என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 152664
நீங்கள் தேடியது "மாவோயிஸ்ட்"
சட்டசபை தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்துவரும் நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜப்பூர் மாவட்டத்தில் 5 நக்சலைட்கள் கோப்ரா படையினர் இன்று சுட்டுக் கொன்றனர். #Chhattisgarhencounter #fiveNaxalsdead #Bijapurencounter
ராய்ப்பூர்:
90 சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகள் உள்ளிட்ட 18 தொகுதிகளில் இன்று முதற்கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என மாவேயிஸ்டுகள் மிரட்டி உள்ளதால், வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏதுவாக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த பாதுகாப்பையும் மீறி தண்டேவாடா மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் இன்று காலை வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
மேலும், இன்று பிற்பகல் பிஜப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட பாமெட் பகுதியில் நக்சலைட்களுக்கும் ‘கோப்ரா’ எனப்படும் நக்சல் ஒழிப்பு பாதுகாப்பு படையினருக்கும் இடையில் பயங்கர மோதல் ஏற்பட்டது. இருதரப்பினருக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 5 நக்சலைட்களை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.
கமாண்டோ படையை சேர்ந்த இரு வீரர்களும், கோப்ரா படையை சேர்ந்த மூன்று வீரர்களும் இந்த தாக்குதலில் காயமடைந்தனர். #Chhattisgarhencounter #fiveNaxalsdead #Bijapurencounter
ஜார்கண்ட் மாநிலத்தின் கார்வா மாவட்டத்தில் மாவோயிஸ்ட்களின் கண்ணிவெடி தாக்குதலில் ஆறு சிறப்புப்படை போலீசார் உயிரிழந்தனர்.
ராஞ்சி:
சத்தீஸ்கர், ஜார்கண்ட் மாநிலத்தில் நக்சலைட்கள் மற்றும் மாவோயிஸ்ட்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. பணக்காரர்கள் மற்றும் அரசியல் செல்வாக்கு மிக்கவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்திவரும் இந்த குழுவினர் அவ்வப்போது போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினரையும் தாக்கிக் கொல்கின்றனர்.
தடைசெய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்த இந்த குழுவினரை தடுத்து நிறுத்த நக்சல் ஒழிப்பு படை என்ற தனிப்படை பிரிவு இயங்கி வருகிறது. காட்டுப் பகுதிகளில் மறைந்திருக்கு நக்சலைட்களையும், மாவோயிஸ்ட்களையும் இந்த தனிப்படையினர் கைது செய்தும், சுட்டுக் கொன்றும் வருகின்றனர்.
இந்நிலையில், ஜார்கண்ட் மாநிலம் கார்வா மாவட்டத்தில் உள்ள சின்ஜோ பகுதியில் மாவோயிஸ்ட்கள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் மாநில போலீசை சேர்ந்த சிறப்புப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி வெடித்து சிதறியது. அதோடு மாவோயிஸ்ட்கள் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இதில் ஆறு சிறப்புப்படை போலீசார் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து அப்பகுதிக்கு கூடுதல் படையினர் வரவழைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
பிரதமரின் பாதுகாப்பு பற்றிய விவகாரத்தில் எந்தவொரு அரசியலும் கூடாது என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.#PMModi #Threat #Congress
புதுடெல்லி:
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே போலீசார் பீமா கோரேகான் வன்முறை சம்பவத்துடன் தொடர்புடைய 5 பேரை சமீபத்தில் கைது செய்தனர். அவர்களில் ஒருவரிடம் இருந்து கடிதம் ஒன்றை கைப்பற்றினர். அதில், பிரதமர் நரேந்திர மோடியை ராஜீவ் காந்தியை படுகொலை செய்தது போன்று கொல்ல திட்டமிடப்பட்டு உள்ளது என தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பு அதிகாரி பவன் கேரா கூறுகையில், பிரதமரின் பாதுகாப்பில் எந்தவொரு அரசியலும் இருக்கக்கூடாது என்றார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், பிரதமரின் பாதுகாப்பு என்பது தீவிர கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய விஷயம். பயங்கரவாதம் மற்றும் நக்சல்வாதம் ஆகியவற்றின் வலியை காங்கிரஸ் கட்சி உணர்ந்திருக்கிறது. மகாத்மா காந்தி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களை இழந்திருக்கிறது. கைது செய்யப்பட்டவர்களை நக்சலைட்டுகள் என போலீசார் கூறுகின்றனர். மத்திய மந்திரி அத்வாலே அவர்களை தலித்துகள் என கூறுகிறார். இந்த விவகாரத்தில் உண்மை வெளிவர வேண்டும். இதனை அரசியலாக்க கூடாது என தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மும்பை காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிரூபம் கூறுகையில், எப்போது எல்லாம் மோடியின் செல்வாக்கு சரிகிறதோ அப்போது எல்லாம் கொலைக்கு சதிதிட்டம் என செய்திகள் பரப்பப்படும். இது பிரதமர் மோடியின் பழைய தந்திரம் என்றார். #PMModi #Threat #Congress
ஒடிசா மாநிலத்தில் மாவோயிஸ்ட்களுக்கு எதிரான வேட்டையை வெற்றிகரமாக நடத்திய இரு மாவட்ட போலீசாருக்கு தலா 10 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு அளிக்கப்படும் என நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். #OdishaMaoistoperation #Cashrewards
புவனேஸ்வர்:
மேலாதிக்கவாதிகளின் அடக்குமுறைகளால் பாதிக்கப்படும் கீழ்த்தட்டு மக்களில் சிலர் இருவர்க்கத்துக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பதற்கு ஆயுத வன்முறையே சிறந்த தீர்வென கருதுகின்றனர்.
பல்லாண்டு காலமாக அரசிடம் போராடி பெறமுடியாத சில சலுகைகளையும் ஆயுதப் புரட்சியின்மூலம் அடைந்துவிட முடியும் என கருதும் இவர்கள் சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா, மணிப்பூர் உள்ளிட்ட சில மாநிலங்களில் நக்சலைட்களாகவும், மாவோயிஸ்ட்களாகவும், நாடெங்கிலும் உள்ள காடு, மலைகளில் பதுங்கி வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களை வேட்டையாட தனிப்படை பிரிவினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த படையினருக்கு துணையாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் உடன் செல்வதுண்டு.
இந்நிலையில், ஒடிசா மாநிலத்தில் உள்ள போலாங்கிர் மற்றும் கந்தமால் மாவட்டங்களில் சமீபத்தில் நடைபெற்ற தேடுதல் வேட்டையில் பல மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஒடிசாவில் மாவோயிஸ்ட்களின் அட்டகாசம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மாநிலத்தில் மாவோயிஸ்ட்களின் ஆதிக்கம் தொடர்பாக முதல் மந்திரி நவீன் பட்நாயக் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தின்போது, போலாங்கிர் மற்றும் கந்தமால் மாவட்டங்களில் சமீபத்தில் நடைபெற்ற தேடுதல் வேட்டையில் பல மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொன்று சிறப்பாக செயலாற்றிய அம்மாவட்ட போலீசாருக்கு பாராட்டு தெரிவித்த நவீன் பட்நாயக் இரு மாவட்ட போலீசாருக்கும் தலா 10 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு அளிக்கப்படும் என அறிவித்தார். #OdishaMaoistoperation #Cashrewards

×

X