search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாகதோஷம்"

    கால சர்ப்ப தோஷம் என்பது என்ன? கால சர்ப்ப தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எந்த பரிகாரங்களை செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
    கால சர்ப்ப தோஷம் என்பது என்ன? காலத்தால் மறுக்கப்பட்டவர்கள். காலம் கை கொடுக்காமல் கைவிடப்பட்டவர்கள். இதை எதிர்த்து நின்று மேலே வருகிறவர்கள் இருக்கிறார்களே அவர்களுக்கு 39 வயதிலிருந்து மிகவும் உச்சமாக இருக்கும். உச்சத்திற்கும் வருவார்கள். ஆனால் அதுவரைக்கு உண்டு இல்லை என்று ஆக்கும். குறிப்பாக 26 வயது வரை ஒரு வழியாக்கி விடும்.

    அத்தகைய கால சர்ப்ப தோஷம் இருப்பவர்கள் கால பைரவரை வணங்குவதுடன் குலதெய்வ வழிபாட்டை மறக்காமல் செய்ய வேண்டும்.
    நாகதோஷம் நீங்குவதற்கு தமிழ்நாட்டிலேயே சக்திவாய்ந்த தலமாக விளங்கிவரும் முண்டகக்கண்ணி அம்மன் திருக்கோயில் சென்னை மயிலாப்பூரில் அமைந்திருக்கிறது.
    நாகதோஷம் நீங்குவதற்கு தமிழ்நாட்டிலேயே சக்திவாய்ந்த தலமாக விளங்கிவரும் முண்டகக்கண்ணி அம்மன் திருக்கோயில் சென்னை மயிலாப்பூரில் அமைந்திருக்கிறது. சென்னைப் பட்டணம் தோன்றுவதற்கு சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்த அம்மன் அவதரித்ததாக ஆலய வரலாறு கூறுகிறது. ஆனால், அதையும் தாண்டி பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே தோன்றியிருக்கக் கூடும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். இந்த ஆலயத்தின் மகிமையே, அம்மன் சுயம்புவாக வடிவெடுத்து இருப்பதுதான்.

    நாகதோஷம் இருப்பவர்கள் முண்டகக்கண்ணி அம்மனை வழிப்பட்டு, நாகக்கன்னி சிலை பிரதிஷ்டை செய்வதாக வேண்டிக்கொள்கிறார்கள். அதன்பிறகு, 48 நாட்களுக்கு நீரிலேயே நாகக்கன்னியை வைத்திருந்து, அதை ஆலயத்தின் முகப்பில் இருக்கிற மரத்தடியில் பிரதிஷ்டை செய்து, அதற்கு பாலாபிஷேகமும் வழிபாடும் நடத்தி வழிபடுவது இந்த ஆலயத்தின் விசேஷம். அதேபோல ஆடி மாதம் அம்மனுக்கு மஞ்சள், சந்தனம், குங்குமம் காப்பு மற்றும் அன்னாபிஷேகம் செய்வதும் இங்கு விசேஷம்.

    ஆடிப்பூரத்துக்கு 1008 மலர் கூடைகள் எடுத்துவந்து அம்மனுக்கு பூச்சுடுதல் நடக்கும். நவராத்தி 10 நாளும் உற்சவ புறபாடு இருக்கும். 10 நாளும் 10 அலங்காரத்தில் அம்மன் காட்சி தருவாள். எல்லா விசேஷ நாளிலும் அம்மனுக்கு தங்கக் கவசம் சாற்றி வழிபாடு நடக்கும்.
    நாகதோஷம் உள்ளவர்கள், நாகாத்தம்மனை வழிபடலாம். மேலும் நாகாத்தம்மனை நினைத்து, கீழே குறிப்பிடப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
    நாகதோஷம் உள்ளவர்கள், நாகாத்தம்மனை வழிபடலாம். தினமும் நாகாத்தம்மனுக்கு பூஜை செய்து வழிப்பட்டு வந்தால், நாக தோஷம் நீங்கும். மேலும் நாகாத்தம்மனை நினைத்து,கீழே குறிப்பிடப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

    ஓம் ரூபப் பிரபவம் நமஹ;
    ஓம் சாரும் கேவும் நமஹ;
    ஓம் சரவும் பரவும் நமஹ;
    ஓம் நய்யும் மெய்யும் நமஹ;
    ஓம் ஜெகமும் புரமும் நமஹ;
    ஓம் காளத்தி மேளத்தி நமஹ;
    ஓம் ஜாலும் மேலும் நமஹ;
    ஓம் நகுடத்தி பெகுடத்தி நமஹ;
    ஓம் சரகத்தி பாபத்தி நமஹ;
    ஓம் சரசாலி பிரசாலி நமஹ;
    ஓம் ஓம் ஓம்!! 
    முண்டகக்கண்ணியம்மன் ஆலயத்துக்கு வந்து அங்குள்ள நாகர் சிலைகளுக்கு உங்கள் கைப்பட நீங்களே முட்டை, பால் ஊற்றி வழிபட்டாலே நாகதோஷம் அகன்று விடும்.
    சிலரது ஜாதகத்தில் ராகு, கேது கிரகங்களின் அமைப்பு சரி இல்லாமல் இருக்கும். இதன் காரணமாக எத்தனை வரன் பார்த்தாலும் திருமண யோகம் என்பதே வராது. கடுமையான நாகதோஷம் இருந்தால் இத்தகைய நிலை ஏற்படும். முண்டகக்கண்ணியம்மன் ஆலயத்துக்கு வந்து அங்குள்ள நாகர் சிலைகளுக்கு உங்கள் கைப்பட நீங்களே முட்டை, பால் ஊற்றி வழிபட்டாலே தோஷம் அகன்று விடும்.

    முண்டகக்கண்ணி அம்மன் ஆலயத்துக்கு சென்றால் கருவறை பின் பகுதியில் ஒரு பெரிய அலமரம் இருப்பதைப் பார்க்கலாம். அந்த ஆல மரத்துக்குள் நாக புற்று உள்ளது. அருகில் நாகர் சன்னதி உள்ளது.

    அந்த சன்னதியில் மஞ்சள், குங்குமம், பன்னீர் தெளித்து அபிஷேகம் செய்ய வேண்டும். பிறகு நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.

    வசதி இருப்பவர்கள் நாகர் சிலையை பிரதிஷ்டை செய்தும் வழிபடலாம். இத்தகைய வழிபாடுகளால் எத்தகைய நாக தோஷமும் விலகிச் சென்றுவிடும்.c
    திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற கொங்கு நாட்டுச் சிவதலமான திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் நாகதோஷத்திற்கு சிறந்த பரிகார தலமாக விளங்குகிறது.
    திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில், திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற கொங்கு நாட்டுச் சிவதலமாகும். இந்த கோவிலில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் சன்னிதியின் முன் மண்டபத்தில் ஆமை மண்டபம் ஒன்று உள்ளது.

    இக்கோவிலின் தூண்கள், மண்டபச் சுவர்கள்என அனைத்துப் பகுதிகளும் அழகிய சிற்ப வேலைப்பாடுகளைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. படிக்கட்டுகள் வழியே மலைக்குச் செல்லும் வழியில், பாறையில் செதுக்கப்பட்டுள்ள நாகர் சன்னிதி மிகவும் பிரசித்தி பெற்றது. நாக தோஷங்கள் நீங்குவதற்காக இங்கு பக்தர்கள் அதிக அளவில் வருகிறார்கள்.

    அர்த்தநாரீஸ்வரர் கோவில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சியில் மலையின் மீதுள்ளது. இக்கோவில் ஈரோட்டிலிருந்து 20 கி.மீ. தொலைவிலும், சேலத்திலிருந்து 45 கி.மீ.தொலைவிலும் அமைந்துள்ளது. மலையின் அடிவாரத்தில் திருச்செங்கோடு கயிலாசநாதர் கோவில் உள்ளது. 
    ×