search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 153764"

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தருமபுரி வழியாக திருப்பதி செல்வதையொட்டி அம்மாவட்டம் முழுவதும் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    தருமபுரி:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை காலை திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்கிறார். இதற்காக அவர் இன்று பிற்பகலில் சேலத்தில் இருந்து காரில் புறப்படுகிறார்.

    ஓமலுர், தொப்பூர், தருமபுரி பை-பாஸ், கெரகோடஅள்ளி, காரிமங்கலம், கிருஷ்ணகிரி, வேலூர் வழியாக திருப்பதி சென்று அங்கு தங்குகிறார்.

    முன்னதாக இன்று பிற்பகலில் தருமபுரி வரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கெரகோட அள்ளியில் தருமபுரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான கே.பி.அன்பழகன் தலைமையில் அ.தி.முக.வினர் உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.

    முதல்-அமைச்சர் தருமபுரி வழியாக திருப்பதி செல்வதையொட்டி தருமபுரி மாவட்டம் முழுவதும் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் தலைமையில் தருமபுரி துணை போலீஸ் சூப்பிரண்டு காந்தி மற்றும் 324 போலீசார், ஊர் காவல் படையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

    தருமபுரி- கிருஷ்ணகிரி- பெங்களூரு பை-பாஸ் சாலையில் உள்ள முக்கிய சாலை சந்திப்புகளிலும், போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். ரோந்து வாகனங்களிலும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    இண்டூர் அருகே குடும்ப தகராறு காரணமாக மனைவியை அரிவாளால் வெட்டிய கட்டிட தொழிலாளியை போலீசார் தேடி வருகின்றனர்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், இண்டூர் அருகே உள்ள சோளப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் வேட்ராயன் (வயது 32).

    இவரது மனைவி ஜெயா (25), இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்தனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    கணவன்-மனைவி இருவரும் பெங்களூருவில் கட்டிட வேலை பார்த்து வந்தனர். கடந்த 11-ந் தேதி அவர்கள் இருவரும் சோளப்பாடி கிராமத்திற்கு வந்தனர். நேற்று மதியம் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த வேட்ராயன் கதவை சாத்தி விட்டு மனைவியை தலை, கை, கழுத்து உள்ளிட்ட பகுதியில் சரமாரியாக அரிவாளால் வெட்டினார். பின்னர் அவர் தப்பி ஓடி விட்டார். படுகாயம் அடைந்த ஜெயா, தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து இண்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து வேட்ராயனை தேடி வருகிறார்கள்.
    பாலக்கோடு அருகே குழந்தையை கிணற்றில் வீசி கொன்று விட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு மணியக்காரன்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். விவசாயி. இவரது மனைவி கலைச்செல்வி (வயது 35). இவர்களுக்கு தன்யஸ்ரீ (5) என்ற மகள் உள்ளார்.

    கலைச்செல்வி எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டுவேலைகளை மட்டும் கவனித்து வந்தார். சீனிவாசன் தனது நிலத்தில் ஒரே ஆளாக நின்று எல்லா வேலைகளையும் செய்து வந்தார்.

    கடந்த சில நாட்களாக கலைச்செல்வி வீட்டு வேலையையும், தோட்ட வேலையையும் செய்யாமல் இருந்து வந்ததாக தெரிகிறது.

    இதுகுறித்து சீனிவாசன் அவரிடம் எந்த வேலையையும் செய்யாமல் எதற்காக இப்படி இருக்கிறாய்? என்று கேட்டார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    நேற்று இரவு மீண்டும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. சிறிதுநேரத்தில் சீனிவாசன் தூங்க சென்றுவிட்டார். கணவர் திட்டியதால் மனமுடைந்து காணப்பட்ட கலைச்செல்வி தனது கணவர் அயர்ந்து தூங்கிய பின்பு அவரும் அவருடைய மகள் தன்யஸ்ரீயையும் அழைத்து கொண்டு வீட்டை வெளியே வந்தார்.

    அப்போது வீட்டின் அருகே இருந்த விவசாய கிணற்றில் தன்யஸ்ரீயை தூக்கி வீசினார். உடனே கலைச்செல்வியும் கிணற்றில் குதித்தார். இதில் இருவரும் நீரில் மூழ்கி மூச்சு திணறி இறந்தனர்.

    காலையில் எழுந்தவுடன் தனது மனைவியும், குழந்தையையும் படுக்கையில் இல்லாததை கண்டு சீனிவாசன் பல்வேறு இடங்களில் தேடிபார்த்தார். அப்போது வீட்டின் அருகே உள்ள கிணற்றில் மனைவி கலைச்செல்வியும், மகள் தன்யஸ்ரீயும் பிணமாக கிடப்பதை கண்டு சீனிவாசன் அதிர்ச்சி அடைந்தார். அப்போது மனைவி மற்றும் மகளின் உடலை பார்த்து கணவர் சீனிவாசன், அவரது உறவினர்கள் கதறி அழுதனர்.

    இதுகுறித்து உறவினர்கள் பாலக்கோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பொதுமக்கள் உதவியுடன் கிணற்றில் இருந்து 2 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து போலீசார் சீனிவாசனிடமும், அவரது உறவினர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
    ×