search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூத்துப்பட்டறை"

    கூத்துப்பட்டறையின் நிறுவனர் முத்துசாமியின் மறைவுக்கு நடிகர்கள் விமல், விதார்த், பசுபதி, சோம சுந்தரம் உள்ளிட்ட பலர் குத்தாட்டம் ஆடி இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். #NaMuthuSwamy
    கூத்துப்பட்டறையின் தந்தை என்று சினிமா பிரபலங்களால் அழைக்கப்படும் ந.முத்துசாமி நேற்று (24.10.18) காலமானார். தற்போது சினிமா உலகில் முன்னணி நடிகர்களாக இருக்கும் பலர் இவர் பட்டறையில் பயிற்சி பெற்றவர்கள்.

    நாசர், பசுபதி, விஜய் சேதுபதி, விமல், பாபிம் சின்ஹா, சோம சுந்தரம், உட்பட பலர் இவரது கூத்துப்பட்டறையில் சேர்ந்து பயிற்சி பெற்றவர்கள். 

    நேற்றைய தினம் அவர், மறைந்த செய்தி வெளியானதும் அனைத்து நடிகர்களும் முத்துசாமியின் இல்லத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினர். நடிகர் கமல்ஹாசன் அவருக்கு இரங்கல் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். 



    இவரது இறுதி ஊர்வலம் இன்று நடைபெற்றது. இதில் நடிகர்கள் விமல், பசுபதி, விதார்த் உள்ளிட்ட பலர் குத்தாட்டம் ஆடி அவருக்கு கலை அஞ்சலி செலுத்தினார்கள். நடு ரோட்டில் நடிகர்கள் ஆவேசமாக நடனமாடிய வீடியோ காண்போரையும் கண்கலங்க வைத்துள்ளது.
    கூத்துப்பட்டறை நிறுவனர் நா.முத்துசாமி மறைவுக்கு நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். #Kamal #NaMuthuswamy
    சினிமா உலகில் நடிகர், நடிகைகள் பலரை உருவாக்கிய கூத்துப்பட்டறையை நிறுவிய நா.முத்துசாமி (82) உடல்நலக்குறைவால் இன்று காலாமானார்.

    பத்மஸ்ரீ விருது பெற்ற இவர் தஞ்சாவூர் மாவட்டம் புஞ்சை கிராமத்தை சேர்ந்தவர். விஜய் சேதுபதி, பசுபதி, விமல் உள்ளிட்ட பல நடிகர்கள் இவரது கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்றவர்கள் ஆவர். 

    தெருக்கூத்து மூலம் பிரபலமான இவர் கூத்துப்பட்டறை மூலம் நடிகர்களுக்கு நடிப்பு பயிற்சி அளித்து வந்தார். மேலும் `வாழ்த்துக்கள்' என்ற படத்திலும் நடித்திருக்கிறார். 

    முத்துசாமி மறைவுக்கு சினிமா பிரபலங்கள், முக்கிய தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் கமல் இரங்கல் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சில தனி மனிதனின் இழப்பை, ஒரு தலைமுறைத்தான் ஈடுசெய்ய வேண்டும். அப்படி இணையற்ற சாதனையாளர் நா.முத்துசாமி. அவரிடம் பயிற்சி பெற்று நிறைய நடிகர்கள் சினிமாவிற்கு வந்திருக்கிறார்கள். அவர் இருந்தபோது செய்த கடமைக்கு ஒரு கலைஞனாக நன்றி’ என்று கூறியிருக்கிறார். #Koothuppattarai #NaMuthuswamy


    கூத்துப்பட்டறை நிறுவனர் நா.முத்துசாமி உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். #Koothuppattarai #NaMuthuswamy
    சினிமா உலகில் நடிகர், நடிகைகள் பலரை உருவாக்கிய கூத்துப்பட்டறையை நிறுவிய நா.முத்துசாமி (82) உடல்நலக்குறைவால் சென்னையில் காலாமானார்.

    பத்மஸ்ரீ விருது பெற்ற இவர் தஞ்சாவூர் மாவட்டம் புஞ்சை கிராமத்தை சேர்ந்தவர். விஜய் சேதுபதி, பசுபதி, விமல் உள்ளிட்ட பல நடிகர்கள் இவரது கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்றவர்கள் ஆவர். 

    தெருக்கூத்து மூலம் பிரபலமான இவர் கூத்துப்பட்டறை மூலம் நடிகர்களுக்கு நடிப்பு பயிற்சி அளித்து வந்தார். மேலும் `வாழ்த்துக்கள்' என்ற படத்திலும் நடித்திருக்கிறார்.



    கடந்த 1999-ஆம் ஆண்டில் இந்திய அரசின் சங்கீத அகாடமி விருதை பெற்றுள்ளார். முத்துச்சாமி எழுதிய நா.முத்துசாமி கட்டுரைகள் என்ற நூல் 2005-ஆம் ஆண்டில் தமிழக அரசு விருதை வென்றது. முத்துசாமி மறைவுக்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #Koothuppattarai #NaMuthuswamy

    ×