search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 157148"

    பள்ளிப்பாளையம் ஜவுளிக்கடையில் பெண் ஊழியரை திசைதிருப்பி ஜவுளிகளை திருடிய பெண்களை சி.சி.டி.வி. காட்சி மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.

    பள்ளிப்பாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் ஆர்.எஸ். பிரிவு ரோடு சாலையில் செந்தில்குமார் என்பவருக்கு சொந்தமான ஜவுளி கடை உள்ளது . சம்பவத்தன்று மதிய நேரத்தில் செந்தில்குமார் உணவு அருந்துவதற்கு வீட்டுக்கு சென்று விட்ட நிலையில் ஜவுளிக்கடை பெண் ஊழியர் மட்டுமே கடையில் இருந்துள்ளார்.

    அப்போது அங்கு வந்த சுமார் 50 வயதிற்கு மேற்பட்ட 3 பெண்கள் மற்றும் ஒரு வயதான முதியவர் என 4 பேர் கொண்ட குழுவினர் ஜவுளி துணி எடுப்பது போல பாவனை செய்து ஜவுளிக் கடை பெண் ஊழியரை சூழ்ந்து கொண்டனர்.

    அப்போது அந்த கூட்டத்தில் ஒரு பெண் புடவையை விரித்து காட்டுவது போல போக்கு காட்டி இது என்ன விலை என்று கேட்டுக்கொண்டு அந்த பெண் ஊழியரை திசை திருப்பி அவர்களில் ஒரு பெண் ஒருவர் தான் ஏற்கனவே எடுத்து செல்ல வைத்திருந்த சுமார் 10-க்கும் மேற்பட்ட காட்டன் புடவைகளை கால் இடுக்கில் மறைத்து வைத்துக் கொண்டார்.

    பின்பு 150 ரூபாய்க்கு 2-துண்டுகளை மட்டுமே வாங்கிக் கொண்டு அந்த கும்பல் வெளியேறியது. சிறிது நேரத்துக்குப்பிறகு ஜவுளிக்கடை பெண் ஊழியர் கடை ரேக்கில் அடுக்கி வைக்கப்பட்ட புடவைகள் எண்ணிக்கை குறைகிறதே என அதிர்ச்சி அடைந்து சி.சி.டி.வி. காட்சிகளை பார்த்தார். அப்போது அதில் தன்னை திசை திருப்பிவிட்டு வந்திருந்தவர்கள் லாவகமாக காட்டன் புடவைகளை திருடி சென்றதை கண்டறிந்தார்.

    திருடுபோன ஜவுளிகள் மதிப்பு மொத்த மதிப்பு ரூ.14 ஆயிரம் என கூறப்படுகிறது. இதுகுறித்து பள்ளிப்பாளையம் காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது சி.சி.டி.வி காட்சி அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பட்டப்பகலில் நடைபெற்ற திருட்டு சம்பவம் பள்ளிப்பாளையம் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த சி.சி.டி.வி. காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

    • தொண்டியில் பெண்களுக்கு வலை பின்னும் பயிற்சி வழங்கப்பட்டது.
    • வீட்டிலிருந்தபடியே பெண்கள் தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள முடியும் என்று தெரிவித்தார்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் உள்ள கிராமப்புற பெண்கள் மேம்பாட்டு நிறுவனத்தின் பயிற்சி மையத்தில் நபார்டு வங்கியும், கிராமப்புற பெண்கள் மேம்பாட்டு நிறுவனமும் இணைந்து நாட்டுப்படகு மீனவர்கள் பயன்படுத்தும் வலைகளான நண்டு வலை, முரல் வலை, செங்கனி வலை, நகரை வலை மற்றும் சலங்கை வலைகளை பின்னும் பயிற்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு நபார்டு வங்கியின் மாவட்ட மேலாளர் அருண்குமார் தலைமை தாங்கினார். பயிற்சி வகுப்பினை கனரா வங்கியின் முதன்மை மேலாளர் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

    கனரா வங்கியின் விவசாய அலுவலர் சாமுவேல், அன்பாலயா தொண்டு நிறுவன நிறுவனர் சவேரியார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராமப்புற பெண்கள் மேம்பாட்டு இயக்குநர் வெள்ளிமலர் அனைவரையும் வரவேற்று பேசினார்.

    இதையொட்டி 30 பெண்க ளுக்கு 15 நாட்களுக்கு வலை பின்னும் பயிற்சியினை பயிற்றுனர் சந்தியாகு பிச்சை தொடங்கி வைத்தார். அப்போது சொந்தமாக வலை பின்ன கற்றுக்கொள்வதால் சொந்த உபயோகத்திற்கும், மற்ற மீனவர்களுக்கும் வழங்க முடியும். இதனால் வீட்டிலிருந்தபடியே பெண்கள் தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள முடியும் என்று தெரிவித்தார். நிகழ்ச்சி முடிவில் விற்பனை மேலாளர் சதீஸ்குமார் நன்றி கூறினார்.

    • குளியலறையில் சூரிய வெளிச்சம் படிவது மிகவும் நல்லது.
    • தினமும் தரமான கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்ய வேண்டும்.

    ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சுத்தமான குளியலறைகள் அவசியமானது. நாள் முழுவதும் அது ஈரப்பதமாக இருந்தாலும் தினமும் தரமான கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்ய வேண்டும். நகர்ப்புற சூழலில் இடப்பற்றாக்குறை காரணமாக குளியலறையும், கழிவறையும் ஒரே அறையாக அமைக்கப்படுகிறது.

    வெளிச்சம் மற்றும் காற்றோட்டம் பரவும் வகையில் அதன் உள்கட்டமைப்பு இருக்க வேண்டும். குளியலறையில் சூரிய வெளிச்சம் படிவது மிகவும் நல்லது. தரைப்பகுதியில் உள்ள ஈரப்பதம் காரணமாக உருவாகும் பாசி கால்களை வழுக்க செய்யும். இதை தவிர்ப்பதற்கு ஆன்டி ஸ்கிட் டைல்ஸ் வகைகளை குளியலறை தரையில் பதிக்கலாம் அல்லது ஆன்டி ஸ்கிட் மேட் பயன்படுத்தலாம்.

    குளியலறைக்கு வெளிச்சம் முக்கியமானது. எனவே தரமான எல்.இ. விளக்குகளை பயன்படுத்த வேண்டும். இரண்டு மின் விளக்குகள் பொருத்துவது நல்லது. ஒற்றை அறைக்கு மத்தியிலும், மற்றொன்றை வாஷ்பேசினுக்கு மேற்புறத்திலும் பொருத்த வேண்டும். குளியலறையில் பயன்படுத்தும் சுவிட்ச் வகைகள் மின் அதிர்ச்சியை தடுக்கும் ஷாக் புரூஃப் அல்லது வாட்டர் புரூஃப் தொழில்நுட்பம் கொண்டதாக இருக்க வேண்டும்.

    குளியலறைக்குள் வெளிப்புற காற்று உள்ளே வருவதற்கும் வெப்பம் வெளியேறுவதற்கும் ஏற்ற வகையில் காற்றாடி பொருத்தலாம். இதன் மூலம் தரையையும் ஈரப்பதம் இல்லாமல் உலர வைக்கலாம்.

    குளியலறையில் ஏற்படும் துர்நாற்றத்தை நீக்குவதற்கு ஒரு கிண்ணத்தில் வெள்ளை வினிகர் அல்லது பேக்கிங் சோடாவை நிரப்பி, அறைக்குள்ளே ஈரம் படாதவாறு மூலையில் வைக்கலாம். கிண்ணத்தில் உள்ள வினிகர் அல்லது பேக்கிங் சோடாவை வாரம் ஒருமுறை மாற்ற வேண்டும்.

    துணிகள் மற்றும் துண்டுகளை தொங்கவிடும் குழாய் போன்ற பகுதியை சுத்தம் செய்வதற்கும், ஒரு கப் நீரில் 1 தேக்கரண்டி வினிகர், ஒரு தேக்கரண்டி பாத்திரம் கழுவும் திரவம் ஆகியவற்றை கலந்து பருத்தி துணியால் துடைக்கலாம். அதன் பின்பு தண்ணீரில் கழுவி உலர வைக்கலாம். குழாயின் இடுக்குகளில் படிந்திருக்கும் அழுக்கை அகற்றுவதற்கு பெயிண்டிங் செய்ய பயன்படும் சிறிய பிரஷ்மூலம் மேலே குறிப்பிட்ட கலவையை பயன்படுத்தி சுத்தம் செய்யலாம்.

    ஒரு எலுமிச்சையை பாதியாக வெட்டி சாறு பிழிந்து அதில் 1 தேக்கரண்டி உப்பு கலந்து கொள்ள வேண்டும். அதை பித்தளை அல்லது வெண்கலத்தால் செய்யப்பட்ட குளியலறை சாதனங்கள் மீது தடவி 10 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் கழுவிய பின்னர் கைக்ரோ ஃபைபர் துணியால் துடைத்து உலர வைக்கவும்.

    குளியலறை கண்ணாடியை சுத்தம் செய்வதற்கு ஒரு கப் தண்ணீரில் ஒரு கப் பேக்கிங் சோடாவை பசை போல் கலந்து மேற்பரப்பில் பஞ்சு மூலம் தடவவும். 10 நிமிடங்கள் கழித்து கண்ணாடியை தண்ணீர் கொண்டு கழுவினால் பளிச்சென்று ஒளிரும்.

    பெண்களுக்கான குண்டூசி முதல் காலணி வரை அனைத்தும் சென்ற ஆண்டை விட இந்தாண்டு தீபாவளிக்கு வேறுபட்ட வகையில் இருத்தல் வேண்டி கூடுதல் பொலிவுடன் தயாரிக்கப்படுகின்றன.
    இந்தியாவில் பண்டிகை நேர ஷாப்பிங் எனும் தீபாவளியின் போது மட்டுமே அதிகளவில் நடைபெறுகிறது. குறிப்பாக இந்தியா முழுவதும் அனைத்து தரப்பு மக்களும் தீபாவளி ஷாப்பிங் மேற்கொள்கின்றனர். இதன் காரணமாக தீபாவளி தொடங்கும் முன்னரே அதற்கான ஆயத்தப்பணி ஏற்பாடு செய்யப்படுகிறது. தீபாவளி நேரம் ஷாப்பிங் என்பது பெரிய பொருளாதார சந்தை முன்னேற்றத்தை ஏற்படுத்துகிறது.

    எனவே சிறு தொழில் முதல் பெரிய தொழில் வரை அனைத்தும் தீபாவளி நேர விற்பனையை வைத்தே பெரிய லாபத்தை அடைய வேண்டியுள்ளது. அனைத்து விதமான பொருட்களும் தீபாவளி ஷாப்பிங்கின் போது விற்பனையாகின்றன. அதாவது ஆடைகள், பட்டாசு, தங்கம், வெள்ளி, மின்னணு சாதனங்கள், வீட்டு உபயோக பொருட்கள், பாலணிகள், அனைத்துவிதமான அலங்காரப் பொருட்கள், விளக்குகள், பேன்சி உலோக நகைகள் என்றவாறு அனைத்துமே தீபாவளி நேர ஷாப்பிங்ல் இடம்பெறுகின்றன.

    எத்தனை முறை ஷாப்பிங் செய்தாலும் வீட்டிற்கு வந்தவுடன் எதையோ மறந்துவிட்டோம் என மீண்டும் கடைக்கு செல்வோம். தீபாவளி பண்டிகை முடிந்த பிறகும் கூட நாம் இன்னும் அதிக பொருட்களை வாங்கி தீபாவளியை கொண்டாடி இருக்கலாம் என்றே தோன்றும். ஏனெனில் ஒவ்வொரு வருடமும் தீபாவளிக்கு என தயாராகும் பொருட்களின் அணிவரிசை நீண்டு கொண்டே போகும்.

    தீபாவளிக்கு ஏற்ற தயாரிப்பு பணிகள்:-

    தீபாவளிக்கு எற்றவாறு புதிய டிசைன்களை அறிமுகப்படுத்தும் நோக்கில் ஆடைகள் முதல் நகைகள் வரை அனைத்தும் தனிப்பட்ட கவனத்துடன் உருவாக்கப்படுகிறது. பெண்களுக்கான குண்டூசி முதல் காலணி வரை அனைத்தும் சென்ற ஆண்டை விட இந்தாண்டு வேறுபட்ட வகையில் இருத்தல் வேண்டி கூடுதல் பொலிவுடன் தயாரிக்கப்படுகின்றன. அதுபோல் ஆண்கள் மற்றும் சிறுவர், சிறுமியர் ஆடைகள், அணிகலன்கள் போன்றவையும் இந்த தீபாவளிக்கு புதுசு என்றவாறே தயாரிக்கப்படுகின்றன. டிசைனர் பேக், பர்ஸ், கலர்புல் காலணி, புதிய ஹேர்ஸ்டைல் என தங்கள் உருவமைப்பையே தீபாவளிக்கு என புதியதாய் மாற்றி விடுகின்றனர்.

    ஓராண்டு தயாரிப்பு ஒரு சிலநாளில் விற்பனை:-

    தீபாவளிக்கு என ஆடைகள், பட்டாசு மற்றும் உபயோகப்பொருட்கள் தயாரிப்பு என்பது ஓராண்டு அதிக வேலையாட்கள் கொண்டு தயாரிக்கப்படும். பின்னர் அதனை அந்தந்த பிராந்திய விருப்பத்திற்கு ஏற்ப கடைகளுக்கு பிரித்தளித்து அதன் விற்பனையை கண்காணிப்பர். தீபாவளி நெருங்க நெருங்க தான் அதன் மவுசும், தெரியவரும். பட்டாசு என்பது அதிக பாதுகாப்புடன் நிறைய பணியாளர்கள் கொண்டு தயாரிக்கப்படுகிறது. அதனை தீபாவளிக்கு சில நாள் முன்பு வாங்கி மகிழும் போது தயாரிப்பாளர்களின் மகிழ்வும் வெளிப்படும்.

    மின்னணு பொருட்களும் விலையுயர் ஆபரணங்களும்

    தீபாவளி ஷாப்பிங்-யில் தற்போது ஏராளமான மின்னனு பொருட்கள் இடம்பெறுகின்றன. அன்றாட பயன்பாட்டு பொருள் முதல் பொழுது போக்கு சாதனங்கள் வரை எண்ணற்ற புதிய புதிய பொருட்களை தீபாவளி சமயத்தில் வாங்குகின்றனர். அதுபோல் தங்கம், வைர, பிளாட்டின நகைகள் என்பதுடன் வெள்ளி பொருட்கள் போன்றவாறு விலையுயர்ந்த பொருட்களும் தீபாவளி ஷாப்பிங்-யில் இடம் பெறுகின்றன. இதற்கான தயாரிப்பு பணிகள் என்பது ஆண்டு தோறும் நடைபெற்றாலும் தீபாவளி சமயத்தில் தான் அதிகளவில் இதன் விற்பனை அதிகரிக்கிறது எனலாம்.

    பணப்பெருக்கமும் வாங்கும் தன்மை அதிகரிப்பும்:-

    ஆண்டு முழுவதும் உழைத்த உழைப்பிற்கு ஏற்றவாறு ஒவ்வொரு நிறுவனமும் அவர்களின் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குகின்றன. இந்த தீபாவளி போனஸ் தான் மக்களின் வாங்கும் தன்மையையும் அதிகரிக்கச் செய்கிறது. சம்பளத்தை தவிர கூடுதலாக இந்த வருவாய் என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் நோக்கில் குடும்பத்தினர் தேவையை பூர்த்தி செய்ய உதவுவதுடன், அதனை அதிக மகிழ்ச்சி படுத்தும் தீபாவளி பண்டிகை கொண்டாட்டமும் இணைந்து விடுவதில் இரட்டிப்பு மகிழ்ச்சி, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களும் தங்களால் இயன்ற சிறு ஷாப்பிங் செய்தாவது தீபாவளி பண்டிகை மகிழ்ச்சியில் மனதார இணைந்துவிடுகின்றனர்.

    வடமதுரை, அய்யலூர் பகுதியில் குடிமகன்கள் தொல்லையால் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
    வடமதுரை:

    வடமதுரை மற்றும் அய்யலூர் பகுதியில் 4 வழிச்சாலை அருகே இயங்கி வந்த டாஸ்மாக் கடைகள் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி அகற்றப்பட்டன. இதனால் குடிமகன்கள் காணப்பாடி, வையம்பட்டி உள்ளிட்ட இடங்களுக்கு சென்று மதுவாங்கி குடித்து வந்தனர். மேலும் பெட்டிக்கடை மற்றும் பழக்கடைகளில் வைத்து மது விற்பனை செய்து வந்ததால் புத்தூர் சாலையில் குடிமகன்கள் ரகளை மற்றும் தகராறில் ஈடுபட்டு வந்தனர்.

    இதனால் அப்பகுதியை கடக்க பள்ளி மாணவ-மாணவிகள் அச்சமடைந்தனர். மேலும் ஒருசில மாணவிகளையும் கடத்திச்சென்றனர். இதனால் அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியானது.

    தற்போது 4 வழிச்சாலை அருகே உள்ள கடைகளிலேயே அதிகவிலை கொடுத்து மதுவாங்கி குடிக்கின்றனர். பின்பு பஸ் நிறுத்தத்தில் தங்களுக்குள் சண்டையிட்டு அரைநிர்வாண கோலத்தில் படுத்துவிடுகின்றனர். இதனால் காலையில் வேலைக்கு செல்லும் பெண்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் பல கூலித்தொழிலாளர்களும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி காலை நேரத்திலேயே வேலைக்கு செல்லாமல் மதுகுடிக்கின்றனர்.

    இதனால் அவர்களது குடும்பம் கடுமையாக பாதிப்படைகின்றது. இதனால் போலீசார் இப்பகுதியில் ரோந்து வந்து அனுமதியின்றி மதுவிற்கும் கும்பல் மீது கடும்நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
    குடிநீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்துக்கு பாடியூர் கிராமம் கிரியம்பட்டியைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் வந்தனர். காலிக்குடங்களுடன் வந்த அவர்கள் தெரிவிக்கையில், எங்கள் கிராமத்தில் 220 குடும்பங்கள் உள்ளன.

    கடந்த 7 மாதமாக குடிநீர் வரவில்லை. இது குறித்து அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இன்று கலெக்டர் அலுவலகத்தில் முறையிட வந்தோம் என்று தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து கோரிக்கை மனுவை கலெக்டர் அலுவலகத்தில் அளித்துச் சென்றனர்.

    தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. கட்டிட தொழிலாளர்கள் சங்கம் திண்டுக்கல் மாவட்ட குழு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்க வந்தனர். அவர்கள் தெரிவிக்கையில், தமிழகத்தில் 55 லட்சம் கட்டுமானத் தொழிலாளர்கள் உள்ளனர்.

    பெரும்பாலானோர் தற்போது வேலையின்றி தவித்து வருகின்றனர். நல வாரியம் மூலம் அவர்களுக்கு நிவாரணம் கிடைப்பதில்லை. விபத்து நடந்தால் மருத்துவ சிகிச்சைக்கான நிதி, ஊனம் ஏற்பட்டால் நிதி உதவி போன்றவை வழங்க வேண்டும்.

    கட்டிட தொழிலாளர்கள் இறந்தால் ரூ.5 லட்சம் நிதி வழங்க வேண்டும். வெளி மாநிலங்களில் வழங்கப்படுவது போல ரூ.3 ஆயிரம் பென்சன் வழங்க வேண்டும். கர்ப்பிணி தொழிலாளர்களுக்கு 6 மாதம் பேறுகால விடுப்பு சம்பளத்துடன் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

    மாவட்ட செயலாளர் பாலன், பொருளாளர் பிச்சை மணி தலைமையில் நிர்வாகிகள் சுப்பையா, பழனியப்பன், இளங்கோ, முனீஸ்வரன் உள்பட 100-க் கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.

    மேலூர் அருகே குடிநீர் பிரச்சினைக்கு தீர்வுக் காணக் கோரி பெண்கள் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.
    மேலூர்:

    மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள ஆமூர் ஊராட்சிக்குட்பட்டது மருதூர் கிராமம். இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இங்கு பெய்த மழை காரணமாக இந்த கிராமத்தில் மின்தடை ஏற்பட்டது. இதனால் கிராமமே இருளில் மூழ்கியது.

    மின்தடை குறித்து மின் வாரியத்திடம் பொது மக்கள் பலமுறை புகார் கூறியும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    மின்தடை காரணமாக அந்த கிராமத்தில் குடிநீர் பிரச்சினையும் ஏற்பட்டது. குடிநீருக்காக பெண்கள் 2 கி.மீ. தூரம் அலையும் நிலை ஏற்பட்டது. இது குறித்து புகார் கூறியும் எந்த பலனும் இல்லை.

    இதை கண்டித்தும், மின்தடையை சரி செய்து குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி இன்று அந்த பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்பட 70-க்கும் மேற்பட்டோர் மேலூர்-ஆமூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
    ×