search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குருப்பெயர்ச்சி"

    ராமர் வனவாசம் செல்ல பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும். ஜாதக ரீதியாக முக்கியமாக காரணமாக சொல்லப்படுவது எது என்பதை பற்றி அறிந்து கொள்ளலாம்.
    புராண காலத்தில் குருவால் ஏற்பட்ட மாற்றங்களை எடுத்துரைக்கும் பாடல் இது. 1, 3, 8, 4, 6, 12 ஆகிய இடங்களில் குரு சஞ்சரிக்கும் போது நடந்தது என்ன என்று இந்த பாடல் சொல்லுகிறது.

    ‘ஜென்ம ராமர் வனத்திலே
    சீதையைச் சிறை வைத்ததும்,
    தீதிலா தொரு மூன்றிலே
    துரியோதனன் படை மாண்டதும்,
    இன்மை எட்டினில் வாலி
    பட்டமிழந்து போம் படியானதும்,
    ஈசனார் ஒரு பத்திலே
    தலையோட்டிலே யிரந்துண்டதும்
    தருமபுத்திரர் நாலிலே
    வனவாசம் அப்படிப் போனதும்,
    சத்திய மாமுனி ஆறிலே
    இரு காலிலே தளை
    பூண்டதும்,
    வன்மை யற்றிட ராவணம் முடி
    பனிரெண்டினில் வீழ்ந்ததும்.
    மன்னு மா குரு சாரி
    மாமனை வாழ்விலா
    துறமென்பவே!’

    இந்தப் பாடல் மூலம் நாம் அறிந்து கொள்வது: ராமர் வனவாசம் சென்ற பொழுது அவருக்கு ஜென்ம குரு ஆதிக்கம் இருந்திருக்கிறது. அதுதான் வனவாசம் சென்றதற்கு காரணம் என்பர். ஜென்ம ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது பயணங்கள் அதிகரிக்கலாம். ஆதிபத்தியம் நன்றாக இருந்தால் எதைப்பற்றியும் கவலைப்படத் தேவையில்லை. வழிபாடே வளர்ச்சி கூட்டும். 
    திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நாளை(வியாழக்கிழமை) நடக்கிறது.
    திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள ஆலங்குடியில் ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவில் உள்ளது. நவக்கிரக தலங்களில் குருபகவானுக்கு பரிகார தலமாக போற்றப்படுகிறது. திருஞானசம்பந்தரால் தேவார பாடல் பாடப்பெற்றது. வரலாற்று சிறப்புமிக்க இக்கோவிலில் குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும் நாளில் குருப்பெயர்ச்சி விழா நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு குருபகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு நாளை(வியாழக்கிழமை) இரவு 10.05 மணிக்கு பெயர்ச்சியடைகிறார். இதனை முன்னிட்டு ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குருபெயர்ச்சி விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொள்ள வருவார்கள் என்பதால் திருவாரூர் மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் உத்தரவின் பேரில் பல்வேறு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன் உத்தரவின் பேரில் நன்னிலம் துணை போலீஸ் சூப்பிரண்டு அருண் மேற்பார்வையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறநிலைய உதவி ஆணையரும், தக்காருமான கிருஷ்ணன், அறநிலைய உதவி ஆணையரும், செயல் அலுவலருமான தமிழ்ச்செல்வி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். 
    தேவர்களின் குரு ‘பிரகஸ்பதி’ எனும் வியாழ பகவான் ஆவார். குருப்பெயர்ச்சி காலங்களில் திருவண்ணாமலையை கிரிவலம் வந்து வழிபடுவது மிகவும் சிறப்பாக சொல்லப்படுகிறது.
    4-10-2018 குருப்பெயர்ச்சி சிவ.அ.விஜய்பெரியசாமி

    தேவர்களின் குரு ‘பிரகஸ்பதி’ எனும் வியாழ பகவான் ஆவார். நவக்கிரகங்களில் பூரண சுப கிரகமாக போற்றப்படுபவர் இவர். ‘குருவருள் இருந்தால் திருவருள் உண்டாகும்' என்பதும், ‘குரு பார்க்க கோடி நன்மை' என்பதும் குரு பகவானை சிறப்பித்து கூறும் பழமொழிகள். பொதுவாக குரு இருக்கும் இடத்தைவிட அதன் பார்வை பதியும் இடங்களே சிறப்பான பலன்களைப் பெறுவதாக ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. ஜாதகத்தில் ஒருவருக்கு ராகு, கேது, சனி, செவ்வாய், புதன், சுக்ரன் போன்ற கிரகங்களினால் எந்த தோஷங்கள் ஏற்பட்டிருந்தாலும், குரு பார்வ பட்டால் அந்த தோஷங்கள் விலகும் என்றும் சொல்லப்படுகிறது.

    குரு பகவான், ஆண்டுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்கு பெயர்ச்சி அடைவார். ஜாதகங்களில் குரு சிறப்பாக அமைந்தால் ஒருவருக்கு குடும்ப வாழ்க்கை, உயர் பதவி, கல்வி, ஞானம், வீடு மற்றும் வாகனம் வாங்கும் வாய்ப்பு, செல்வசெழிப்பு முதலியன சிறப்பாக அமையும். திருமணப் பேறு, புத்திரபாக்கியம் உண்டாகும்.

    ஜாதகத்தில் குரு பார்வை சரி இல்லாதவர்களுக்கு பெரியோர் சாபம், மறதி, விஷப் பூச்சிகளால் பாதிப்பு, காது மற்றும் குடல் சம்பந்தமான நோய்கள், பணத்தட்டுப்பாடு, பேச்சு சம்பந்தமான பிரச்சினைகள், கணவன்- மனைவி இடையே கருத்துவேறுபாடு உண்டாகும் என்றும் சொல்லப்படுகிறது. இப்படி துன்பத்தில் தவிப்பவர்கள் குருபகவானை வழிபட்டால் அந்த பாதிப்புகள் குறையும் என்பது நம்பிக்கையாக உள்ளது. பழமையான சிவாலயங்களில் உள்ள அறுபத்து மூன்று நாயன்மார்கள் வழிபாடு, குருப்பெயர்ச்சி சமயத்தில் பக்தர்களுக்கு நற்பலன்களை அள்ளித் தருவதாக அமைந்துள்ளது.

    குரு பகவான் பரிகாரத் த‌லங்களாக திருச்செந்தூர், திருஆலங்குடி, பட்டமங்கலம், முறப்பநாடு, மதுரை குருவித்துறை, சென்னை திருவலிதாயம், தேவூர், தென்குடி திட்டை, சுசீந்திரம், உத்தமர்கோவில், தக்கோலம், கோவிந்தவாடி என பல திருத்தலங்கள் கூறப்பட்டாலும், குருப் பெயர்ச்சி காலங்களில் திருவண்ணாமலையை கிரிவலம் வந்து வழிபடுவது மிகவும் சிறப்பாக சொல்லப்படுகிறது.

    ரமண மகரிஷியை அவரது அடியவர் ஒருவர், திருக்கயிலாய யாத்திரை செய்ய அழைத்தார். உடனே மகரிஷி சிரித்துக்கொண்டே ஒன்றும் தெரியாதவர் போல, ‘அங்கே அப்படி என்ன விசேஷம்?' என்றார்.

    ‘திருக்கயிலாய மலை, சிவன் வசிக்கும் பூமி. சிவபெருமான், பூதகணங்கள் சூழவும் ரிஷிகள் சூழவும் இருக்கும் இடம்’ என்று ரமணரிடம் பதிலுரைத்தார் அந்த அன்பர்.

    அதற்கு ரமணர், ‘அன்பனே! கயிலாயம் சிவன் வசிக்கும் தலம். ஆனால் திருவண்ணாமலை என்பதே சிவன் தான். சிவபெருமான் இங்கே இருக்க, அவரின் வீட்டை போய் பார்த்து வருவானேன்?' எனக் கூறினார்.

    உண்மையை உணர்ந்த அந்த அன்பரும் திருக்கயிலாய யாத்திரையை விடுத்து, திருவண்ணாமலையை கிரிவலம் வந்து தொழுதார்.

    ஆம்.. இங்கு மலையே சிவபெருமான் தான்.

    ‘செங்கணானும் பிரம்மனும் தம்முள்ளே
    எங்கும் தேடி திரிந்தவர் கான்கிலார்
    இங்குற்றேன் என்று இலிங்கத்தே தோன்றினான்
    பொங்கு செஞ்சடை புண்ணிய மூர்த்தியே’ என்ற திருநாவுக்கரசரின் திருமுறைப்பதிகமே திருவண்ணாமலையின் வரலாற்றை விளக்கிடும்.

    ஒருமுறை விஷ்ணுவும், பிரம்மாவும் தங்களில் யார் பெரியவர் என்று வாதிடத் தொடங்கினர். சுவாரசியமாக ஆரம்பித்த வாதம், அனல் தெறிக்க இறுதியில் திருக்கயிலை நாதனான சிவபெருமானிடம் வந்து நின்றனர். கையில் அனல் ஏந்தி, நெற்றிக்கண்ணில் அனலோடு தகதகக்கும் பரம்பொருள் சிவபெருமான், ‘எமது அடியையும், முடியையும் யார் கண்டு வருகிறீர்களோ அவர்களே பெரியவர்' என்று கூறினார்.

    அத்தோடு இருவரின் நடுவிலும் பெரும் தூண் போன்ற அருட்பெரும் ஜோதிப் பிழம்பாக எழுந்தருளினார். உடனே ஈசனின் அடியைத் தேடி பன்றி உருக்கொண்டு விஷ்ணுவும், அன்னப் பறவை உருக்கொண்டு சிவபெருமானின் முடியைத் தேடி பிரம்மனும் புறப்பட்டனர். பூமியைத் தோண்டி பாதாளம் ஏழுக்கும் கீழே சென்றும் ஈசனின் அடியைக் கண்டறிய முடியாமல் விஷ்ணு தோல்வியோடு திரும்பி வந்தார்.

    அன்னமாய் மாறி ஆகாயத்தில் பறந்து பல ஆண்டுகள் கடந்தும், ஈசனின் முடியை காண இயலாமல் பிரம்மனும் அயர்ந்து போனார். அப்போது ஈசனின் தலையில் இருந்து விழுந்த தாழம்பூ பல ஆயிரம் ஆண்டுகளாக கீழ்நோக்கி வந்து கொண்டிருந்தது. அதைக் கண்ட பிரம்மன், தாழம்பூவிடம் ‘நான் சிவபெருமானின் முடியை தரிசித்து விட்டதாக பொய் சொல்’ என்றார்.

    தாழம்பூவும் அப்படியே பொய் சாட்சி சொன்னது. அப்போது ஜோதிப் பிழம்பில் இருந்து வெளிப்பட்ட சிவபெருமான், பொய்யுரைத்த பிரம்மனுக்குச் சாபமும், மகாவிஷ்ணுவுக்கு அனுக்கிரகமும் செய்தார்.

    பிரம்மனும், விஷ்ணுவும் சிவபெருமானை தொழுதுநிற்க, ஜோதிப்பிழம்பு அக்னி மலையாய் நின்றது. அக்னிமலையான ஈசனும் உள்ளம் குளிர்ந்தார். அதுகண்ட பிரம்மனும் விஷ்ணுவும், ‘பரம்பொருளே! எங்கள் பொருட்டு இங்கு அக்னி மலையாய் ஆகி குளிர்ந்து உள்ளீர்கள். இந்த அண்டத்திலேயே மிகவும் பெரிய சுயம்பு சிவலிங்கம் இந்த அக்னி அண்ணாமலை தான். உமக்கு பூச்சொரிய அண்ணாமலையில் வளரும் மரங்களால் தான் முடியும். உமக்கு அபிஷேகம் செய்விக்க மழை மேகங்களால் தான் முடியும். உமக்கு ஆரத்தி எடுக்க சூரிய, சந்திரர்களால் தான் முடியும். எனவே கலியுகத்தில் மக்களும் உம்மை தீப, தூப அர்ச்சனை, அபிஷேகம் செய்து வழிபட்டு பயனுறும் பொருட்டு சிறிய வடிவில் குறுகி சிவலிங்கமாக காட்சி கொடுக்க வேண்டும்' என்றனர்.

    உடனே அண்ணாமலையின் கீழ்புறம் அழகிய சிவலிங்கம் ஒன்று வெளிப்பட்டது. அந்த சிவலிங்கமே, இன்று நாம் ஆலயத்தில் வழிபடும் அருணாச்சலேஸ்வரர் எனும் அண்ணாமலையார். உடனே தேவதச்சன் அழகிய ஆலயம் எழுப்பினான். பின்னாளில் பற்பல மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்டு இன்று ஆறு பிரகாரங்களும், ஒன்பது கோபுரங்களுடனும் பிரமாண்டமாய் காட்சியளிக்கிறது திருஅண்ணாமலையார் திருக்கோவில்.

    ‘அண்ணுதல்' என்றால் ‘நெருங்குதல்’ எனப்பொருள். ‘அண்ணா' என்றால் ‘நெருங்க முடியாதது’ என்று பொருள்படும். அதாவது, மகாவிஷ்ணுவும், பிரம்மனும் ஈசனின் அடியையும் முடியையும் நெருங்க முடியாத திருமலை என்பதால் இத்தலம் ‘திருஅண்ணாமலை’ ஆயிற்று.

    திருஅண்ணாமலை கிருத யுகத்தில் அக்னி மலையாகவும், திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் தாமிர மலையாகவும், கலியுகத்தில் ஞானிகளின் பார்வைக்கு மரகத மலையாகவும், பாமரர்களுக்கு கல் மலையாகவும் காட்சி தருவதாக சொல்லப்படுகிறது.

    இந்தத் தலத்தில் இறைவனின் உடலில் இடப்பாகம் பெறுவதற்காக பார்வதிதேவி தவம் செய்தார், அப்படி தவம் செய்ததோடு மட்டுமின்றி, கார்த்திகை பவுர்ணமியும் கிருத்திகை நட்சத்திரமும் இணைந்த நன்னாளில் பிரதோஷ காலத்தில் திருவண்ணாமலையை கிரிவலம் வந்ததால், அன்னையின் ஆசை நிறைவேறியது. சிவபெருமான் அம்மனுக்கு தன்னுடைய உடலில் சரிபாதியை வழங்கி அருள்பாலித்தார்.

    திருவண்ணாமலையை பவுர்ணமி நாட்கள் மட்டுமின்றி, அனைத்து நாட்களிலும் கிரிவலம் செய்யலாம். அதிலும் குறிப்பாக கிரகண காலங்கள், பிரதோஷம், மாத சிவராத்திரி, கிரகப் பெயர்ச்சி காலங்களில் கிரிவலம் வந்து வழிபடுவது மிகச்சிறப்பாக சொல்லப்படுகிறது. அந்த வகையில் வரும் குருப்பெயர்ச்சி நன்னாளில் திருவண்ணாமலையை வலம்வந்து வழிபடுவது தோஷங்களை விலக்கி, அனைவருக்கும் நற்பலன்களை வழங்கும்.

    விழுப்புரத்தில் இருந்தும், திண்டிவனத்தில் இருந்தும் சுமார் 63 கிலோமீட்டர் தூரத்தில் திருவண்ணாமலை அமைந்துள்ளது. 
    தேவர்களின் குரு ‘பிரகஸ்பதி’ எனும் வியாழ பகவான் ஆவார். நவக்கிரகங்களில் பூரண சுப கிரகமாக போற்றப்படுபவர் இவர். இவருக்கு உகந்தவற்றை அறிந்து கொள்ளலாம்.
    தேவர்களின் குரு ‘பிரகஸ்பதி’ எனும் வியாழ பகவான் ஆவார். நவக்கிரகங்களில் பூரண சுப கிரகமாக போற்றப்படுபவர் இவர். ‘குருவருள் இருந்தால் திருவருள் உண்டாகும்' என்பதும், ‘குரு பார்க்க கோடி நன்மை' என்பதும் குரு பகவானை சிறப்பித்து கூறும் பழமொழிகள். பொதுவாக குரு இருக்கும் இடத்தைவிட அதன் பார்வை பதியும் இடங்களே சிறப்பான பலன்களைப் பெறுவதாக ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது

    உலோகம்- தங்கம்

    நவரத்தினம் - புஷ்பராகம்

    வஸ்திரம் - மஞ்சள் நிற வஸ்திரம்

    வாகனம் - யானை

    சமித்து - அரசு

    சுவை - இனிப்பு

    அதிதேவதை - பிரம்மா, தட்சிணாமூர்த்தி

    குணம் - சாத்வீகம்

    ஆட்சி வீடு - தனுசு, மீனம்

    உச்ச வீடு - கடகம்

    நீச வீடு - மகரம்

    நட்சத்திரங்கள் - புனர்பூசம், விசாகம், பூரட்டாதி

    குரு திசை - 16 வருடங்கள்

    ஒரு ராசியில் தங்கும் காலம் - ஒரு வருடம்

    எண்கணிதப்படி எண்- 3

    தானியம் - கொண்டக்கடலை

    புஷ்பம் - முல்லை, மஞ்சள் நிறப்பூ

    காரகத்துவம் - புத்திரப்பேறு 
    தாமிரபரணி புஷ்கர விழா 12-ந் தேதி தொடங்கி 23-ந் தேதி வரை நடக்க உள்ளது. தாமிரபரணி புஷ்கர திருவிழா நடைபெறும் 12 நாட்களும் மிகவும் விசேஷமானது.
    தாமிரபரணி புஷ்கர விழா 12-ந் தேதி தொடங்கி 23-ந் தேதி வரை நடக்க உள்ளது. இந்த புஷ்கர விழாவை உலகம் போற்றுகின்ற வகையில் நடத்த வேண்டும் என்று துறவிகள் சங்கத்தினர், மடாதிபதிகள், ஆதினங்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் ஏற்பாடு செய்து தங்களுடைய பணியை செய்து வருகிறார்கள்.

    தாமிரபரணி புஷ்கர விழா நடத்த பாபநாசம், அம்பை, கல்லிடைக்குறிச்சி, அத்தாளநல்லூர், திருப்படைமருதூர், முக்கூடல், அகஸ்தியர் தீர்த்தக்கட்டம் தென்திருப்புவனம், சேரன்மாதேவி, மேலசெவல், தேவமாணிக்கம், சுத்தமல்லி, கோடகநல்லூர், பழவூர், திருவேங்கடநாதபுரம், கொண்டாநகரம், நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணியசுவாமி கோவில் படித்துறை, தைப்பூச மண்டபம் படித்துறை, நெல்லை வண்ணார்பேட்டை மணிமூர்த்தீசுவரம், எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலை ஜடாயூத்துறை, சீவலப்பேரி, முறப்பநாடு, ஆழ்வார்திருநகரி, தென்திருப்பேரை, ஏரல், ஆத்தூர், புன்னக்காயல் ஆகிய இடங்களில் உள்ள படித்துறைகளில் அரசு அனுமதி அளித்து இருந்தது.

    தற்போது நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவில் படித்துறை, தைப்பூச மண்டபம் படித்துறை ஆகிய 2 இடங்களில் பாதுகாப்பு இல்லை என்று கூறி அரசு அனுமதி மறுத்து உள்ளது. மற்ற இடங்களில் புஷ்கர விழா நடத்தவும், மக்கள் புனித நீராடவும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. 
    தமிழகத்தின் தொன்மையான கோவில்களில் ஒன்றானதும், திருஞானசம்பந்தரால் பாடல் பெற்றதுமான திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா வருகிற 4-ந்தேதி நடக்கிறது.
    தமிழகத்தின் தொன்மையான கோவில்களில் ஒன்றானதும், திருஞானசம்பந்தரால் பாடல் பெற்றதுமான தஞ்சையை அடுத்த திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூன்றிலும் சிறந்து விளங்குகிறது. வசிஷ்ட முனிவரால் பூஜிக்கப்பட்டதால் வசிஷ்டேஸ்வரர் சுயம்புவாக தோன்றியதால் தான்தோன்றீஸ்வரர் என்ற பெயரும் கொண்டவர்.

    இந்த கோவிலில் குருபகவான் எங்கும் இல்லா சிறப்போடு தனி சன்னதியில் ராஜகுருவாக எழுந்தருளியுள்ளார். குருபகவான் தான் இருக்கும் இடத்தை விடவும், பார்க்கும் இடங்களை சுபம் பெற செய்வார். குருபகவான் ஆண்டுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆவார்.

    அதன்படி வருகிற 4-ந் தேதி குருப்பெயர்ச்சி விழா நடக்கிறது. அன்று இரவு 10.05 மணிக்கு துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு குருபகவான் பெயர்ச்சி ஆகிறார். வருகிற 10-ந் தேதி லட்சார்ச்சனையும், 12-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை பரிகார ஹோமமும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பணியாளர்கள், கிராமமக்கள் செய்து வருகின்றனர்.

    குருப்பெயர்ச்சி விழாவையொட்டி மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கலெக்டர் அண்ணாதுரை நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்யும் வகையில் தடுப்பு கட்டைகள் அமைக்க வேண்டும். வெளியூர் பக்தர்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் வழிகாட்டு பலகைகள் அமைக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். 
    குருப்பெயர்ச்சியன்று குருவை நாம் ஒவ்வொருவரும் கோவிலுக்குச் சென்று நேரில் பார்த்து வழிபடுவதே சிறப்பு. குருபகவான் தரும் யோகங்கள் என்னவென்று பார்க்கலாம்.
    கஜகேசரி யோகம்: குரு சந்திரனுக்கு கேந்திரத்தில் அதாவது 4, 7, 10 ஆகிய இடங்களில் இருந்தால் கஜகேசரி யோகம் உண்டாகிறது. இந்த யோகத்தைப் பெற்றவர்கள் செல்வம், செல்வாக்கு, வீடு, வாகனம், உயர்ந்த பதவி போன்றவற்றைப் பெற்றவர் களாக விளங்குவர்.

    குரு சந்திர யோகம்: சந்திரனுக்கு குரு 1, 5, 9-ல் காணப்பட்டால் ‘குருச்சந்திர யோகம்’ உண்டாகிறது. இந்த யோகத்தைப் பெற்றவர்கள் புகழ் மிக்கவர்களாகவும் நல்ல அந்தஸ்து படைத்தவர்களாகவும் இருப்பர்.

    குருமங்கள யோகம்: குரு செவ்வாய் சேர்க்கை பெற்றிருந்தாலும், குருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருந்தால் ‘குரு மங்கள யோகம்’ உண்டாகிறது. இந்த யோகத்தைப் பெற்றவர்கள் வீடு, இடம், வாகனம் போன்றவற்றை அதிகம் வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு.

    ஹம்ச யோகம்: சந்திரனுக்கு கேந்திரத்தில் குரு உச்சம் பெற்றிருந்தால், ‘ஹம்சயோகம்’ உண்டாகிறது. நல்ல உடலமைப்பையும், ஒழுக்கமான வாழ்க்கையும் ஏற்றவர்களாக இந்த யோகத்தில் பிறந்தவர்கள் இருப்பர்.

    சகட யோகம்: குருவுக்கு சந்திரன் 6, 8, 12 ஆகிய இடங்களில் இருந்தால் ‘சகட யோகம்’ உருவாகிறது. வாழ்க்கை வண்டிச் சக்கரம் போல, இன்பமும், துன்பமும் கலந்திருக்கும். ஒரு தொகை செலவழிந்த பிறகே மற்றொரு தொகை வந்து சேரும். பொதுவாக குரு தரும் யோகம் உங்கள் சுயஜாதகத்தில் எப்படியுள்ளது என்பதைக் கண்டறிந்து, குருவைப் போற்றிக் கொண்டாடினால் பொன்னான எதிர்காலத்தை அமைத்துக் கொள்ளும் வாய்ப்பு உருவாகும். குருவோடு மற்ற கிரகங்கள் சேர்ந்திருந்தால், அதன் பாதசார பலமறிந்து அதற்குரிய ஸ்தல வழிபாட்டை முன்னதாகச் செய்வது நல்லது. 
    தமிழகத்தின் தொன்மையான கோவில்களில் ஒன்றான திட்டை வசிஷ்டேஸ் வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா வருகிற 4-ந்தேதி நடக்கிறது.
    தமிழகத்தின் தொன்மையான கோவில்களில் ஒன்றானதும், திருஞானசம்பந்தரால் பாடல் பெற்றதுமான திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூன்றிலும் சிறந்து விளங்குகிறது. வசிஷ்ட முனிவரால் பூஜிக்கப்பட்டதால் வசிஷ்டேஸ்வரர் சுயம்புவாக தோன்றியதால் தான்தோன்றீஸ்வரர் என்ற பெயரும் கொண்டவர்.

    இந்த கோவிலில் குருபகவான் எங்கும் இல்லாத சிறப்போடு தனி சன்னதியில் ராஜகுருவாக எழுந்தருளியுள்ளார். குருபகவான் தான் இருக்கும் இடத்தை விடவும், பார்க்கும் இடங்களை சுபம் பெற செய்வார். குருபகவான் ஆண்டுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆவார்.

    அதன்படி அடுத்த மாதம் (அக்டோபர்) 4-ந் தேதி குருப்பெயர்ச்சி விழா நடக்கிறது. அன்று இரவு 10.05 மணிக்கு துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு குருபகவான் பெயர்ச்சி ஆகிறார். அடுத்தமாதம் 10-ந் தேதி லட்சார்ச்சனையும், 12-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை பரிகார ஹோமமும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் முரளிதரன் மற்றும் பணியாளர்கள், கிராமமக்கள் செய்து வருகின்றனர்.

    ×