search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராஜமௌலி"

    பாகுபலி படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ராஜமௌலி இயக்க இருக்கும் புதிய படத்தை நடிகர் சிரஞ்சீவி கிளாப் அடித்து தொடங்கி வைத்தார். #RajaMouli #RRR
    ‘பாகுபலி’ என்னும் வெற்றிப் படத்தை இயக்கியவர் எஸ்.எஸ்.ராஜமௌலி. இரண்டு பாகங்களாக உருவான இந்தப் படம் சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டன. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியான இந்தப் படங்கள் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. 

    இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு ராஜமௌலி என்ன படத்தை இயக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வந்தது.

    தற்போது தன்னுடைய அடுத்த படத்தை தொடங்கியிருக்கிறார் எஸ்.எஸ்.ராஜமெளலி. ஆக்‌ஷன் திரில்லரான இந்தப் படத்தில், ஜூனியர் என்.டி.ஆர். - ராம் சரண் தேஜா இருவரும் ஹீரோக்களாக நடிக்கின்றனர். இந்தப் படத்தை, டி.வி.வி.தனய்யா தயாரிக்கிறார். ரூ.300 கோடி பட்ஜெட்டில் இந்தப் படம் தயாரிக்கப்படுகிறது.

    ராஜமெளலி, ராமா ராவ், ராம் சரண் என மூவரின் பெயருமே ‘ஆர்’ என்ற ஆங்கில எழுத்தில் தொடங்குவதால், இந்தப் படத்துக்கு ‘ஆர்ஆர்ஆர்’ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் படப்பிடிப்பு, பூஜையுடன் இன்று தொடங்கி இருக்கிறது. 



    இதற்காக நடைபெற்ற நிகழ்வில் நடிகர் சிரஞ்சீவி கலந்துகொண்டு, கிளாப் அடித்து பூஜையைத் தொடங்கி வைத்தார். மேலும், ‘பாகுபலி’ நாயகர்கள் பிரபாஸ் மற்றும் ராணா இந்த விழாவில் கலந்து கொண்டனர். இப்படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது. 

    படத்தில் நடிக்க இருக்கும் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பட்டியல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    டப்ஸ்மாஷ் இளைஞர்கள் வெளியிட்ட வீடியோவை பார்த்த பாகுபலி படக்குழுவினர்கள் வியந்து படக்குழுவினரை பாராட்டியுள்ளனர். #Baahubali
    ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வெளியான படம் ‘பாகுபலி’. இரண்டு பாகங்களாக வெளியான இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இந்த இரண்டு படங்களும் உலகமெங்கும் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. குறிப்பாக வசூலில் அதிக சாதனை படைத்தது. 

    இதன் முதல் பாகத்தில் கட்டப்பா கதாபாத்திரத்தில் நடித்த சத்யராஜ், பாகுபலியாக இருக்கும் பிரபாஸை கொல்வார். அவர் எதற்கு கொல்வார் என்று 2ம் பாகத்தில் காண்பித்திருப்பார்கள். இதற்கிடையில் பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றார் என்று பெரிய விவாதமே நடந்தது.



    இந்நிலையில், பாகுபலியை கட்டப்பா கொல்லும் காட்சியை டப்ஸ்மாஷில் இளைஞர்கள் படமாக்கி வெளியிட்டிருக்கிறார்கள். இதைப் பார்த்த பாகுபலி படக்குழுவினர்கள் ‘ரொம்ப நல்லா பண்ணிருக்காங்க சூப்பர்’ என்று வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். 
    ×