search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 158947"

    • பாலத்தில் கார் மோதியதால் ஆசிரியர் படுகாயம் அடைந்தார்.
    • மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள மகிபாலன்பட்டி கிராமத்தில் ஆசிரியராக பணி வருபவர் ஜான் பெஸ்டர்ட். இவர் சிவகங்கையில் இருந்து பள்ளிக்கு காரில் சென்றுகொண்டிருந்தார்.

    திருக்கோஷ்டியூர் தெப்பக்குளம் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தின் சுவர் மீது மோதியது. இதில் ஆசிரியர் ஜான் பெஸ்டர்ட் படுகாயம் அடைந்தார். தகவலறிந்த திருக்கோஷ்டியூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சண்முகம், காவலர் வீரபாண்டியன் ஆகியோர் காயமடைந்த ஆசிரியருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பல்லடம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
    • காரில் இருந்த 39 கிலோ புகையிலைப் பொருட்கள் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள அருள்புரம் அடுத்த உப்பிலிபாளையம் பகுதியில் பல்லடம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்திச் செல்வது தெரியவந்தது.

    இதையடுத்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டபோது, அவர் பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் ஊராட்சி சேரன் நகரைச் சேர்ந்த கலியபெருமாள் மகன் பாலாஜி(28) என்பதும், கடைகளுக்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் சப்ளை செய்வதும் தெரிய வந்தது. இதையடுத்து காரில் இருந்த 39 கிலோ புகையிலைப் பொருட்கள், அவைகளை கொண்டு செல்ல பயன்படுத்திய ஒரு சொகுசு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து அவரை பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய XUV300 டர்போஸ்போர்ட் காரை அறிமுகம் செய்து இருக்கிறது.
    • புதிய டர்போஸ்போர்ட் மாடல் மூன்று வேரியண்ட் மற்றும் மூன்று நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

    மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் புதிய XUV300 T-GDi வேரியண்டை அறிமுகம் செய்தது. புதிய மஹிந்திரா XUV300 T-GDi விலை ரூ. 10 லட்சத்து 35 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த கார் மூன்று வேரியண்ட் மற்றும் மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. முன்னதாக 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் இந்த கார் XUV300 ஸ்போர்ட்ஸ் பெயரில் கான்செப்ட் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது.

    புதிய XUV300 T-GDi மாடலில் 1.2 லிட்டர் எம்ஸ்டேலியன் T-GDi பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 128 ஹெச்பி பவர், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இதே காரின் ஸ்டாண்டர்டு டர்போ வேரியண்ட் 109 ஹெச்பி பவர், 200 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    வெளிப்புறம் XUV300 T-GDi மாடலில் டூயல் டோன் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. இந்த கார் பிளேசிங் பிரான்ஸ், பியல் வைட் மற்றும் நபோலி பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இத்துடன் T-GDi லோகோ மற்றும் ரெட் நிற அக்செண்ட்கள் செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த காரில் மஹிந்திராவின் புதிய ட்வின்-பீக் லோகோ வழங்கப்பட்டு உள்ளது.

    காரின் உள்புறம் ஆல்-பிளாக் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் லெதர் இருக்கைகள், ஸ்டீரிங் வீல் மற்றும் கியர் லீவரில் லெதர் ராப் செய்யப்பட்டு உள்ளது. இத்துடன் ஸ்போர்ட் பெடல்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய XUV300 T-GDi மாடல் ஹூண்டாய் வென்யூ N லைன் மற்றும் கியா சொனெட் 1.0 லிட்டர் டர்போ வேரியண்டிற்கு போட்டியாக அமைகிறது.

    விலை விவரங்கள்:

    மஹிந்திரா XUV300 டர்போஸ்போர்ட் W6 ரூ. 10 லட்சத்து 35 ஆயிரம்

    மஹிந்திரா XUV300 டர்போஸ்போர்ட் W8 ரூ. 11 லட்சத்து 65 ஆயிரம்

    மஹிந்திரா XUV300 டர்போஸ்போர்ட் W8 DT ரூ. 11 லட்சத்து 80 ஆயிரம்

    மஹிந்திரா XUV300 டர்போஸ்போர்ட் W8 (O) ரூ. 12 லட்சத்து 75 ஆயிரம்

    மஹிந்திரா XUV300 டர்போஸ்போர்ட் W8 (O) DT ரூ. 12 லட்சத்து 90 ஆயிரம்

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    • போக்ஸ்வேகன் நிறுவனம் இந்திய சந்தையில் தனது கார் மாடல்களுக்கு அசத்தல் சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
    • அக்டோபர் மாதத்தில் போக்ஸ்வேகன் டைகுன் எஸ்யுவி மாடலுக்கு அதிகபட்ச சலுகை வழங்கப்பட்டு வருகிறது.

    போக்ஸ்வேகன் நிறுவனம் இந்திய சந்தையில் தனது இரு கார் மாடல்களுக்கு அசத்தல் சலுகைகளை அறிவித்து உள்ளது. போக்ஸ்வேகன் டைகுன் எஸ்யுவி மற்றும் விர்டுஸ் செடான் மாடல்களுக்கு தள்ளுபடி, எக்சேன்ஜ் தள்ளுபடி மற்றும் லாயல்டி பலன்கள் வழங்கப்படுகின்றன. இரு கார்களில் போக்ஸ்வேகன் டைகுன் மாடலுக்கு அதிகபட்ச பலன்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    அதன்படி போக்ஸ்வேகன் டைகுன் எஸ்யுவி பேஸ் வேரியண்ட் வாங்குவோருக்கு ரூ. 30 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. இதன் 1.0 லிட்டர் என்ஜின் கொண்ட வேரியண்ட்களுக்கு ரூ. 55 ஆயிரம் வரையிலான பலன்களும், 1.5 லிட்டர் GT DSG வேரியண்டிற்கு ரூ. 30 ஆயிரம் வரையிலான பலன்களும் வழங்கப்படுகிறது. டைகுன் 1.5 லிட்டர் GT மேனுவல் ரூ. 80 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது.

    இந்திய சந்தையில் போக்ஸ்வேகன் டைகுன் மாடல் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், ஸ்கோடா குஷக் மற்றும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா மற்றும் டொயோட்டா அர்பன் குரூயிசர் ஹைரைடர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. இந்த கார் இரண்டு டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    போக்ஸ்வேகன் விர்டுஸ் மாடலை வாங்குவோர் ரூ. 30 ஆயிரம் வரையிலான பலன்களை பெற முடியும். இதன் டாப்லைன் வேரியண்டிற்கு ரூ. 10 ஆயிரம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்திய சந்தையில் போக்ஸ்வேகன் விர்டுஸ் மாடல் ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா மற்றும் ஸ்கோடா ஸ்லேவியா போன்ற கார்களுக்கு போட்டியாக அமைகிறது. 

    • ரெனால்ட் இந்தியா நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு அக்டோபர் மாதத்திற்கான சலுகை விவரங்களை வெளியிட்டு உள்ளது.
    • இந்த சலுகைகள் ஒவ்வொரு பகுதி, கார் மாடல், வேரியண்டிற்கு ஏற்ப வேறுபடும் என ரெனால்ட் தெரிவித்து இருக்கிறது.

    ரெனால்ட் நிறுவன கார் மாடல்களை வாங்குவோருக்கு அசத்தல் சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. சிறப்பு சலுகைகள் பண்டிகை காலத்தை ஒட்டி அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், ரெனால்ட் கார் மாடல்களுக்கு அதிகபட்சமாக ரூ. 50 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. இந்த சலுகைகள் எக்சேன்ஜ், தள்ளுபடி மற்றும் கார்ப்பரேட் பலன்கள் வடிவில் வழங்கப்படுகின்றன.

    விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள், தங்களுக்கு அருகாமையில் உள்ள ரெனால்ட் விற்பனை மையம் சென்று தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கும் சலுகை விவரங்களை அறிந்து கொள்ளலாம். இந்த சலுகைகள் 2022, அக்டோபர் 31 ஆம் தேதி வரை வழங்கப்பட உள்ளன. மேலும் சலுகை பலன்கள் கார் மாடல், வேரியண்ட் மற்றும் ஒவ்வொரு பகுதிக்கு ஏற்ப வேறுபடும்.

    அக்டோபர் மாதத்தில் ரெனால்ட் டிரைபர் மாடலை வாங்குவோருக்கு அதிகபட்சமாக ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. இதில் RXT, RXZ வேரியண்ட்களுக்கு ரூ. 15 ஆயிரம் தள்ளுபடி, RXL மற்றும் லிமிடெட் எடிஷன் வேரியண்ட்களுக்கு ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் ரூ. 25 ஆயிரம் மதிப்பிலான எக்சேன்ஜ் பலன்கள், ரூ. 10 ஆயிரம் கார்ப்பரேட் பலன்கள் தேர்வு செய்யப்பட்ட வேரியண்ட்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது.

    ரெனால்ட் க்விட் மாடலை வாங்குவோருக்கு ரூ. 35 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. இதில் ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி அனைத்து வேரியண்ட்களுக்கும் வழங்கப்படுகிறது. இத்துடன் 1.0 லிட்டர் மற்றும் 0.8 லிட்டர் வேரியண்ட்களுக்கு முறையே ரூ. 15 ஆயிரம் மற்றும் ரூ. 10 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. மேலும் தேர்வு செய்யப்பட்ட வேரியண்ட்களுக்கு ரூ. 10 ஆயிரம் வரை கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    புதிய ரெனால்ட் கைகர் மாடலை வாங்குவோருக்கு க்விட் மற்றும் டிரைபர் மாடல்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் வழங்கப்படுகின்றன. மேலும் கைகர் காம்பேக்ட் எஸ்யுவி மாடலுக்கு தள்ளுபடி அறிவிக்கப்படவில்லை. எக்சேன்ஜ் சலுகையின் கீழ் ரூ. 10 ஆயிரம் வரையிலான பலன்களை பெற முடியும்.

    • கியா நிறுவனத்தின் கேரன்ஸ் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    • எம்பிவி பிரிவில் அறிமுகம் செய்யப்பட்ட கேரன்ஸ் விலை மிகவும் போட்டியை ஏற்படுத்தும் வகையில் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

    கியா இந்தியா நிறுவனம் தனது கேரன்ஸ் எம்பிவி மாடலை இந்திய சந்தையில் ரிகால் செய்ய முடிவு செய்துள்ளது. கேரன்ஸ் எம்பிவி மாடலில் உள்ள காற்றுப்பை மென்பொருளில் (Air Bag Control module) பிழை கண்டறியப்பட்டதே ரிகால் செய்வதற்கான காரணம் என கியா தெரிவித்து இருக்கிறது. இந்த பிழை காரின் எத்தனை யூனிட்களில் ஏற்பட்டு இருக்கிறது என்ற விவரங்களை கியா வெளியிடவில்லை.

    எனினும், கேரன்ஸ் காரில் ஏற்பட்டு இருக்கும் பிழை மென்பொருள் அப்டேட் மூலம் சரி செய்யப்பட்டு விடும். இதற்காக வாடிக்கையாளரிடம் இருந்து எவ்வித கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது. பாதிக்கப்பட்ட யூனிட்களை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்களை கியா தொடர்பு கொண்டு காரில் ஏற்பட்ட பிரச்சினை குறித்து தகவல் தெரிவிக்கப்படும்.

    இது மட்டுமின்றி கேரன்ஸ் பயன்படுத்துவோர் தங்களின் டீலர்களை தொடர்பு கொண்டும் காரில் பிரச்சினை ஏற்பட்டு இருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டு அதனை சரி செய்யும் முயற்சிகளை மேற்கொள்ளலாம். மேலும் கியா இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளம் அல்லது கியா செயலி மூலமாகவும் தங்களின் வாகனம் பாதிக்கப்பட்டு இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ளலாம்.

    • மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய கிராண்ட் விட்டாரா மாடல் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகம் செய்யப்பட்டது.
    • இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து இதுவரை சுமார் 57 ஆயிரத்திற்கும் அதிக யூனிட்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

    மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய கிராண்ட் விட்டாரா எஸ்யுவி மாடல் வினியோகம் இந்தியாவில் துவங்கி நடைபெற்று வருகிறது. ஜூலை மாதத்திலேயே இந்த காருக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் முன்பே புதிய கிராண்ட் விட்டாரா மாடலை வாங்க 57 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்து இருந்தனர்.

    இதன் காரணமாக புதிய மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா ஸ்டிராங் ஹைப்ரிட் மாடலை வாங்க அதிகபட்சமாக எட்டு மாதங்கள் வரை காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. புதிய கிராண்ட் விட்டாரா மைல்டு ஹைப்ரிட் வேரியண்ட் வாங்குவோர் ஐந்து மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும். புதிய கிராண்ட் விட்டாரா மாடல் இந்தியாவில் பல்வேறு பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    இவற்றில் நான்கு சிலிண்டர்கள் கொண்ட 1.5 லிட்டர் பெட்ரோல், மூன்று சிலிண்டர்கள் கொண்ட 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின்கள் அடங்கும். இத்துடன் மைல்டு ஹைப்ரிட் மற்றும் ஸ்டிராங் ஹைப்ரிட் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் ஸ்டிராங் ஹைப்ரிட் பவர்டிரெயின் மட்டும் டொயோட்டா நிறுவனம் உருவாக்கியது ஆகும்.

    புதிய மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா மைல்டு ஹைப்ரிட் 4 சிலிண்டர்கள் கொண்ட 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 103 பிஎஸ் பவர், 137 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு MT மற்றும் 6 ஸ்பீடு AT ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் லிட்டருக்கு அதிகபட்சம் 21.11 கிலோமீட்டர் வரை மைலேஜ் வழங்குகிறது.

    கிராண்ட் விட்டாரா ஸ்டிராங் ஹைப்ரிட் 3 சிலிண்டர்கள் கொண்ட 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 116 பிஎஸ் பவர், 141 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் e-CVT டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் லிட்டருக்கு 27.97 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் திறன் கொண்டுள்ளது.

    • ஆஸ்டன் மார்டின் நிறுவனத்தின் புதிய கார் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
    • சர்வதேச சந்தையில் இந்த கார் பெண்ட்லி பெண்ட்யகா, பெராரி புரோசங் மற்றும் லம்போர்கினி உருஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    உலகின் சக்திவாய்ந்த ஆடம்பர் எஸ்யுவி மாடல்- ஆஸ்டன் மார்டின் DBX707 இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய ஆஸ்டன் மார்டின் DBX707 விலை ரூ. 4 கோடியே 63 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது ஏற்கனவே இந்தியாவில் கிடைக்கும் ஆஸ்டன் மார்டின் DBX மாடலின் சக்திவாய்ந்த வேரியண்ட் ஆகும்.

    புதிய ஆஸ்டன் மார்டின் DBX707 பெயரில் உள்ள 707 என்பது இந்த கார் வெளிப்படும் திறனை குறிக்கிறது. அந்த வகையில் இது உலகின் சக்திவாய்ந்த ஆடம்பர எஸ்யுவி என்ற பெருமையை ஆஸ்டன் மார்டின் DBX707 பெற்று இருக்கிறது. இது லம்போர்கினி உருஸ் மாடலை விட வேகமானது ஆகும். மேலும் விலை உயர்ந்த ஆடம்பர எஸ்யுவி மாடல் ஆகும். சர்வதேச சந்தையில் பெண்ட்லி பெண்ட்யகா, பெராரி புரோசங் மற்றும் லம்போர்கினி உருஸ் போன்ற மாடல்களுக்கு புதிய ஆஸ்டன் மாமர்டின் DBX707 போட்டியாக அமைகிறது.

    ஆஸ்டன் மார்டின் DBX707 மாடலில் 4.0 லிட்டர் வி8 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 707 ஹெச்பி பவர், 900 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 9 ஸ்பீடு வெட் கிளட்ச் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எஸ்யுவி மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 3.3 நொடிகளில் எட்டிவிடும். இந்த கார் மணிக்கு அதிகபட்சமாக 311 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.

    ஸ்டைலிங்கை பொருத்தவரை ஆஸ்டன் மார்டின் DBX707 மாடலில் முற்றிலும் புதிய முன்புறம் வழங்கப்பட்டு இருக்கிறது. இது DBX மாடலில் இருப்பதை விட வித்தியாசமாக காட்சியளிக்கிறது. இந்த காரின் முன்புறம் பெரிய கிரில், புது தோற்றம் கொண்ட டிஆர்எல்கள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் புதிய ஏர் இண்டேக், பிரேக் கூலிங் டக்ட்கள், முன்புற ஸ்ப்லிட்டர் ப்ரோபைல் வழங்கப்பட்டு உள்ளன.

    • டொயோட்டா நிறுவனத்தின் கார் மாடல்கள் விலை இந்திய சந்தையில் மாற்றப்பட்டு இருக்கிறது.
    • விலை மாற்றம் தேர்வு செய்யப்பட்ட மாடல்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இவை ஏற்கனவே அமலுக்கு வந்துவிட்டது.

    டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் இந்தியாவில் தேர்வு செய்யப்பட்ட கார் மாடல்கள் விலையை உயர்த்தி இருக்கிறது. விலை உயர்வு ஏற்கனவே அமலுக்கு வந்து விட்டது. இம்முறை டொயோட்டா கார் மாடல்கள் விலை ரூ. 11 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சமாக ரூ. 1 லட்சத்து 85 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது.

    இந்திய சந்தையில் ஒற்றை வேரியண்டில் கிடைக்கும் டொயோட்டா வெல்ஃபயர் மாடலின் விலை தற்போது ரூ. 1 லட்சத்து 85 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதைத் தொடர்ந்து டொயோட்டா கேம்ரி மாடலுக்கு ரூ. 90 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

    டொயோட்டா பார்ச்சூனர் மாடலின் வேரியண்ட்களுக்கு ஏற்ப ரூ. 19 ஆயிரத்தில் துவங்கி ரூ. 77 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதேபோன்று இன்னோவா க்ரிஸ்டா விலை ரூ. 11 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 23 ஆயிரம் உயர்த்தப்பட்டுள்ளது.

    விலை உயர்வு தவிர டொயோட்டா நிறுவனம் சமீபத்தில் தான் அர்பன் குரூயிசர் ஹைரைடர் மிட்-சைஸ் எஸ்யுவி-யை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதைத் தொடர்ந்து புதிய கிளான்சா மாடலின் CNG வேரியண்டை அறிமுகம் செய்ய டொயோட்டா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    இந்தியாவில் புதிய அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடல் விலை ரூ. 10 லட்சத்து 48 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 18 லட்சத்து 99 ஆயிரம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த கார் மைல்டு மற்றும் ஸ்டிராங் ஹைப்ரிட் என இரண்டு வித பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    • மாருதி சுசுகி நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடிகளை அறிவித்து இருக்கிறது.
    • கார் மாடல்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் பண்டிகை காலக்கட்டத்தை குறிவைத்து அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.

    மாருதி சுசுகி நிறுவனம் ஆல்டோ K10 ஹேச்பேக் காருக்கு ரூ. 25 ஆயிரம் வரையிலான பலன்களை வழங்குகிறது. ஆல்டோ மட்டுமின்றி பல்வேறு இதர மாடல்களுக்கும் சிறப்பு சலுகைகளை மாருதி சுசுகி அறிவித்து இருக்கிறது. பண்டிகை காலக்கட்டத்தை குறிவைத்தே இந்த சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

    சலுகைகளை பொருத்தவரை மாருதி சுசுகி ஆல்டோ 800 மாடலுக்கு ரூ. 29 ஆயிரம் மதிப்புள்ள பலன்களும், வேகன் ஆர் மாடலுக்கு ரூ. 40 ஆயிரம் வரையிலான பலன்களும் வழங்கப்படுகின்றன. மாருதி சுசுகி செலரியோ மற்றும் எஸ் பிரெஸ்ஸோ மாடல்களுக்கு ரூ. 59 ஆயிரம் மதிப்புள்ள பலன்கள் வழங்கப்படுகின்றன.

    ஆல்டோ 800 மாடல் விற்பனை படிப்படியாக நிறுத்தப்பட்ட பின் மாருதி சுசுகி நிறுவனத்தின் குறைந்த விலை ஹேச்பேக் மாடலாக புதிய ஆல்டோ K10 மாறும். தற்போது புதிய மாருசி சுசுகி ஆல்டோ K10 ஹேச்பேக் மாடல்- சாலிட் வைட், சில்கி சில்வர், கிரானைட் கிரே, சிஸ்லிங் ரெட், ஸ்பீடி புளூ மற்றும் எர்த் கோல்டு என ஆறு விதமான நிறங்களில் கிடைக்கிறது. மேலும் புதிய 1000 சிசி ஹேச்பேக் மாடல் ஆறு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    2022 மாருதி சுசுகி ஆல்டோ K10 மாடலில் 1.0 லிட்டர், நேச்சுரல் ஆஸ்பிரேட் செய்யப்பட்ட 3 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 66 ஹெச்பி பவர், 89 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு AMT யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது.

    • டொயோட்டா நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த புதிய அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடல் விற்பனை நடைபெற்று வருகிறது.
    • இந்திய சந்தையில் புதிய அர்பன் குரூயிசர் ஹைரைடர் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 18 லட்சத்து 99 ஆயிரம் ஆகும்.

    டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடலை சமீபத்தில் அறிமுகம் செய்தது. மேலும் இந்த காரின் விலை விவரங்கள் சில தினங்களுக்கு முன்பு தான் அறிவிக்கப்பட்டன. அந்த வகையில் புதிய அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடல் விலை ரூ. 10 லட்சத்து 48 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 18 லட்சத்து 99 ஆயிரம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

    விலை விவரங்கள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து புதிய அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடலை வாங்கியவர்களுக்கு காரை வினியோகம் செய்யும் பணிகளை டொயோட்டா துவங்கி உள்ளது. இந்திய சந்தையில் புதிய டொயோட்டா அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடல் E, S, G மற்றும் V என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. மேலும் இந்த கார் மைல்டு மற்றும் ஸ்டிராங் ஹைப்ரிட் என இரண்டு வித பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    இதன் மைல்டு ஹைப்ரிட் வெர்ஷனில் உள்ள 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 102 ஹெச்பி பவர், 136.8 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டு உள்ளன. ஸ்டிரீங் ஹைப்ரிட் வெர்ஷனில் உள்ள 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் சேர்ந்து 114 ஹெச்பி பவர், 144 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகின்றன.

    புதிய ஹைரைடர் மாடலில் எல்இடி ஹெட்லேம்ப்கள், 17 இன்ச் அலாய் வீல்கள், பானரோமிக் சன்ரூப், டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, 9 இன்ச் அளவில் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, வெண்டிலேட் செய்யப்பட்ட முன்புற இருக்கைகள், லெதர் இருக்கை மேற்கவர்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    இந்திய சந்தையில் புதிய டொயோட்டா அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடல் ஹூண்டாய் கிரெட்டா, ஸ்கோடா குஷக், போக்ஸ்வேகன் டைகுன், கியா செல்டோஸ் மற்றும் மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    • மஹிந்திரா நிறுவனத்தின் புதிய XUV300 ஸ்போர்ட்ஸ் மாடல் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது.
    • முன்னதாக 2022 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் மஹிந்திரா XUV300 ஸ்போர்ட்ஸ் காரை காட்சிப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    மஹிந்திரா நிறுவனம் விரைவில் XUV300 காம்பேக்ட் எஸ்யுவி மாடலின் சக்திவாய்ந்த வேரியண்டை அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய வேரியண்ட் XUV300 ஸ்போர்ட்ஸ் எனும் பெயரில் வெளியாக உள்ளது. 2022 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் மஹிந்திரா நிறுவனம் XUV300 ஸ்போர்ட்ஸ் மாடலை காட்சிக்கு வைத்திருந்தது.

    புதிய மஹிந்திரா XUV300 ஸ்போர்ட்ஸ் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினின் ரி-டியுன் செய்யப்பட்ட மாடல் ஆகும். இதில் உள்ள என்ஜின் 128 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமே வழங்கப்படும் என தெரிகிறது. சமீபத்தில் வெளியான தகவல்களில் மஹிந்திரா நிறுவனம் XUV300 ஸ்போர்ட்ஸ் மாடலை நான்கு வேரியண்ட்களில் அறிமுகம் செய்யும் என கூறப்பட்டது.

    காட்சிக்கு வைக்கப்பட்ட மாடலை பொருத்தவரை இந்த எஸ்யுவி மாடலில் ஸ்போர்ட்ஸ் பேட்ஜிங், காண்டிராஸ்ட் நிற பாடி டீகல்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் காரின் டேஷ்போர்டு மற்றும் செண்டர் கன்சோல் போன்ற பகுதிகளில் ரெட் இன்சர்ட்கள் வழங்கப்பட்டு உள்ளன. மஹிந்திரா XUV300 ஸ்போர்ட்ஸ் மாடல் பற்றிய இதர விவரங்கள் வரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

    இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டதும் புதிய மஹிந்திரா XUV300 ஸ்போர்ட்ஸ் மாடல் கியா சொனெட் 1.0 மற்றும் ஹூண்டாய் வென்யூ 1.0 டர்போ என இரண்டு கார்களுக்கு போட்டியாக அமையும்.

    ×