என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஒகேனக்கல்"
- காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
- ஒகேனக்கல் அருவிக்கு செல்லும் நுழைவு வாயில் பூட்டப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பென்னாகரம்:
கடந்த சில தினங்களாக காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டிருக்கிறது.
இதனால் நேற்று ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 7 ஆயிரம் கன அடியாக வந்தது.
இந்த நிலையில் கர்நாடக பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மேலும் தமிழக நீர்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, பிலிகுண்டு, ராசிமணல், கேரட்டி, நாட்றாம்பாளையம், ஓசூர் மற்றும் கர்நாடக காவிரி நீர்பிடிப்பு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று கன மழை பெய்துள்ளது.
இதன் காரணமாக ஒகேனக்கல்லில் நீர்வரத்து சற்று அதிகரித்தது.
இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கலுக்கு வினாடிக்கு 16 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.
இதனால் மெயின் அருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மேலும் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
ஒகேனக்கல் அருவிக்கு செல்லும் நுழைவு வாயில் பூட்டப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதனால் ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
ஒகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க கூடாது. படகுகளை இயக்கவோ, படகு சவாரி செய்யவோ கூடாது என இன்று தருமபுரி மாவட்ட கலெக்டர் திவ்யதர்சினி உத்தரவிட்டார்.
மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை பொதுமக்களின் நலன் கருதி முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
தமிழக கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்து அளந்து கண்காணித்து வருகின்றனர்.
இதனால் ஊட்டமலை, சத்திரம், நாடார் கொட்டாய் உள்ளிட்ட காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக வெளியேறும்படி போலீசார் அறிவுறுத்தினர்.
காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க போலீசார், ஊர்க்காவல் படையினர் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.
- ஒகேனக்கல்லில் பரிசல் பயணத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் அரசு விதித்த கட்டணம் தவிர்த்து கூடுதலாக 500 முதல் 2000 ரூபாய் வரை பரிசல் ஓட்டிகள் வசூல் செய்கின்றனர்.
- மேலும் ஒரு பரிசலில் நான்கு பேர் மட்டுமே செல்ல வேண்டும் என அரசு கட்டுப்பாடு விதித்து இருக்கிறது. ஆனால் பரிசல் ஓட்டிகள் கூடுதலாக பணம் வசூல் செய்து கொண்டு 5, 6 பேர் என பரிசலில் அழைத்துச் செல்கின்றனர்.
ஒகேனக்கல்:
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் ஆயில் மசாஜ் செய்து, அருவிகளில் குளித்தும், அருவியின் அழகை கண்டு ரசிக்க பரிசல் பயணம் செய்து பொழுதை கழிக்கின்றனர்.
இந்நிலையில் பரிசல் பயணத்திற்கு அரசின் சார்பில் 750 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில் 150 ரூபாய் அரசுக்கு, 600 ரூபாய் பரிசல் ஓட்டுபவர்களுக்கு வழங்கப்படுகிறது.
தொடர்ந்து பரிசல் சுற்றுலாப் பயணிகள் பரிசல் பயணம் செல்வதற்கு பரிசல் துறையிலிருந்து ஐந்தருவி, மணல்மேடு, மாமரத்து கடவு மற்றும் தண்ணீர் தேக்கமடைந்துள்ள காலங்களில் சின்னாறு பரிசல் துறையிலிருந்து கூத்துக்கள், மெயினருவி, மணல் மேடு உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
அதேபோல் ஒரு பரிசலில் பயணம் செய்வதற்கு 4 பேருக்கு மட்டுமே அனுமதி. மேலும் பரிசல் பயணம் செய்பவர்கள் பாதுகாப்பு உடை கட்டாயமாக அணிய வேண்டும் என்று அரசு விதிமுறைகளை வகுத்துள்ளது.
இந்நிலையில் தற்போது மேட்டூர் அணை நிரம்பி உள்ளதால், தண்ணீர் தேக்கம் ஒகேனக்கல் வரை இருந்து வருகிறது. இதனால் சின்னாறு பரிசல் துறையில் இருந்து கோத்திக்கல், மெயின் அருவி, மணல்மேடு வரை பரிசல் பயணத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தற்போது கோடை காலம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு வந்து குதூகலமாக இருந்து விட்டுச் செல்கின்றனர். ஒகேனக்கல்லில் பரிசல் பயணத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் அரசு விதித்த கட்டணம் தவிர்த்து கூடுதலாக 500 முதல் 2000 ரூபாய் வரை பரிசல் ஓட்டிகள் வசூல் செய்கின்றனர்.
மேலும் ஒரு பரிசலில் நான்கு பேர் மட்டுமே செல்ல வேண்டும் என அரசு கட்டுப்பாடு விதித்து இருக்கிறது. ஆனால் பரிசல் ஓட்டிகள் கூடுதலாக பணம் வசூல் செய்து கொண்டு 5, 6 பேர் என பரிசலில் அழைத்துச் செல்கின்றனர்.
இங்கு ஆபத்தை உணராமல் சுற்றுலா பயணிகள் பரிசலில் பயணம் செய்கின்றனர். கடந்த காலங்களில் பரிசல் கவிழ்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
எனவே ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளை அச்சுறுத்தும் வகையில் கட்டணம் வசூல் செய்யும் பரிசல் ஓட்டிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆண்டுதோறும் எப்பொழுதும் பரிசல் பயணம் செய்யும் நிலையில் உள்ள ஒகேனக்கல்லில் பரிசல் பயணத்திற்கு கட்டணத்தை ஒழுங்குபடுத்த வேண்டும்.
மேலும் பரிசலில் அளவுக்கு அதிகமாக ஏற்றிச் செல்வதற்கும், உரிய பாதுகாப்பு கிடைக்கவும், மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக இருந்தது. தற்போது காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால் இன்று வினாடிக்கு நீர்வரத்து 14,200 கனஅடியாக அதிகரித்து வந்துள்ளது.
இதனால் மெயின் அருவியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். மேலும் சினிபால்ஸ், ஐந்தருவி மற்றும் காவிரி ஆற்றின் கரையோரங்களில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். பரிசல் சவாரி சென்று காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். #Hogenakkal
கர்நாடக மாநிலத்தில் மழை குறைந்ததால் அங்குள்ள அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது.
இதனால் கர்நாடக- தமிழக எல்லை பகுதியான பிலிக்குண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு நேற்று நீர்வரத்து 11 ஆயிரம் கனஅடியாக வந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 9 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.
கர்நாடக மாநில அணைகளில் இருந்து 2 லட்சம் கனஅடி அளவில் தண்ணீர் திறந்து விடடப்பட்டது. இதனால் ஒகேனக்கலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மெயினருவி, பெண்கள் குளிக்கும் அருவி உள்ளிட்ட பகுதிகளில் தடுப்பு கம்பிகள், சுவர்கள் சேதமடைந்தது.
மெயினருவில் தடுப்பு கம்பிகள் சேதமடைந்ததால் தொடர்ந்து 61-வது நாளாக இன்றும் மெயினருவில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
சிதலமடைந்துள்ள தடுப்பு கம்பிகள், சுவர்களை சீரமைக்க வேண்டும்என்று சுற்றுலா பயணிகள் மற்றும் அந்தபகுதி பொதுமக்கள் ஆகியோர் கடந்த சில நாட்களாகவே வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் கோரிக்கை விடுத்து வலியுறுத்தி வந்தனர். நீர்வரத்து குறைந்த பின்னரே அருவிக்கு தண்ணீரை மாற்று பாதையில் திருப்பிவிட்டு சிதலமடைந்த பகுதிகளை சரிசெய்ய முடியும் என்றார்.
இன்று நீர்வரத்து 9 ஆயிரம் கனஅடியாக குறைந்ததால் முதற்கட்டமாக ஒகேனக்கல் மெயினருவில் உள்ள தடுப்பு கம்பிகளை சரிசெய்ய அருவில் தண்ணீரை மாற்று பாதையில் திருப்பிவிட மணல் மூட்டை அடுக்கி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதற்காக எண்ணெய் மசாஜ் செய்யும் தொழிலாளர்கள் பிளாஸ்டிக் பைகளில் மணல்களை நிரப்பி மூட்டைகளை கொண்டு வந்து அடுக்கி வருகின்றனர். மெயினருவிக்கு செல்லும் தண்ணீரை மாற்று பாதையில் திருப்பிட சுமார் 400 முதல் 500 மணல் மூட்டைகள் தேவைப்படுவதால், இதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.
மெயினருவியில் குளிக்க தடைவிதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றங்கரையோரம், சினிபால்ஸ், முதலை பண்ணை, நாகர்கோவில் ஆகிய பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். பின்னர் சுற்றுலா பயணிகள் கோத்திக்கல் பாறையில் இருந்து மணல் திட்டு வரை இயக்கப்படும் பரிசலில் சென்றனர். #Hogenakkal
கர்நாடகா மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் ஆகிய அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் வினாடிக்கு 2,000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து நேற்று காலை படிப்படியாக குறையத்தொடங்கியது. மாலை 5 மணி நிலவரப்படி வினாடிக்கு 1,800 கனஅடி தண்ணீர் ஒகேனக்கல்லுக்கு வந்தது.
இந்த தண்ணீர், ஒகேனக்கல் பிரதான மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் கொட்டியது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது. இவர்கள் அருவிகள் மற்றும் காவிரி கரையோரம் குளித்தனர். பின்னர் அவர்கள் பார்வை கோபுரம், தொங்குபாலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று காவிரி ஆற்றின் இயற்கை அழகை கண்டு ரசித்தனர். மேலும் சுற்றுலா பயணிகள் குடும்பத்தினர், நண்பர்களுடன் பரிசலில் சென்றனர்.
கர்நாடக மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் இன்னும் ஒரு சில நாட்களில் ஒகேனக்கல்லுக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் கர்நாடகா, தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் காவிரி ஆற்றில் வரும் தண்ணீரின் அளவை அளந்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருவி, நடைபாதை மற்றும் காவிரி கரையோர பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் காவிரி ஆற்றில் கடந்த 10 நாட்களாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. தற்போது காவரி நீர் பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் நீரின் வரத்து குறைந்தது. நேற்று மாலை 2100 கன அடி வீதம் தண்ணீர் வந்தது. இன்று நீர்வரத்து 1300 கன அடியாக குறைந்தது.
தற்போது கர்நாடகா மாநிலத்தில் மழைபெய்து வருவதால் அங்குள்ள அணைகளான கிருஷ்ணராஜசாகர் அணை, கபினி உள்ளிட்ட அணைகளில் நீர்வரத்து அதிரித்து வருகிறது. அந்த அணைகள் நிரம்பியதும் அதிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் விரைவில் கர்நாடக-தமிழக எல்லை பகுதியான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கலுக்கு வந்தடையும். இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வந்தடையும்.
ஒகேனக்கல்லுக்கு நேற்று 800 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று மாலை காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும், ஒகேனக்கல் அருகே உள்ள கிருஷ்ணகிரி - கர்நாடக எல்லையில் உள்ள பகுதிகளிலும் மழை பெய்ததால் நீர்வரத்து அதிகரித்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1700 கனஅடியாக அதிகரித்துள்ளது.
தற்போது கோடை விடுமுறை என்பதால் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்நு சுற்றுலா பயணிகள் இன்று ஒகேனக்கல் வந்திருந்தனர்.
கர்நாடக-தமிழக எல்லைபகுதியான அஞ்சசெட்டி, உலுக்கானபள்ளி, நட்டாறம்பாளையம், கிகேரெட்டி ஆகிய பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்ததால் நீர்வரத்து 3000 கனஅடியாக அதிகரித்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்