search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெள்ளரிக்காய்"

    தினமும் வெள்ளரிக்காயை சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறைவதைப் பார்ப்பீர்கள். வயிற்றிலுள்ள கொழுப்பைக் கரைத்து உடல் எடையை குறைக்கச் செய்யும்.
    வெள்ளரிக்காய் சத்து மிகுந்த காயாகும். இது பல ஆபத்தான நோய்கள் வராமல் தடுக்கும். புற்று நோயிலிருந்து கூட நம்மைக் காப்பாற்றும். நச்சுக்களை வெளியேற்றி, போதுமான நீர்ச்சத்துக்களை தக்க வைக்கும் அவசியமான வேலையை ஒரு வெள்ளரிக்காய் அன்றாடம் செய்கிறது.

    வெள்ளரிக்காயில் 95% நீர்ச்சத்து உள்ளது. உடலில் தங்கும் தீய நச்சிகளை எல்லாம் இழுத்து சிறு நீரகத்திற்கு அனுப்புகிறது. இதனால் உங்கள் சருமம் மெருகேறும்.

    அன்றாடம் சாப்பிடும் உணவுகளின் கலோரியை எரிக்க வெள்ளரிக்காய் உதவுகிறது. வளர்சிதை மாற்றத்தை அதிகப்படுத்துகிறது. எனவே கலோரி அதிகரிக்காமல் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.



    உங்களுக்கு வாய் துர்நாற்றப் பிரச்சனை இருக்கிறதா? அப்படியென்றால் தினமும் வெள்ளரிக்காய் சாப்பிடுங்கள், இது வாயில் உண்டாகும் கிருமிகளை அழிக்கும், ஈறுகளை பலப்படுத்தும், அதோடு வாய் துர்நாற்றத்தைக் கட்டுப்படுத்தும்.

    வாய் துர்நாற்றத்தைப் போக்க, ஒரு துண்டு வெள்ளரிக்காயை வாயில் வைத்துக் கொள்ளுங்கள். 30 நொடிகள் வரை வைக்கவும், அது வாயில் உள்ள கிருமிகளை அழித்து துர்நாற்றத்தைப் போக்கும்.

    தினமும் வெள்ளரிக்காயை சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறைவதைப் பார்ப்பீர்கள். கொழுப்பு செல்களைக் கரைக்கும். அதிக நீர்ச்சத்து கொண்டுள்ளதால், கொழுப்பு கார்போஹைட்ரேட் சத்துக்களை வேகமாய் ஜீரணித்து சக்தியாய் மாற்றிவிடும். மேலும் உடல் எடையை அதிகரிக்க செய்யாது. வயிற்றிலுள்ள கொழுப்பைக் கரைத்து உடல் எடையை குறைக்கச் செய்யும்.
    உலகின் மிக நீளமான வெள்ளரிக்காயை விளைவித்து இந்திய வம்சாவளி விவசாயி ரக்பிர் சிங் சங்கேரா கின்னஸ் சாதனை படைத்துள்ளார். #LongestCucumber #UK
    லண்டன்:

    பிரிட்டனில் வாழும் இந்திய வம்சாவளி சீக்கியர் ரக்பிர் சிங் சங்கோரா. இவர் கடந்த 1991-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு குடிபெயர்ந்தார். தற்போது பிரிட்டனின் டெர்பி நகரில் உள்ள ஒரு சீக்கிய கோவிலில் மத குருவாகவும், பண்ணை தொழிலும் செய்து வருகிறார்.

    மிகச்சாதாரணமான இவர் தற்போது உலகின் மிக நீளமான வெள்ளரிக்காயை வளர்த்ததற்காக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடிக்க உள்ளார். 51 இன்ச் நீளம் வளர்ந்துள்ள இந்த வெள்ளரிக்காய் இதற்கு முன்னதாக உலக சாதனையாக கருதப்பட்ட 42 இஞ்ச் நீளத்தை முறியடித்துள்ளது.

    இதுகுறித்து ரக்பிர் சிங் கூறுகையில், இந்த வெள்ளரிக்காய் வளர தினமும் கடவுளை வேண்டி வந்ததாகவும், வளரும் பருவத்தில் அருகில் நாற்காலியிட்டு அமர்ந்து பார்த்து பார்த்து வளர்த்ததாகவும் பெருமிதமாக கூறியுள்ளார். மேலும், கடந்த ஆண்டு 39 இஞ்ச் நீளமுள்ள வெள்ளரிக்காயை தாம் வளர்த்ததாகவும், அதில் திருப்தி அடையாததால் தொடர்ந்து முயற்சித்து தற்போது சாதனை படைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த வெள்ளரிக்காய் இன்னும் தனது நீளத்திலும் அகலத்திலும் வளர்ந்துகொண்டே இருக்கிறது இதில் ஆச்சரியமான விஷயமாக கருதப்படுகிறது. #LongestCucumber #UK
    ×