search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குருகிராம்"

    அரியானாவில் பாதுகாவலரால் சுடப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நீதிபதியின் மகன் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். #JudgeFamilyAttack
    குருகிராம்:

    அரியானாவில் குருகிராம் நகரில் மக்கள் நெருக்கடி மிகுந்த ஆர்கடியா மார்க்கெட் அருகே கடந்த அக்டோபர் 13-ஆம் தேதி நீதிபதியின் மனைவி மற்றும் மகனை நீதிபதியின் பாதுகாவலரே துப்பாக்கியால் சுட்டார். இதில் படுகாயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நீதிபதியின் மனைவி உயிரிழந்ததாக மருத்துவர்கள் முன்னதாக அறிவித்திருந்தனர்.

    பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த நீதிபதியின் மகன் துருவ் (18) சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இன்று உயிரிழந்தார்.



    பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த பாதுகாவலரே அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. துப்பாக்கிச்சூடு நடத்திய மகிபால் என்ற பாதுகாவலரை கைது செய்த போலீசார், இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #JudgeFamilyAttack

    அரியானாவில் நீதிபதியின் மனைவி, மகன் மீது இன்று துப்பாக்கியால் சுட்ட பாதுகாவலரை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். #JudgeFamilyAttack
    குருகிராம்:

    அரியானாவில் உள்ள குருகிராம் நகரில் மக்கள் நெருக்கடி மிகுந்த ஆர்கடியா மார்க்கெட் உள்ளது. இன்று மதியம் மக்கள் நடமாட்டம் மிகுந்த அந்த மார்க்கெட்டில் நீதிபதியின் மனைவி மற்றும் மகன் மீது அவர்களது பாதுகாவலர் துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

    பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த பாதுகாவலரே அவர்கள்மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் படுகாயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



    விசாரணையில், துப்பாக்கிச்சூடு நடத்திய பாதுகாவலரின் பெயர் மகிபால் என்பதும், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது. 

    அதைத்தொடர்ந்து, அருகிலுள்ள சதார் போலீசார் தப்பியோட முயன்ற மகிபாலை மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர். 
    இதுகுறித்து உள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #JudgeFamilyAttack
    ×