search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சவுதி"

    துருக்கியில் கொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் ஜமால் கசோக்கியின் உடலை மதீனாவில் புதைக்க விரும்புவதாக அவரது மகன் சாலா கசோக்கி தெரிவித்துள்ளார். #JamalKashoggi #Saudi #SalahKhashoggi #AbdullahKhashoggi #Medina
    ரியாத்:

    சவுதி அரேபியாவின் முடியாட்சியை மிக கடுமையாக விமர்சித்து கட்டுரைகள், செய்திகள் வெளியிட்டு வந்தவர் ஜமால் கசோக்கி. இவர் சமீபத்தில் துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் வைத்து கொலை செய்யப்பட்டதாக சவுதி அரசு ஒப்புக்கொண்டது.

    இந்த கொலை உலகின் பல்வேறு நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும், கொலை தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் சவுதி அரசுக்கு நெருக்கடி அளிக்கப்பட்டு வருகிறது. அதே சமயம், இந்த கொலை தொடர்பாக 8 பேரை கைது செய்த சவுதி அரசு, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளது.



    இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த ஜமால் கசோக்கியின் மகன் சாலா கசோக்கி, தனது தந்தையின் இழப்பை இன்று வரை நம்பமுடியவில்லை எனவும், அவரது பிரிவு மீளமுடியாத துயரத்தில் ஆழ்த்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    மேலும், தங்களது தந்தைக்கு முறைப்படி இறுதி சடங்கு செய்ய வேண்டிய கடமை இருப்பதாகவும், அவரது உடலை இஸ்லாமியர்களின் புனித தலங்களில் ஒன்றான மதீனாவில் உள்ள அல் பக்கி இடுகாட்டில் அடக்கம் செய்ய விரும்புவதாகவும் சாலா கசோக்கி தெரிவித்துள்ளார்.

    கொலை செய்யப்பட்ட ஜமால் கசோக்கியின் உடல் இன்று வரை கிடைக்கவில்லை என்பதும், உடலை அடையாளம் காண முடியாதபடி முழுமையாக அழித்து விட்டதாகவும் தகவல் வெளியாகி வருவதும் குறிப்பிடத்தக்கது. #JamalKashoggi #Saudi #SalahKhashoggi #AbdullahKhashoggi #Medina
    சவுதியில் இருந்து அமெரிக்காவுக்கு விமானங்களில் வந்த மேலும் சில பயணிகளுக்கு நோய்த்தொற்று இருந்ததால் விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. #SickPlaneSyndrome #PhiladelphiaAirport
    நியூயார்க்:

    துபாயிலிருந்து கடந்த புதன்கிழமை அமெரிக்காவின் நியூயார்க் விமான நிலையத்திற்கு வந்த எமிரேட்ஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிகள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அந்த விமானத்தில் வந்து இறங்கிய சுமார் 521 பயணிகளில், 100-க்கும் அதிகமான பயணிகளின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். சிலருக்கு இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டன. இதனை அடுத்து, அவர்களுக்கு உரிய மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. பரிசோதனையின் முடிவில் 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


    விமானம் துபாயிலிருந்து கிளம்பும் போது சில பயணிகள் தங்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறியுள்ளனர். எனவே, அவர்கள் விமானத்தில் இருந்து இறக்கப்பட்டு சிகிச்சைக்கு அனுப்பப்பட்டனர். பயணிகளுக்கு எப்படி திடீரென நோய் பாதிப்பு ஏற்பட்டது? என்பது குறித்து வெளியாகவில்லை. வெளிநாடுகளில் இருந்து பயணிகளுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்றும், அது பரவக் கூடும் என்றும் மக்களிடையே பீதி ஏற்பட்டது.

    இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று சவுதி அரேபியாவில் இருந்து பிலடெல்பியாவிற்கு வந்த இரண்டு விமானங்களில் வந்த பயணிகள் சிலருக்கும் நோய்த்தொற்றுக்கான அறிகுறி தென்பட்டது. இதையடுத்து அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான அந்த இரண்டு விமானங்களில் இருந்த அனைத்து பயணிகளுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

    இதில் 12 பேரின் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. எனினும் மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்க்கும் அளவுக்கு பெரிய பாதிப்பு எதுவும் இல்லை. முதலுதவி சிகிச்சை அளித்து அவர்களை அனுப்பி வைத்தனர். ஆனாலும், புதன்கிழமை ஏற்பட்ட பீதியைத் தொடர்ந்து அமெரிக்காவின் சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் அனைத்து பயணிகளையும் கண்காணித்து வருகின்றனர். இதுபோன்ற சோதனைகளால் விமான நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.

    இதற்கிடையே டெக்சாஸ் மாநிலத்தில் ஆகஸ்ட் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் ஹூஸ்டன், டல்லாஸ் மற்று ஹர்லிங்கன் சென்ற சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானங்களில் பயணம் செய்த ஒரு பயணிகளில் ஒருவருக்கு வைரஸ் தொற்று இருந்தது கண்டறியப்பட்டிருப்பதால், அந்த வழித்தடத்தில் சென்ற 4 குறிப்பிட்ட சவுத்வெஸ்ட் விமானங்களில் பயணம் செய்தவர்கள் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்துகொள்ளும்படி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். #SickPlaneSyndrome #PhiladelphiaAirport
    சவுதி அரேபியா எண்ணெய் உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டுமென அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வலியுறுத்தி உள்ளார். #DonaldTrump #SaudiArabia
    வாஷிங்டன்:

    ஈரான் உடனான அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து விலகியதையடுத்து, அந்நாட்டின் மீதான பொருளாதார தடைகள் தொடரும் என அமெரிக்கா திட்டவட்டமாக அறிவித்தது.

    மேலும் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நவம்பர் மாதம் 4-ந் தேதியுடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று சர்வதேச நாடுகளுக்கு டிரம்ப் வலியுறுத்தி உள்ளார்.

    உலக அளவில் பிரதான எண்ணெய் உற்பத்தியாளராக விளங்கி வரும் ஈரானுக்கு இப்படி நெருக்கடி கொடுக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த வாரம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது.

    இதன் காரணமாக வாகனங்களுக்கான எரிபொருள் விலை உயர்ந்து வருகிறது. இதனை கட்டுக்குள் கொண்டுவர, சவுதி அரேபியா எண்ணெய் உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டுமென அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வலியுறுத்தி உள்ளார்.

    இதுதொடர்பாக டிரம்ப், சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல் அசிசை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

    அப்போது, அவர் சர்வதேச எண்ணெய் சந்தையில் நிலைத்தன்மையை பாதுகாக்க வேண்டும் என டிரம்ப் வலியுறுத்தினார். அதற்கு சவுதி அரேபியா, நாள் ஒன்றுக்கு 20 லட்சம் பீப்பாய்கள் வரை எண்ணெய் உற்பத்தி செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

    அதனை ஏற்றுக்கொண்ட மன்னர் சல்மான் பின் அப்துல் அசிஸ், தேவைப்பட்டால் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க தயாராக இருப்பதாக உறுதி அளித்தார். இந்த தகவலை டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    வெள்ளை மாளிகையும் இந்த தகவலை உறுதிப்படுத்தி உள்ளது.  #DonaldTrump #SaudiArabia #Tamilnews
    ஏமன் நாட்டில் சவூதி அரேபியாவின் கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பைச் சார்ந்த 8 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Yeman #Hezbollah
    சனா:

    ஈரான் அரசின் ஆதரவுடன் ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஹவுத்தி இன மக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அரசுக்கு எதிராக மற்றொரு போட்டி அரசாங்கத்தை நடத்திவரும் இவர்கள்மீது உள்நாட்டுப் படைகளும் அண்டைநாடான சவுதி அரேபியா தலைமையிலான நேசநாட்டுப் படைகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு எதிராக சவூதி தலைமையிலான கூட்டுப்படை சண்டையிட்டு வருகிறது.

    இந்நிலையில், ஏமனின் வடக்கு பகுதியில் சவூதி எல்லைப்பகுதியில் சவூதி அரசின் கூட்டுப்படைகள் இன்று அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 41 கிளர்ச்சியாளர்கள் வீழ்த்தப்பட்டதாகவும், அதில் லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி உட்பட 8 பேர் கொல்லப்பட்டதாகவும் சவூதி கூட்டுப்படை தளபதி துர்கி அல்-மாலிகி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Yeman #saudicoalition #Hezbollah
    ஏமன் நாட்டின் புரட்சி இயக்கமான ஹவுதி நடத்திய ஏவுகணை தாக்குதலில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டதாக சவுதி அரசின் ஊடகத்தில் செய்தி வெளியாகியுள்ளது.#Houthimovement #missileattack #Yemen #SaudiArabiya #civilianskilled
    சனா:

    ஏமன் நாட்டில் பதவியிறக்கம் செய்யப்பட்ட முன்னாள் அதிபரின் ஆதரவாளர்கள் தற்போதைய அதிபர் அப்த் ரப்போ மன்சூர் ஹாதியின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2014-ம் ஆண்டு இந்த கிளர்ச்சியானது ஆயுதப் போராட்டமாக திசைமாறியது.

    ஏமன் நாட்டின் அண்டை நாடான ஈரானின் ஆதரவுடனும், அல் கொய்தா பயங்கரவாதிகளின் துணையுடனும் உள்நாட்டு ஹவுத்தி புரட்சிப்படையினர் தலைநகர் சனா உள்ளிட்ட பல பகுதிகளை கைப்பற்றி, தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

    இந்த பகுதிகளை மீட்பதற்காக சவுதி அரேபியா தலைமையிலான அரபு நாடுகளின் கூட்டமைப்பு படைகள் ஏமன் அரசுக்கு உதவிசெய்து வருகின்றன.

    இந்நிலையில், ஏமன் நாட்டில் உள்ள மரிப் நகரின் மீது ஹவுதி படை ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டிருப்பதாக சவுதி அரேபியாவின் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. #Houthimovement #missileattack #Yemen #SaudiArabiya #civilianskilled
    ×