search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தஜிகிஸ்தான்"

    தஜிகிஸ்தான் நாட்டில் சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் 20 கைதிகள் பலியாகினர் என முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. #TajikistanPrisonRiot
    துஷான்பே:

    தஜிகிஸ்தான் நாட்டில் குஜாந்த் நகரில் சிறைச்சாலை உள்ளது. இந்த சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு இடையே இன்று திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு பின்னர் கலவரமாக மாறியது. இந்த கலவரத்தில் கைதிகள் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.

    இதையடுத்து பாதுகாப்பு படையினர் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கைதிகளை சமரசம் செய்ய முயன்றனர். ஆனால் கைதிகள் கலவரத்தை கைவிடுவதாக இல்லை.



    இதைத்தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 20 கைதிகள் சுடப்பட்டு பலியாகினர். மேலும் 2 பாதுகாப்பு படையினரும் பலியானதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

    சிறையில் மேலும் கலவரம் பரவாமல் இருக்க பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். #TajikistanPrisonRiot
    தஜிகிஸ்தானில் பயணம் செய்துள்ள இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தலைநகர் துஷ்பாண்டேவில் அந்நாட்டு வெளியுறவு துறை மந்திரியை இன்று சந்தித்து பேசினார். #SushmaSwaraj #Tajikistan
    துஷ்பாண்டே:

    இந்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இரண்டு நாள் பயணமாக தஜிகிஸ்தான் நாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளார்.

    தஜிகிஸ்தான் தலைநகர் துஷ்பாண்டேவில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் சுஷ்மா சுவராஜ் கலந்து கொள்கிறார். 

    இந்த மாநாட்டில் சிரியா, ஆப்கானிஸ்தான் மற்றும் கொரியா தீபகற்ப பகுதிகளில் நிலவும் சூழ்நிலைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

    இந்நிலையில், தஜிகிஸ்தானில் பயணம் செய்துள்ள இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தலைநகர் துஷ்பாண்டேவில் அந்நாட்டு வெளியுறவு துறை மந்திரி சிரோஜிதின் முஹ்ரிடினை சந்தித்து இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக பேசினார் என வெளியுறவு துறை தெரிவித்துள்ளது.

    மேலும், ஆப்கானிஸ்தானின் மூத்த தலைமை அதிகாரி அப்துல்லா அப்துல்லாவையும் சுஷ்மா சுவராஜ் இன்று சந்தித்து பேசினார். #SushmaSwaraj #Tajikistan
    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் முன்னிலையில் இந்தியா - தஜிகிஸ்தான் இடையே இன்று புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமானது. #Tajikistan #RamNathKovind
    துஷான்பே:

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மூன்று நாள் அரசுமுறை பயணமாக தஜிகிஸ்தான் நாட்டுக்கு சென்றுள்ளார். துஷான்பே நகர விமான நிலையத்தில் அந்நாட்டு துணை பிரதமர் தலைமையில் நேற்று சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தஜிகிஸ்தான் அதிபர் எமோமாலி ரஹ்மோன் - ராம்நாத் கோவிந்த் ஆகியோர் இன்று சந்தித்து இருநாடுகளுக்கு இடையிலான நட்புறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.


    இந்த ஆலோசனைக்கு பின்னர் இந்தியா - தஜிகிஸ்தான் இடையே புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமானது.

    அரசியல் உறவு, ஆராய்ச்சி, வேளாண்மை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பாரம்பரிய மருத்துவம், விண்வெளி தொழில்நுட்பம், இளைஞர் நலத்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை ஆகிய துறைகளில் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று கையொப்பமாகின. #RamNathKovind #Tajikistan #EmomaliRahmon #TajikistanIndiaMOU
    தஜிகிஸ்தான் நாட்டில் வெளிநாட்டு சைக்கிள் ஓட்ட வீரர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதற்கு ஐ.எஸ். அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர் என அமாக் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
    துஷான்பே:

    அமெரிக்கா, நெதர்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த சைக்கிள் ஓட்ட வீரர்கள் சிலர் தஜிகிஸ்தான் நாட்டில் சுற்றுலா பயணிகளாக சென்று கொண்டிருந்தனர். தலைநகர் துஷான்பேயின் தென்கிழக்கே சைக்கிளில் சென்ற அவர்கள் மீது அங்கு வந்த கார் ஒன்று வேகமாக மோதியது. இதில் நால்வரும் தூக்கி வீசப்பட்டனர். மேலும், அவர்கள் மீது கத்திக்குத்து தாக்குதலும் நடத்திவிட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. 

    இந்த தாக்குதலில் அமெரிக்காவை சேர்ந்த 2 பேரும், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்தை சேர்ந்த 2 பேரும் என மொத்தம் 4 பேர் பலியாகினர். மற்றவர்கள் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இந்நிலையில், தஜிகிஸ்தானில் வெளிநாட்டு சைக்கிள் வீரர்கள் மீது நடத்திய தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பினர் பொறுப்பேற்று உள்ளனர். ஆனால் அதற்கான ஆதாரங்களை வெளியிடவில்லை என அமாக் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
    தஜிகிஸ்தான் நாட்டில் பயணம் செய்த வெளிநாட்டு சைக்கிள் ஓட்ட வீரர்கள் மீது கார் ஏற்றி தாக்குதல் நடத்தியதில் 4 பேர் கொல்லப்பட்டனர்.
    துஷான்பே:

    அமெரிக்கா, நெதர்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த சைக்கிள் ஓட்ட வீரர்கள் சிலர் தஜிகிஸ்தான் நாட்டில் சுற்றுலா பயணிகளாக சென்று கொண்டிருந்தனர்.

    தலைநகர் துஷான்பேயின் தென்கிழக்கே சைக்கிளில் சென்ற அவர்கள் மீது அந்த பகுதி வழியாக வந்த கார் ஒன்று வேகமாக மோதியது. இதில் நால்வரும் தூக்கி வீசப்பட்டனர். மேலும், அவர்கள் மீது கத்திக்குத்து தாக்குதலும் நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். 

    இந்த கோரமான தாக்குதலில் அமெரிக்காவை சேர்ந்த 2 பேரும், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்தை சேர்ந்த 2 பேரும் என மொத்தம் நான்கு பேர் பரிதாபமாக பலியாகினர். மற்றவர்கள் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த கொடூரமான தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனத்தை தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாமா என்ற கோணத்தில் தஜிகிஸ்தான் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×