரேலை மீட்டுக்கொடுத்து, மேற்குக்கரை, காசா ஆகிய பகுதிகளைக் கொண்ட இஸ்லாமிய குடியரசாக மாற்றுவதே ஹமாஸ் இயக்கத்தினர் நோக்கம் ஆகும்.ஹமாஸ் இயக்கத்தினரை இஸ்ரேல் பயங்கரவாதிகள் என கூறுகிறது.
இந்த நிலையில், காசாமுனையில் ஹமாஸ் இயக்கத்தினரை குறிவைத்து நேற்று இஸ்ரேல் குண்டு வீச்சு நடத்தியது. இதில் ஹமாஸ் இயக்கத்தினர் 2 பேர் பலியாகினர். இஸ்ரேல் ராணுவத்தினரை குறிவைத்து ஹமாஸ் இயக்கத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூடுக்கு பழிவாங்கும் விதமாக இந்த குண்டுவீச்சை நடத்தியதாக இஸ்ரேல் கூறுகிறது.

×

X