search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 158947"

    • மாருதி சுசுகி நிறுவன கார் மாடல்களில் புதிய கனெக்டிவிட்டி அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
    • மாருதி கார்களில் தற்போது டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்திய சந்தையில் முன்னணி கார் உற்பத்தியாளராக இருக்கும் மாருதி சுசுகி, தனது பலேனோ, XL6 மற்றும் எர்டிகா கார் மாடல்களை அப்டேட் செய்து கனெக்டிவிட்டி அம்சங்களை வழங்கி இருக்கிறது. புதிய மாடல்கள் அனைத்திலும் தற்போது ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி, 9 இன்ச் ஸ்மார்ட்பிளே ப்ரோ மற்றும் ப்ரோ பிளஸ் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    மேலும் புதிய கார்களில் ஸ்பீடோமீட்டர் எம்ஐடி-யில் டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. பலேனோ வாடிக்கையாளர்களுக்கு ஹெட்-அப் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. கூடுதலாக XL6 மற்றும் எர்டிகா மாடல்களில் சரவுண்ட் சவுண்ட் அர்கமிஸ் சவுண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    வாடிக்கையாளர்கள் புதிய கனெக்டிவிட்டி அம்சங்களை ஒவர்-தி-ஏர் அப்டேட் முறையில் பெற்றுக் கொள்ளலாம். மேலும் வாடிக்கையாளர்கள் தங்களின் ஸ்மார்ட்போன் அல்லது மாருதி சுசுகி வலைதளம் மூலம் அப்டேட் செய்து கொள்ளலாம்.

    சமீபத்தில் மாருதி சுசுகி தனது 40 ஆவது ஆண்டு விழாவை கொண்டாடும் வமகையில் பிளாக் எடிஷன் மாடல்களை அறிமுகம் செய்தது. இந்த ஸ்பெஷல் எடிஷன் மாடல் பியல் மிட்நைட் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது.

    • கியா நிறுவனத்தின் 2023 செல்டோஸ் மாடல் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    • புதிய 2023 செல்டோஸ் மாடலில் பிஎஸ் 6 2.0 புகை விதிகளுக்கு பொருந்தும் என்ஜின் வழங்கப்படுகிறது.

    கியா இந்தியா நிறுவனம் செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புதிய செல்டோஸ் மாடல் கடந்த ஆண்டு நவம்பர் மாத வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், 2023 செல்டோஸ் மாடல் இந்தியாவில் டெஸ்டிங் செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

    2019 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், செல்டோஸ் மாடல் அப்டேட் செய்யப்படுவது இதுவே முதல் முறை ஆகும். புதிய மாடல் ஏற்கனவே சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு விட்ட நிலையில், இந்த எஸ்யுவி வெளிப்புற ஸ்டைலிங்கில் மாற்றங்களை பெற்று இருக்கிறது. 2023 மாடலில் சிக்னேச்சர் டைகர் நோஸ், எல்இடி ஹெட்லேம்ப் கிளஸ்டர்கள், முன்புற கிரில் பகுதியில் டிஆர்எல்கள் உள்ளன.

    இத்துடன் டூயல் டோன் சில்வர் மற்றும் பிளாக் ஃபினிஷ் செய்யப்பட்ட அலாய் வீல்கள், ரிடிசைன் செய்யப்பட்ட டெயில் லேம்ப்கள், இலுமினேட் செய்யப்பட்ட லைட் ஸ்டிரைப் டெயில்கேட் முழுக்க இடம்பெற்று இருக்கிறது. கேபினுள் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் மற்றும் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் எவ்வித மாற்றங்களையும் பெறவில்லை.

    பவர்டிரெயினை பொருத்தவரை 2023 செல்டோஸ் மாடலில் தற்போதைய வெர்ஷனில் உள்ளதை போன்றே 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின்கள் வழங்கப்படும் என தெரிகிறது. இவை புதிய RDE மற்றும் BS6 2 புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் அப்டேட் செய்யப்பட்டு இருக்கும். இரு என்ஜின்களுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    வரும் மாதங்களில் 2023 கியா செல்டோஸ் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், இந்த மாடல் மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா அர்பன் குரூயிசர் ஹைரைடர், ஃபோக்ஸ்வேகன் டைகுன், எம்ஜி ஆஸ்டர், ஸ்கோடா குஷக் மற்றும் ஹூண்டாய் கிரெட்டா போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும். 

    Photo Courtesy: Rushlane

    • இந்தியாவில் புது கார் அறிமுகம் செய்வது பற்றி நிசான் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
    • புதிய கார் இந்தியா மட்டுமின்றி லத்தின் அமெரிக்கா போன்ற சர்வதேச சந்தைகளிலும் அறிமுகமாகிறது.

    இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் முன்னணி கார் உற்பத்தியாளர்களில் ஒன்றாக உருவெடுக்க நிசான் திட்டமிட்டு இருந்தது. பல்வேறு பிரிவுகளில் புதிய கார் மாடல்களை அறிமுகம் செய்வதில் நிசான் கவனம் செலுத்தி வந்தது. மைக்ரா ஹேச்பேக், சன்னி செடான், எவானியா எம்பிவி, நிக்ஸ் எஸ்யுவி, டெரானோ எஸ்யுவி என ஏராள மாடல்களை அறிமுகம் செய்தது. எனினும், இவை எதுவும் நிசான் நிறுவனத்திற்கு பலன் அளிக்கவில்லை.

    இந்திய சந்தையில் இருந்து வெளியேற நிசான் திட்டமிட நினைத்த காலத்தில் மேக்னைட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. மேக்னைட் மாடல் தனியே நின்று நிசான் இந்தியாவை விட்டு வெளியேறாமல் செய்தது. ரெனால்ட்-நிசான் கூட்டணியில் ஏற்கனவே பிளாட்ஃபார்ம் மற்றும் என்ஜின் பகிர்ந்து கொண்டு வருகின்றன. முன்னதாக டஸ்டர் மற்றும் டெரானோ மற்றும் சன்னி, ஸ்கேலா மாடல்கள் இவ்வாறு அறிமுகமாகின.

    சமீபத்தில் ரெனால்ட் கைகர் மாடல் நிசான் மேக்னைட் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் டிரைபர் மாடலை போன்ற பிளாட்ஃபார்மிலேயே உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேக்னைட் பெற்று இருக்கும் வெற்றியை அடுத்து நிசான் நிறுவனம் இந்திய சந்தையில் மற்றொரு புது காரை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கிறது.

    புதிய நிசான் கார் ரெனால்ட் டிரைபர் மாடலை தழுவி உருவாக்கப்படுகிறது. டிரைபர் மாடல் சப்-4 மீட்டர் எம்பிவி மாடல் ஆகும். இதே போன்ற வழிமுறையை டேட்சன் பிராண்டு முதல் முறையாக தனது கோ பிளஸ் மாடலில் பின்பற்றி இருந்தது. டிரைபர் மாடல் எண்ட்ரி லெவல் 7 சீட்டர் காராக டிசைன் செய்யப்பட்டு உள்ளது.

    நிசான் நிறுவனம் தற்போது இந்திய சந்தையில் மேக்னைட் மற்றும் கிக்ஸ் என இரண்டு கார்களை மட்டுமே விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில், வரும் ஏப்ரல் மாத வாக்கில் கிக்ஸ் மாடலின் விற்பனை நிறுத்தப்பட இருக்கிறது. நிசான் நிறுவனத்தின் டிரைபர் வெர்ஷன் இந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

    • ஆடி நிறுவனத்தின் முற்றிலும் புதிய Q3 ஸ்போர்ட்பேக் புதிய Q3 மாடலை விட அதிக ஸ்போர்ட் அம்சங்களை கொண்டிருக்கிறது.
    • சர்வதேச சந்தையில் Q3 ஸ்போர்ட்பேக் மாடல் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    ஆடி இந்தியா நிறுவனம் முற்றிலும் புதிய ஆடி Q3 ஸ்போர்ட்பேக் மாடலுக்கான முன்பதிவை துவங்கி இருக்கிறது. புதிய ஆடி Q3 ஸ்போர்ட்பேக் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஆடி Q3 மாடலை விட அதிக ஸ்போர்ட் அம்சங்களை கொண்டிருக்கிறது. புதிய ஆடி Q3 விலை ரூ. 44 லட்சத்து 90 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 50 லட்சத்து 40 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிது.

    புதிய ஆடி Q3 ஸ்போர்ட்பேக் மாடல் கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஆடி Q3 எஸ்யுவி-யை விட புதிய Q3 ஸ்போர்ட்பேக் விலை சற்று அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. புது ஸ்போர்ட்பேக் மாடலில் ஹனி-காம்ப் கிரில், பிளாக்டு-அவுட் எலிமண்ட்கள், ஸ்லோபிங் ரூஃப்லைன் உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கிறது.

    இத்துடன் அலாய் வீல்கள், காரின் பின்புறம் டுவீக் செய்யப்பட்டு இருக்கின்றன. இவை காருக்கு ஸ்போர்ட் தோற்றத்தை வழங்குகின்றன. புதிய Q3 ஸ்போர்ட்பேக் டிசைன் மற்றும் ஸ்டைலிங் அதிக கவனமுடன் உருாக்கப்பட்டு இருப்பது அதன் தோற்றத்திலேயே அறிந்து கொள்ள முடிகிறது. காரின் கேபின் பகுதியில் Q3 ஸ்டாண்டர்டு வேரியண்டில் உள்ளதை போன்ற தோற்றம், ஸ்போர்ட் அக்செண்ட்கள் உள்ளன.

    இத்துடன் ஆடியின் டிஜிட்டல் காக்பிட், 8.9 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் டிஸ்டம், MMI நேவிகேஷன், கனெக்டெட் கார் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் ஆடி ஸ்மார்ட்போன் இண்டர்ஃபேஸ், ஆடி சவுண்ட் சிஸ்டம் உள்ளது. இந்தியாவில் ஆடி Q3 ஸ்போர்ட்பேக் மாடலில் 2.0 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட 45 TFSI வெர்ஷன் என்ஜின் வழங்கப்படுகிறது.

    இந்த என்ஜின் 241 ஹெச்பி பவர், 370 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 6.6 நொடிகளில் எட்டிவிடும். இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 233 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.

    • ரெனால்ட் நிறுவனம் பிப்ரவரி 2023 மாதத்திற்கான சலுகை விவரங்களை வெளியிட்டு உள்ளது.
    • இந்த சலுகைகள் வேரியண்ட் மற்றும் ஒவ்வொரு பகுதிக்கு ஏற்ப வேறுபடும்.

    ரெனால்ட் இந்தியா நிறுவனம் தனது வாகனங்கள் விற்பனையை ஊக்குவிக்க பிப்ரவரி 2023 மாதத்திற்கான சலுகை விவரங்களை வெளியிட்டு உள்ளது. இந்த முறை கார்களுக்கு அதிகபட்சம் ரூ. 62 ஆயிரம் வரையிலான பலன்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இவை தள்ளுபடி, எக்சேன்ஜ் மற்றும் கார்ப்பரேட் பலன்கள் வடிவில் வழங்கப்படுகின்றன. மேலும் இவை ஒவ்வொரு மாடல், வேரியண்ட் மற்றும் பகுதிக்கு ஏற்ப வேறுபடும்.

    சலுகை கிடைக்கும் பட்சத்தில் விவசாயிகள், சார்பன்ச் மற்றும் கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள் ஊரக பலன்களின் கீழ் ரூ. 5 ஆயிரம் வரை தள்ளுபடி பெறலாம். இத்துடன் RELIVE ஸ்கிராபேஜ் திட்டத்தின் கீழ் அதிகபட்சம் ரூ. 10 ஆயிரம் வரையிலான பலன்களை பெற முடியும். சமீபத்தில் தான் ரெனால்ட் நிறுவனம் தனது கார்களில் பிஎஸ்6 ஸ்டெப் 2 புகை விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்தது. தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கும் சலுகைகள் பிப்ரவரி 28 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது.

    ரெனால்ட் டிரைபர் மாடலை வாங்குவோருக்கு அதிகபட்சம் ரூ. 62 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. இவை வாகன குறியீட்டு எண்ணிற்கு ஏற்ப வேறுபடும். அந்த வகையில் வாகன குறியீட்டு எண் 2022 மாடலின் தேர்வு செய்யப்பட்ட வேரியண்ட்களை வாங்கும் போது ரூ. 25 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 25 ஆயிரம் எக்சேன்ஜ் சலுகை மற்றும் ரூ. 12 ஆயிரம் கார்ப்பரேட் பலன்கள் வழங்கப்படுகின்றன.

    வாகன குறியீட்டு எண் 2023 வாங்கும் போது ரூ. 15 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 25 ஆயிரம் எக்சேன்ஜ் பலன்கள் மற்றும் ரூ. 12 ஆயிரம் வரை கார்ப்பரேட் பலன்கள் வழங்கப்படுகின்றன. இந்த சீரிசில் அதிநவீன மாடலாக பிஎஸ்6 ஃபேஸ் 2 வாங்கும் போது ரூ. 15 ஆயிரம் எக்சேன்ஜ் சலுகையும், 12 ஆயிரம் வரை கார்ப்பரேட் பலன்கள் வழங்கப்படுகின்றன.

    ரெனால்ட் கைகர் வாகன குறியீட்டு எண் 2022 மற்றும் 2023 வாங்குவோருக்கு ரூ. 25 ஆயிரம் தள்ளுபடி (தேர்வு செய்யப்பட்ட வேரியண்ட்களுக்கு மட்டும்), ரூ. 25 ஆயிரம் எக்சேன்ஜ் சலுகை, ரூ. 12 ஆயிரம் கார்ப்பரேட் பலன்கள் வழங்கப்படுகின்றன. இதே சீரிசில் பிஎஸ்6 ஃபேஸ் 2 வாங்கும் போது ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் பலன்கள், ரூ. 12 ஆயிரம் கார்ப்பரேட் பலன்கள் வழங்கப்படுகிறது.

    ரெனால்ட் குவிட் வாகன குறியீட்டு எண் 2022 மாடலை வாங்கும் போது ரூ. 20 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 20 ஆயிரம் எக்சேன்ஜ் சலுகை ரூ. 12 ஆயிரம் கார்ப்பரேட் பலன்கள் வழங்கப்படுகின்றன. இதே காரின் பிஎஸ்6 ஃபேஸ் 2 வாங்கும் போது ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் சலுகை ரூ. 12 ஆயிரம் கார்ப்பரேட்பலன்களாக வழங்கப்படுகின்றன.

    • கியா நிறுவனத்தின் செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் ADAS தொழில்நுட்பம் வழங்கப்படும் என தகவல்.
    • கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம்.

    கியா செல்டோஸ் எஸ்யுவி மாடல் விரைவில் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட இருக்கிறது. இந்திய சந்தையில் இந்த ஆண்டு மத்தியில் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. முன்னதாக 2022 ஜூன் மாத வாக்கில் கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. வெளியீட்டிற்கு முன் இந்த கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் படங்கள் வெளியாகி வருகின்றன.

    புதிய கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 160 ஹெச்பி பவர், 253 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. தற்போது விற்பனை செய்யப்படும் மாடலில் உள்ள 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் 140 ஹெச்பி பவர், 242 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டிசிடி, 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஃபேஸ்லிஃப்ட் மாடல் என்ற வகையில், செல்டோஸ் மாடலில் ரிடிசைன் செய்யப்பட்ட கிரில், முன்புற ஹெட்லேம்ப்கள், எல்இடி டேடைம் ரன்னிங் லைட்கள் வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் அலாய் வீல்களில் புது டிசைனை எதிர்பார்க்கலாம். காரின் பின்புறம் டெயில் லேம்ப் மற்றும் எல்இடி லைட் பார் ஒன்றாக இணைக்கப்பட்டு இருக்கும் என்றும் இதன் மத்தியில் கியா பேட்ஜ் இடம்பெற்று இருக்கும் என தெரிகிறது.

    இந்திய சந்தையில் கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் டொயோட்டா அர்பன் குரூயிசர் ஹைரைடர், மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா மற்றும் ஹூண்டாய் கிரெட்டா போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    • டொயோட்டா நிறுவனத்தின் அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடல் மூன்று வித வேரியண்ட்களில் கிடைக்கிறது.
    • இந்தியாவில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் இந்த காம்பேக்ட் எஸ்யுவி மாடலின் விலை அறிவிக்கப்பட்டது.

    டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் தனது அர்பன் குரூயிசர் ஹைரைடர் ஹைப்ரிட் மாடல் விலையை ரூ. 50 ஆயிரம் வரை அதிகரித்து இருக்கிறது. இந்த விலை உயர்வு காரின் மூன்று வேரியண்ட்களுக்கும் பொருந்தும். கடந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடலின் விலை அறிவிக்கப்பட்டது. அந்த வகையில், இந்த காரின் முதல் விலை உயர்வு இது ஆகும்.

    மாருதி சுசுகி நிறுவனத்தின் கிராண்ட் விட்டாரா மாடலின் ரிபிராண்டு செய்யப்பட்ட வெர்ஷனாக அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த கார் பெட்ரோல் மற்றும் ஹைப்ரிட் என இருவித பவர்டிரெயின் ஆப்ஷ்களில் கிடைக்கிறது. இதுதவிர இந்த காரின் CNG வேரியண்ட் விலைகளும் இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டு இருந்தது. அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடல்- E, S, G மற்றும் V என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    இந்திய சந்தையில் அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடலின் விலை ரூ. 15 லட்சத்து 11 ஆயிரம் என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 18 லட்சத்து 99 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. தற்போது இந்த விலை ரூ. 15 லட்சத்து 61 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 19 லட்சத்து 49 ஆயிரம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    ஹைரைடர் ஸ்டிராங் ஹைப்ரிட் மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் உள்ளது. இதன் பெட்ரோல் என்ஜின் 91 ஹெச்பி பவர், 122 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும், எலெக்ட்ரிக் மோட்டார் 79 ஹெச்பி பவர், 141 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் இ-டிரைவ் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த ஸ்டிராங் ஹைப்ரிட் எஸ்யுவி லிட்டருக்கு 27.97 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என டொயோட்டொ தெரிவித்துள்ளது.

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ட்ரோஸ் மற்றும் பன்ச் CNG மாடல்கள் ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டது.
    • டாடா அல்ட்ரோஸ் மற்றும் பன்ச் மாடல்களில் டுவின் சிலிண்டர் செட்டப் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் ஹேரியர் EV, சியெரா EV, கர்வ் ICE, அல்ட்ரோஸ் ரேசர் மற்றும் பல்வேறு மாடல்களை காட்சிப்படுத்தது. இத்துடன் பன்ச் மற்றும் அல்ட்ரோஸ் CNG மாடல்களையும் காட்சிக்கு வைத்தது. தற்போது டாடா பன்ச் மற்றும் அல்ட்ரோஸ் CNG மாடல்கள் இந்திய சந்தையில் ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என உறுதியாகி இருக்கிறது.

    டாடா பன்ச் மற்றும் அல்ட்ரோஸ் iCNG வெர்ஷன்களில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் உள்ளது. இந்த என்ஜின் 84 ஹெச்பி பவர், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. CNG மோடில் இந்த என்ஜின் 76 ஹெச்பி பவர், 97 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதில் உள்ள டுவின் சிலிண்டர் தொழில்நுட்பம் காரணமாக CNG திறன் 60 லிட்டர்களாக இருக்கும்.

    புதிய டாடா அல்ட்ரோஸ் CNG மாடலில் ஆறு ஏர்பேக், எல்இடி டிஆர்எல்கள், ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், எலெக்ட்ரிக் சன்ரூஃப், 16 இன்ச் டூயல் டோன் ஆலாய் வீல்கள், 7 இன்ச் ஹார்மன் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், ரியர் ஏசி வெண்ட்கள், உயரத்தை அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை, லெதர் இருக்கைகள் வழங்கப்படுகிறது.

    டாடா பன்ச் iCNG மாடலில் எலெக்ட்ரிக் சன்ரூஃப், 7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, ரியர் ஏசி வெண்ட்கள், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், 16 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன.

    • ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய வென்யூ மாடல் சக்திவாய்ந்த டீசல் என்ஜின் கொண்டிருக்கிறது.
    • சக்திவாய்ந்த என்ஜின் மட்டுமின்றி புது காரில் சில அம்சங்களும் கூடுதலாக வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஹூண்டாய் நிறுவனம் மேம்பட்ட 2023 வென்யூ மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஹூண்டாய் வென்யூ மாடலில் சக்திவாய்ந்த டீசல் என்ஜின் மற்றும் அம்சங்கள் பட்டியலில் மாற்றங்களை எதிர்கொண்டுள்ளது. இந்தியாவில் புதிய 2023 ஹூண்டாய் வென்யூ மாடலின் விலை ரூ. 7 லட்சத்து 68 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 13 லட்சத்து 11 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    புதிய வென்யூ மாடலில் உள்ள டீசல் என்ஜின் ஹூண்டாய் கிரெட்டா மற்றும் கியா செல்டோஸ் மாடல்களை போன்றே 115 பிஎஸ் பவர், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. முன்னதாக இதே என்ஜின் 100 பிஎஸ் பவர், 240 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருந்தது.

    2023 ஹூண்டாய் வென்யூ மாடலில் இந்த என்ஜின் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் உடன் வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் புதிய 2023 ஹூண்டாய் வென்யூ மாடல் டாடா நெக்சான், மாருதி சுசுகி பிரெஸ்ஸா, கியா சொனெட், மஹிந்திரா XUV300, நிசான் மேக்னைட், ரெனால்ட் கைகர் போன்ற கார்களுக்கு போட்டியாக அமைகிறது. இந்த காரில் உள்ள சக்திவாய்ந்த என்ஜின் போட்டி நிறுவன மாடல்களுக்கு போட்டியை பலப்படுத்தும்.

    இத்துடன் புதிய ஹூண்டாய் வென்யூ மாடலில் ஆட்டோமேடிக் ஹெட்லைட்கள், என்ஜின் இம்மொபைலைசர், பர்க்லர் அலாரம், ரிவர்ஸ் பார்கிங் சென்சார்கள், ரிவர்சிங் கேமரா, டைனமிக் கைடுலைன்கள் உள்ள. காரின் உள்புறம் டீசல் SX வேரியண்டில் ஆர்ம்ரெஸ்ட் மற்றும் கப் ஹோல்டர், ரியர் சீட் ரிக்லைனர் போன்ற வசதிகள் நீக்கப்பட்டுள்ளன. இவை தற்போது டாப் எண்ட் SX (O) வேரியண்டில் மட்டுமே வழங்கப்படுகிறது.

    • மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய Fronx மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.
    • மாருதி சுசுகி Fronx இருவித என்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வர இருக்கிறது.

    மாருதி சுசுகி நிறுவனம் புதிய பலேனோ மாடலை சார்ந்து உருவாக்கப்பட்ட Fronx மாடலை ஜனவரி 12 ஆம் தேதி நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் காட்சிக்கு வைத்தது. மேலும் இந்த காம்பேக்ட் கிராஸ்ஒவர் மாடலுக்கான முன்பதிவும் அதே நாளில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், புதிய மாருதி சுசுகி Fronx மாடலை வாங்க அதற்குள் 5 ஆயிரத்து 500 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

    இந்திய சந்தையில் புதிய Fronx மாடல் ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. Fronx மாடல் மாருதி சுசுகி நிறுவனத்தின் பிரீமியம் நெக்சா டீலர்ஷிப்களின் மூலம் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இது மாருதி சுசுகி நிறுவனத்தின் இரண்டாவது எஸ்யுவி / கிராஸ்ஒவர் மாடல் ஆகும். இதுதவிர பிரெஸ்ஸா மாடலை மாருதி சுசுகி தனது அரினா டீலர்ஷிப்களின் மூலம் விற்பனை செய்து வருகிறது.

    மாருதி சுசுகி Fronx மாடலில் 1.0 லிட்டர், மூன்று சிலிண்டர்கள் கொண்ட டர்போ பெட்ரோல் பூஸ்டர்ஜெட் என்ஜின் மற்றும் 1.2 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட NA பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இரு என்ஜின்களுடன் மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது. இவை முறையே 100 ஹெச்பி பவர், 147.6 நியூட்டன் மீட்டர் மற்றும் 90 ஹெச்பி பவர், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகின்றன.

    டர்போ பெட்ரோல் என்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ், NA பெட்ரோல் என்ஜினுடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் அல்லது 5 ஸ்பீடு AMT கியர்பாக்ஸ் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் மாருதி சுசுகி Fronx மாடல்- சிக்மா, டெல்டா, டெல்டா பிளஸ், சீட்டா மற்றும் ஆல்ஃபா என ஐந்து வித வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    இந்திய சந்தையில் புதிய மாருதி சுசுகி Fronx மாடலின் விலை ரூ. 8 லட்சம் பட்ஜெட்டில் துவங்கி அதிகபட்சம் ரூ. 11 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரெஸ்ஸா தவிர மாருதி சுசுகி Fronx மாடல் ஹூண்டாய் வென்யூ, கியா சொனெட், டாடா நெக்சான், மஹிந்திரா XUV300, நிசான் மேக்னைட் மற்றும் ரெனால்ட் கைகர் போன்ற கார்களுக்கு போட்டியாக அமைகிறது.

    • டொயோட்டா நிறுவனத்தின் முற்றிலும் புதிய இன்னவோ ஹைகிராஸ் வினியோகம் பற்றிய தகவல் வெளியானது.
    • புது இன்னோவா ஹைகிராஸ் மாடல் பெட்ரோல் என்ஜின் மற்றும் ஹைப்ரிட் மோட்டார் கொண்டிருக்கிறது.

    டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் கடந்த ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் தனது புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடலின் விலை விவரங்களை வெளியிட்டது. புது டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் மாடலின் விலை ரூ. 18 லட்சத்து 30 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இன்னோவா ஹைகிராஸ் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வந்தது. இந்த நிலையில், புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடலின் வினியோகம் துவங்கி நடைபெற்று வருகிறது. டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் மாடலின் முன்பதிவு கட்டணம் ரூ. 50 ஆயிரம் என ஆகும். முன்பதிவு டொயோட்டா அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் விற்பனை மையங்களில் மேற்கொள்ளலாம்.

    இந்திய சந்தையில் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் மாடல் - சூப்பர் வைட், பிளாட்டினம் வைட் பியல், சில்வர் மெட்டாலிக், ஆடிட்யூட் பிளாக் மைகா, ஸ்பார்க்லிங் பிளாக் பியல் க்ரிஸ்டல் ஷைன், அவாண்ட் கிரேடு பிரான்ஸ் மெட்டாலிக் மற்றும் பிளாகிஷ் அகெஹா கிளாஸ் ஃபிளேக் என ஏழு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதோடு G, GX, VX, ZX மற்றும் ZX(O) என ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடல் இருவித பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 2.0 லிட்டர் பெட்ரோல் மோட்டார் 172 ஹெச்பி பவர், 187 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் CVT யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இதே என்ஜினுடன் ஹைப்ரிட் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது.

    ஹைப்ரிட் யூனிட் 111 ஹெச்பி பவர், 206 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் e-CVT டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. புதிய ஹைகிராஸ் மாடலில் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வசதி வழங்கப்படவில்லை.

    • ஹூண்டாய் நிறுவனத்தின் வென்யூ 2023 மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    • புது வென்யூ மாடலில் சக்திவாய்ந்த 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது.

    ஹூண்டாய் இந்தியா நிறுவனம் 2023 வென்யூ மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் மாடலை போன்று இல்லாமல், இது வருடாந்திர அப்டேட் ஆக இருக்கும் என தெரிகிறது. அந்த வகையில் புது ஹூண்டாய் எஸ்யுவி அம்சங்கள் சற்றே மாற்றப்பட்டு இருக்கும்.

    புது மாடல் குறித்து லீக் ஆகி இருக்கும் தகவல்களில் 2023 ஹூண்டாய் வென்யூ மாடலில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படும் என தெரியவந்துள்ளது. இது 113 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. புது ஹூண்டாய் வென்யூ மாடல் - S+, SX மற்றும் SX(O) என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படலாம்.

    2023 அப்டேட்டை தொடர்ந்து முன்னதாக S பேஸ் வேரியண்ட் டீசல் மாடலில் உள்ள சில அம்சங்கள், டாப் எண்ட் SX வேரியண்டில் மட்டுமே வழங்கப்படுகிறது. இவற்றில் எல்இடி ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், கார்னெரிங் லேம்ப்கள், எல்இடி டிஆர்எல்கள், பக்கவாட்டு ஏர்பேக் உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கிறது. இத்துடன் ரிக்லைனிங் ரியர் சீட்கள், ரியர் ஆர்ம்ரெஸ்ட் உள்ளிட்டவை டாப் எண்ட் SX(O) மாடலில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

    பெட்ரோல் வேரியண்ட்களில் பக்கவாட்டு ஏர்பேக் மிட் வேரியண்ட் ஆன S (O)-வில் மட்டுமே வழங்கப்படுகிறது. புது வென்யூ மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் யூனிட்கள் வழங்கப்படுகிறது. இவற்றின் செயல்திறன் அளவுகளில் எந்த விதமான மாற்றங்களும் இருக்காது என்றே தெரிகிறது.

    வரும் வாரங்களில் புதிய 2023 ஹூண்டாய் வென்யூ மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புது மாடலின் தேர்வு செய்யப்பட்ட வேரியண்ட்களின் விலை ஓரளவு அதிகமாகவே இருக்கும்.

    ×