search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லாட்டரி"

    ஐக்கிய அரபு அமீரகம் நாட்டில் பணியாற்றிவரும் இந்தியரான பிரிட்டி மார்கோஸ் லாட்டரி குலுக்கலில் சுமார் 20 கோடி ரூபாய் ஜாக்பாட் பரிசாக வென்றுள்ளார். #Indianwins #Dh10million #UAEraffledraw #BrittyMarkose
    துபாய்:

    ஐக்கிய அரபு அமீரகத்தில் மாதந்தோறும் ‘பிக் டிக்கட் அபுதாபி’ என்ற லாட்டரி குலுக்கல் நடைபெற்று வருகிறது. இதில் கேரள மாநிலத்தை சேர்ந்த பலர் பலமுறை பரிசுத்தொகையை வென்றுள்ளனர்.

    அவ்வகையில், இந்த மாதம் நடைபெற்ற குலுக்கலில் கேரளாவை சேர்ந்த பிரிட்டி மார்கோஸ் என்பவருக்கு ஒரு கோடி திர்ஹம் (இந்திய மதிப்புக்கு சுமார் 19 கோடியே 85 லட்சம் ரூபாய்) முதல் பரிசாக கிடைத்துள்ளது.

    கடந்த 2004-ம் ஆண்டுமுதல் அபுதாபியில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மற்றும் இரு மகன்கள் கேரளாவில் வாழ்ந்து வருகின்றனர். இந்த பரிசுத்தொகையை கொண்டு தனக்கு இருக்கும் கடன்களை எல்லாம் அடைத்த பின்னர் தனது சொந்த ஊரில் புதிதாக வீடு கட்ட விரும்புவதாக  பிரிட்டி மார்கோஸ் தெரிவித்துள்ளார். #Indianwins #Dh10million  #UAEraffledraw #BrittyMarkose
    ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் இந்தியருக்கு அபுதாபி ‘பிக் டிக்கெட்’ லாட்டரியில் ரூ.23 கோடி பரிசு தொகை கிடைத்துள்ளது. #UAElottery
    துபாய்:

    ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் ஒன்றான அபுதாபியில் ‘பிக் டிக்கெட்’ லாட்டரி குலுக்கல் நடந்தது. அதில் இந்தியாவை சேர்ந்த ஜார்ஜ் மாத்யூ என்பவருக்கு முதல் பரிசுத்தொகையான 12 மில்லியன் திர்காம் கிடைத்தது.

    இது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.23 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. ஜார்க்மாத்யூ வாங்கிய 175342 என்ற எண் கொண்ட லாட்டரிக்கு இந்த பரிசுதொகை கிடைத்துள்ளது.

    இந்த லாட்டரியில் மேலும் 6 இந்தியர்களுக்கும் பரிசுதொகை விழுந்துள்ளது. அண்மை காலமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் பல இந்தியர்களுக்கு லாட்டரியில் பரிசுகள் கிடைத்து உள்ளன.

    கேரளாவை சேர்ந்த தாடுஜா மாத்யூவுக்கு கடந்த ஜுலையில் முதல் பரிசு தொகையான ரூ.13 கோடியே 65 லட்சம் கிடைத்தது. அதற்கு முன்பு ஏப்ரலில் துபாயில் வசிக்கும் இந்திய டிரைவருக்கு ரூ.23 கோடி முதல் பரிசு விழுந்தது.

    கடந்த ஜனவரியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் கேரளாவை சேர்ந்த மற்றொருவருக்கு அபுதாபி லாட்டரியில் ரூ.23 கோடி பரிசு தொகை கிடைத்தது. #UAElottery
    அபுதாபியில் இருந்து வரும்போது விமான நிலையத்தில் இந்தியர் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு 13 கோடி ரூபாய் பரிசாக கிடைத்துள்ளது. #TojoMathew #UAEraffledraw
    துபாய்:

    ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் சூப்பர்வைசராக பணியாற்றிவந்த இந்தியர் டோஜோ மேத்யூ(30). கேரள மாநிலத்தை சேர்ந்தவரான இவரது மனைவிக்கு சமீபத்தில் டெல்லியில் நர்சு வேலை கிடைத்தது.

    மனைவியை சந்திப்பதற்காக கடந்த மாதம் 24-ம் தேதி இந்தியா புறப்பட்ட டோஜோ மேத்யூ, அபுதாபி விமான நிலையத்தில் அந்நாட்டு அரசு நடத்தி வரும் மாதாந்திர ‘பிக் லாட்டரி’ பரிசு சீட்டை வாங்கினார்.

    இந்தியா வந்து சேர்ந்த பின்னர் ‘பிக் லாட்டரி’ இணையதளத்தை பார்வையிட்டபோது, நேற்று நடைபெற்ற குலுக்கலில் முதல் பரிசான 70 லட்சம் திர்ஹம்கள் (இந்திய மதிப்புக்கு சுமார் 13 கோடி ரூபாய்) தனக்கு கிடைத்துள்ளதை அறிந்து டோஜோ மேத்யூ, ஆனந்தத்தில் திக்குமுக்காடிப் போனார்.

    இவரைத்தவிர, 5 இந்தியர்கள் உள்பட 9 அதிர்ஷ்டசாலிகளுக்கு ஆறுதல் பரிசாக  தலா ஒரு லட்சம் திர்ஹம்கள் கிடைத்துள்ளது.



    முன்னதாக, அபுதாபி லாட்டரி குலுக்கல் வரலாற்றில் முதன்முறையாக கடந்த ஜனவரி மாதம் கேரளாவை சேர்ந்தவர் 1.2 கோடி திர்ஹம்களை ஜாக்பாட் பரிசாக பெற்றார் என்பது நினைவிருக்கலாம்.

    தற்போது கிடைத்துள்ள பரிசு தொகையின் மூலம் கேரளாவில் சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்னும் தனது நெடுங்கால கனவு பலித்துள்ளதாக டோஜோ மேத்யூ தெரிவித்துள்ளார். #TojoMathew  #UAEraffledraw
    துபாயில் அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் விற்கப்படும் பிரசித்தி பெற்ற பிக் டிக்கெட் அபுதாபி என்ற லாட்டரியில் இந்தியர் ஒருவர் 18 கோடி ரூபாய் பரிசு வென்றுள்ளார்.
    அபுதாபி:

    அபுதாபியின் சர்வதேச விமானநிலையத்தில் பல காலமாக விற்கப்படும் பிரசித்தி பெற்ற லாட்டரியாக பிக் டிக்கெட் அபுதாபி திகழ்ந்து வருகிறது.

    சமீபத்தில், பிக் டிக்கெட் அபுதாபி வெளியிட்ட 10 அதிஷ்டசாலிகள் பட்டியலில் 5 இந்தியர்கள் இடம் பிடித்துள்ளனர். அதில் அதிகபட்சமாக நைஜீரியாவில் வாழும் இந்தியரான திக்சன் கட்டிதாரா ஆபிரகாம் என்பவருக்கு 10 மில்லியன் திர்காம் பரிசு அறிவிக்கப்பட்டது.

    இது இந்திய ரூபாய் மதிப்பில் 18 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு முதலே பிக் டிக்கெட் அபுதாபி லாட்டரியில் இந்தியர்கள் அதிக அளவில் பரிசு பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
    ×