என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர் தற்கொலை"

    • சிறுமி, மாணவரின் பொறுப்பற்ற காதலை ஏற்கவில்லை.
    • பெற்றோருக்கு மகனின் தற்கொலை பேரிடியாக விழுந்துள்ளது.

    பரமக்குடி:

    ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடியை அடுத்த தெய்வதானம் கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது மாண வர். இவர் சத்திரக்குடி அருகேயுள்ள வளநாடு அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த அவரது பெற்றோர் கூலி வேலைக்குச் சென்று வருகிறார்கள்.

    தாங்கள் படிக்காவிட்டா லும், மகனை படிக்க வைத்து நல்ல வேலைக்கு அனுப்ப வேண்டும் என்ற ஆசையுடன் பெற்றோர் இருந்தனர். அதிலும் குறிப்பாக தற்போது நடைபெற்று வரும் 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுக்கு மகனை நல்லமுறையில் தயார் செய்து வரும் வகையில் அதிக மதிப்பெண் பெற்று முதலிடத்திற்கு வரவேண்டும் என்று கூறி அவ்வப்போது ஊக்கப்படுத்தி வந்தனர்.

    இதற்காக அந்த மாணவர் கடுமையாக படித்து வந்தார். பெற்றோர் பகலில் வேலைக்கு சென்றாலும் மாலையில் வீடு திரும்பியதும் மகனுக்கு தேவையானவற்றை செய்துகொடுத்தனர்.

    அந்த வகையில் இன்று இறுதியாக சமூக அறிவியல் தேர்வு நடைபெறுகிறது. இதற்கிடையே அந்த மாணவரின் செயல்பாடுகள் கடந்த சில மாதங்களாக பெற்றோருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி வந்தது.

    அவரது நடவடிக்கைகளில் நிறைய மாற்றங்கள் இருப்பதையும் பெற்றோர் உணர்ந்தனர். காரணம் கேட்டபோது, எதுவும் இல்லை என்று மாணவர் மறுத்துவந்துள்ளார்.

    இருந்தபோதிலும் மகனை அவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். அப்போது அவர் ஒரு சிறுமியுடன் பழகி வந்ததை அறிந்து கடும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அக்கம்பக்கத்தினரும் இதனை ஏற்கனவே அறிந்து மாணவரின் பெற்றோரிடம் கூறியுள்ளனர். முதலில் அதனை நம்ப மறுத்த பெற்றோர், நேரடியாக பார்த்துவிட்டதால் மகனின் செயலை எண்ணி வருந்தினர்.

    தற்போது அரசு பொதுத் தேர்வு நடைபெற்று வரும் நிலையில் கடுமையாக கண்டித்தால் மகனின் படிப்பை பாதித்துவிடும் என்று எண்ணி, பக்குவமாக அறிவுரை கூறினர். இது விளையாட்டுத்தனமாக வயது, தற்போதே காதல், திருமணம், வாழ்க்கை என்பதையெல்லாம் நினைத்துக்கூட பார்க்க கூடாது. படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்றனர்.

    ஆனாலும் மாணவர் அதனை காதில் வாங்கிக் கொள்ளவில்லை. இதற்கிடையே அந்த சிறுமி, இந்த மாணவரின் பொறுப்பற்ற காதலை ஏற்கவில்லை. மாறாக மாணவர் மட்டும் அவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

    மகனின் செயல்பாடுகள் எல்லை மீறி போனதால் நேற்று பெற்றோர் அவரை கடுமையாக கண்டித்தனர். ஒழுங்காக படித்து இன்று நடைபெறும் இறுதித் தேர்வை எழுதவேண்டும் என்றும் அறிவுரை கூறியுள்ளனர்.

    இந்தநிலையில் நேற்று இரவு பெற்றோருடன் அமர்ந்து சாப்பிட்ட மாணவர், இன்று நடக்கும் சமூக அறிவியல் தேர்வுக்கு படிக்க இருப்பதாக கூறி, வீட்டில் உள்ள தனி அறைக்கு சென்று உள்பக்கமாக பூட்டிக்கொண்டார்.

    மகன் படிக்கத்தான் செய்கிறார் என்ற எண்ணத்துடன் பெற்றோர் அயர்ந்து தூங்கிவிட்டனர். இன்று காலை நீண்ட நேரமாகியும் மாணவர் இருந்த அறையின் கதவு திறக்கப்படாமல் இருந்தது.

    நீண்ட நேரம் படித்த களைப்பில் தூங்கியிருப்பான் என்று நினைத்து, பெற்றோர் கதவை தட்டினர். பலத்த சத்தம்போட்டும் எழுப்பினர். ஆனாலும் கதவை திறக்காததால் பதட்டம் அடைந்த பெற்றோர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

    அங்கு அவர்கள் கண்ட காட்சி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மாணவர் தாயின் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் தொங்கினார். மகனின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி துடித்தனர்.

    உடனடியாக அவரை மீட்டு சத்திரக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் மாணவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். மகனின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறித்துடித்தனர்.

    பின்னர் இதுபற்றி அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சத்திரக்குடி போலீசார் தற்கொலை செய்துகொண்ட மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    வளர்ந்து ஆளாகி தன்னை காப்பாற்றுவார் என்ற கனவில் இருந்த பெற்றோருக்கு மகனின் தற்கொலை பேரிடியாக விழுந்துள்ளது. இறுதித் தேர்வை எழுத வேண்டியவர் இறுதி ஊர்வலமாக புறப்பட்டுள்ளார். 10-ம் வகுப்பு படிக்கும் வயதில் ஒருதலைக்காதலில் விழுந்த மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ராமநாதபுரம் மாவட்டத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    • கவுதமன் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
    • ஓட்டல் ஊழியர் சாப்பாடு வாங்க வேண்டுமா என கேட்பதற்காக அறைக்கு சென்றார்.

    கோவை,

    கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் முருகன். இவர மகன் கவுதமன் (வயது 18). இவர் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று இவர் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்துக்கு வந்தார். பின்னர் அங்குள்ள லாட்ஜில் ஓய்வு எடுப்பதாக கூறி அறை எடுத்து தங்கினார். பின்னர் ஓட்டல் ஊழியர் சாப்பாடு வாங்க வேண்டுமா என கேட்பதற்காக அறைக்கு சென்றார். அப்போது அறைக்கதவு பூட்டப்பட்டு இருந்தது. கதவை தட்டினார். ஆனால் கதவு திறக்கப்படவில்லை.

    சந்தேகம் அடைந்த அவர்கள் இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது அறைக்குள் கல்லூரி மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

    பின்னர் போலீசார் தற்கொைல செய்து கொண்ட கல்லூ ரி மாணவர் கவுதமனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வருணின் தாய் குடும்ப பிரச்சினையில் தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் விரைந்து வந்து வருணின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பூந்தமல்லி:

    திருவேற்காடு அடுத்த சுந்தரசோழபுரம் செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சொக்கலிங்கம். இவரது மகன் வருண்(வயது20). இவர் ஆவடியை அடுத்த பட்டாபி ராமில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வருணின் தாய் குடும்ப பிரச்சினையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் வருண் மிகுந்த மன வருத்தத்தில் இருந்தார். தாயின் நினைவால் சரியாக தூங்காமலும், சாப்பிடாமலும் இருந்து வந்துள்ளார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறி வந்தனர்.

    இந்த நிலையில் தாய் இறந்த சோகத்தில் இருந்த வருண் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாதபோது திடீரென தாயின் புடவையில் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டார்.

    இதுகுறித்து திருவேற்காடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து வருணின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தாய் இறந்த சோகத்தில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • பாட்டியுடன் பேசிவிட்டு வீட்டில் உள்ள அறைக்கு சென்றார்.

    கோவை,

    கோவை பெரியநாயக்கன் பாளையம் அருகே உள்ள வண்ணான் கோவிலை சேர்ந்தவர் பிரதீப் இவரது மகன் அறிவரசு (வயது 16 ). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார் . நேற்று மாலை அறிவரசு வழக்கம் போல பள்ளிக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்தார். பின்னர் அவர் சிறிது நேரம் தனது பாட்டியுடன் பேசிவிட்டு வீட்டில் உள்ள அறைக்கு சென்றார். நீண்ட நேரமாக அவர் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் கதவைத் தட்டினர். ஆனால் யாரும் கதவை திறக்கவில்லை ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தபோது அறிவுரசு தூக்கில் பிணமாக தூங்கினார்.

    இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து பள்ளிக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிய பிளஸ் 1 மாணவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • உறவினர்கள் மறியல்
    • ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

    செய்யாறு:

    செய்யாறு டவுன் வைத்தியர் தெருவைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் விமல் (வயது 18) ராணிப் பேட்டை மாவட்டம் கலவை யில் உள்ள தனியார் என்ஜி னீயரிங் கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வருகிறார். தினமும் கல்லூரிக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பும் அவர் ஆற்காடு சாலையில் உள்ள டயர் கடையில் பகுதி நேர தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

    இந்நிலையில் மாணவர் விமல், அவரது வீட்டுகுளியலறையில் தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.

    இது குறித்து விமலின்‌ தாயார் அலமேலு செய்யாறு போலீசில் புகார் செய்தார். அந்தப் புகாரில், டயர் கடை உரிமையாளர் பூதேரிபுல்லவாக்கம் கிராமத் தைச் சேர்ந்த ஒரு பெண்னுடன் போனில் பேசிக் கொண்டு இருந்ததை டயர் கடை உரிமையாளர் மனைவியிடம் கூறப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக டயர் கடையில் வேலை செய்யும் மற்றொரு கூலி தொழிலாளி, விமல் ஆகியோரிடம் விசாரித்ததாகவும், பின்னர் தனது மகன் விமலை தகாதமுறையில் திட்டியதாகவும், அதன் காரணமாக விமல் மனமுடைந்து தற் கொலை செய்து கொண்ட தாகவும் தெரிவித்து உள்ளார்.

    தற்கொலைக்குக் காரணமாக இருந்த டயர் கடை உரிமை யாளரை கைது செய்ய வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.

    அந்தப் புகாரில் அடிப்ப டையில் செய்யாறு போலீ சார் வழக்கு பதிவு செய்தனர்.

    பின்னர், இறந்த விமலின் உடலைகைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை முடி வுற்ற நிலையில் விமலின் உடலை வாங்க மறுத்தும், டயர் கடை உரிமையாளரை கைது செய்ய வலியுறுத்தி நேற்று மாலை அண்ணா சிலை முன்பு சாலையில் விமலின் உறவினர்கள் மற்றும் வெங்கட்ராய ன்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்த செய்யாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு, சப்- இன்ஸ்பெக்டர் சங் கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குற்றவாளி மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • விஷ்ணு கோவை திப்பம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்
    • விஷ்ணு திடீரென வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    பொள்ளாச்சி,

    கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் மனோஜ். இவரது மகன் விஷ்ணு (வயது 19). இவர் கோவை மாவட்டம் திப்பம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இதற்காக அவர் கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கி இருந்து படித்து வந்தார்.

    சம்பவத்தன்று விஷ்ணுவுடன் தங்கி இருந்த மாணவர் ஆல்பின் பிஜூ என்பவர் மாதிரி தேர்வு முடிந்ததும் அவரது சொந்த ஊருக்கு சென்றார். இவர் மட்டும் தனியாக விடுதியில் இருந்தார். விடுதியில் இருந்த விஷ்ணு திடீரென வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதனை பார்த்து விடுதி வார்டன் அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் இது குறித்து கோமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட மாணவர் விஷ்ணுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து கோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.    

    • ஜெய அவினேஷ் மதுக்கரை அருகே உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
    • போலீசார் தற்கொலை செய்வதற்கு முன்பு ஜெயஅவினேஷ் கைப்பட எழுதிய கடிதத்தை கைப்பற்றினர்.

    கோவை,

    திருவாரூர் மாவட்டம் கிழசேரியை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியம். தி.மு.க. பிரமுகர். இவரது மகன் ஜெய அவினேஷ் (வயது 18). இவர் மதுக்கரை அருகே உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.இதற்காக அவர் கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கி இருந்து படித்து வந்தார்.

    சம்பவத்தன்று விடுதியில் இருந்த ஜெயஅவினேஷ் வயிறு வலிப்பதாக நண்பர்களிடம் கூறி உள்ளார். பின்னர் சீரகத்தை சாப்பிட்டார். ஆனாலும் வயிற்று வலி குறையவில்லை. இதனால் ஜெய அவினேஷ் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

    விடுதியில் இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அவரது நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து மதுக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக போலீசார் கல்லூரி விடுதிக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது போலீசார் தற்கொலை செய்வதற்கு முன்பு ஜெயஅவினேஷ் கைப்பட எழுதிய கடிதத்தை கைப்பற்றினர். அதில் அது என்ன ரொம்ப தொல்ல பண்ணுது அம்மா என எழுதி இருந்தார். அவரது செல்போனை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்த போது பெண் ேதாழி ஒருவருக்கு வாட்ஸ்ஆப் மூலம் மெசேஜ் அனுப்பி உள்ளார். அதில் அது என்ன ரொம்ப தொல்ல பண்ணுது நான் போறேன் என அனுப்பி இருந்தார்.

    பின்னர் போலீசார் தற்கொலை செய்து கொண்ட என்ஜினீயரிங் மாணவர் ஜெய அவினேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • ராமகிருஷ்ணா அதிக நேரம் செல்போன் பயன்படுத்தினார். இதை அவரது தந்தை சுரேஷ் பாபு கண்டித்து உள்ளார்.
    • பெற்றோர் ராமகிருஷ்ணாவை காளிங்கராயன் பாளையத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பவானி:

    ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள காளிங்கராயன்பாளையம் மேட்டுநாசுவம்பாளையம் மணக்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் பாபு. லாரி டிரைவர். இவரது மனைவி சுமித்ரா. இவர்களுக்கு ஸ்ரீராமகிருஷ்ணா (22) என்ற மகன் உள்ளார்.

    இவர் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்நிலையில் ராமகிருஷ்ணா அதிக நேரம் செல்போன் பயன்படுத்தினார். இதை அவரது தந்தை சுரேஷ் பாபு கண்டித்து உள்ளார். இதனையடுத்து சம்பவத்தன்று நள்ளிரவு ஒரு மணியளவில் வீட்டில் எல்லோரும் தூங்கிக்கொண்டிருந்தபோது ராமகிருஷ்ணா வாந்தி எடுத்து கொண்டிருந்தார்.

    உடனே இதைப்பார்த்த அவரது பெற்றோர் ராமகிருஷ்ணாவை காளிங்கராயன் பாளையத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சித்தோடு போலீசார் மருத்துவமனைக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் கல்லூரி மாணவர் ராமகிருஷ்ணா தான் இன்ஸ்டாகிராமில் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அந்த காதல் தோல்வி அடைந்ததால் எலி பேஸ்ட் (விஷம்) சாப்பிட்டு உள்ளதாகவும், இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என கூறியுள்ளார்.

    இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த ராமகிருஷ்ணா ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து அவரது தாய் சுமித்ரா கொடுத்த புகார் அடிப்படையில் சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெற்றோரை அழைத்து வர கூறியதால் விரக்தி
    • குடியாத்தம் அருகே பரிதாபம்

    ஜோலார்பேட்டை:

    குடியாத்தத்தை அடுத்த லத்தேரி ரெயில் நிலையம் பகுதியில் சுமார் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒரு வர் நேற்று முன்தினம் இரவு ஓடும் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். இதுகு றித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் சம் பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடி யாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர்.

    மேலும் இறந்தவர் குறித்து ஜோலார் பேட்டை ரெயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டதில்

    அவர் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த கே.வி.குப்பம் தாலுகா திரு மணி பகுதியை சேர்ந்த ஞானசேகரன் என்பவரின் மகன் அருண்குமார் (வயது 20) என்பதும், இவர் குடியாத்தம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்ததும் தெரிய வந்தது.

    மேலும் கடந்த 20-ந் தேதி கல்லூரிக்கு சென்ற அருண் குமாரை கல்லூரி நிர்வாகம் பெற்றோரை அழைத்து வரு மாறு கூறியுள்ளனர். இது குறித்து வீட்டில் தகவல்தெரி விக்காமல் அருண்குமார் இருந்துள்ளார். பின்னர் நேற்று முன்தினம் வழக்கம் போல் கல்லூரிக்கு சென்றுள்ளார். அப்போது கல்லூரி நிர்வாகத்தின் மூலம் இதுகுறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் விரக்தி அடைந்த அருண்குமார் நேற்று முன்தினம் இரவு வீட் டிற்கு செல்லாமல் இருந்துள்ளார். அவரை பெற்றோர் தேடி வந்த நிலையில் ஜோலார்பேட் டையில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஏதோ ஒரு ரெயில் முன் பாய்ந்து தற் கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    இது குறித்து ஜோலார் பேட்டை ரெயில்வே போலீ சார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தரணியை உடனடியாக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
    • பின்னர் உயர் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த தரணி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    ஈரோடு:

    சென்னிமலை அருகே உள்ள மேலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (45). மூங்கில் கடை வைத்துள்ளார். இவரது மகன் தரணி (17). இவர் சென்னிமலையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில் தரணி அங்கு படிக்க விருப்பம் இல்லை என கூறியதையடுத்து அவரது தந்தை அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தரணியை சேர்த்தார். ஆனால் அங்கும் தரணி சரியாக பள்ளிக்கு செல்லாமல் செல்போனில் விளையாடி வந்துள்ளார். இதை அவரது பெற்றோர் கண்டித்ததாக தெரிகிறது.

    இந்நிலையில் சம்பவத்தன்று காலையில் தரணி வாந்தி எடுத்துள்ளார். இது குறித்து பெற்றோர் விசாரித்தனர். அப்போது தான் எலிபேஸ்ட் (விஷம்) தின்று விட்டதாக கூறியுள்ளார்.

    இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தரணியை உடனடியாக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் உயர் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த தரணி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • உணவு சாப்பிட்ட பிறகு அறைக்குச் சென்ற மாணவன் காலை வெகுநேரம் ஆகியும் வெளியே வரவில்லை.
    • கதவும் திறக்கப்படாததால் ஜன்னல் வழியாக பார்த்த போது மாணவன் மெடாரமெட்லா சரண் தூக்கில் பிணமாக தொங்கினார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த அரண்வாயில் குப்பம் பகுதியில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் ஆந்திர மாநிலம், நெல்லூர் அருகே உள்ள காவலி பகுதியைச் சேர்ந்த மெடாரமெட்லா சரண் இ.சி.இ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் கல்லூரிக்கு சொந்தமான விடுதியில் தங்கி இருந்தார்.

    நேற்று வழக்கம் போல் உணவு சாப்பிட்ட பிறகு அறைக்குச் சென்ற மாணவன் காலை வெகுநேரம் ஆகியும் வெளியே வரவில்லை. கதவும் திறக்கப்படாததால் ஜன்னல் வழியாக பார்த்த போது மாணவன் மெடாரமெட்லா சரண் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

    இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் சார்பில் செவ்வாப்பேட்டை போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மாணவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து திருவள்ளூர் வட்டாட்சியர் மதியழகன் மற்றும் செவ்வாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விடுதி காப்பாளர் மற்றும் சக மாணவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

    • மாணவர் எழுதிய குறிப்பு எதுவும் கிடைக்காததால், விபத்து மரணம் என்ற பிரிவில் போலீசார் வழக்கு
    • படிப்பு தொடர்பான அழுத்தம் காரணமாக இந்த முடிவை எடுத்திருக்கலம் என சந்தேகிக்கின்றனர்.

    மும்பை:

    மும்பை பவாய் பகுதியில் உள்ள ஐஐடி-யில் பி.டெக். முதலாமாண்டு படித்து வந்த அகமதாபாத் மாணவர் தர்சன் சோலங்கி நேற்று மாலை திடீரென விடுதியின் 7வது மாடியில் இருந்து விழுந்து பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தற்கொலை என்று உறுதி செய்யும் வகையில் மாணவர் எழுதிய குறிப்பு எதுவும் கிடைக்காததால், விபத்து மரணம் என்ற பிரிவில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். எனினும் தற்கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணை நடைபெறுகிறது. படிப்பு தொடர்பான அழுத்தம் காரணமாக இந்த முடிவை எடுத்திருக்கலம் என சந்தேகிக்கின்றனர்.

    கல்லூரி வளாகத்தில் தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு எதிராக சாதி பாகுபாடு காட்டப்பட்டதாகவும், அதனால் மாணவர் தற்கொலை செய்திருப்பதாகவும், மாணவர் அமைப்பு குற்றம்சாட்டி உள்ளது. இந்த கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது.

    கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கல்லூரியில் சேர்ந்த அந்த மாணவரின் முதல் செமஸ்டர் தேர்வு சனிக்கிழமை முடிந்த நிலையில் அவர் இறந்திருப்பது மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    ×