search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புனே"

    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியின் 21-வது லீக் ஆட்டத்தில் கோவா அணி 4-2 என்ற கோல் கணக்கில் புனே அணியை தோற்கடித்தது. #ISL2018 #FCGoa #PuneCity
    கோவா:

    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு கோவா நேரு ஸ்டேடியத்தில் அரங்கேறிய 21-வது லீக் ஆட்டத்தில் எப்.சி.கோவா- புனே சிட்டி அணிகள் சந்தித்தன. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் பந்து கோவா பக்கமே கணிசமான நேரம் (62 சதவீதம்) சுற்றி வந்தது. முதல் பாதி நேரத்திற்குள் கோவா அணியில் பெர்ரன் கோரோமினாஸ் (5, 35-வது நிமிடம்), ஹூகோ போமஸ் (12-வது நிமிடம்), ஜாக்கிசந்த் சிங் (20-வது நிமிடம்) ஆகியோர் கோல் போட்டனர். மார்சிலோ பெரீரா (8-வது நிமிடம்), எமிலியானோ ஆல்பரோ (23-வது நிமிடம்) ஆகியோர் புனே அணிக்காக பந்தை வலைக்குள் அனுப்பினர். ஆனால் பிற்பாதியில் யாரும் கோல் போடவில்லை. இறுதி கட்டத்தில் முரட்டு ஆட்டத்தில் ஈடுபட்ட நட்சத்திர வீரர் பெர்ரன் கோரோமினாஸ் (கோவா), டியாகோ கார்லஸ் (புனே) ஆகியோர் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டனர்.

    முடிவில் கோவா அணி 4-2 என்ற கோல் கணக்கில் புனே அணியை தோற்கடித்தது. 4-வது ஆட்டத்தில் ஆடிய கோவா அணி 3 வெற்றி, ஒரு டிரா என்று 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. புனே அணிக்கு இது 3-வது தோல்வியாகும். இன்றைய ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எப்.சி.-கேரளா பிளாஸ்டர்ஸ் (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.
    மகாராஷ்டிராவில் உள்ள சின்ஹகட் கோட்டை அருகே ஆபத்தான முறையில் செல்பி எடுக்க முயன்று பள்ளத்தாக்கில் விழுந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். #Maharashtra #SelfieKills
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள புகழ்பெற்ற சின்ஹகட் கோட்டை பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலங்களுள் ஒன்றாகும். இங்கு வரும் மக்கள் கோட்டையின் கம்பீரத்தையும், மலையின் மீது இருந்து இயற்கையின் அழகையும் ரசிப்பது வழக்கம். அதேசமயம், இங்கு ஆபத்தான முறையில் செல்பி எடுக்க முயன்று பலர் தங்கள் உயிரை பணையம் வைத்துள்ளனர்.

    அதேபோல், இந்த சின்ஹகட் கோட்டைக்கு வந்த 35 வயது மதிக்கத்தக்க ஆண் செல்பி எடுக்க முயன்றுள்ளார். கோட்டையின் விளிம்பில் சென்று ஆபத்தான முறையில் செல்பி எடுக்க முயன்றதாக கூறப்படுகிறது.



    அப்போது எதிர்ப்பாரதவிதமாக அந்த நபர் பள்ளத்தாக்கில் விழுந்துள்ளார். இதனைக்கண்ட அருகில் இருந்தவர்கள் உடனே மீட்புப்படைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த மீட்புப்படையினர் பள்ளத்தாக்கில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அந்த நபரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். #Maharashtra #SelfieKills
    மக்கள் கவலையின்றி வசிக்கும் சிறந்த நகரமாக மராட்டிய மாநிலத்தின் புனே முதலிடம் பிடித்துள்ளதாகவும், சென்னை நகருக்கு 14வது இடம் கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #LivingIndex #Pune #Chennai
    புதுடெல்லி:

    மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் கவலையும், நெருக்கடியும் இன்றி மக்கள் வசிக்கும் நகரங்களின் பட்டியலை தயாரித்து வெளியிட்டு வருகிறது. சிறந்த நிர்வாகம், சமூக நிறுவனங்கள், பொருளாதார நிலை மற்றும் மக்களின் வாழ்க்கைச் சூழல் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான போட்டியில் கொல்கத்தா தவிர நாட்டின் 111 நகரங்கள் கலந்து கொண்டன.

    இந்த நகரங்களின் வரிசை பட்டியலை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார மந்திரி ஹர்தீப் சிங் புரி டெல்லியில் நேற்று வெளியிட்டார்.

    இதில் மக்கள் கவலையின்றி வசிக்கும் சிறந்த நகரமாக மராட்டிய மாநிலத்தின் புனே முதலிடம் பிடித்தது. நவி மும்பைக்கு 2-வது இடம் கிடைத்தது. நாட்டின் வர்த்தக தலைநகரான மும்பை 3-வது இடத்தை பிடித்தது. இதைத்தொடர்ந்து திருப்பதி, சண்டிகார், தானே, ராய்ப்பூர், இந்தூர், விஜயவாடா, போபால் ஆகியவை முறையே 4 முதல் 10-வது இடங்களை பிடித்தன. சென்னை நகருக்கு இதில் 14-வது இடம் கிடைத்தது. நாட்டின் தேசிய தலைநகரான டெல்லி இந்த பட்டியலில் 65-வது இடத்தையே பிடித்தது. 
    மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் மதிப்பிழப்பு செய்யப்பட்ட 3 கோடி மதிப்பிலான 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. #Pune #DemonetisedCurrency
    மும்பை:

    மோடி தலைமையிலான மத்திய அரசு 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மதிப்பிழப்பு செய்து அறிவித்தது. அந்த நோட்டுகளை வங்கியில் கொடுத்து புதிய நோட்டுகளை வாங்கிக் கொள்ளுமாறு அறிவுறுத்தியதுடன், அதற்காக சிறிது கால அவகாசமும் வழங்கியது. கள்ள நோட்டுகளையும், கருப்பு பண பதுக்கலையும் தடுக்கவே இந்த நடவடிக்கை என தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில், புனோ காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் 5 பேர் கையும் களவுமாக பிடிபட்டனர்.

    அவர்களிடம் இருந்து சுமார் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள பழைய நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். #Pune #DemonetisedCurrency
    பெற்றோர்களின் கடும் எதிர்ப்பால், மாணவிகள் அணிய வேண்டிய உள்ளாடையின் நிறம் மற்றும் ஆடையின் நீளம் உள்ளிட்ட விஷயங்கள் தொடர்பன அறிவிப்பை பள்ளி நிர்வாகம் வாபஸ் பெற்றுள்ளது #PuneSchool #BizarreOrder
    புனே :

    மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி நிர்வாகத்தில் இருந்து நேற்று முன்தினம் பெற்றோர்களுக்கு ஒரு அறிவிப்பு வந்தது.

    அதில், இனி மாணவிகள் அணிய வேண்டிய உள்ளாடையின் நிறம் மற்றும் வெளியில்  அணியும் ஸ்கர்ட்டின் நீளம் உள்ளிட்ட விஷயங்கள் வலியுறுத்தப்பட்டிருந்தன.

    இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் உடனடியாக பள்ளி நிர்வாகத்திடம் புகார் செய்தனர். ஆனால் அவற்றை பள்ளி நிர்வாகம் பொருட்படுத்தவே இல்லை.

    இதற்கிடையே, பெற்றோர்கள் கொடுத்த புகாரின் பேரில் நேரில் சென்று விசாரிக்க மாநில கல்வித்துறை துணை இயக்குநர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது, அக்குழு விசாரித்துக் கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில கல்வித்துறை அமைச்சர் வினோத் தாவ்டே தெரிவித்தார்.

    இந்நிலையில், பெற்றோர்களின் கடும் எதிர்ப்பால், மாணவிகள் அணிய வேண்டிய உள்ளாடையின் நிறம் மற்றும் ஆடையின் நீளம் உள்ளிட்ட விஷயங்கள் தொடர்பான அறிவிப்பை பள்ளி நிர்வாகம் வாபஸ் பெற்றுள்ளது

    பள்ளி நிர்வாகத்தை கண்டித்து பெற்றோர் போராட்டம் நடத்தினர். சமூக வலை தளங்களிலும் இந்த அறிவிப்பு குறித்து விவாதம் நடத்தினர். இதையடுத்து, சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் தனது உத்தரவை வாபஸ் பெற்றது குறிப்பிடத்தக்கது.
    #PuneSchool #BizarreOrder
    மகராஷ்டிரா மாநிலம் புனேவில் 1 வயது பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த கொடூரனை போலீசார் கைது செய்துள்ளனர்.

    மும்பை:

    சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், அதுபோன்ற கொடூர சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டுதான் உள்ளது. தலைநகர் டெல்லியில் பெண்கள், சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் சம்பவங்கள் அரங்கேறிய வண்ணம் உள்ளது. 

    இந்நிலையில், மகராஷ்டிரா மாநிலம் புனேவில் 1 வயது பெண் குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    புனே நகரில் தமிழகத்தை சேர்ந்த ஒரு குடும்பம் கூலி வேலை செய்து வருகிறது. அந்த குடும்பத்தினர் அங்குள்ள ஒரு பகுதியில் சாலையோரம் கூடாரம் அமைத்து தங்கியுள்ளனர். நேற்று முன்தினம் வேலையை முடித்துவிட்டு தூங்கிக்கொண்டிருந்த அவர்கள் எழுந்த அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.

    அந்த தம்பதி அருகே தூங்கிக்கொண்டிருந்த அவர்களது ஒரு வயது பெண் குழந்தை காணமல் போனது. இதையடுத்து அக்கம்பக்கத்தில் தேடியுள்ளனர். ஆனால் குழந்தை கிடைக்காததால் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடங்கினர்.

    அப்பகுதியில் உள்ள ஒரு சிசிடிவி பதிவை சோதித்த போது ஒருவர் அந்த குழந்தையை கடத்தி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து சிறிது நேரத்தில் அப்பகுதிக்கு அருகில் இருந்து அந்த குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

    இதையடுத்து சிசிடிவி பதிவுகளை வைத்து அக்குழந்தையை கடத்தி சென்ற மால்ஹரி பன்சோட் (22) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    புனேவில் பெண் வழக்கறிஞர் ஒருவர் ஆப்பிள் வாட்ச் கொடுத்த இறுதி நேர எச்சரிக்கை காரணமாக காப்பாற்றப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. #AppleSmartWatch #AppleWatchSavesLife

    மும்பை:

    பிரபல அமெரிக்கக் கணினி மற்றும் நுகர்வோர் இலத்திரனியல் கருவிகள் நிறுவனமான ஆப்பிள் ஸ்மார்ட் வாட்சை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆப்பிள் வாட்சை பலரும் பயன்படுத்தி வருகிறார்கள். இது நமது உடலின் வெட்பநிலை, இரத்த அழுத்தம், இதய துடிப்பு உள்ளிட்டவற்றை தொடர்ந்து பதிவு செய்து, வேறுபாடுகள் இருப்பின் உடனடியாக தெரிவிக்கும் திறன் கொண்டது.

    இந்த ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் புனேவில் பெண் வழக்கறிஞர் ஒருவரின் உயிரை காப்பாற்றி உதவியுள்ளது. அந்த பெண்ணின் இதய துடிப்பின் வேகத்தை கணக்கிட்டு அதன் மூலம் அவரது உயிரை காப்பாற்றி இருக்கிறது. 

    புனேவை சேர்ந்தவர் ஆர்த்தி ஜொஜெல்கர் (53). வழக்கறிஞரான இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஒரு ஆப்பிள் வாட்சை வாங்கியுள்ளார். அந்த வாட்ச்சின் மூலம் தனது உடல்நிலை, இதயத்துடிப்பு ஆகியவற்றை கண்காணித்து வந்துள்ளார். மேலும், எப்போதெல்லாம் இதயம் மோசமாகிறது என்பதையும் கவனித்து வந்துள்ளார்.

    இந்நிலையில், கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு அவரது ஆப்பிள் வாட்ச் அவரது உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதை கண்டுபிடித்துள்ளது. எப்போதும் இல்லாத அளவிற்கு அவரது இதயம் திடீரென்று வேகமாக துடிப்பதாக காட்டியிருக்கிறது. அந்த நேரத்தில் அவர் அலுவலக பிரச்சனை காரணமாக மோசமான மனநிலையில் இருந்திருக்கிறார். இதயம் திடீர் என்று வேகமாக துடிப்பதாக வாட்ச் காட்டியதை அடுத்து அவருக்கு சந்தேகம் வரவே மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அவரது இதயம் நிமிடத்திற்கு 140 முறை துடித்துள்ளது.

    அந்த வாட்ச்சின் உதவியினால் வேகமாக மருத்துவமனைக்கு சென்றதால் அவர் காப்பாற்றப்பட்டார். இதையடுத்து ஆப்பிள் நிறுவனத்திற்கு அந்த பெண் நன்றி தெரிவித்துள்ளார். ஆப்பிள் நிறுவன சிஏஓ டிம் கூக்கிற்கு, நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். ஏற்கனவே ஆப்பிள் வாட்ச் மூலம் சிலர் காப்பாற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  #AppleSmartWatch #AppleWatchSavesLife
    ×