search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 158425"

    ரேபரேலி தொகுதியில் ‘பிரியங்காவை காணவில்லை’ என பல இடங்களில் சுவரொட்டிகளை ஒட்டியுள்ள சம்பவம் காங்கிரஸ் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. #PriyankaGandhi #RaeBareli #Missing
    ரேபரேலி:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, உத்தரபிரதேசத்தின் ரேபரேலி தொகுதி எம்.பி. ஆவார். அங்கு சோனியா காந்திக்கு பதிலாக அவரது மகள் பிரியங்காதான் கட்சி நடவடிக்கைகளை கவனித்து வருகிறார். ஆனால் சமீப காலமாக அவர் தொகுதிக்கு செல்லவில்லை என தெரிகிறது.



    இதனால் ஆத்திரம் அடைந்த அந்த தொகுதிவாசிகள் ‘பிரியங்காவை காணவில்லை’ என பல இடங்களில் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். ரேபரேலி தொகுதி மக்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தினர் எனக்கூறும் சோனியா குடும்பத்தினர், தற்போது அதை மறந்துவிட்டனர் என்றும் அதில் கூறப்பட்டு இருந்தது. இந்த சுவரொட்டிகளால் தொகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விவகாரம் மாநில காங்கிரசிலும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. #PriyankaGandhi #RaeBareli #Missing 
    நடிகர் எஸ்.வி. சேகரை தேடப்படும் நபராக அறிவித்து சென்னை நகரம் முழுவதும் பரபரப்பு சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.
    சென்னை:

    நடிகர் எஸ்.வி. சேகர் சில தினங்களுக்கு முன்பு தனது டுவிட்டர் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்களை அவதூறாக விமர்சனம் செய்து பதிவு வெளியிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் பத்திரிகையாளர் சங்கத்தினர் புகார் அளித்தனர்.

    அவர் மீது பொது அமைதியை சீர் குலைத்தல், அவதூறு பரப்புதல், பெண் வன்கொடுமை உள்ளிட்ட 4 சட்டப்பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கைது செய்வதற்கான எந்த நடவடிக்கையும் போலீசார் மேற் கொள்ளவில்லை.

    கைது நடவடிக்கையில் இருந்து தப்புவதற்காக எஸ்.வி. சேகர் முன் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். ஆனால் முன் ஜாமீன் மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது. மேலும் இந்த வழக்கில் மற்றவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது போல எஸ்.வி. சேகர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார். அதன் பிறகும் எஸ்.வி.சேகரை கைது செய்ய போலீசார் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

    முன்ஜாமீன் கிடைக்காததால் அவர் தலைமறைவாகிவிட்டதாக தகவல் வெளியானது. எஸ்.வி. சேகரை கைது செய்யாததற்கு அவரது உறவினர் ஒருவரின் தலையீடே காரணம் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டினர்.

    இந்த நிலையில் எஸ்.வி.சேகர் போலீசாருக்கு சவால் விடும் வகையில் 2 நாட்களுக்கு முன்பு சென்னை பாண்டி பஜாரில் நடந்த விழாவில் பங்கேற்றார். இந்த விழாவில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனும் கலந்து கொண்டார். ஆனாலும் அவரை போலீசார் கைது செய்ய எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

    இந்த நிலையில் நடிகர் எஸ்.வி. சேகரை தேடப்படும் நபராக அறிவித்து சென்னை நகரம் முழுவதும் பரபரப்பு சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. மக்கள் மன்றத்தினர் இந்த சுவரொட்டியை ஒட்டியுள்ளனர். மயிலாப்பூர் பகுதியில் இந்த சுவரொட்டி அதிகமாக ஒட்டப்பட்டுள்ளன. அவருக்கு எதிரான வாசகங்களும் அதில் இடம் பெற்றுள்ளன. #SVeShekher
    ×