search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ட்ரம்ப்"

    அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இடைக்கால தேர்தலில் அதிபர் ட்ரம்பின் குடியரசு கட்சி கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. #DemocraticParty #RepublicanParty #Trump
    வாஷிங்டன்:

    அமெரிக்க ஜனாதிபதியின் 4 ஆண்டு பதவிக்காலத்தில் 2 ஆண்டுகளின் முடிவில் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் (கீழ்சபை) மொத்தம் உள்ள 435 இடங்களுக்கும், செனட் சபையின் (மேல்சபை) மூன்றில் ஒரு பகுதியான 33 இடங்களுக்கும் தேர்தல் நடத்துவது வழக்கமான ஒன்று. ஜனாதிபதி பதவிக்காலத்தின் மத்தியில் வருவதால் இடைக்கால தேர்தல் என்ற பெயரைப் பெற்றது.

    அந்த வகையில் ஜனாதிபதி தேர்தல் முடிந்து 2 ஆண்டுகள் ஆன நிலையில் இந்த தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இது 2 ஆண்டு கால டிரம்ப் பதவிக்காலத்துக்கான பொது வாக்கெடுப்பாக அமையும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

    தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த நிலையில், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி, நாடாளுமன்றத்தின் கீழ்சபையை கைப்பற்றியுள்ளது. இந்த தேர்தலில் பெரும்பான்மைக்கு 218 இடங்கள் தேவையான நிலையில், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி, 219 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பலம் பெற்றுள்ளது. அதிபர் ட்ரம்பின் குடியரசுக் கட்சி 193 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது.



    இந்த வெற்றியின் மூலம் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் பதவி, ஜனநாயக கட்சிக்கு கிடைக்கும். இதன்மூலம் டிரம்ப் நிர்வாகம், தொழில் சார்ந்த முடிவுகள், வருமான வரி விவகாரங்கள் தொடர்பாக ஜனநாயக கட்சியினர் விசாரணை நடத்த முடியும் என்பதால் மீதமுள்ள 2 ஆண்டு காலம் டிரம்புக்கு போராட்டமாக அமையும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    மேல்சபையான செனட் சபையில் ஏற்கனவே குடியரசு கட்சிதான் பெரும்பான்மை பெற்றிருந்தது. இப்போது 33 இடங்களுக்கு நடந்த தேர்தலிலும் முன்னிலை பெற்ற அதிபர் ட்ரம்பின் குடியரசு கட்சி, மொத்தம் 51 இடங்களையும், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி 45 இடங்களையும் பெற்றுள்ளது. அதிபரால் அதிக கவனம் செலுத்தப்பட்ட இந்த செனட் சபை தேர்தலில் வெற்றி பெற்றதற்கு ட்ரம்ப் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

    4 ஆண்டுகள் அதிபர் பதவிக்கு இடையே நடைபெற்ற இந்த தேர்தலில் அதிபர் ட்ரம்பின் குடியரசு கட்சி கீழ் சபையை பறிகொடுத்தது அவருக்கான பின்னடைவாக கருதப்படுகிறது. #DemocraticParty #RepublicanParty #Trump
    அமெரிக்காவில் குடியேறியவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கப்படுவதற்கு தனிச்சட்டம் மூலம் முற்றுப்புள்ளி வைக்க இருப்பதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். #Trump
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் பிறக்கும் எல்லா குழந்தைகளும் குடியுரிமை பெறுவதற்கு அந்நாட்டின் 14–வது அரசியல் சட்ட திருத்தம் வழிவகுக்கிறது. இந்நிலையில், அமெரிக்கர் அல்லாதவர்கள் மற்றும் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள், குடியுரிமை பெறுவதற்கான அதிகாரத்தை ரத்து செய்யப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.

    அமெரிக்காவில், 6-ம் தேதி இடைத்தேர்தல்கள் நடைபெறும் நிலையில், அவர் அளித்த பேட்டி ஒன்றில் இதை தெரிவித்துள்ளார். இதற்கு என சிறப்பு சட்டம் இயற்ற இருப்பதாகவும், அதற்காக வெள்ளை மாளிகை வக்கீல்கள் ஆய்வு செய்து வருவதாகவும் அவர் கூறினார்.

    இதுகுறித்து ட்ரம்ப் கூறுகையில், அமெரிக்கர் அல்லாதவர்கள் அல்லது சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கப்படுவது உலகிலேயே அமெரிக்காவில் மட்டுமே இருக்கும் நிலை எனவும் இதற்கு விரைவில் முடிவு கட்டப்படும் எனவும் தெரிவித்துள்ளார். #Trump
    அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா, ஹிளாரி கிளிண்டன் உட்பட பலருக்கும் வெடிகுண்டுகளை தபால் மூலம் அனுப்பிய நபரை அமெரிக்க போலீசார் கைது செய்துள்ளனர். #ExplosiveDevicestoObama #ExplosiveDevicestoHillary #FBI
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் மிக முக்கிய பிரமுகர்களுக்கு அனுப்பப்படும் பார்சல்கள் உளவுப்படை போலீசார் பரிசோதித்த பின்னரே அவர்களிடம் ஒப்படைக்கப்படும்.

    அந்த வகையில், முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரியும் தற்போதைய அதிபரான டிரம்ப்பை எதிர்த்து போட்டியிட்டவருமான ஹிலாரி கிளிண்டன் ஆகியோருக்கு அவர்களின் அலுவலக முகவரிகளுக்கு அனுப்பப்பட்ட வெடிபொருள் பார்சல்களை இடைமறித்து அமெரிக்க உளவுப்படையினர் கைப்பற்றினர்.



    இவர்கள் மட்டுமின்றி, ஜனநாயக கட்சியின் முக்கிய தலைவர்கள் மற்றும் ஹாலிவுட் நடிகருக்கும் இதுபோன்ற தபால்கள் அனுப்பப்பட்டன. இதையடுத்து இந்த விவகாரத்தில் தீவிரமாக தேடுதல் வேட்டையை துவங்கிய போலீசார், 56 வயதான சீசர் சாயோக் என்பவரை கைது செய்துள்ளனர்.

    வெடிகுண்டு பார்சல் ஒன்றில் இருந்த இவரது கைரேகையை வைத்து இவரை கைது செய்துள்ளதாக எப்.பி.ஐ. இயக்குனர் கிறிஸ்டோபர் தெரிவித்துள்ளார். இவர் மீது வெடிமருந்து கடத்தல், சட்டவிரோதமாக வெடிமருந்துகளை தபால் அனுப்புதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றம் நிரூபிக்கப்படும்பட்சத்தில் இவருக்கு 58 ஆண்டுகள் சிறைவாசம் தண்டனையாக வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

    மேலும், இவரை கைது செய்ததன்மூலம் இந்த விவகாரம் முடியவில்லை எனவும், தொடர வாய்ப்பு இருப்பதாகவும் கிறிஸ்டோபர் தெரிவித்துள்ளார். #ExplosiveDevicestoObama #ExplosiveDevicestoHillary #FBI
    2019-ம் ஆண்டு குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். #PMModi #RepublicDay #Trump
    புதுடெல்லி:

    ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 26-ம் தேதி இந்திய குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி பதவியேற்றவுடன், அமெரிக்காவுடனான நல்லுறவை மேம்படுத்தி வருகிறார். அதன்படி, கடந்த 2015-ம் ஆண்டு அப்போது அமெரிக்க அதிபராக இருந்த ஒபாமாவை குடியரசு தின சிறப்பு விருந்தினராக அழைத்து கவுரவித்தார்.



    அதேபோல், 2019-ம் ஆண்டு குடியரசு தின விழாவில் தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். மோடியின் 5 ஆண்டுகால ஆட்சி முடிவு பெற்று, தேர்தல் வரும் சூழலில் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    மோடியின் இந்த அழைப்பு தொடர்பாக இதுவரை எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை என ட்ரம்ப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #PMModi #RepublicDay #Trump
    தொலைபேசி அழைப்புகள் மட்டுமே போதாது என்பதால் மேற்கொண்டு பேச்சுவார்த்தை நடத்த மாஸ்கோ நகருக்கு வருமாறு டிரம்ப்புக்கு புதின் அழைப்பு விடுத்துள்ளார். #Putin #Trump
    ஜோகனஸ்பர்க்:

    சமீபத்தில் பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கி நகரில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இடையே வரலாற்று சிறப்புமிக்க முதல் சந்திப்பு நடைபெற்றது.

    இந்நிலையில், ஈரான், சிரியா உள்ளிட்ட  உலக நாடுகளின் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேச தொலைபேசி அழைப்புகள் மட்டுமே போதாது என்பதால் மேற்கொண்டு பேச்சுவார்த்தை நடத்த மாஸ்கோ நகருக்கு வருமாறு டிரம்ப்புக்கு புதின் அழைப்பு விடுத்துள்ளார்.



    பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க தென்னாப்பிரிக்கா தலைநகர் ஜோகனஸ்பர்க் நகருக்கு வந்துள்ள ரஷிய அதிபர் புதின், அமெரிக்க அதிபருடன் எப்போது வேண்டுமானாலும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும், ரஷிய தலைநகர் மாஸ்கோவுக்கு வருமாறு டிரம்ப்புக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். #Putin #Trump
    சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யும் அனைத்து பொருட்களுக்கும் வரிவிதிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். #Trumph
    வாஷிங்டன்:

    அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வர்த்தக ரீதியிலான சண்டை நடந்து வருகிறது. அமெரிக்க அதிபரான ட்ரம்ப் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை உயர்த்தினார். இறக்குமதி செய்யப்படும் இரும்பு மீது 25 சதவிகிதமும், அலுமினியம் மீது 10 சதவிகிதமும் வரியை உயர்த்தினார்.

    சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சுமார் 5 ஆயிரம் கோடி டாலர்கள் மதிப்பிலான 800 பொருட்களுக்கு அமெரிக்க அரசு கூடுதல் வரி விதித்தது.  இதன்மூலம், சீனாவுக்கு 50 முதல் 60 பில்லியன் வரை நஷ்டம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், சீனாவும், அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு சுமார் 25 சதவிகிதம் வரை வரி விதித்து அறிவித்தது.

    இந்த நிலையில், சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் வரி விதிக்க உள்ளதாகவும், தேவைப்பட்டால் 500 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை வரி விதிக்கப்படும் எனவும் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

    மேலும், அரசியல் உள்நோக்கத்துடன் இதை செய்யவில்லை எனவும், நாட்டுக்கு தேவையான விஷயத்தையே செய்வதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். #Trumph
    சமீபத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோரின் சந்திப்பு நடைபெற்ற நிலையில், அடுத்த சந்திப்புக்காக காத்திருப்பதாக ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். #Trumph
    வாஷிங்டன்:

    உலக நாடுகளில் அமெரிக்காவும் ரஷ்யாவும் இரு துருவங்களாக இருந்தன. இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு நிகழ்வுகளில் பகை இருந்துவந்தது. இந்த பகையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் சமீபத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோரது சந்திப்பு நடைபெற்றது.

    வெற்றிகரமாக நடைபெற்ற இந்த சந்திப்பில், இரு நாட்டு அதிபர்களும் தங்கள் பகை மறந்து, பயங்கரவாதம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தினர்.



    இந்நிலையில், ரஷ்ய அதிபருடனான அடுத்த சந்திப்பை எதிர்நோக்கி காத்திருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அந்த பதிவில்,  ரஷ்யாவுடனான சந்திப்பு வெற்றிகரமாக நடந்து முடிந்ததாகவும், அடுத்த சந்திப்பில், இருநாடுகளும் ஆலோசித்த பயங்கரவாத தடுப்பு, இஸ்ரேல் பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அதற்கெனவே தாம் அடுத்த சந்திப்பை எதிர்நோக்கி இருப்பதாகவும் ட்ரம்ப் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். #Trumph
    அமெரிக்காவிற்குள் அகதிகளாக வரும் பெற்றோர்களிடம் இருந்து அவர்களின் குழந்தைகளை பிரிக்கும் டிரம்பின் கொள்கையை எதிர்த்து போராடிய இந்திய வம்சாவளி எம்.பி கைது செய்யப்பட்டார். #DonaldTrump #ImmigrationPolicy
    வாஷிங்டன்:

    சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்படி அமெரிக்காவில் நுழையும் அகதிகளையும் அவர்களின் குழந்தைகளையும் பிரித்து வைக்க வேண்டும் என உத்தரவிட்டார். டிரம்பின் உத்தரவின் அடிப்படையில், பெற்றோர்களிடம் இருந்து குழந்தைகள் பிரிக்கப்பட்டனர்.

    இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தனது கொள்கையில் பின்வாங்கிய அதிபர் ட்ரம்ப், பிரிக்கப்பட்ட குழந்தைகளை பெற்றோர்களிடம் ஒப்படைக்க அனுமதித்தார்.

    இருப்பினும் டிரம்பின் இந்த குடியேற்ற கொள்கையை எதிர்த்து இந்திய வம்சாவளி எம்.பி. பிரமிளா ஜெயபால் போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் சேர்ந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  செனட் சபை வளாகத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஈடுபட்ட பிரமிளா உட்பட 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கைது செய்யப்பட்டனர்.



    இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள பிரமிளா, மனிதாபிமானமற்ற மிகவும் மோசமான டிரம்பின் குடியேற்ற கொள்கைக்கு எதிராக போராடியதால் தம்முடன் சேர்த்து 500 பெண்களும் கைது செய்யப்பட்டதாகவும், இந்த போராட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கு தாம் பெருமை அடைவதாகவும் தெரிவித்துள்ளார்.  

    மேலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்த போராட்டத்தில் பெண்கள் கலந்து கொள்ள வந்ததாகவும், இது அரசியலுக்கு அப்பாற்பட்ட பிரச்சனை என்றும் தெரிவித்துள்ளார்.

    அமெரிக்காவில் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய வம்சாவளி பெண் பிரமிளா ஜெயபால் என்பதும்,  அகதிகள் அடைக்கப்பட்ட சிறைக்கு சென்று அகதிகளை சந்தித்த முதல் எம்.பி. என்பதும் குறிப்பிடத்தக்கது. #DonaldTrump #ImmigrationPolicy 
    வடகொரிய அதிபர் கெஞ்சி கேட்டதனால் தான் ரத்து செய்யப்பட்ட சந்திப்புக்கு மீண்டும் ட்ரம்ப் சம்மதித்ததாக ட்ரம்பின் வழக்கறிஞர் ரூடி தெரிவித்துள்ளார். #trumpkimsummit
    வாஷிங்டன்:

    அணு ஆயுத விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் பகிரங்க மோதல் வெடித்தது. வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் கடந்த மார்ச் மாதம் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டு திரும்பிய நிலையில் இனி அணு ஆயுதங்கள் இல்லாத மண்டலமாக கொரிய தீபகற்பம் இருக்கும் என்று உறுதியளித்தார்.

    இதன்பிறகு அமெரிக்காவுடன், வடகொரியா சமாதான போக்கை கடைப்பிடிக்கத் தொடங்கியது. இரு நாடுகளும் நெருங்கி வரும் சூழலும் காணப்பட்டது.

    இதைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் ஆகியோர் ஜூன் மாதம் 12-ம் தேதி சிங்கப்பூர் நகரில் சந்தித்து பேச முடிவு செய்யப்பட்டது. ஆனால் இடையில் ஏற்பட்ட கருத்து மோதல்களைத் தொடர்ந்து, டிரம்ப் இந்த சந்திப்பை திடீரென ரத்து செய்தார்.

    பின்னர், வடகொரிய அதிபருடனான சந்திப்புக்கு ஒப்புக்கொண்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப், திட்டமிட்டபடி ஜூன் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்திப்பு நடக்கும் எனவும் தெரிவித்தார். இந்த சந்திப்பு சிங்கப்பூரின் பிரபல கேபல்லா விடுதியில் நடைபெற உள்ளது. இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு என்பதால் அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

    இந்நிலையில், பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு நேற்று பேட்டியளித்த ட்ரம்ப்பின் தலைமை வழக்கறிஞரும், நியூ யார்க் நகர முன்னாள் மேயருமான ரூடி கிலியானி, வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன், மண்டியிட்டு கெஞ்சி கேட்டதனால் தான் அவரை சந்திக்க ட்ரம்ப் மீண்டும் ஒப்புக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

    திட்டமிட்டபடி, இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு இன்னும் ஒரு சில தினங்களில் நடைபெற உள்ள நிலையில், இவரது இந்த கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #trumpkimsummit
    அமெரிக்க அதிபர் டிரம்ப் - வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் இடையிலான பேச்சுவார்த்தை திட்டமிட்டபடி நடைபெறும் என சீனா நம்பிக்கை தெரிவித்துள்ளது. #trumpkimsummit
    பீஜிங்:

    அணு ஆயுத விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் பகிரங்க மோதல் வெடித்தது. வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் கடந்த மார்ச் மாதம் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டு திரும்பிய நிலையில் இனி அணு ஆயுதங்கள் இல்லாத மண்டலமாக கொரிய தீபகற்பம் இருக்கும் என்று உறுதியளித்தார்.

    இதன்பிறகு அமெரிக்காவுடன், வடகொரியா சமாதான போக்கை கடைப்பிடிக்கத் தொடங்கியது. இரு நாடுகளும் நெருங்கி வரும் சூழலும் காணப்பட்டது.

    இதைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் ஆகியோர் ஜூன் மாதம் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்து பேச முடிவு செய்யப்பட்டது. ஆனால் கடந்த வியாழக்கிழமை டிரம்ப் இந்த சந்திப்பை திடீரென ரத்து செய்தார்.

    பின்னர், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நேற்று திடீரென மனமாற்றம் அடைந்தார். கிம் ஜாங் அன்னை திட்டமிட்டவாறு சந்தித்துப் பேச அவர் தற்போது முடிவு செய்துள்ளார்.

    இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பதிவில், “கிம் ஜாங் அன்னை சந்திப்பது தொடர்பாக தொடர்ந்து ஆக்கப் பூர்வமான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. எனவே ஜூன் 12-ம் தேதி திட்டமிட்டபடி எங்களது சந்திப்பு நடைபெற வாய்ப்புள்ளது. தேவைப்படும் பட்சத்தில் இந்த தேதிக்கு பின்னரும் கூட சந்திப்பை தள்ளி வைத்துக் கொள்ளலாம்” என்று கூறி இருந்தார்.

    இந்நிலையில், டிரம்ப்- கிம் ஜாங் அன் சந்திப்பு சிங்கப்பூரில் அடுத்த மாதம் 12-ம் தேதி திட்டமிட்டவாறு நடைபெறும் என நம்புவதாகவும், இதற்காக ஆவலாக காத்திருப்பதாகவும் சீன அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #trumpkimsummit
    வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் - அமெரிக்க அதிபர் டிரம்ப் இடையிலான சந்திப்பு திட்டமிட்டபடி நடைபெறும் என தென்கொரியா அதிபர் மூன் ஜே நம்பிக்கை தெரிவித்துள்ளார். #trumpkimsummit
    சியோல்:

    அணு ஆயுத விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் பகிரங்க மோதல் வெடித்தது. வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் கடந்த மார்ச் மாதம் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டு திரும்பிய நிலையில் இனி அணு ஆயுதங்கள் இல்லாத மண்டலமாக கொரிய தீபகற்பம் இருக்கும் என்று உறுதியளித்தார்.

    இதன்பிறகு அமெரிக்காவுடன், வடகொரியா சமாதான போக்கை கடைப்பிடிக்கத் தொடங்கியது. இரு நாடுகளும் நெருங்கி வரும் சூழலும் காணப்பட்டது.

    இதைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் ஆகியோர் ஜூன் மாதம்12-ந்தேதி சிங்கப்பூர் நகரில் சந்தித்து பேச முடிவு செய்யப்பட்டது. ஆனால் கடந்த வியாழக்கிழமை டிரம்ப் இந்த சந்திப்பை திடீரென ரத்து செய்தார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், “உங்களை சிங்கப்பூரில் சந்திக்க ஆவலுடன் காத்திருந்தேன். ஆனால் உங்களது சமீபத்திய அறிக்கையில் கடும் கோபமும், வெளிப்படையான விரோத போக்கும் வெளிப்பட்டு இருப்பதால் தற்போதைய சந்திப்பு பொருத்தமானதாக இருக்காது” என்று குறிப்பிட்டார்.

    அமெரிக்காவின் வேண்டுகோளைத் தொடர்ந்து தனது நாட்டின் அணு ஆயுத சோதனைக் கூடத்தை வடகொரியா முற்றிலுமாக தகர்த்த நிலையில் டிரம்ப் இவ்வாறு அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    எனினும், கிம் ஜாங் அன் அமெரிக்காவுடன் நடத்தவிருந்த பேச்சுவார்த்தையை முறித்துக் கொள்ள விரும்பவில்லை. “உங்களிடம் எப்போதும், எந்த வடிவத்திலும் பேச்சுவார்த்தை நடத்த வடகொரியா தயாராக இருக்கிறது” என்று கூறி கிம் ஜாங் அன் ஒருபடி கீழே இறங்கி வந்தார்.

    அவருடைய வேண்டுகோளைத் தொடர்ந்து தென்கொரியா டிரம்ப்-கிம் ஜாங் அன் சந்திப்பை நடத்துவதற்கான முயற்சியை தொடர்ந்து மேற்கொண்டது. தென்கொரிய அதிபர் மூன் ஜே உயர்நிலை ஆலோசனைக் கூட்டத்தை கூட்டி இப்பிரச்சினை தொடர்பாக பல்வேறு முக்கிய முடிவுகளை எடுத்தார்.

    இதையடுத்து, அமெரிக்க மற்றும் வடகொரிய நாடுகளின் உயர்மட்ட தூதரக அதிகாரிகள் இது தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். திட்டமிட்டப்படி சந்திப்பை நடத்துவதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ள இரு தரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டது.

    இந்தநிலையில் .அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நேற்று திடீரென மனமாற்றம் அடைந்தார். கிம் ஜாங் அன்னை திட்டமிட்டவாறு சந்தித்துப் பேச அவர் தற்போது முடிவு செய்துள்ளார்.

    இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பதிவில், “கிம் ஜாங் அன்னை சந்திப்பது தொடர்பாக தொடர்ந்து ஆக்கப் பூர்வமான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. எனவே ஜூன் 12-ந்தேதி திட்டமிட்டபடி எங்களது சந்திப்பு நடைபெற வாய்ப்புள்ளது. தேவைப்படும் பட்சத்தில் இந்த தேதிக்கு பின்னரும் கூட சந்திப்பை தள்ளி வைத்துக் கொள்ளலாம்” என்று கூறி இருந்தார்.

    டிரம்ப் தனது டுவிட்டர் பதிவை வெளியிடும் முன்பாக தென்கொரியா அதிபர் மூன் ஜே இன்னும் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கான சூழல் மீண்டும் உருவாகி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று குறிப்பிட்டு இருந்தார்.

    இதற்கிடையே, வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் நேற்று தென்கொரியா அதிபர் மூன் ஜே-வை ரகசியமாக சந்தித்துப் பேசியதாக தெரியவந்துள்ளது.




















    கடந்த முறை சந்தித்து பேசிய எல்லைப்பகுதி கிராமமான பன்முன்ஜோம் என்னும் இடத்தில் இன்று நடைபெற்ற சந்திப்பின்போது இருநாட்டு தலைவர்களும் சுமார் இரண்டு மணிநேரம் ஆலோசனை நடத்தியதாகவும், இதுதொடர்பாக விரிவான அதிகாரப்பூர்வ தகவல் அரசு தரப்பில் இருந்து விரைவில் வெளியாகலாம் எனவும் அந்த செய்திகள் தெரிவிக்கின்றன

    எனவே, டிரம்ப்- கிம் ஜாங் அன் சந்திப்பு சிங்கப்பூரில் அடுத்த மாதம் 12-ந்தேதி திட்டமிட்டவாறு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #trumpkimsummit
    ×