search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரோபோட்"

    செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாயப் பிம்பத்தின் மூலம் செய்தி வாசிக்கும் முறையை உலகில் முதன்முறையாக சீனா அறிமுகப்படுத்தியுள்ளது. #firstAInewsanchor #tAInewsanchorinChina
    பீஜிங்:

    அனைத்து துறைகளிலும் மனிதர்களுக்கு மாற்றாக பணியாற்றுவதற்கு ரோபோட்களை உருவாக்கியுள்ள சீனாவில் தற்போது சர்வதேச இணைய கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது.

    இந்த கருத்தரங்கில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாயப் பிம்பத்தின் மூலம் செய்தி வாசிக்கும் முறையை உலகில் முதன்முறையாக சீனா அறிமுகப்படுத்தியுள்ளது.

    சீனாவின் பிரபல செய்தி நிறுவனமான சின்ஹுவா தொலக்காட்சி நிலையத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் பணியமர்த்தப்பட்டுள்ள ‘ஹி’ எனப்படும் அந்த உயிரில்லாத செய்தி வாசிப்பாளர், ஆணின் முக அமைப்புடனும் குரலுடனும்  காணப்படுகிறார்.

    அச்சுவடிவில் எழுத்துக்களாக வரும் செய்திகளை குரல் வடிவில் வாசிக்கும் இந்த மாயப் பிம்பம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அடுத்தகட்ட சாதனையாக கருதப்படுகிறது.

    பின்னணியில் வெளியாகும் வீடியோ காட்சிகளை உள்வாங்கி, அதற்கேற்ப உயிருள்ள நபர்களைப் போலவே குரலில் ஏற்ற இறக்கத்துடனும், முகபாவத்துடனும் தேவைப்படும் நேரங்களில் அளவான கண்ணசைவுகளுடனும் செய்தி வாசிக்கும் இந்த ‘ஹி’யால் ஒருநாளின் 24 மணி நேரமும் ஆண்டின் அனைத்து நாட்களிலும் சோர்வின்றி செய்தி வாசிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுதொடர்பான செய்திகள் வெளியானதும் இன்னும் சில ஆண்டுகளில் நமக்கெல்லாம் வேலை இல்லாமல் போய்விடும் என சில செய்தி வாசிப்பாளர்கள் டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர். #firstAInewsanchor #tAInewsanchorinChina
    தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக நம் அன்றாட பணிகளை செய்யும் பொறுப்பை ரோபோட்கள் ஏற்றுக் கொண்டுள்ளன. அவ்வாறு நம் வீட்டை சுத்தம் செய்யும் சிறிய ரோபோட் தான் ஐ ரோபோ 900. #Robots



    நவீன உலகில் மனிதனின் வேலைப் பளுவைக் குறைப்பதில் எந்திர மனிதனின் (ரோபோக்களின்) பங்கு அதிகமாகி வருகிறது. கடினமான பணிகளுக்கு மட்டுமின்றி இப்போது வீடுகளில் பயன்படுத்தக்கூடிய ரோபோக்களும் வந்துவிட்டன.

    அந்த வரிசையில் வந்திருக்கும் வீடுகளை சுத்தப்படுத்தும் அதிநவீன ரோபோ ‘ஐ ரோபோட் 900’ சீரிஸ். அனைத்து வகையான தரைத்தளங்களையும், தரை விரிப்புகளையும் இது சுத்தப்படுத்தும். தரையில் சிதறிக்கிடக்கும் மிக மெல்லிய செல்லப் பிராணிகளின் முடிகளைக்கூட இது சுத்தம் செய்யும்.

    இதில் அதிக அழுக்கு உள்ள பகுதிகளை உணரும் ‘சென்சார்’ உள்ளது. இதனால் அழுக்கு அதிகம் உள்ள பகுதிகளில் தீவிரமாக செயல்பட்டு சுத்தப்படுத்தும். அதேபோல குப்பைகளை உறிஞ்சும் பகுதியில் நூல், உரோமங்கள் எந்திரத்திற்குள் சிக்காத வகையிலான நுட்பமும் இதில் உள்ளது. இதனால் உறிஞ்சும் பகுதி அடைத்துக் கொள்ளும் பிரச்சினையும் இதில் ஏற்படாது. அறையின் முழு அளவையும் உணர்ந்து இது அனைத்து இடங்களுக்கும் நகர்ந்து சென்று சுத்தப்படுத்தும்.

    இந்த ரோபோவை நீங்கள் எங்கிருந்தபடியும் இயக்க முடியும். ஒரு வேளை கோடை விடுமுறைக்கு வெளியூர் சென்றுவிட்டு வீடு திரும்புகிறீர்கள். நீங்கள் வருவதற்கு முன்பு வீட்டை சுத்தப்படுத்த விரும்பினால், பயணத்தின்போதே இந்த ரோபோவுக்கு கட்டளையிட்டால் அது வீட்டை சுத்தப்படுத்திவிடும். 

    வட்ட வடிவில் இருப்பதால் இது அனைத்து பகுதிகளுக்கும் எளிதில் செல்ல முடியும். இதை பத்திரமாக வைக்க அதிக இடம் தேவையில்லை. கட்டிலுக்குக் கீழ் பகுதியிலேயே இதை வைத்துவிடலாம். ஐ ரோபோட் 900 சீரிஸ் அமேசான் வலைத்தளத்தில்  விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் ஐ ரோபோட் 900 விலை ரூ. 64,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், இது சலுகை விலையில் ரூ.43,239 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
    மசாசூட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தின் கம்ப்யூட்டர் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆய்வகம் இணைந்து, மனிதர்கள் மனதில் நினைப்பதை செய்யும் ரோபோடிக் தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளன.

     



    மசாசூட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தின் (எம்.ஐ.டி.) கணினி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆய்வக பிரிவு சார்பில் கண்டறியப்பட்டு இருக்கும் புதிய தொழில்நுட்பம் மக்கள் ரோபோட்களுடன் தகவல் பரிமாற்றம் செய்ய புதிய வழிமுறையை கண்டறிந்துள்ளனர்.

    அந்த வகையில் ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கும் புதிய தொழில்நுட்பம் மின்னலை மற்றும் கை அசைவுகளை கொண்டு ரோபோட்களுடன் தகவல் பரிமாற்றம் செய்ய முடியும். முந்தைய ஆய்வுகளில் ரோபோட்களை மிக எளிமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வைக்க முடிந்தது.

    இந்நிலையில், புதிய அப்டேட் கொண்டு ரோபோட்களால் மேலும் பல்வேறு பணிகளை செய்து முடிக்க முடியும், இதனால் ரோபோட்களை குழுவாகவும் இயக்க முடியும். 

    புதிய தொழில்நுட்பம் எவ்வாறு இயங்குகிறது என்பதை எம்.ஐ.டி.-யின் கணினி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆய்வக பிரிவு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், ரோபோட் நடவடிக்கைகளில் பிழையை மனிதன் கண்டறிந்தால் ரோபோட் குறிப்பிட்ட பணியை உடனடியாக நிறுத்திவிட்டு, மனிதரின் உதவியை கேட்கும்.



    கை அசைவுகளை கொண்டு ரோபோட்டில் இருக்கும் ஆப்ஷன்களை ஸ்கிரால் செய்து, ரோபோட் செய்யும் பிழையை திருத்த முடியும். என எம்.ஐ.டி. வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. 

    இதுபோன்ற அதிநவீன திட்டத்தை உருவாக்க, எம்.ஐ.டி. குழுவினர் மூளையின் நடவடிக்கையை கண்டறிய எலெக்ட்ரோ-என்சி-ஃப்ளோகிராஃபி-யையும் (electroencephalography - EEG) உடல் தசை அசைவுகளை கண்டறிந்து கொள்ள எலெக்ட்ரோ-மியோகிராஃபியை (electromyography - EMG) பயன்படுத்தியுள்ளனர். இரண்டு தொழில்நுட்பங்களும் வெவ்வேறு அம்சங்களை கொண்டிருந்தாலும், இவை இரண்டும் இணையும் போது புதிதாய் பயன்படுத்துவோருக்கு மிக எளிமையான வழிமுறையாக இருக்கும் என வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    முன்னதாக எலெக்ட்ரோ-மியோகிராஃபியை பயன்படுத்தும் போது இருந்ததை விட எலெக்ட்ரோ-என்சி-ஃப்ளோகிராஃபி மற்றும் எலெக்ட்ரோ-மியோகிராஃபியை இணைக்கும் போது மனிதன் மற்றும் ரோபோட்களிடையே மிக இயற்கையான தகவல் பரிமாற்றத்தை மேற்கொள்ள முடியும். உடல் தசை அசைவுகளை புரிந்து கொள்ளக்கூடிய அம்சம் மூலம் ஜெஸ்ட்யூர்களை கொண்டு ரோபோட்களிடம் முன்பை விட சிறப்பாக பணியை செய்ய வைக்க முடியும். என எம்.ஐ.டி. கணினி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப மையத்தின் இயக்குனர் டேனியல் ரஸ் தெரிவித்துள்ளார். 

    முன்னதாக இந்த தொழில்நுட்பம் மக்கள் பொதுவாக நினைக்கும் தகவல்களை புரிந்து கொள்ளாமல் இருக்கும்படி கட்டுப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் என்ன நினைக்க வேண்டும் என்பதை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது. இந்த இயந்திரம், ஒருவருக்கு ஏற்ற வகையில் மாற்றிக் கொள்ளும் என இந்த திட்டத்தில் பணியாற்றிய ஜோசப் டெல்பிரெடோ தெரிவித்தார்.

    புதிய தொழில்நுட்பம் எவ்வாறு இயங்குகிறது என்பதை விளக்கும் வீடியோவை கீழே காணலாம்..,


    ×