search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 153498"

    • கோவையில் நடைபெறும் மஹா சிவராத்திரி விழா எல்.இ.டி தொலைக்காட்சிகள் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.
    • சத்குருவின் சத்சங்கம், கண்ணை கவரும் ஆதியோகி திவ்ய தரிசன காட்சி இடம்பெறுகிறது.

    கோவை மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் சுமார் 32 இடங்களில் ஈஷா மஹா சிவராத்திரி விழா இந்தாண்டு மிக விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதில் பொதுமக்கள் இலவசமாக பங்கேற்கலாம். மேலும், ஆதியோகி ருத்ராக்ஷத்தையும் பிரசாதமாக பெற்று கொள்ளலாம்.

    பாரத கலாச்சாரத்தின் மிக முக்கிய ஆன்மீக திருவிழாவான மஹாசிவராத்திரி விழா ஈஷா சார்பில் ஆண்டுதோறும் மிக பிரமாண்டமாக கொண்டாப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டு பிப்ரவரி 18-ம் தேதி மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை ஈஷா மஹாசிவராத்திரி விழா ஆதியோகி முன்பு நடைபெற உள்ளது.

    இதுதவிர, சென்னை, திருச்சி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், புதுச்சேரி, சேலம், நாமக்கல், திருவாரூர், நாகர்கோவில், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கடலூர், திண்டுக்கல் உட்பட 32 இடங்களில் இவ்விழா கொண்டாடப்பட உள்ளது. நிகழ்ச்சி நடைபெறும் இடங்களை isha.co/msrtn-ta என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

    கோவையில் நடைபெறும் மஹா சிவராத்திரி விழா மற்ற எல்லா இடங்களிலும் பெரிய எல்.இ.டி தொலைக்காட்சிகள் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். இவ்விழா தியானலிங்கத்தில் நடைபெறும் பஞ்சபூத க்ரியாவுடன் தொடங்கும். லிங்க பைரவி தேவியின் மஹா யாத்திரை, உள்நிலையில் பரவசத்தில் ஆழ்த்தும் சக்திவாய்ந்த தியானங்கள், சத்குருவின் சத்சங்கம், கண்ணை கவரும் ஆதியோகி திவ்ய தரிசன காட்சி, பாரத பாரம்பரியத்தை பறைசாற்றும் புகழ்பெற்ற கலைஞர்களின் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளுடன் விழா விடிய விடிய களைக்கட்ட உள்ளது.

    தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல நாட்டுப் புற கலைஞர் வேல்முருகன், ராஜஸ்தானி நாட்டுப் புற கலைஞர் மாமே கான், இசையமைப்பாளரும், பிரபல சித்தார் இசை கலைஞருமான நிலத்ரி குமார், டோலிவுட் பின்னணி பாடகர் ராம் மிரியாலா உள்ளிட்டோர் இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்த உள்ளனர்.

    இது தவிர, கேரளாவைச் சேர்ந்த 'தெய்யம்' நடன குழுவினர், கர்நாடகாவை சேர்ந்த ஜனபாடா நாட்டு புற நடன கலைஞர்கள், ஜார்ஜியாவைச் சேர்ந்த நடன கலைஞர்களும் விழாவை ஆட்டம், பாட்டத்துடன் அதிர செய்ய உள்ளனர்.

    மஹாசிவராத்திரி இரவில் இருக்கும் கோள்களின் அமைப்பு, மனித உடலில் இயற்கையாகவே சக்தியை மேல் நோக்கி எழ செய்வதற்கு ஏதுவாக உள்ளது. எனவே, இந்த இரவில் ஒருவர் முதுகுதண்டை நேராக வைத்திருந்து விழிப்பாகவும், விழிப்புணர்வாகவும் இருந்தால் ஆன்மீகம் சார்ந்த மகத்தான பலன்களை பெற முடியும்.

    • தைப்பூசம், மஹாசிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி என வருடாந்திர நிகழ்வுகள் விஞ்ஞான முறையிலும் மெய்ஞான முறையிலும் நம்மை மெருகேற்ற உதவும் நாட்களாகும்.
    • இன்று உலகமே கவனிக்கும் விதமாக ஈஷா மஹாசிவராத்திரி விழா கொண்டாடப்படுவது மிகவும் மகிழ்ச்சிகரமானது.

    ஆன்மீகம் வழிநடத்தும் இந்த பாரத கலாச்சாரத்தில் வழிபாடு என்பது மிக முக்கியமான கருவியாக உள்ளது. கடவுள் வழிபாடு நமக்கான பொருட்தேவைகளுக்காக என்பதைத்தாண்டி அது உள்நிலை வளர்ச்சிக்காகவும், முக்தியை நோக்கியும் இருந்து வந்துள்ளது.

    ஆன்மீகப் பாதையின் ஒவ்வொரு செயலும் நம்மை முக்தி நோக்கோடு பயணிக்க வைக்கும். அப்படித்தான் வருடத்தின் எல்லா நாட்களுமே அதற்கான விஞ்ஞான பூர்வமான பின்புலத்தோடு மெய்ஞானத்தை நமக்கு வழங்கும். ஒரு மாதத்தின் பௌர்ணமி, அமாவாசை, ஏகாதசி, பிரதோஷம் உள்ளிட்ட நாட்கள் உடலை சமநிலைப்படுத்தி ஆன்மீகப் படிகளை எடுக்க ஏதுவான நாட்கள் என்பது பரவலாக நம் அனைவருக்குமே தெரியும். ஒவ்வொரு மாதமும் சிவராத்திரி, ஏகாதசி என விசேஷ நாட்கள் வந்தாலும், வருடத்திற்கொருமுறை வரும் மஹாசிவராத்திரி, குரு பெளர்ணமி ஆகியவை நம் உள்நிலை வளர்ச்சிக்கு உகந்தவை என கருதப்படுகிறது.

    தைப்பூசம், மஹாசிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி என வருடாந்திர நிகழ்வுகள் விஞ்ஞான முறையிலும் மெய்ஞான முறையிலும் நம்மை மெருகேற்ற உதவும் நாட்களாகும். அப்படி இந்த மாசி மாதத்தில் வருவதுதான் மஹாசிவராத்திரி. பண்டைய காலத்தில் மிக விமரிசையாக கொண்டாடப்பட்ட மஹாசிவராத்திரி, காலமாற்றத்தில் காணாமலே போய்விட்டது எனுமளவிற்கு குறைந்துபோனது. அப்படியே அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்தாலும், அதில் யாரோ ஒரு சில பெரியவர்கள் அமர்ந்து கதாகாலட்சேபம் கேட்டு பஜனை பாடுவார்கள். வீட்டில் சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் கூட சம்பிரதாயமாக இருப்பதைப்போல சூழல் உருவாகியுள்ளது. மஹாசிவராத்திரியின் மகத்துவத்தை முழுமையாக புரியாமலேயே கடந்த சில தலைமுறையினர் சென்றுவிட்டது பெருஞ்சோகம்.

    பதினைந்து இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஈஷா மேற்கொண்ட சீரிய முயற்சிகளால் மஹாசிவராத்திரி தற்போது கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இன்று உலகமே கவனிக்கும் விதமாக ஈஷா மஹாசிவராத்திரி விழா கொண்டாடப்படுவது மிகவும் மகிழ்ச்சிகரமானது. வயது, பாலினம், இனம் என எவ்வித பேதங்களும் இல்லாமல் ஒட்டுமொத்த மக்களும் இரவு முழுக்க விழித்திருந்து சிவநாமம், மந்திர உச்சாடனைகள் செய்து அந்த சக்திமிக்க இரவை பயனுள்ள வகையில் கழிக்கிறார்கள்.

    மஹாசிவராத்திரி குறித்த பெரும்பாலான கட்டுரைகளில் பொருள் வளம், செல்வ வளம் மற்றும் அதைச்சார்ந்த நன்மைகள் குறித்து சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அதன் பின்னுள்ள அற்புதமான விஞ்ஞானமும், அதனூடே உள்ள மெய்ஞானமும் அடியோடு மறக்கப்பட்டிருக்கிறது அல்லது மறைக்கப்பட்டிருக்கிறது. இந்த காலத்து ஆன்மீக அமைப்புகள் இந்த விஞ்ஞான அடிப்படைகளை சொல்லித்தந்ததால் தர்க்கரீதியான இன்றைய தலைமுறை அதனை கவனிக்கிறார்கள்.

    முதுகுத்தண்டு நேராக வைத்திருத்தல் இந்த நாளின் சிறப்பை நாமும் கிரகித்துக் கொள்ளலாம் என்பது அனைவரும் புரிந்துகொண்டு செய்யக்கூடியதாக இருக்கிறது. அதோடு ஈஷா நடத்தும் மஹாசிவராத்திரி விழாவில் அந்த இரவைக் கழிக்க ஆன்மீகம், உற்சாகமான ஒரு விஷயமாக தெம்பூட்டும் ஒரு நிகழ்வாக வழங்கப்படுகிறது. இசை, நடனம், மந்திர உச்சாடனைகள் மற்றும் மஹா அன்னதானம் என இனிய இரவாக இருப்பதால் கூட்டம் கூட்டமாய் லட்சக்கணக்கில் ஈஷாவிற்கு வருகிறார்கள் இந்த மண்ணின் சாமானிய மனிதர்கள். குறிப்பாக, அதிகளவில் இளைஞர்களை ஆன்மீகம் நோக்கி ஈர்க்கும் விழாவாக இது மாறியுள்ளது.

    ஈஷா மஹாசிவராத்திரி விழாவில் ஜாதி, மத வேறுபாடு இன்றி யார் வேண்டுமானால் கலந்து கொள்ள முடியும். விருப்பம் உள்ளவர்கள் இந்த லிங்கை பயன்படுத்தி முன்பதிவும் செய்து கொள்ளலாம்

    https://isha.sadhguru.org/mahashivratri/attend-in-person/

    இந்த கலாச்சாரத்தின் அற்புதமான நெறிமுறைகளை, ஆன்மீக சாராம்சங்களை உணர்ந்து நம் வாழ்வினை கொண்டாட்டமாக நடத்திட ஈசனின் அருள் நமக்கு உதவும்.

    • பதிவு செய்தவர்களின் இ-மெயில் முகவரிக்கு விழாவில் பங்கேற்பதற்கான இ-பாஸ் அனுப்பி வைக்கப்படும்.
    • மாலை 6 மணிக்கு தியான லிங்கத்தில் நிகழ்த்தப்படும் பஞ்சபூத ஆராதனையுடன் மகா சிவராத்திரி விழா தொடங்கும்.

    'தென் கயிலாயம்' என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தில் மஹா சிவராத்திரி விழா ஆண்டுதோறும் மிக விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டு மஹா சிவராத்திரி விழா பிப்ரவரி 18-ம் தேதி மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை ஆதியோகி முன்பு மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது.

    இவ்விழாவில் நேரில் கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள் https://isha.co/msr23-tn என்ற லிங்கை பயன்படுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். இலவசமாக பங்கேற்க விரும்புபவர்கள் 'தாமிரபரணி' என்ற பிரிவை தேர்வு செய்து பெயர், அலைபேசி எண், இ-மெயில் முகவரி போன்றவற்றை பதிவிட்டு முன்பதிவு செய்ய வேண்டும். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இந்த முன்பதிவு நடைபெறும்.

    வெற்றிகரமாக முன்பதிவு செய்த பிறகு, விழாவில் பங்கேற்பதற்கான இ-பாஸ் பதிவு செய்தவர்களின் இ-மெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். பிப்ரவரி 18-ம் தேதி ஈஷாவிற்கு வரும் போது, மலைவாசல் அருகே இருக்கும் நுழைவு சீட்டு வழங்கும் இடத்தில் இந்த இ-பாஸை காண்பித்து நுழைவு சீட்டை பெற்று கொள்ளலாம்.

    இவ்விழா மாலை 6 மணிக்கு தியானலிங்கத்தில் நிகழ்த்தப்படும் பஞ்சபூத ஆராதனையுடன் தொடங்கும். லிங்க பைரவி தேவியின் மஹா யாத்திரை, உள்நிலையில் பரவசத்தில் ஆழ்த்தும் சக்திவாய்ந்த தியானங்கள், சத்குருவின் சத்சங்கம், கண்ணை கவரும் ஆதியோகி திவ்ய தரிசன காட்சி, பாரத பாரம்பரியத்தை பறைசாற்றும் புகழ்பெற்ற கலைஞர்களின் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளுடன் விழா விடிய விடிய களைகட்ட உள்ளது. விழாவில் பங்கேற்கும் அனைத்து பக்தர்களுக்கும் அன்றைய தினம் இரவு மஹா அன்னதானம் வழங்கப்படும் என ஈஷா யோகா மையம் தெரிவித்துள்ளது.

    • கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை அனைத்து மாநிலங்களிலும் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.
    • பாரத பாரம்பரியத்தை பறைசாற்றும் புகழ்பெற்ற கலைஞர்களின் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.

    உலகமெங்கும் மக்கள் விரும்பி நேரலையில் காணும் நிகழ்ச்சிகளில், கடந்த ஆண்டு ஆஸ்கர் மற்றும் கிராமி விருது வழங்கும் விழாக்களை பின்னுக்கு தள்ளிய ஈஷாவின் மஹா சிவராத்திரி விழா இந்த வருடம் பிப்ரவரி 18-ம் தேதி மேலும் பிரமாண்டமாக கொண்டாடப்பட உள்ளது.

    ஆன்மீகத்திலும் பக்தியிலும் ஊறி திளைத்த கலாச்சாரமாக நம்முடைய பாரத கலாச்சாரம் திகழ்கிறது. திருவிழாக்களின் தேசமாக விளங்கும் நம் பாரத தேசத்தில் மஹா சிவராத்திரி விழா என்பது கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை அனைத்து மாநிலங்களிலும் கொண்டாடப்படும் விழாவாக உள்ளது.

    யோக அறிவியலுடன் மிகவும் தொடர்புடைய இவ்விழா கோவை ஈஷா யோகா மையத்தில் ஆண்டுதோறும் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2023-ம் ஆண்டிற்கான மஹா சிவராத்திரி விழா வரும் பிப்ரவரி 18-ம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை ஆதியோகி முன்பு பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

    சத்குரு முன்னிலையில் நடைபெறும் இவ்விழா தியானலிங்கத்தில் நிகழ்த்தப்படும் பஞ்சபூத ஆராதனையுடன் தொடங்கும். லிங்க பைரவி தேவியின் மஹா யாத்திரை, உள்நிலையில் பரவசத்தில் ஆழ்த்தும் சக்திவாய்ந்த தியானங்கள், சத்குருவின் சத்சங்கம், கண்ணை கவரும் ஆதியோகி திவ்ய தரிசன காட்சி, பாரத பாரம்பரியத்தை பறைசாற்றும் புகழ்பெற்ற கலைஞர்களின் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளுடன் விழா விடிய விடிய களைக்கட்ட உள்ளது.

    மஹாசிவராத்திரி இரவில் இருக்கும் கோள்களின் அமைப்பு, மனித உடலில் இயற்கையாகவே சக்தியை மேல் நோக்கி எழச்செய்வதற்கு ஏதுவாக உள்ளது. எனவே, இந்த இரவில் ஒருவர் முதுகுதண்டை நேராக வைத்திருந்து விழிப்பாகவும், விழிப்புணர்வாகவும் இருந்தால் ஆன்மீகம் சார்ந்த மகத்தான பலன்களை பெற முடியும்.

    இவ்விழா ஈஷாவின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலான Sadhguru Tamil–ல் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்படும். மேலும், தமிழ், இந்தி, ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மராத்தி என பல்வேறு மாநில மொழிகளில் முன்னணி தொலைக்காட்சிகள் மற்றும் யூடியூப் சேனல்களிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. கடந்தாண்டு ஈஷா மஹா சிவராத்திரி விழாவை சுமார் 14 கோடி பேர் நேரலையில் பார்த்து உலக சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

    • அன்னதானம் செய்வதற்கு எந்தவித சமய அடையாளங்களும் தேவையில்லை. மனிதத்தின் அடிப்படையில் யாரும் யாருக்கும் அன்னதானம் செய்யலாம்.
    • ஒவ்வொரு வருடமும் கோவை ஈஷா யோக மையத்தில் நிகழும் மகா சிவராத்திரி விழாவில் பங்கு கொள்ளும் லட்சக்கணக்கான மக்களுக்கு அன்றைய தினம் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

    தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் என்பது பழமொழி. உபநிடதங்களில் கூட "அன்னம் பரப்பிரம்ம ஸ்வரூபம்" என குறிப்பிடப்பட்டுள்ளது. உணவை தானம் செய்வதென்பது ஒருவருக்கு வாழ்க்கையை, உயிரை தானம் செய்வதற்கு ஒப்பானது. உணவு என்பது ஒருவரின் வாழ்வை நீடித்து கொள்ளும் சக்தியை வழங்குகிறது. அதனால்தான் அன்னதானத்தை நம் மரபில் 'பிராண தானம்' என்றும் அழைக்கிறோம். இதை விளக்கும் விதமாக 'உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே' என்ற மற்றொரு பழமொழியும் புழக்கத்தில் உள்ளது.

    அன்னதானம் செய்வதற்கு எந்தவித சமய அடையாளங்களும் தேவையில்லை. மனிதத்தின் அடிப்படையில் யாரும் யாருக்கும் அன்னதானம் செய்யலாம். ஒரு மனிதன் உயிர் வாழ அடிப்படையான மூன்று விஷயங்களில் முதன்மையானது உணவு. உடை, இருப்பிடம் ஆகிய மற்ற இரு அம்சங்கள் இல்லாவிட்டால், வாழ்வின் தரம் தான் பாதிக்கப்படும். யாரொருவருக்கு உணவு இல்லையோ அவருக்கு வாழ்வாதாரமே, வாழ்க்கையே பாதிக்கப்படும்.

    அந்த காரணத்தினாலே பாரதியின் புகழ் பெற்ற பல வரிகளில், லட்சக்கணக்கானோர் நெஞ்சில் நிலைத்திருக்கும் வரியாக "தனியொருவனுக்கு உணவில்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்" எனும் வரி போற்றப்படுகிறது. எனவே கல்வி தானம், பொருள் தானம் உள்ளிட்ட ஏராளமான தானங்களில் வரிசையில் அன்னதானம் என்பது மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

    குறிப்பாக ஆன்மீக பாதையில் இருப்பவர்களுக்கு வழங்கப்படும் அன்னதானம் குறித்து சத்குரு அவர்கள் கூறும்போது "நமது பாரம்பரியத்தில், துறவிகள் மற்றும் ஆன்மீக சாதகர்களுக்கு சேவை செய்வதென்பது மிகவும் முக்கியமாக இருந்து வந்துள்ளது. இதுவே ஒரு தனி ஆன்மீகப் பாதையாகவும் இருப்பதைப் பார்க்க முடிகிறது. இதில் மிகவும் அற்புத அம்சமாக இருப்பது, பிறருக்கு உணவை அர்ப்பணிக்கும் அன்னதானம்." என்கிறார்.

    மேலும் ஈஷாவில் அன்னதான திட்டம் தொடர்ந்து பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதனால் மையத்திலுள்ள ஆசிரமவாசிகள், ஈஷாவின் பல்வேறு ஆன்மீக மற்றும் சமூக நலத்திட்டங்களில் தங்களை முழுமையாக அர்ப்பணித்து செயலாற்ற முடிகிறது. ஆயிரக்கணக்கான சாதகர்கள், தன்னார்வலர்களுக்கு தினசரி இரு வேளை அன்னதானம் வழங்கப்படுகிறது.

    இதுமட்டுமின்றி ஒவ்வொரு வருடமும் கோவை ஈஷா யோக மையத்தில் நிகழும் மகா சிவராத்திரி விழாவில் பங்கு கொள்ளும் லட்சக்கணக்கான மக்களுக்கு அன்றைய தினம் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும் ஆதியோகி முன்பு நிகழும் மகாசிவராத்திரியை முன்னிட்டு, ஆதியோகியை நேரில் தரிசிக்க முடியாத மக்களுக்கு அருள் தரிசனம் வழங்கும் வகையில் கோவை ஈஷா யோக மையத்தில் இருந்து புறப்பட்ட ஆதியோகி ரதங்கள் தமிழகம் முழுவதும் வலம் வந்த வண்ணம் உள்ளன. தன்னை நாடி வந்தவர்களுக்கு அருள் தரிசனம் நல்கிய ஆதியோகி, ஆதியோகி ரதம் வழியாக தன் பக்தர்களை தேடி சென்று அருள் பாலித்து வருகிறார். கிட்டத்தட்ட 25,000 கி.மீ தூரம் வலம் வரும் இந்த ரத யாத்திரையில் பல நூறு தன்னார்வலர்கள், சிவாங்கா சாதகர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது.

    • 112 அடியில் ஆதியோகியின் மார்பளவு திருவுருவம் 2017-ம் ஆண்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.
    • மஹா சிவராத்திரியை முன்னிட்டு ஆண்டுதோறும் ஆதியோகி ரத யாத்திரை நடத்தப்படுகிறது.

    தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட மக்களும் தங்கள் ஊர்களிலேயே ஆதியோகியை தரிசித்து அவரின் அருளை பெற வாய்ப்பளிக்கும் ஆதியோகி ரத யாத்திரை மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த யாத்திரையின் மூலம் ஒவ்வொரு ஊரிலும் ஆயிரக்கணக்கான மக்கள் ஆதியோகியை நேரில் தரிசனம் செய்து வருகின்றனர்.

    உலகில் தோன்றிய முதல் யோகியான சிவன் சப்தரிஷிகளுக்கு (அகத்தியர் உள்ளிட்ட 7 ரிஷிகளுக்கு) யோக விஞ்ஞானம் முழுவதையும் பரிமாறினார். சப்தரிஷிகள் ஒவ்வொருவரும் அந்த விஞ்ஞானத்தை மிகுந்த அர்ப்பணிப்புடன் உலகின் பல்வேறு பகுதிகளுக்கு எடுத்து சென்றனர். இது ஆன்மீகத்தில் மாபெரும் அமைதி புரட்சி நிகழ அடித்தளமாக அமைந்தது.

    யோக கலாச்சாரம் உலகம் முழுவதும் பரவுவதற்கு முழுமுதற்காரணமாக இருக்கும் ஆதியோகி சிவனுக்கு நன்றியை வெளிப்படுத்தும் விதமாக கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் 112 அடியில் ஆதியோகியின் மார்பளவு திருவுருவம் சத்குரு அவர்களால் 2017-ம் ஆண்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதையடுத்து, ஆதியோகியை தரிசித்து அவரின் அருளை பெறுவதற்காக தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் வருகை தருகின்றனர்.

    இந்நிலையில், கோவையில் செயல்படும் தென் கயிலாய பக்தி பேரவை சார்பில் மஹாசிவராத்திரியை முன்னிட்டு ஆண்டுதோறும் ஆதியோகி ரத யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, கோவைக்கு வந்து ஆதியோகியை தரிசிக்க இயலாமல் இருக்கும் மக்கள் தங்கள் ஊர்களிலேயே அவரை தரிசிப்பதற்கு இந்த யாத்திரை வாய்ப்பளிக்கிறது.

    அதன்படி, 7 அடி உயரமுள்ள ஆதியோகி திருவுருவத்துடன் கூடிய இந்த ரதங்கள் தமிழகத்தின் 4 திசைகளிலும் பயணித்து கொண்டு இருக்கின்றன. கோவையில் இருந்து கடந்த மாதம் புறப்பட்ட 5 ஆதியோகி ரதங்கள் 30-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் சுமார் 25 ஆயிரம் கி.மீ பயணித்து மஹாசிவராத்திரியன்று மீண்டும் கோவைக்கு திரும்பும் வகையில் இந்த யாத்திரை திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த யாத்திரையில் பிப்ரவரி 18-ம் தேதி கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்திலும், அந்தந்த மாவட்டங்களிலும் நடைபெறும் ஈஷா மஹாசிவராத்திரி விழாவிற்கு பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது.

    • சதுரகிரி, வெள்ளியங்கிரி ஆகிய மலையேற்றங்கள் சவாலானவை.
    • மலையேற்றம் போன்ற வழிபாட்டு முறைகள் நமது உடல் மன வலிமையை பரிசோதிக்கும்.

    தொன்மையான இந்திய கலாச்சாரத்தில் மனிதனின் உள்நிலை வளர்ச்சிக்கான மூலாதாரங்களாக இருப்பவை கோயில்கள். ஊர்முழுக்க ஆங்காங்கே கோயில்கள், ஒவ்வொரு வீதியிலும் பல கோயில்கள் என இங்குள்ள மனிதர்களின் வாழ்க்கை கோயில்களை அடிப்படையாகக்கொண்டே நடந்து கொண்டிருக்கிறது.

    வீட்டில் நடக்கும் சம்பிரதாயங்களான குழந்தை பிறப்பு, திருமணங்கள், பெண்களுக்குரிய சீர் சடங்குகள், அந்தந்த காலத்திற்குரிய விசேஷங்கள், கொண்டாட்டங்கள் அனைத்துமே கோயில்களில் தான். அவர்களுக்கு பிடித்தமான கோயில் அல்லது அதற்குரிய கோயில் அல்லது குல தெய்வக்கோயில் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் கோயில்களைச் சுற்றியே சுழல்கிறது இந்த மண்ணின் மனிதர்களுடைய வாழ்க்கை.

    மேற்கத்திய நாடுகளில் வாழ்வாதாரம், பிழைத்தல் பற்றியே கவனம் இருக்கும்போது, இந்த பாரத மண்ணின் எளிமையான மனிதர்கள் கூட அவர்களின் அன்றாட வாழ்க்கையில் ஆன்மீகம், முக்தி, பாவ புண்ணியங்கள் ஆகியவற்றை புரிந்து வாழும் தன்மையோடு இருப்பதை காணமுடியும். இவற்றிலெல்லாம் ஆழமான அறிவோடு இல்லாவிட்டாலும் அடிப்படையில் இவற்றை புரிந்தும் புரியாமலும்கூட அனைவரும் பின்பற்றியே வருகிறார்கள். அதில் முக்கியமான பகுதி தான் கோயிலுக்கு செல்வது.

    தினமும் பிழைப்பிற்காக வேலையோ தொழிலோ செய்யத் துவங்கும் முன் கோயிலுக்கு சென்று வந்த பிறகே அன்றைய நாளைத் துவங்குவது இந்த மரபில் ஊறிய ஒன்று. காலப்போக்கில் வாரம் ஒருமுறை மாதம் ஒரு முறை என மாறினாலும் எப்படியோ ஒரு வழியில் கோயிலுக்கு செல்வது தொடர்கிறது.

    வருடாவருடம் அந்தந்த வழிபாட்டுக்கு உரிய காலங்களில் தனித்துவமான திருத்தலங்களுக்கு செல்வதை மாலையிட்டு மிகுந்த பக்தி சிரத்தையோடு செய்கின்றனர் பக்தர்கள். தினசரி வாழ்க்கைமுறையை முறைப்படுத்தி, அதாவது உணவுமுறை, உடை, உடல் மன ஒழுக்கமுறைகளை கடைப்பிடித்து, அனைத்தையும் கொஞ்சம் சீர்படுத்திக்கொண்டு, பல நாட்கள் விரதமிருந்து மலைக்கோயில்களுக்கு யாத்திரையாக சென்று வருகின்றனர்.

    சபரிமலை, பழனி மலை, சதுரகிரி, வெள்ளியங்கிரி உள்ளிட்ட பல திருத்தலங்கள் தமிழகத்தில் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தனித்துவமான சிறப்பு உள்ளது. குறிப்பாக சதுரகிரி, வெள்ளியங்கிரி ஆகிய மலையேற்றங்கள் சவாலானவை. அதற்காகவே நமது உடலை தயாராக வைத்திருந்தால் மட்டுமே இந்த அருள்பொழியும் மலைத்தலங்களுக்கு சென்றுவர இயலும். எப்போதும் மலையேற்றங்கள் செல்பவர்களுக்கு கூட இந்த மலை ஏறுவது சற்று கடினமே. ஆனால் மலை ஏறி இறங்கியபிறகு, அடுத்து எப்போது மலை ஏறுவோம் என்று எங்கும் அளவிற்கு வாழ்க்கையின் சிறந்த அனுபவமாக இருக்கும்.

    இத்தகைய வழிபாட்டு முறைகள் நமது உடல் மன வலிமையை பரிசோதிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. 'ஒரு மலை ஏறிப்பார்த்தால்தான் நாம் நமது உடலுக்கு செய்திருக்கும் துரோகங்கள் என்னென்ன என்பது தெரியும்' என்று சொல்வார்கள். அப்படி உடலின் ஒவ்வொரு பாகத்தையும் முழு செயல்பாட்டுக்கு உட்படுத்தி உடலுக்கு நிகழும் புத்துணர்வு பயிற்சிதான் மலையேற்றம்.

    இதனை சற்று எளிமைப்படுத்தி ஆன்மீக அனுபத்தை உணர வழிசெய்கிறது தென்கைலாய பக்திப்பேரவை. ஒவ்வொரு மாத சிவராத்திரிக்கும் தென்கைலாய பக்திப்பேரவை நடத்தும் இந்த சிவாங்கா யாத்திரையில் கலந்துகொள்ள பக்தர்கள் 42 நாட்களுக்கு முன்பே பதிவு செய்துகொண்டு தங்கள் விரதத்தை துவக்குகின்றனர். இருவேளை உணவு, சிவநமஸ்காரம் எனும் யோகப்பயிற்சி, உள்ளிட்ட செயல்முறைகளோடு மிகத் தீவிரமான பக்தியில் இருக்கின்றனர்.

    சலிப்பான வாழ்க்கையிலிருந்து பாதையை மாற்றி நமது உள்நிலையை கவனித்தால்தான் புறச்சூழலும் நன்றாக அமையும் என்பதை உணர்ந்த பலரும் இந்த சிவாங்கா விரதத்தை மேற்கொண்டு, அளப்பரிய பலன்களை பெறுகிறார்கள். பல நாட்களாக இருந்த உடல் உபாதைகள், குடும்ப வாழ்வின் குழப்பங்கள், பொருளாதாரம் என எல்லாமே நமக்கு வேண்டியதைப்போல கிடைத்தன என்று பலரும் பகிர்ந்துகொள்கிறார்கள். அதனை உணர்ந்து அனுபவித்த அவர்கள் ஒவ்வொரு வருடமும் திரும்பத்திரும்ப சிவாங்கா யாத்திரை வருவதைப் பார்ப்பதே சிலிர்ப்பானதொரு பக்தி அனுபவமாக இருக்கிறது.

    சிவாங்கா யாத்திரை குறித்த கூடுதல் தகவல்களுக்கு +9183000 83111 என்ற எண்ணையும், info@shivanga.org என்கிற மின்னஞ்சலையும் தொடர்பு கொள்ளலாம்

    • தென்கைலாய பக்திப்பேரவை மஹாசிவராத்திரியை முன்னிட்டு ஆதியோகி ரத யாத்திரையை நடத்துகிறது.
    • பக்தர்கள் 42 நாட்களுக்கு முன்பே பதிவு செய்துகொண்டு தங்கள் விரதத்தை துவக்குகின்றனர்.

    ஒரு மனிதன் தன்னையும் தனது தேவைகளையும் முன்னிலைப்படுத்தாமல் சரணடையும் இடம்தான் பக்தி. எம்மதமாயினும், கலாச்சாரமாயினும் பக்தி என்பது எல்லா மனிதர்களையும் கரைக்கும் தீ. நமது கலாச்சாரத்தின் சிவபக்தி என்பது பாரதத்தின் கடைக்கோடி கிராமங்களின் எளிமையான மனிதர்களிடம் கூட சகஜமாக காணமுடியும். ஆனால் காலமாற்றத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போகும் பல புனிதங்களில் பக்தியும் ஒன்று என நாம் வருந்தும் இந்த சூழலில், பக்தி என்பது இப்போதும் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கிறது என்பதை இந்த பக்தர் கூட்டத்திடம் கண்கூடாகக் காணமுடிகிறது.

    தென்கைலாய பக்திப்பேரவை ஒவ்வொரு வருடமும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு ஆதியோகி ரத யாத்திரையை நடத்துகிறது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தங்களின் வயது, பாலினம், பணி மற்றும் பொருளாதார சூழ்நிலை என அனைத்தையும் கடந்து சிவனின் அருள் பெற, 42 நாட்கள் விரதமிருந்து தென்கயிலாயம் என்றழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலைக்கு யாத்திரை செல்கின்றனர். ஒவ்வொரு மாத சிவராத்திரிக்கும் இந்த யாத்திரை நடைபெற்றாலும், வருடத்தில் ஒருமுறை வரும் மஹாசிவராத்திரியின்போது இந்த சிவாங்கா யாத்திரை, ஆதியோகி ரத யாத்திரையோடு இணைந்து மிக விமரிசையாக நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள பக்தர்கள் 42 நாட்களுக்கு முன்பே பதிவு செய்துகொண்டு தங்கள் விரதத்தை துவக்குகின்றனர். இருவேளை உணவு, சிவநமஸ்காரம் எனும் யோகப்பயிற்சி, 21 பேரிடம் பிச்சை எடுத்தல் உள்ளிட்ட செயல்முறைகளோடு மிகத் தீவிரமான பக்தியில் இருக்கின்றனர்.

    நாம் புராண கதைகளில் படித்த ஆழ்வார்கள் நாயன்மார்கள் போன்றோர் அவர்களது பக்திக்கு பெயர் போனவர்கள். கடவுள்களையே அவர்கள் முன் இறங்கி வரச்செய்யும் அளவிற்கான தீவிரமான பக்தர்களான ஆண்டாள், பூசலார் உள்ளிட்ட பலரை நாம் அவர்களை கடவுளாகவே பார்த்து வணங்கவும் செய்கிறோம். இந்த தலைமுறையினரான நாம் அத்தகைய தீவிரமான மனிதர்களை பற்றி படித்திருக்கலாம் அல்லது கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் நம் சமகாலத்தில் நம்மைப்போலவே சமூக வாழ்க்கையில் இருந்துகொண்டே அப்படிப்பட்ட தீவிரமான பக்தர்களாகவும் இருக்கிறார்கள் இந்த சிவாங்கா சாதகர்கள்.

    இந்த தீவிரம் எந்த அளவிற்கெனில், சென்னை, நாகர்கோயில் உள்ளிட்ட தொலைவான ஊர்களிலிருந்தும்கூட கோவை ஈஷாவில் நடக்கும் மஹாசிவராத்தியில் கலந்துகொள்ள பாதயாத்திரையாக நடந்தே வருகின்றனர். அதிலும் அவர்கள் ஆதியோகி, நாயன்மார்கள் ஆகியோர் கொண்ட ரதங்களை 500 கிலோ மீட்டர், 700 கிலோ மீட்டர் எனும் அசாத்திய தூரங்களை கடந்து இழுத்து வருகின்றனர். அவர்களும் அனைவரையும் போல பணி, தொழில் செய்பவர்கள்தான் எனினும், தங்களின் பக்தியின் தீவிரத்தால் உந்தப்பட்டு இப்படிப்பட்ட கடுமையான செயல்களையும் அன்பாக கசிந்துருகி செய்வது மிகுந்த வியப்பை தருகிறது.

    ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுவன் முதல் 64 வயதுள்ள பெரியவர் வரை பலரும் இந்த யாத்திரையில் கலந்துகொண்டு 20 நாட்களுக்கும் மேலாக இந்த தொலைதூரப்பயணத்தை அற்புதமாக நிறைவுசெய்கின்றனர். நிறைவு செய்வதோடு நின்றுவிடாமல், 7 மலைத்தொடர்களையுடைய தென்கயிலாயம் என்று அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலை ஏறி அங்குள்ள சுயம்புவாக வீற்றிருக்கும் ஈசனை கண்டுருகி மலை இறங்குகின்றனர். அதனைத்தொடர்ந்து அன்று இரவு முழுக்க சத்குரு அவர்களின் முன்னிலையில் நிகழும் மஹாசிவராத்திரி நிகழ்விலும் பங்கேற்கின்றனர்.

    இப்படி தொடர்ந்து 6 வருடங்கள், 7 வருடங்கள் என தொடர்ந்து வருகின்றனர். நம்முடன் வீட்டில் இருக்கும் நமது பெரியவர்கள், சமூகத்தில் இருக்கும் அந்த வயதுடையவர்கள் எப்படியெல்லாம் வாழ்கிறார்கள், எத்தனை அவஸ்தைகளோடு வாழ்க்கையை கழிக்கிறார்கள் என்று பார்க்கையில், இந்த சாதகர்கள் தங்கள் உச்சகட்ட பக்தியின் தீவிரத்தில் தங்கள் சக்திக்கு அப்பாற்பட்ட பெருஞ்செயலை அனாசயமாக செய்வதில் அந்த பக்தியின் வீச்சு எத்தனை அற்புதமானது என்பதை உணரமுடிகிறது.

    • மனித உடலில் உள்ள ஏழு சக்கரங்களை குறிக்கும் வகையில் ஏழு அடுக்கு மலையாக அமைந்துள்ளது வெள்ளியங்கிரி.
    • மகாசிவராத்திரி விழாவை முன்னிட்டு ஆதியோகி ரத யாத்திரை நடைபெற்று வருகிறது.

    குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பார்கள். அதை போலவே சிவன் அமர்ந்த மலையெல்லாம் கைலாயம் என்பது பொது மொழி. அதன் அடிப்படையில் வெள்ளியங்கிரி மலையை தென் கைலாயம் என்றழைக்கிறோம். முன்பொரு காலத்தில் தென்னிந்தியாவில் ஒரு பெண் இருந்தாள். அவளுக்கு சிவ பெருமான் மீது தீராத பக்தி. ஆனால் அந்த பக்தி நாம் நினைப்பது போல் சிவபெருமான் பாதம் பணியும் பக்தி அல்ல. அவர் கரம் பற்றும் பக்தி. பக்தியின் தீவிரத்தில் அவள் யோக நிலையில் சிவபெருமானுக்காக காத்திருந்தாள். சிவபெருமானை அடைய விரும்பிய அப்பெண், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் சிவபெருமான் வந்து தன்னை ஆட்கொள்ளா விட்டால் உயிர் துறப்பேன் என உறுதி பூண்டிருந்தாள்.

    அப்பெண்ணின் பக்தியை அறிந்த சிவபெருமான், அவள் கரம் பற்ற வட திசையில் இருந்து தென் திசை நோக்கி வந்தார். "விடிவதற்குள் சிவபெருமான் வர வேண்டும். இல்லையென்றால் நான் உயிர் துறப்பேன்" என்று சூளுரைத்திருந்தாள். ஆனால் இருவரும் இணைவதை மற்ற கடவுளர்கள் வேறு சில காரணங்களுக்காக விரும்பவில்லை. சிவபெருமான் அப்பெண்ணை மணப்பதை தடுக்க எண்ணிய அவர்கள் சதி செய்ய திட்டமிட்டனர்.

    சிவபெருமான் வரும் வழியில் சூரியன் உதிப்பதை போன்று தவறாக சித்தரித்தனர். "சூரியன் உதித்து விட்டது என நம்பி, இனி தம்மால் அப்பெண்ணை அடைய முடியாது" என்று விரக்தி அடைந்தார் சிவபெருமான்; அப்பெண்ணோ குறிப்பிட்ட நேரத்தில் சிவபெருமான் வராததால், யோக நிலையின் தீவிரத்தில் உயிர் துறந்தாள். இப்போதும் அப்பெண்ணை நாம் கன்னியாகுமரியில் குமரிப் பெண்ணாக தரிசிக்க முடியும்.

    ஏமாற்றத்தின் உச்சத்தில் இருந்த சிவபெருமான் தனக்குள் எழுந்த மனச்சோர்வுடன் வந்தமர்ந்த இடம்தான் வெள்ளியங்கிரி. பனி போர்த்தப்பட்டு கைலாயத்தை பிரதியெடுத்தது போல் வெள்ளை நிறத்தில் மிளிரும் வெள்ளியங்கிரியில் ஈசன் அமர்ந்த அதிர்வுகளை இன்றும் மலை ஏறுவோர் உணர்கின்றனர்.

    மனித உடலில் உள்ள ஏழு சக்கரங்களை குறிக்கும் வகையில் ஏழு அடுக்கு மலையாக அமைந்துள்ளது வெள்ளியங்கிரி. இம்மலையில் இருக்கும் நல்லதிர்வுகளை உள்வாங்கவும், தெய்வீகத்தில் திளைத்திருக்கவும் இன்றும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் மலையேறி ஈசனை தரிசிக்கின்றனர். குறிப்பாக ஈஷாவின் சிவாங்கா யாத்திரிகள் 42 நாட்கள் விரதமிருந்து, கடைசி நாளில் வெள்ளியங்கிரி மலையேற்றத்துடன் நிறைவு செய்கின்றனர். மலையில் இருக்கும் ஈசனை உயிர் இனிக்க தரிசித்து திரும்புகின்றனர்.

    மேலும் வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைந்திருக்கும் ஈஷா யோக மையத்தில் ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி விழா பிரம்மாண்டமாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள மகாசிவராத்திரி விழாவை முன்னிட்டு ஆதியோகியை அனைவரும் தரிசிக்கும் வண்ணம் ஆதியோகி ரத யாத்திரை நடைபெற்று வருகிறது. ஈஷா யோக மையத்திலிருந்து கடந்த டிசம்பரில் புறப்பட்ட 5 ரதங்கள் தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 25000 கி.மீ தூரம் வலம் வந்து மகாசிவராத்திரிக்கு முந்தைய நாளான பிப்ரவரி 14 அன்று ஈஷா யோக மையத்தை வந்தடையும். இந்த ரத யாத்திரையில் நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள், சிவாங்கா சாதகர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று வருகின்றனர்.

    • கருப்பு கவுனி அரிசியை கடந்த 4 வருடமாக முழுவதும் இயற்கை முறையில் சாகுபடி செய்து வருகிறோம்.
    • இதுவரை 15 ஆயிரம் விவசாயிகளுக்கு நாங்கள் இயற்கை விவசாய பயிற்சிகள் அளித்துள்ளோம்.

    ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசங்களில் விளையும் கேரட் மற்றும் பீட்ரூட்டை சமவெளியில் வெற்றிகரமாக சாகுபடி செய்து ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் சாதனை படைத்துள்ளது.

    இது தொடர்பாக அவ்வியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுவாமி ஸ்ரீமுகா அவர்கள் கூறுகையில், "எங்களுடைய மண் காப்போம் இயக்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் இயற்கை விவசாய பயிற்சிகளை மாதந்தோறும் நடத்தி வருகிறோம். அதுமட்டுமின்றி கோவை, ஈரோடு, திருவண்ணாமலை, தஞ்சாவூர் ஆகிய 4 இடங்களில் மாதிரி பண்ணைகளை உருவாக்கி பராமரித்து வருகிறோம். மொத்தம் 60 ஏக்கர் பரப்பில் பல்வேறு விதமான பயிர்களை பரிசோதனை முயற்சியாக வெவ்வேறு இயற்கை நுட்பங்களை பயன்படுத்தி பயிர் செய்து வருகிறோம்.

    அந்த வகையில், கோவையில் செம்மேடு கிராமத்தில் உள்ள எங்களுடைய மாதிரி பண்ணையில் மலைப்பிரதேசங்களில் மட்டுமே விளையும் கேரட் மற்றும் பீட்ரூட்டை தலா 30 சென்ட் என்ற பரப்பளவில் பிரதான பயிராக பயிரிட்டோம். 120 நாட்களுக்கு பிறகு தற்போது நாங்கள் எதிர்பார்த்ததை விட நல்ல பருமனாகவும் நீளமாகவும் கேரட் விளைந்துள்ளது.

    பொதுவாக காய்கறி கடைக்கு சென்று 1 கிலோ கேரட் வாங்கினால் 12 முதல் 13 கேரட் பிடிக்கும். ஆனால், நாங்கள் எந்தவித ரசாயனங்களையும் பயன்படுத்தாமல், இயற்கை முறையில் ஜீவாமிர்தம் மட்டுமே பயன்படுத்தி விளைவித்ததால் 6 அல்லது 7 கேரட்களை எடை போட்டாலே ஒரு கிலோ வந்துவிடும். அதை வைத்து பார்க்கும்போது விளைச்சலும் நல்ல முறையில் வந்துள்ளது. பூச்சி மேலாண்மைக்காகவும், நல்ல விளைச்சலுக்காகவும் வேப்பங்கொட்டை கரைசல் பயன்படுத்தினோம்.

    கேரட் மட்டுமின்றி, பீட்ரூட்டின் வளர்ச்சியும் சிறப்பாக வந்துள்ளது. இதைப்போலவே முள்ளங்கி, கொத்தமல்லி ஆகியவற்றையும் பயிர் செய்து வருகிறோம். இந்த முறை மழை அதிகமாக பெய்தபோது ஏற்பட்ட பூஞ்சை தாக்குதலுக்கு புளித்த மோர்க்கரைசல் தெளிக்கப்பட்டு நன்றாக வளர்வதற்கான சூழ்நிலை உருவாக்கப்பட்டதால், விளைச்சலில் எந்தக்குறையும் ஏற்படவில்லை. நாளை நடக்கவுள்ள அறுவடையில் 1.5 டன் அளவிற்கு விளைச்சல் இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.

    இதேபோன்று, பாரம்பரிய நெல் ரகமான கருப்பு கவுனி அரிசியும் நாங்கள் கடந்த 4 வருடமாக முழுவதும் இயற்கை முறையில் சாகுபடி செய்து வருகிறோம். கடந்த ஆண்டு ஒரு ஏக்கருக்கு இரண்டே கால் டன் விளைச்சல் கிடைத்துள்ளது. எங்கள் தோட்டத்திற்கு அருகில் ரசாயன விவசாயம் செய்யும் விவசாயிகள் எடுக்கும் விளைச்சலை விட இது அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

    இப்படி, நாங்கள் பரிசோதனை செய்து வெற்றி பெற்ற இயற்கை விவசாய தொழில்நுட்பங்கள்  அனைத்தையும் விவசாயிகளுக்கு நேரடி களப் பயிற்சியாக சொல்லித் தருகிறோம். இதுவரை 15 ஆயிரம் விவசாயிகளுக்கு நாங்கள் இயற்கை விவசாய பயிற்சிகள் அளித்துள்ளோம். அதில் நிறைய பேர் வெற்றிகரமாகவும் லாபகரமாகவும் விவசாயம் செய்து முன்னோடி விவசாயிகளாக மாறி உள்ளனர். பின்னர், அவர்களுடைய தோட்டத்திலேயே புது விவசாயிகளுக்கு இயற்கை விவசாய பயிற்சிகளை தமிழ்நாடு முழுவதும் கற்றுக்கொடுத்து வருகிறோம்." என்றார்.

    • கனிவான பாரதம் உருவாக்குவதற்கு ஒவ்வொரு குடிமகனும் தொடர்ந்து பங்களிக்க வேண்டும் என சத்குரு தெரிவித்துள்ளார்.
    • ஈஷா சம்ஸ்கிரிதி மற்றும் ஈஷா ஹோம் ஸ்கூல் பள்ளி மாணவர்கள் தேசப் பக்தி பாடல்களை பாடினர்.

    ஈஷாவில் இன்று நடைபெற்ற குடியரசு தின விழாவில் சத்குரு, தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். விழாவில் அவர் பேசியதாவது:

    பாரத தேசத்தில் வாழும் நாம் ஜாதி, மதம், மொழி, இனம், உணவு பழக்கம், கலாச்சாரம் என பல விதங்களில் வேறுப்பட்டு உள்ளோம். நம்மிடம் எவ்வளவு வேறுபாடுகள் இருந்தாலும் நாம் அனைவரும் பல நூறு ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வருகிறோம். சுதந்திரத்திற்கு முன்பு நம் தேசத்தை 600-க்கும் மேற்பட்ட குறு நில அரசர்கள் ஆட்சி செய்து வந்தனர். இருப்பினும், வெளியில் இருந்து வந்தவர்கள் அனைவரும் நம்மை இந்துஸ்தான் அல்லது பாரதம் என்று ஒற்றை பெயர் வைத்தே அழைத்தனர்.

    நம்மிடம் இருக்கும் இந்த பன்மைத்துவத்தையும், வேறுபாடுகளையும் பயன்படுத்தி நமக்குள் பிரிவினையை உருவாக்கும் செயல்கள் கடந்த 600 முதல் 700 ஆண்டுகளில் மிகவும் தீவிரமாக நடந்துள்ளன. நம் தேசத்தின் மீது படையெடுத்தவர்களும், ஆக்கிரமித்தவர்களும் இதை பல வழிகளில் மிகவும் திட்டமிட்டு செய்துள்ளனர். குறிப்பாக, நம் தேசத்தின் பொருளாதார முதுகெலும்பை தகர்ப்பதற்கும் அவர்கள் செயல் செய்துள்ளார்கள்.

    300 ஆண்டுகளுக்கு முன்பு வரை உலகளவில் பொருளாதாரத்தில் வளமான தேசமாக நம் பாரத தேசம் இருந்தது. அந்த நிலையை மீண்டும் அடையும் முயற்சியில் நாம் தற்போது ஈடுப்பட்டு உள்ளோம். பொருளாதார பலம் இல்லாமல் கலாச்சாரம், ஆன்மீக விழுமியங்கள் என நாட்டில் உள்ள எதையும் நம்மால் பாதுகாக்க முடியாது. மேலும், நம்மிடம் இருக்கும் பல விதமான வேறுபாடுகளை கடந்து எது நம்மை ஒற்றுமையாக வைத்துள்ளது என்பதை நீங்கள் கண்டறிந்து அதைப் மேலும் பலப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு சத்குரு கூறினார்.

    மேலும், குடியரசு தினத்தை முன்னிட்டு சத்குரு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "#குடியரசுதினம் - மிகப்பெரிய ஜனநாயகமாக ஆனது மட்டுமல்லாமல், துடிப்பான, வேற்றுமைகளுடன் ஒற்றுமையான தேசியத்தின் முத்திரையாக மாறியுள்ள நம் அன்பான பாரதத்தின் அருமையான பயணத்தின் நினைவூட்டல். வலிமையான, அனைவரையும் இணைத்துக்கொள்ளக்கூடிய, கனிவான #பாரதம் உருவாக்குவதற்கு ஒவ்வொரு குடிமகனும் தொடர்ந்து பங்களிக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

    ஈஷாவில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஈஷா சம்ஸ்கிரிதி மற்றும் ஈஷா ஹோம் ஸ்கூல் பள்ளி மாணவர்கள் தேசப் பக்தி பாடல்களை பாடி விழாவை சிறப்பித்தனர்.

    இது தவிர, ஈஷாவின் பிரதான நுழைவு வாயிலான மலைவாசலில் இக்கரை போளூவாம்பட்டி பஞ்சாயத்து தலைவர் சதானந்தம் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் பழங்குடி மக்கள் உட்பட நூற்றுக்கணக்கான கிராம மக்கள் பங்கேற்றனர்.

    • ரதத்திற்கும் நமக்குமான பந்தம் மிக பழமை வாய்ந்தது.
    • ஆன்மீகத்தை அழகியலோடு அணுகிய கலாச்சாரம் நம்முடையது.
    • பக்தர்கள் தங்கள் ஊர்களில் ஆதியோகியை தரிசிக்கும் வாய்ப்பாக ஆதியோகி ரதங்கள் வலம் வருகின்றன.

    வண்ணமயமான பிரம்மாண்ட சிற்பம் அசைந்து வருவதை கண்டால் ஒருவருக்குள் எத்தனை பரவசம் பிறக்கும்? அந்த வியத்தகு தருணத்தை தரக்கூடியவை தேர்கள். நாம் வணங்கும் தெய்வத்தை சுமந்து கொண்டு, தெருக்களில் உருண்டோடி, பல வண்ண நிறத்தில் அலங்காரம் சூடி, கம்பீர கொடிகள் ஏந்தி தேர் வரும் அழகை பாடாத கவிஞர்கள் இல்லை. ஆன்மீகத்தை அழகியலோடு அணுகிய கலாச்சாரம் நம்முடையது.

    தேர் திருவிழா என்பது நம் மரபில் காலம் கடந்து கடைப்பிடிக்கப்படும் வழக்கம். ரிக் மற்றும் அதர்வண வேதத்தில் தேர் குறித்த குறிப்புகள் உண்டு. "பத்ம", "ஸ்கந்த", "பவிஸ்ய" புராணங்களில் தேர் திருவிழா பற்றிய செய்திகளை பார்க்க முடிகிறது. ராமன் வனம் சென்றதும் தேரில்தான், பாரதத்தில் பாண்டவர்கள் போரை வென்றதும் ரதத்தில்தான். ரதத்திற்கும் நமக்குமான பந்தம் மிக பழமை வாய்ந்தது.

    முல்லை கொடி படர்வதற்கு தேர் கொடுத்த பாரியை நாம் படித்திருக்கிறோம். மேலும் கோவில் அமைப்புகள் குறித்து திருநாவுக்கரசர் தன் பதிகத்தில் பாடுகிறபோது, சிதம்பரம் அருகில் உள்ள மேலக்கடம்பூர் கோவிலின் கருவறையை பார்த்து "கரக்கோயில்" என்கிறார். இதன் பொருள் தேர் போன்ற அமைப்புடைய கோவில் என்பதாகும். இலக்கியங்களில் தேர் குறித்து இது போல பல செய்திகள் உள்ளன. இதன் தார்பரியம் ஒன்று தான், கோவிலில் இருக்கும் கடவுளை பக்தர்கள் தேடி செல்வார்கள். ரதம் என்பது தன் பக்தர்களை நோக்கி கடவுள் வருகிறார்.

    எந்த காரணத்தினாலோ தன்னை வந்து காண முடியாத பக்தர்களை, கடவுளே நேரில் சென்று பார்க்கிறார். மேலும் "ஊர் கூடி தேர் இழுப்போம்" என்பது பழமொழி. அந்த வகையில் தெய்வீகம் கடந்து இதில் சமூக நல்லிணக்கமும் இருப்பதை நாம் உணர முடியும். அனைத்து மக்களுக்கும் ஒரே தரிசனம் வழங்கி, அனைத்து மக்களாலும் வடம் பிடித்து இழுக்கப்பட்டு நகரும் கோவிலாக வலம் வருபவை ரதங்கள்.

    திருவாரூர், ஶ்ரீவில்லிப்புத்தூர், கள்ளழகர், ஶ்ரீரங்கம், என தமிழகம் கண்ட பாரம்பரிய தேர் திருவிழாக்கள் ஏராளம். அந்த வரிசையில், சமீப ஆண்டுகளில் தமிழகத்தில் அனைவர் மனதிலும் இடம் பிடித்திருப்பது ஆதியோகி ரதம்.

    ஈஷாவில் நிகழும் மஹா சிவராத்திரியை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் ஆதியோகியில் இருந்து ரதங்கள் புறப்பட்டு ஒவ்வொரு மாவட்டங்களில் வலம் வருவது வழக்கம். கோவையில் பிரம்மாண்டமாக அருள் பாலிக்கும் ஆதியோகியை காண முடியாத பக்தர்கள் தங்கள் ஊர்களில் ஆதியோகியை தரிசிக்கும் வாய்ப்பாக இந்த ஆதியோகி ரதங்கள் வலம் வருகின்றன.

    ஆயிரக்கணக்கான பக்தர்கள், தன்னார்வலர்களின் கோலாகலமாக வரவேற்பு கிடையே இந்த ஆண்டும் ஆதியோகி ரதங்கள் தமிழகமெங்கும் பவனி வருகின்றன. இந்த ஆண்டும் டிசம்பர் 17 அன்று ஈஷாவிலுள்ள ஆதியோகியில் இருந்து புறப்பட்ட 4 ரதங்கள், 50 நாட்களில் தமிழகத்தின் 25000 கி.மீ கடந்து, வரும் பிப்ரவரி 17 அன்று கோவை ஈஷா யோக மையத்தை அடையவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×