என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 153430
நீங்கள் தேடியது "தொழில்நுட்பம்"
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாயப் பிம்பத்தின் மூலம் செய்தி வாசிக்கும் முறையை உலகில் முதன்முறையாக சீனா அறிமுகப்படுத்தியுள்ளது. #firstAInewsanchor #tAInewsanchorinChina
பீஜிங்:
அனைத்து துறைகளிலும் மனிதர்களுக்கு மாற்றாக பணியாற்றுவதற்கு ரோபோட்களை உருவாக்கியுள்ள சீனாவில் தற்போது சர்வதேச இணைய கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது.
இந்த கருத்தரங்கில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாயப் பிம்பத்தின் மூலம் செய்தி வாசிக்கும் முறையை உலகில் முதன்முறையாக சீனா அறிமுகப்படுத்தியுள்ளது.
சீனாவின் பிரபல செய்தி நிறுவனமான சின்ஹுவா தொலக்காட்சி நிலையத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் பணியமர்த்தப்பட்டுள்ள ‘ஹி’ எனப்படும் அந்த உயிரில்லாத செய்தி வாசிப்பாளர், ஆணின் முக அமைப்புடனும் குரலுடனும் காணப்படுகிறார்.
அச்சுவடிவில் எழுத்துக்களாக வரும் செய்திகளை குரல் வடிவில் வாசிக்கும் இந்த மாயப் பிம்பம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அடுத்தகட்ட சாதனையாக கருதப்படுகிறது.
பின்னணியில் வெளியாகும் வீடியோ காட்சிகளை உள்வாங்கி, அதற்கேற்ப உயிருள்ள நபர்களைப் போலவே குரலில் ஏற்ற இறக்கத்துடனும், முகபாவத்துடனும் தேவைப்படும் நேரங்களில் அளவான கண்ணசைவுகளுடனும் செய்தி வாசிக்கும் இந்த ‘ஹி’யால் ஒருநாளின் 24 மணி நேரமும் ஆண்டின் அனைத்து நாட்களிலும் சோர்வின்றி செய்தி வாசிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பான செய்திகள் வெளியானதும் இன்னும் சில ஆண்டுகளில் நமக்கெல்லாம் வேலை இல்லாமல் போய்விடும் என சில செய்தி வாசிப்பாளர்கள் டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர். #firstAInewsanchor #tAInewsanchorinChina
×

X