search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 158947"

    • மாருதி சுசுகி நிறுவனம் 2023 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் பல்வேறு புது கார்களை காட்சிக்கு வைத்து இருந்தது.
    • புதிய ஜிம்னி 5-டோர் எஸ்யுவி மாடல் இரண்டு வேரியண்ட்களில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

    ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் மாருதி சுசுகி நிறுவனத்தின் ஜிம்னி 5-டோர் எஸ்யுவி மாடல் அனைவரையும் கவர்ந்ததில் எவ்வித சந்தேகமும் இருக்க முடியாது. ஜனவரி 12 ஆம் தேதி காட்சிக்கு வைக்கப்பட்ட நிலையில், புதிய மாருதி சுசுகி ஜிம்னி மாடல் முன்பதிவில் 5 ஆயிரம் யூனிட்களை கடந்து இருக்கிறது. இந்திய சந்தையில் புதிய ஜிம்னி ஆஃப் ரோடர் மாடல் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது.

    நீண்ட வீல்பேஸ், இரண்டு கூடுதல் கதவுகள், ரிடிசைன் செய்யப்பட்ட ரியர் குவார்ட்டர் தவிர, ஜிம்னி 5-டோர் வெர்ஷன் சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படும் ஜிம்னி 3-டோர் வெர்ஷனை போன்றே காட்சியளிக்கிறது. புது மாடலில் அப்ரைட் பில்லர்கள், வட்ட வடிவம் கொண்ட ஹெட்லேம்ப்கள், ஸ்லாட் கிரில், அகலமான டயர்கள், ஃபிலேர்டு வீல் ஆர்ச்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

    அளவீடுகளை பொருத்தவரை புதிய ஜிம்னி மாடல் 3985mm நீளம், 2590mm வீல்பேஸ் கொண்டிருக்கிறத. இதன் உயரம் 1720mm, அகலம் 1645mm ஆக இருக்கிறது. இந்த காரின் உள்புறம் ஆல்-பிளாக் தீம் ரக்கட் டிசைன், ஹை-மவுண்ட் செய்யப்பட்ட 9 இன்ச் டச் ஸ்கிரீன், HVAC கண்ட்ரோல்கள், வட்ட வடிவ டயல்கள், டேஷ்போர்டில் மவுண்ட் செய்யப்பட்ட கிராப் ஹேண்டில் வழங்கப்பட்டுள்ளது.

    இத்துடன் மாருதி சுசுகி நிறுவனத்தின் மாருதி ஸ்மார்ட்பிளே ப்ரோ பிளஸ் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி, ஆர்கமிஸ் சவுண்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. என்ஜினை பொருத்தவரை புதிய மாருதி சுசுகி ஜிம்னி 5-டோர் மாடலில் புதிய K15C யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் அல்லது 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 105 ஹெச்பி பவர், 134 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. ஆஃப் ரோடர் என்பதால் இந்த காரில் 4WD சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புது கார் வெளியீடு பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
    • சமீபத்திய ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் டாடா நிறுவனம் தனது புதிய CNG கார்களை காட்சிப்படுத்தி இருந்தது.

    ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது அல்ட்ரோஸ் மற்றும் பன்ச் CNG வெர்ஷன்களை காட்சிக்கு வைத்து இருந்தது. இரு மாடல்களும் இந்த ஆண்டே விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது டியாகோ, டிகோர் மற்றும் டியாகோ NRG போன்ற கார்களின் CNG வெர்ஷன்களை டாடா மோட்டார்ஸ் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.

    இந்த பட்டியலில் அல்ட்ரோஸ் மற்றும் பன்ச் CNG வெர்ஷன்கள் இணை இருக்கின்றன. இதன் CNG வேரியண்டில் 1.2 லிட்டர் மூன்று சிலிண்டர்கள் கொண்ட என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த யூனிட் பெட்ரோல் மோடில் 86 ஹெச்பி பவர், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. CNG மோடில் 77 ஹெச்பி பவர், 97 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. புதிய டாடா அல்ட்ரோஸ் CNG மற்றும் பன்ச் CNG மாடல்களை நேரடியாக CNG மோடில் இருந்தே ஸ்டார்ட் செய்ய முடியும். வழக்கமாக கார்களின் பெட்ரோல் வேரியண்ட் உடன் ஒப்பிடும், CNG வெர்ஷனில் பூட் ஸ்பேஸ் குறைவாக இருக்கும்.

    எனினும், டாடா நிறுவனம் கண்டறிந்து இருக்கும் டுவின்-சிலிண்டர் முறையில், 60 லிட்டர் கியாஸ் டேன்க் வழங்கப்படுகிறது. அதன்படி காரின் பூட் ஸ்பேஸ் பாதிக்கப்படாது. பூட்லிட் மீது i-CNG பேட்ஜ் தவிர வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. மேலும் இதன் இண்டீரியர் எவ்வித மாற்றமும் இன்றி ஒரே மாதிரியாகவே காட்சியளிக்கிறது. இரு கார்களில் அல்ட்ரோஸ் மாடல் பிரீமியம் அம்சங்களை கொண்டிருக்கும்.

    இந்திய சந்தையில் அல்ட்ரோஸ் CNG மாடல் பலேனோ CNG மற்றும் கிளான்சா CNG மாடல்களுக்கு போட்டியாக அமையும். இந்த மாடலில் ரியர் ஏசி வெண்ட்கள், முன்புறம் செண்டர் ஆர்ம்ரெஸ்ட், டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி, ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், உயரத்தை அட்ஜஸ்ட் செய்யும் வசதியுடன் டிரைவர் சீட், என்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    புதிய டாடா பன்ச் CNG மாடலுக்கு போட்டியாக இதுவரை எந்த மாடலும் சந்தையில் கிடைக்கவில்லை. எனினும், ஹூண்டாய் நிறுவனம் இந்த நிலையை மாற்றும் வகையில், இந்த ஆண்டு இறுதிக்குள் முற்றிலும் புதிய மைக்ரோ எஸ்யுவி மாடலை அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. மேலும், இந்த மாடலில் CNG பவர்டிரெயின் ஆப்ஷன் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

    • ஹூண்டாய் நிறுவனத்தின் அகிராண்ட் i10 நியோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் பெட்ரோல், CNG ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
    • புதிய கிராண்ட் i10 நியோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

    ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் கிராண்ட் i10 நியோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலை அதிகாரப்பூர்வமாக இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலை ரூ. 5 லட்சத்து 68 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஹேச்பேக் மாடலுக்கான முன்பதிவு ஜனவரி 9 ஆம் தேதி துவங்கியது. முன்பதிவு கட்டணம் ரூ. 11 ஆயிரம் ஆகும்.

    காரின் வெளிப்புறம் புதிய கிராண்ட் i10 நியோஸ் மாடலில் புதிய முன்புறம் மற்றும் பின்புற பம்ப்பர்கள், புது முக்கோண வடிவ எல்இடி டிஆர்எல்கள், பெரிய கிரில், 15 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள், எல்இடி டெயில் லைட்கள், ஷார்க் ஃபின் ஆண்டெனா வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல்- போலார் வைட், டைட்டன் கிரே, டைஃபூன் சில்வர், டீல் புளூ, ஃபியெரி ரெட் மற்றும் ஸ்பார்க் கிரீன் என ஆறு வித நிறங்களில் கிடைக்கிறது. உள்புறத்தில் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், 8 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, வாய்ஸ் ரிகோக்னிஷன் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய காரில் 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 82 ஹெச்பி பவர், 113.8 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதுதவிர 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் மற்றும் CNG கிட் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இது 68 ஹெச்பி பவர், 95.2 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் யூனிட் வழங்கப்படுகிறது.

    • மாருதி சுசுகி நிறுவனத்தின் கிராண்ட் விட்டாரா மிட்சைஸ் எஸ்யுவி மாடலை கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது.
    • கிராண்ட் விட்டாரா மாடலின் பெரும்பாலன அம்சங்கள் டொயோட்டா அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது.

    மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் நிறுவனம் இரண்டாம் தலைமுறை பிரெஸ்ஸா காம்பேக்ட் எஸ்யுவி மற்று்ம கிராண்ட் விட்டாரா மிட்சைஸ் எஸ்யுவி மாடல்களை கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. அறிமுகம் செய்ததில் இருந்தே இரு மாடல்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இவற்றை தொடர்ந்து Fronx காம்பேக்ட் கூப் எஸ்யுவி, 5-டோர் ஜிம்னி லைஃப்ஸ்டைல் ஆஃப் ரோடு எஸ்யுவி உள்ளிட்ட மாடல்களையும் இந்த ஆண்டு அறிமுகம் செய்ய மாருதி சுசுகி திட்டமிட்டுள்ளது.

    இந்த நிலையில், புது கார்கள் மட்டுமின்றி மாருதி சுசுகி நிறுவனம் தனது கிராண்ட் விட்டாரா காரின் மூன்று ரோ வேரியண்டை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த கார் Y17 குறியீட்டு பெயரில் உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த கார் டாடா சஃபாரி, ஹூண்டாய் அல்கசார், எம்ஜி ஹெக்டார் பிளஸ், மஹிந்திரா XUV700 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா மாடலின் பெரும்பாலன அம்சங்கள் டொயோட்டா அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படுகிறது. இந்த கார் 1.5 லிட்டர் நான்கு சிலிண்டர்கள் கொண்ட K15C மைல்டு ஹைப்ரிட் பெட்ரோல் அல்லது 1.5 லிட்டர் TNGA அட்கின்சன் சைக்கிள் ஸ்டிராங் ஹைப்ரிட் பெட்ரோல் என்ஜினுடன் கிடைக்கிறது.

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்திய ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் ஏராளமான புது கார்களை அறிமுகம் செய்தது.
    • புதிய கார்களில் அல்ட்ரோஸ் பிரீமியம் ஹேச்பேக் மாடலின் ஸ்போர்ட்ஸ் வேரியண்டும் இடம்பெற்று இருந்தது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது அல்ட்ரோஸ் ஹேச்பேக் காரின் அல்ட்ரோஸ் ரேசர் மாடலை ஆட்டோ எக்ஸ்போ 2023 மாடலில் காட்சிக்கு வைத்தது. பொது மக்கள் மற்றும் ஊடகத்துறையை சேர்ந்தவர்களை அதிகம் கவர்ந்த அல்ட்ரோஸ் ரேசர் மாடல் ஸ்போர்ட்ஸ் வேரியண்ட் ஆகும்.

    அந்த வகையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது அல்ட்ரோஸ் ரேசர் மாடலை விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அல்ட்ரோஸ் ரேசர் மாடலில் வித்தியாசமான ரியர் ஸ்பாயிலர், எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் வசதி கொண்ட சன்ரூஃப், டூயல் டோன் நிற ஆப்ஷன், பிளாக்டு-அவுட் ஹெட்லைட், முன்புற கிரில் மற்றும் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன.

    டாடா அல்ட்ரோஸ் ரேசர் மாடலில் ஏராளமான ரெட் அக்செண்ட்கள், ரேசர் லோகோ, ஆல் பிளாக் இருக்கை மேற்கவர் மற்றும் ரெட் நிற ஸ்டிட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது. இவைதவிர புது காரில் அளவில் பெரிய 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு கனெக்டிவிட்டி, 7 இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, வயர்லெஸ் போன் சார்ஜர், ஏர் பியூரிஃபயர், வெண்டிலேடெட் முன்புற இருக்கைகள் வழங்கப்படுகின்றன.

    புதிய அல்ட்ரோஸ் ரேசர் மாடலில் 1.2 லிட்டர், 3 சிலிண்டர், டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 118.3 ஹெச்பி பவர், 170 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்து்ம திறன் கொண்டுள்ளது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    • மாருதி சுசுகி நிறுவன கார் மாடல்களில் குறைபாடு ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது.
    • குறைபாடு கண்டறியப்பட்ட யூனிட்களை வைத்திருப்போர் அதனை இயக்க வேண்டாம் என மாருதி சுசுகி தெரிவித்து இருக்கிறது.

    மாருதி சுசுகி நிறுவனம் 17 ஆயிரத்திற்கும் அதிக கார்களை ரிகால் செய்வதாக அறிவித்து இருக்கிறது. டிசம்பர் 8, 2022 முதல் ஜனவரி 12, 2023 வரையிலான காலக்கட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட கார்கள் ரிகால் செய்யப்படுகின்றன. கார்களின் ஏர்பேக் கண்ட்ரோலர் தவறுதலாக பொருத்தப்பட்டதால் ரிகால் செய்யப்பட உள்ளன.

    ஆல்டோ கே10, எஸ் பிரெஸ்ஸோ, ஈகோ, பிரெஸ்ஸா, பலேனோ மற்றும் கிராண்ட் விட்டாரா போன்ற மாடல்கள் இந்த பிரச்சினையில் பாதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு கண்டறியப்பட்டு இருக்கும் 17 ஆயிரத்து 362 யூனிட்களையும் ரிகால் செய்து, அதில் உள்ள பிரச்சினையை கண்டறிந்து இலவசமாக சரி செய்து கொடுப்பதாக மாருதி சுசுகி அறிவித்து இருக்கிறது.

    பிரச்சினை சரி செய்யப்படவில்லை எனில், கார் விபத்தில் சிக்கும் போது அதில் உள்ள ஏர்பேக் வேலை செய்யாத நிலை ஏற்படும் என மாருதி சுசுகி சந்தேகிக்கிறது. வொர்க்ஷாப்களில் இருந்து தொடர்பு கொள்ளும் வரை அல்லது பிரச்சினையை சரி செய்து முடிக்கும் வரை காரை இயக்க வேண்டாம் என மாருதி சுசுகி தனது வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது.

    கடந்த மாதம் தான் கிராண்ட் விட்டாரா, XL6, எர்டிகா மற்றும் சியாஸ் போன்ற மாடல்களில் சீட் பெல்ட் குறைபாடு காரணமாக மாருதி சுசுகி ரிகால் செய்தது. இந்த பிரச்சினையில் சுமார் 9 ஆயிரத்திற்கும் அதிக யூனிட்கள் பாதிக்கப்பட்டு இருந்தன. இது மட்டுமின்றி கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் வேகன் ஆர், இக்னிஸ் மற்றும் செலரியோ மாடல்களின் 9 ஆயிரத்திற்கும் அதிக யூனிட்கள் ரிகால் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • ஹூண்டாய் நிறுவனம் முற்றிலும் புதிய கிராண்ட் i10 நியோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்டது.
    • கிராண்ட் i10 நியோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் புதிதாக ஸ்பர் கிரீன் எனும் நிறத்தில் விற்பனைக்கு வர இருக்கிறது.

    ஹூண்டாய் இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் கிராண்ட் i10 நியோஸ் மற்றும் ஆரா ஃபேஸ்லிஃப்ட் மாடல்களை சமீபத்தில் அறிமுகம் செய்தது. இரு மாடல்களின் முன்பதிவு சமீபத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 11 ஆயிரம் ஆகும். புதிய ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவில் ஜனவரி 20 ஆம் தேதி வெளியாகிறது.

    காரின் வெளிப்புறம் புதிய கிராண்ட் i10 நியோஸ் மாடலில் புதிய முன்புறம் மற்றும் பின்புற பம்ப்பர்கள், புது முக்கோண வடிவ எல்இடி டிஆர்எல்கள், பெரிய கிரில், 15 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள், எல்இடி டெயில் லைட்கள், ஷார்க் ஃபின் ஆண்டெனா வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய i10 நியோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல்- போலார் வைட், டைட்டன் கிரே, டைஃபூன் சில்வர், டீல் புளூ, ஃபியெரி ரெட் மற்றும் ஸ்பார்க் கிரீன் என ஆறு வித நிறங்களில் கிடைக்கிறது.

    உள்புறத்தில் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், 8 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, வாய்ஸ் ரிகோக்னிஷன் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 82 ஹெச்பி பவர், 114 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    இத்துடன் CNG கிட் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. இதன் CNG யூனிட் 68 ஹெச்பி பவர், 95 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் யூனிட் வழங்கப்படுகிறது.

    • பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் 2023 X7 கார் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷ்களில் கிடைக்கிறது.
    • புதிய பிஎம்டபிள்யூ காரின் முன்பதிவு துவங்கிவிட்ட நிலையில், வினியோகம் மார்ச் மாத வாக்கில் துவங்க இருக்கிறது.

    பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம் முற்றிலும் புதிய X7 மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. புதிய ஃபிளாக்ஷிப் எஸ்யுவி மாடல் - X7 xடிரைவ்40i M ஸ்போர்ட் மற்றும் X7 xடிரைவ்40d ஸ்போர்ட் என இரண்டு விதமான வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 1 கோடியே 22 லட்சம் மற்றும் ரூ. 1 கோடியே 24 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    2023 பிஎம்டபிள்யூ X7 xடிரைவ்40i M ஸ்போர்ட் மாடலில் 3.0 லிட்டர், 6 சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 376 ஹெச்பி பவர், 520 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. புதிய X7 xடிரைவ்40d M ஸ்போர்ட் மாடலில் 3.0 லிட்டர், 6 சிலிண்டர்கள் கொண்ட டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 335 ஹெச்பி பவர், 700 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    இருவித என்ஜின்களுடன் 8 ஸ்பீடு ஸ்டெப்டிரானிக் டிரான்ஸ்மிஷன் உடன் வழங்கப்படுகிறது. இத்துடன் பிஎம்டபிள்யூ xடிரைவ் ஆல்-வீல் டிரைவ் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. காரின் உள்புறம் ஸ்கை லாஞ்ச் பானரோமிக் சன்ரூஃப், 14 நிறங்கள் அடங்கிய ஆம்பியண்ட் லைடிங், 12.3 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 14.9 இன்ச் டிரைவர் டிஸ்ப்ளே, நான்கு ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், ஹார்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம் மற்றும் 16 ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன.

    காரின் வெளிப்புறம் பெரிய கிட்னி கிரில், க்ரோம் அக்செண்ட்கள், புதிய முன்புறம் மற்றும் பின்புற பம்ப்பர்கள், எல்இடி ஹெட்லேம்ப்கள், 3D டெயில் லேம்ப்கள், புதிய இன்னர் கிராஃபிக்ஸ், ஸ்மோக்டு கிளாஸ் உள்ளது. புதிய X7 காரின் இரண்டு வேரியண்ட்களும் பிஎம்டபிள்யூ சென்னை ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. வினியோகம் மார்ச் 2023 வாக்கில் துவங்க இருக்கிறது.

    • ஹூண்டாய் நிறுவனம் தனது ஆரா ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    • புதிய ஆரா ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கான முன்பதிவு கடந்த வாரம் துவங்கி நடைபெற்று வருகிறது.

    ஹூண்டாய் நிறுவனம் தனது கிராண்ட் i10 நியோஸ் மற்றும் ஆரா ஃபேஸ்லிஃப்ட் மாடல்களை சமீபத்தில் அறிவித்தது. மேலும் இரு கார்களுக்கான முன்பதிவு ஜனவரி 9 ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 11 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய கிராண்ட் i10 நியோஸ் வெளியீடு இந்த வாரம் நடைபெற இருக்கும் நிலையில், ஆரா மாடலும் விரைவில் வெளியாக இருக்கிறது. ஆரா ஃபேஸ்லிஃப்ட் மாடலில் ஏராளமான புது அம்சங்கள் வழங்கப்படுகிறது. இதில் தற்போது நான்கு ஏர்பேக், ஏபிஎஸ், இபிடி ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது. இவைதவிர ஆறு ஏர்பேக், இஎஸ்சி மற்றும் ஹில் ஹோல்டு அசிஸ்ட் உள்ளிட்டவை ஆப்ஷனாக வழங்கப்படுகிறது.

    இத்துடன் புது ஆரா மாடலில் உள்ள ஹெட் ரெஸ்டிரைண்ட்கள் அட்ஜஸ்ட் செய்யும் வசதி கொண்டுள்ளன. இத்துடன் ரிடிசைன் செய்யப்பட்ட இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், இரு அனலாக் காஜ்கள் உள்ளன. இவற்றில் ஒன்று ஸ்பீடோமீட்டராகவும் மற்றொன்று டகோமீட்டராகவும் செயல்படுகின்றன. மேலும் புதிதாக 3.5mm எம்ஐடி டிஸ்ப்ளே, டயர் பிரெஷர் மாணிட்டரிங் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    வெர்னா, i20, அல்கசார் மற்றும் டக்சன் மாடல்களில் உள்ளதை போன்று புது ஆரா ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும் ஸ்டாரி நைட் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. புது ஆரா ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 8 இன்ச் டச் ஸ்கிரீன், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே, ரியர் ஏசி வெண்ட்கள், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் மற்றும் வயர்லெஸ் சார்ஜர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    புதிய ஹூண்டாய் ஆரா ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இது 83 ஹெச்பி பவர், 113.8 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் CNG கிட் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. இது 69 ஹெச்பி பவர், 95.2 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இரு யூனிட்களுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், AMT கியர்பாக்ஸ் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது. 

    • டொயோட்டா நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் மாற்று எரிபொருள் வாகனங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது.
    • பிரேசிலில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஹைப்ரிட் ஃபிலெக்ஸ் ஃபியூவல் மாடல் இந்தியாவில் காட்சிக்கு வைக்கப்பட்டது.

    டொயோட்டா நிறுவனம் கொரோலா ஆல்டிஸ் ஃபிலெக்ஸ் ஃபியூவல் மாடலை ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் காட்சிப்படுத்தியது. இந்த மாடல் e20 முதல் e85 வரை கிடைக்கும் எதனால் சார்ந்த ஃபியூவல்களில் இயங்கும் திறன் கொண்டிருக்கிறது. தற்போது காட்சிப்படுத்தப்பட்ட டொயோட்டா கொரோலா ஆல்டிஸ் ஃபிலெக்ஸ் ஃபியூவல் மாடல் ஏற்கனவே பிரேசில் நாட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    எத்தனால் பயன்பாட்டிற்கு ஏற்ப என்ஜின் புகை விதிகள் மற்றும் எத்தனாலின் குறைந்த அடர்த்திக்கு ஏற்ப டியூனிங் செய்யப்பட வேண்டும். இத்துடன் ஹைப்ரிட் பவர்டிரெடயின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த காரின் தரையில் 1.8 லிட்டர் ஃபிலெக்ஸ் ஃபியூவல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஒற்றை எலெக்ட்ரிக் மோட்டார் உள்ளது. இந்த யூனிட் 138 ஹெச்பி பவர், 177 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    இத்துடன் CVT கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. டொயோட்டா கொரோலா ஆல்டிஸ் ஃபிலெக்ஸ் ஃபியூவல் மாடலில் 50 லிட்டர் ஃபியூவல் டேன்க் உள்ளது. புதிய கொரோலா ஆல்டிஸ் மட்டுமின்றி மாருதி சுசுகி நிறுவனத்தின் வேகன் ஆர் ஃபிலெக்ஸ் ஃபியூவல் மாடலும் ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டது.

    • டொயோட்டா நிறுவனத்தின் புதிய ஃபியூவல் செல் வாகனம் ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்பட்டது.
    • புதிய ஃபியூவல் செல் வாகனம் 640 கிலோமீட்டர் வரையிலான டிரைவிங் ரேன்ஜ் கொண்டிருக்கிறது.

    டொயோட்டா நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் மிரய் ஹைர்டஜன் ஃபியூவல் செல் வாகனத்தை காட்சித்து வைத்து இருக்கிறது. ஏற்கனவே 2022 மார்ச் மாத வாக்கில் சோதனை அடிப்படையில் இந்த திட்டம் இந்தியாவில் துவங்கப்பட்டு இருந்தது.

    தற்போது காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கும் மிரய் இரண்டாம் தலைமுறை மாடல் ஆகும். முன்னதாக 2020 வாக்கில் இந்த மாடல் சர்வேதச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய டொயோட்டா மிரய் GA-L ரியர் வீல் டிரைவ் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் டொயோட்டா ஃபியூவல் செல் ஸ்டாக் மற்றும் டிரைவ்டிரெயின் பாகங்களை ரிபேகேஜ் செய்திருக்கிறது. இத்துடன் அதிகபட்சமாக மூன்று ஹைட்ரஜன் டேன்க்-கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

    மிரய் மாடல் ஹைட்ரஜன் ஃபியூவல் செல் ஸ்டாக் மூலம் 174 ஹெச்பி வரையிலான திறன் வெளிப்படுத்துகிறது. இத்துடன் 640 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. காரின் ஏர் ஃபில்ட்டரில் கேடலிஸ்ட் டைப் ஃபில்ட்டர் இருப்பதால் பயணம் செய்யும் போதே மிரய் காற்றை சுத்தப்படுத்தும் என டொயோட்டா தெரிவித்து இருக்கிறது. முந்தைய மாடலை விட வித்தியாசமான டிசைன் கொண்டிருக்கும் மிரய் மாடல் மெல்லிய ஸ்டைலிங், லோ ஸ்லங் ஸ்டான்ஸ் மற்றும் கூப் போன்ற பின்புறம் உள்ளது.

    இதன் உள்புறத்தில் ரிடிசைன் செய்யப்பட்ட அளவில் பெரிய, 12.3 இன்ச் டச் ஸ்கிரீன் கொண்டிருக்கிறது. இதன் டாப் எண்ட் வேரியண்ட்களில் 3-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், ஹீடெட் ஸ்டீரிங் வீல், ஹீடெட் மற்றும் வெண்டிலேட் செய்யப்பட்ட சீட்கள், ஹெட்-அப் டிஸ்ப்ளே மற்றும் ஏராளமான ADAS தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது.

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சஃபாரி மாடலின் புது வெர்ஷன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
    • புதிய ரெட் டார்க் எடிஷன் மாடலில் 10.25 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் டிஸ்ப்ளே மற்றும் iRA கனெக்டெட் கார் தொழில்நுட்பம் உள்ளது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் ஹேரியர் EV, சியெரா EV, பன்ச் i-CNG, அல்ட்ரோஸ் i-CNG, அல்ட்ரோஸ் ரேசர், அவின்யா மற்றும் கர்வ் கான்செப்ட்களை அறிமுகம் செய்தது. இவை தவிர தனது பிரபல எஸ்யுவி மாடல்களான ஹேரியர் மற்றும் சஃபாரி ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன்களையும் அறிமுகம் செய்து இருக்கிறது. ஃபேஸ்லிஃப்ட் மாடல்கள் டார்க் எடிஷன் வடிவில் வெளியாகி இருக்கிறது. புது மாடல்களில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

    மாற்றங்களில் குறிப்பிடத்தக்க ஒன்றாக புது சஃபாரி மாடலில் ADAS சூட், 360 டிகிரி சரவுண்ட் வியூ கேமரா, புதிய மற்றும் மேம்பட்ட டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், புதிய இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டு இருக்கிறது. வெளிப்புறத்தில், முன்புற தோற்றம் ஒரே மாதிரி காட்சியளிக்கிறது. பிளாக்டு அவுட் கிரில் பகுதியில் உள்ள ஹெக்சோகன் ரெட் அக்செண்ட் செய்யப்பட்டு பிரேக் கேலிப்பர்களில் ரெட் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. இவை தவிர கார் முழுக்க பிளாக் பெயிண்ட் உள்ளது.

    காரின் உள்புறம் ரெட் சீட் மேற்கவர்கள், டோர் கிராப் ஹேண்டில்கள், முன்புறம் செண்டர் ஆர்ம்ரெஸ்ட் சிவப்பு நிறம் கொண்டிருக்கிறது. இத்துடன் இலுமினேட் செய்யப்பட்ட ரூஃப் லைனர் உள்ளது. புதிய சஃபாரி டார்க் எடிஷன் மாடலிலும் அதன் ஸ்டாண்டர்டு மாடலில் உள்ளதை போன்ற என்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது.

    ×