search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளத்தாக்கு"

    மகாராஷ்டிராவில் உள்ள சின்ஹகட் கோட்டை அருகே ஆபத்தான முறையில் செல்பி எடுக்க முயன்று பள்ளத்தாக்கில் விழுந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். #Maharashtra #SelfieKills
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள புகழ்பெற்ற சின்ஹகட் கோட்டை பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலங்களுள் ஒன்றாகும். இங்கு வரும் மக்கள் கோட்டையின் கம்பீரத்தையும், மலையின் மீது இருந்து இயற்கையின் அழகையும் ரசிப்பது வழக்கம். அதேசமயம், இங்கு ஆபத்தான முறையில் செல்பி எடுக்க முயன்று பலர் தங்கள் உயிரை பணையம் வைத்துள்ளனர்.

    அதேபோல், இந்த சின்ஹகட் கோட்டைக்கு வந்த 35 வயது மதிக்கத்தக்க ஆண் செல்பி எடுக்க முயன்றுள்ளார். கோட்டையின் விளிம்பில் சென்று ஆபத்தான முறையில் செல்பி எடுக்க முயன்றதாக கூறப்படுகிறது.



    அப்போது எதிர்ப்பாரதவிதமாக அந்த நபர் பள்ளத்தாக்கில் விழுந்துள்ளார். இதனைக்கண்ட அருகில் இருந்தவர்கள் உடனே மீட்புப்படைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த மீட்புப்படையினர் பள்ளத்தாக்கில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அந்த நபரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். #Maharashtra #SelfieKills
    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயணிகளுடன் வந்த பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #JammuKashmir #Accident
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்ட்வார் மாவட்டத்தில் இன்று காலை பயணிகளை ஏற்றி வந்த சிறிய ரக பேருந்து ஒன்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து 300 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இந்த விபத்து குறித்து காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டு மீட்பு பணிகள் துவங்கப்பட்டன.

    இந்த கோர விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பேருந்தில் சுமார் 30 பேர் வரை பயணம் செய்திருக்கலாம் என கூறப்படும் நிலையில், பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்ட்வார் பகுதியில் ஒரே மாதத்துக்குள் நடக்கும் 3-வது மிகப்பெரிய விபத்து இது என்பது குறிப்பிடத்தக்கது. #JammuKashmir #Accident
    உத்தரகாண்ட் மாநிலம் பவுரி கர்வால் மாவட்டத்தில் சாலையோரம் உள்ள பள்ளத்தாக்கில் இன்று பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #Uttarakhand
    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலத்தில் பௌன் பகுதியில் இருந்து ராம்நகர் பகுதிக்கு இன்று சென்று கொண்டிருந்த பேருந்து எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.

    சுமார் 60 அடி ஆழம் கொண்ட பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்ததில், இதுவரை 40 பயணிகள் வரை உயிரிழந்துள்ளதாகவும், 12 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், விபத்து பகுதியில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருவதால் உயிரிழந்தோர் அல்லது காயமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. #Uttarakhand
    ×