search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 158947"

    • புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடல் HTX வேரியண்டை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.
    • புதிய கியா சொனெட் ஆரோக்ஸ் எடிஷன் நான்கு விதமான நிறங்களில் கிடைக்கிறது.

    கியா இந்தியா நிறுவனத்தின் சொனெட் ஆரோக்ஸ் எடிஷன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய சொனெட் ஆரோக்ஸ் எடிஷன் மாடலின் விலை ரூ. 11 லட்சத்து 85 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய எடிஷன் மாடல் HTX வேரியண்டை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    புதிய சொனெட் மாடலில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. ஆரோக்ஸ் எடிஷன் மாடல் HTX மற்றும் HTX+ வேரியண்ட்களின் இடையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. ஆரோக்ஸ் எடிஷன் மாடலில் காஸ்மடிக் மாற்றங்கள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.

     

    முந்தைய ஆனிவர்சரி எடிஷனை போன்றே புதிய ஆரோக்ஸ் எடிஷனிலும் பிரமாண்ட ஸ்கிட் பிலேட்கள், முன்புற பம்ப்பர், கிரில், டோர் சில்கள், ரியர் ஸ்கிட் பிலேட் மற்றும் செண்டர் வீல் கேப்களில் டேஞ்சரைன் அக்செண்ட்கள் செய்யப்பட்டுள்ளன. இதன் கிரில் பகுதியிலும் ஆரோக்ஸ் பேட்ஜிங் டேஞ்சரைன் அக்செண்டில் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய கியா சொனெட் ஆரோக்ஸ் எடிஷன் - கிராவிட்டி கிரே, அரோரா பிளாக் பியல், ஸ்பார்க்லிங் சில்வர் மற்றும் கிலேசியர் வைட் பியல் என்று நான்கு விதமான நிறங்களில் கிடைக்கிறது. HTX வேரியண்டில் உருவாக்கப்பட்டு இருப்பதால், சொனெட் ஆரோக்ஸ் எடிஷன் மாடலில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

     

    இந்த மாடலில் 8.0 இன்ச் டச் ஸ்கிரின், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே கனெக்டிவிட்டி, ஆட்டோமேடிக் எல்இடி ஹெட்லேம்ப்கள், சிங்கில் பான் சன்ரூஃப், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், ரியர் ஏசி வெண்ட்கள், குரூயிஸ் கண்ட்ரோல் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. பாதுகாப்பிற்கு நான்கு ஏர்பேக், சீட்பெல்ட் ரிமைண்டர்கள், டயர் பிரெஷர் மாணிட்டரிங் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    சொனெட் ஆரோக்ஸ் எடிஷன் மாடலில் 120 ஹெச்பி பவர், 172 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 116 ஹெச்பி பவர், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு iMT, பெட்ரோல் என்ஜினுடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ், டீசல் என்ஜினுடன் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

    இந்திய சந்தையில் கியா சொனெட் ஆரோக்ஸ் எடிஷன் மாடல் ஹூண்டாய் வென்யூ, மஹிந்திரா XUV300, டாடா நெக்சான், மாருதி சுசுகி பிரெஸ்ஸா, மாருதி சுசுகி Fronx, ரெனால்ட் கைகர் மற்றும் நிசான் மேக்னைட் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    • டிரைவரின் கட்டுப் பாட்டை இழந்த கார் நிலை தடுமாறி ரேசன் கடை நோக்கி பாய்ந்தது
    • காரின் பதிவு எண் முகவரி மூலம் காரை ஓட்டி வந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    கன்னியாகுமரி :

    மணவாளக்குறிச்சி அருகே உள்ள உரப்பனவிளையை சேர்ந்தவர் அய்யாப்பழம். இவரது மகன் சந்திரன் (வயது 35). சம்பவத்தன்று இவர் திருநயினார்குறிச்சி ரேசன் கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார்.

    அங்கு அதே பகுதியை சேர்ந்த மணி (68), கோபிநாத் (67) ஆகியோரும் பொருட்கள் வாங்க ரேசன் கடை முன்பு நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஒரு கார் வந்தது. அந்த கார் எதிர்பாராதவிதமாக தாறுமாறாக ஓடியது.

    டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் நிலை தடுமாறி ரேசன் கடை நோக்கி பாய்ந்தது. இந்த சம்பவத்தில் கார் மோதியதில் ரேசன் கடை முன்பு நின்ற சந்திரன், மணி, கோபிநாத் ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு ராஜாக்கமங்கலத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து நடந்ததும் காரை ஓட்டி வந்தவர் காரை விட்டு விட்டு தப்பியோடி விட்டார்.

    விபத்து குறித்து மணவாளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்திற்கு காரணமான காரை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து காரின் பதிவு எண் முகவரி மூலம் காரை ஓட்டி வந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • எக்ஸ்டர் மாடல் ஹூண்டாய் நிறுவனத்தின் குளோபல் டிசைன் மொழியில் ஸ்டைலிங் செய்யப்படுகிறது.
    • ஹூண்டாய் எக்ஸ்டர் மாடலில் கனெக்டெட் டெயில் லேம்ப்கள், எல்இடி லைட்டிங் வழங்கப்படுகிறது.

    ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது எக்ஸ்டர் மாடல் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. மேலும் எக்ஸ்டர் மாடலுக்கான முன்பதிவு இந்தியாவில் துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 11 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஹூண்டாய் எக்ஸ்டர் மாடல் EX, S, SX, SX (O) மற்றும் SX (O) கனெக்ட் என்று ஐந்து வித வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

    புதிய எக்ஸ்டர் மாடல் ஹூண்டாய் நிறுவனத்தின் குளோபல் டிசைன் மொழியில் ஸ்டைலிங் செய்யப்பட்டுள்ளது. ஐயோனிக் 5 மற்றும் வெர்னா மாடல்களும் இதே டிசைனிங்கில் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. தோற்றத்தில் இந்த கார் எஸ்யுவி போன்ற ஸ்லைடிங், கூர்மையான மஸ்குலர் லைன், ஃபிலேர்டு வீல் ஆர்ச்கள், ரூஃப் ரெயில்கள் உள்ளன.

     

    ஹூண்டாய் எக்ஸ்டர் மாடலின் பின்புறம் எப்படி காட்சியளிக்கும் என்று தெரியவில்லை. எனினும், ஏற்கனவே வெளியான புகைப்படங்களின் படி புதிய எக்ஸ்டர் மாடலில் கனெக்டெட் டெயில் லேம்ப்கள், எல்இடி லைட்டிங், ஃபுளோடிங் ஸ்டைல் ரூட் டிசைன், மஸ்குலர் ஹேச் மற்றும் பிரமாண்ட ரியர் பம்ப்பர் கொண்டிருக்கும் என்று தெரிகிறது.

    புதிய எக்ஸ்டர் மாடலில் E20 ரக எரிபொருளில் இயங்கும் திறன் கொண்ட 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் என்ஜின், 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன், ஆப்ஷனல் ஸ்மார்ட் ஆட்டோ ஆட்டோமேடட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் 1.2 லிட்டர் பை-ஃபியூவல் கப்பா பெட்ரோல் + CNC என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    இந்திய சந்தையில் ஹூண்டாய் எக்ஸ்டர் மாடல் டாடா பன்ச் மற்றும் சிட்ரோயன் C3 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 

    • சந்தேகப்படும்படியாக கார் மற்றும் மோட்டார் சைக்கிள் நின்றது.
    • போலீசார் சோதனை நடத்தியதில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு கவுந்தப்பாடி-காஞ்சிக்கோவில் பிரிவு பகுதியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அருள்முருகன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர்.

    அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக கார் மற்றும் மோட்டார் சைக்கிள் நின்றது. அதை ஓட்டி வந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் திருச்சி மாவட்டம் உறையூர் முஸ்லீம் வீதியை சேர்ந்த அப்துல் ரகுமான் என்பதும், பெருந்துறை பெத்தாம்பாளையத்தை சேர்ந்த தர்மராஜ் (33) என்பதும் தெரியவந்தது.

    இவர்களின் கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் போலீசார் சோதனை நடத்தியதில், அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருளான கஞ்சா பொட்டலங்களை விற்ப னைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து அப்துல் ரகுமான், தர்மராஜ் 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 4 கிலோ கஞ்சா பொட்ட லங்கள் மற்றும் கார், மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் ஈரோடு மரப்பாலம் நடராஜா தியேட்டர் பகுதியில் கஞ்சா பொட்டலங்கள் விற்பனை யில் ஈடுபட்டிருந்த மரப்பா லம் ஆலமரத்து வீதியை சேர்ந்த தினேஷ் என்ற கொசு தினேஷ் (24) என்பவரை ஈரோடு டவுன் போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.   

    • பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் 2 சீரிஸ் கிரான் கூப் மாடல் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.
    • புதிய 2 சீரிஸ் வேரியண்ட் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனில் கிடைக்கிறது.

    பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம் தனது 2 சீரிஸ் கிரான் கூப் மாடலின் புதிய வேரியண்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. புதிய பெட்ரோல் வேரியண்ட் M ஸ்போர்ட் ப்ரோ என்று அழைக்கப்படுகிகிறது.

    புதிய பிஎம்டபிள்யூ விலை ரூ. 45 லட்சத்து 50 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடல் 220i M ஸ்போர்ட் மற்றும் 220d M ஸ்போர்ட் வேரியண்ட்களின் கீழ் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது.

     

    அம்சங்களை பொருத்தவரை புதிய M ஸ்போர்ட் ப்ரோ மாடலில் ஹெட்-அப் டிஸ்ப்ளே, பிஎம்டபிள்யூ ஜெஸ்ட்யுர் கண்ட்ரோல், 10 ஸ்பீக்கர் செட்டப், உள்புறத்தில் காண்டிராஸ்ட் தீம் கொண்ட டேஷ்போர்டு, M சார்ந்த ஆந்த்ரசைட் லைனிங், லெதர் ஸ்டீரிங் வீல், பேடில் ஷிஃப்டர்கள், M பேட்ஜிங், இலுமினேட் செய்யப்பட்ட போஸ்டன் இண்டீரியர் ட்ரிம் ஃபினிஷர்கள் உள்ளன.

    புதிய M ஸ்போர்ட் ப்ரோ வேரியண்டில் 2.0 லிட்டர் நான்கு சிலிண்டர்கள் கொண்ட டர்போ பெட்ரோல் என்ஜின், 7 ஸ்பீடு ஸ்டெப்டிரானிக் டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 189 ஹெச்பி பவர், 280 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் லாஞ்ச் கண்ட்ரோல், ஷிஃப்ட் பை கியர் செலக்டர் ஸ்விட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது. 

    • சேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கருப்பூர் கரும்பாலை ெரயில்வே மேம்பாலத்தில் 9.30 மணி அளவில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராமல் காரும், லாரி யும் பயங்கரமாக மோதியது.
    • கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரில் வந்த கிறிஸ்டோபருக்கு கால், உடல் துண்டானது.

    கருப்பூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் நாட்டரம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் கிறிஸ்டோபர் (வயது 26 ). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இவர் மற்றும் அதே பகுதி சேர்ந்த முத்து மகன் பெரிய நாயகம், (வயது 24) உள்பட மொத்தம் 5 பேர் இன்று காலையில் கிருஷ்ணகிரியில் இருந்து கோவை செல்வ தற்காக சொகுசு காரில் சேலம் வழியாக சென்று கொண்டிருந்தனர்.

    கார் சேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கருப்பூர் கரும்பாலை ெரயில்வே மேம்பாலத்தில் 9.30 மணி அளவில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராமல் காரும், லாரி யும் பயங்கரமாக மோதியது.

    இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரில் வந்த கிறிஸ்டோபருக்கு கால், உடல் துண்டானது. மேலும் வயிற்றில் இருந்து குடல் வெளிேய வந்தது. மற்றொரு வாலிபர் பெரியநாயகத்திற்கு தலை, கால், அடிப்பட்டு எலும்பு முறிவு ஏற்பட்டது. மேலும் காரில் இருந்த மற்றவர்களும் படுகாயம் அடைந்தனர்.

    கவலைக்கிடம்

    அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், போலீசார் சேர்ந்து 5 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் கிறிஸ்டோபரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

    இந்த விபத்து நடந்த பகுதி சேலம் -பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை என்பதால் பஸ் பயணிகள், அலுவலகத்திற்கு செல்லும் அலுவலர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த விபத்தை வேடிக்கை பார்ப்பதற்காக ஆயிரக்க ணக்கான பொதுமக்கள் கூடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கருப்பூர் இன்ஸ்பெக்டர் தமிழரசி, ஓமலூர் தீய ணைப்பு நிலைய ஆய்வாளர் ( பொறுப்பு) குப்புசாமி, மற்றும் போலீசார் போக்கு வரத்தை சீர் செய்தனர். இந்த விபத்து குறித்து இன்ஸ்பெக்டர் தமிழரசி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • பிஎம்டபிள்யூ X1 sDrive18i M ஸ்போர்ட் மாடல் சென்னை பிஎம்டபிள்யூ ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது.
    • புதிய பிஎம்டபிள்யூ காரின் வினியோகம் ஜூன் மாதம் துவங்குகிறது.

    பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது X1 சீரிசில் X1 sDrive18i M ஸ்போர்ட் பெயரில் புதிய வேரியண்ட்-ஐ அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய பிஎம்டபிள்யூ காரின் விலை ரூ. 48 லட்சத்து 90 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று துவங்குகிறது. புதிய மாடல் sDrive19i X லைன் மாடலின் மேல் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. பிஎம்டபிள்யூ sDrive19i X லைன் மாடலின் விலை ரூ. 45 லட்சத்து 90 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    பிஎம்டபிள்யூ X1 sDrive18i M ஸ்போர்ட் மாடல் சென்னையில் உள்ள பிஎம்டபிள்யூ ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. வினியோகம் ஜூன் மாதம் துவங்குகிறது. இந்த மாடலில் 1.5 லிட்டர், மூன்று சிலிண்டர்கள் கொண்ட டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

     

    இந்த என்ஜின் 134 ஹெச்பி பவர், 230 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 7 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வெளிப்படுத்துகிறது. ஷைன் 18i X லைன் மாடலுடன் ஒப்பிடும் போது புதிய X1 sDrive18i M ஸ்போர்ட் மாடலில் ஹை கிளாஸ் பிளாக் ரூஃப் ரெயில்கள், ஆக்டிவ் சீட்கள், ரியர் சீட் அட்ஜஸ்ட், ஹார்மன் கார்டன் மியூசிக் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளன.

    இத்துடன் M ஸ்போர்ட் எக்ஸ்டீரியர் பேக்கேஜ் வழங்கப்படுகிறது. இதில் கிட்னி கிரில்-க்கு பியல் க்ரோம் ஃபினிஷ், ஹை கிளாஸ் பிளாக் ஸ்லாட்கள், புதிய பம்ப்பர்கள், ஃபெண்டர் மற்றும் சாவியில் M பேட்ஜ்கள், M ஆந்த்ரசைட் ஹெட்லைனர், லெதர் ஸ்டீரிங் வீல், பேடில் ஷிஃப்டர்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    • டர்போ பெட்ரோல் ஆப்ஷனில் புதிதாக ஷைன் வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
    • டர்போ வேரியண்ட் லிட்டருக்கு 19.3 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது.

    சிட்ரோயன் இந்தியா நிறுவனம் தனது எண்ட்ரி லெவல் ஹேச்பேக் C3 மாடலின் டர்போ வேரியண்ட்களை அறிமுகம் செய்தது. புதிய டர்போ வேரியண்ட் பிஎஸ்6 2 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்பட்டு லிட்டருக்கு 19.3 கிலோமீட்டர் வரை செல்லும் என்று ARAI சான்று பெற்றுள்ளது.

    புதிய சிட்ரோயன் C3 டர்போ வேரியண்ட்களின் விலை ரூ. 8 லட்சத்து 28 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று துவங்குகிறது. டர்போ பெட்ரோல் ஆப்ஷனில் புதிதாக ஷைன் வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதில் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களான ESP, ஹில் ஹோல்டு, என்ஜின் ஆட்டோ ஸ்டார்ட் / ஸ்டாப் மற்றும் TPMS உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ORVM-கள், ரியர் பார்கிங் கேமரா, மேனுவல் டே/நைட் IRVM, மை சிட்ரோயன் கனெக்ட் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி அம்சங்களை கொண்டுள்ளது. வெளிப்புறம் புதிய காரில் 15 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள், முன்புறம் ஃபாக் லேம்ப்கள், ரியர் ஸ்கிட் பிலேட்கள், ரியர் வைப்பர் மற்றும் வாஷர், ரியர் டிஃபாகர் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய C3 மாடலில் உள்ள டர்போ பெட்ரோல் என்ஜின் 109 ஹெச்பி பவர், 190 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

    சிட்ரோயன் C3 டர்போ பிஎஸ்6 2 விலை விவரங்கள்:

    சிட்ரோயன் C3 டர்போ பிஎஸ்6 2 ஃபீல் டூயல் டோன் ரூ. 8 லட்சத்து 28 ஆயிரம்

    சிட்ரோயன் C3 டர்போ பிஎஸ்6 2 ஃபீல் டூயல் டோன் வைப் பேக் ரூ. 8 லட்சத்து 43 ஆயிரம்

    சிட்ரோயன் C3 டர்போ பிஎஸ்6 2 ஷைன் டூயல் டோன் ரூ. 8 லட்சத்து 80 ஆயிரம்

    சிட்ரோயன் C3 டர்போ பிஎஸ்6 2 ஷைன் டூயல் டோன் வைப் பேக் ரூ. 8 லட்சத்து 92 ஆயிரம்

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    • புதிய கார் எஸ்யுவி மாடலில் இருக்க வேண்டிய அனைத்து அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்படும்.
    • முன்னதாக விற்பனையாளர்கள் மட்டும் கலந்து கொண்ட நிகழ்வில் இந்த எஸ்யுவி மாடல் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கிறது.

    ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் இந்தியாவுக்காக உருவாக்கப்பட்ட தனது முதல் மிட்-சைஸ் எஸ்யுவி மாடலை ஜூன் 6 ஆம் தேதி புது டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சி மூலம் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய எஸ்யுவி மாடல் ஹோண்டா எலிவேட் எனும் பெயரில் விற்பனைக்கு வரும் என்றும் இது முதற்கட்டமாக இந்தியாவில் வெளியாகி அதன் பின் மற்ற நாடுகளில் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

    புதிய ஹோண்டா எஸ்யுவி மாடல் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் பலமுறை இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன. அதன்படி புதிய கார் எஸ்யுவி மாடலில் இருக்க வேண்டிய அனைத்து அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. ஸ்பை படங்களில் இந்த கார் முகப்பு பகுதி பிரமாண்டமாக இருக்கும் என்று தெரியவந்துள்ளது. முன்னதாக தாய்லாந்தில் விற்பனையாளர்கள் மட்டும் கலந்து கொண்ட நிகழ்வில் இந்த எஸ்யுவி மாடல் காட்சிக்கு வைக்கப்பட்டது.

    அதில் கலந்து கொண்டவர்கள் புதிய ஹோண்டா எஸ்யுவி அனைவரையும் திரும்பி பார்க்க செய்வதோடு, ஹோண்டாவுக்கு சாதகமான பலன்களை பெற்றுக் கொடுக்கும் என்று தெரிவித்துள்ளனர். சற்றே தடிமனான கிளாடிங், மஸ்குலர் வீல் ஆர்ச்கள், அதிகளவு க்ரோம் அம்சங்கள் இந்த காரில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். இத்துடன் அழகிய எல்இடி ஹெட்லைட்கள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

    பின்புறம் டெயில் லைட்கள் புதிய ஹோண்டா வாகனங்களில் உள்ளதை போன்றே வழங்கப்படும் என்று தெரிகிறது. அசத்தலான மிட்-சைஸ் மாடலை அறிமுகம் செய்வதில் ஹோண்டா மிகவும் கவனமாக செயல்பட்டு வருகிறது. கிரெட்டா, செல்டோஸ் மற்றும் கிராண்ட் விட்டாரா, ஹைரைடர், டைகுன், குஷக் போன்ற மாடல்களை போட்டியில் எதிர்கொள்ளும் வகையில் இந்த எஸ்யுவி உருவாக்கப்பட்டு இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

    புதிய எஸ்யுவி மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இதே என்ஜின் சமீபத்திய ஹோண்டா சிட்டி மாடலிலும் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது CVT கியர்பாக்ஸ் வழங்கப்படலாம். இந்த காரில் டீசல் யூனிட் வழங்கப்படாது என்றே தெரிகிறது.

    • வீணாக அழ வேண்டாம். காவல் துறையில் புகார் அளித்தால், கார் திரும்ப கிடைக்காது.
    • இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

    கார் திருடப்படும் சம்பவங்கள் அதன் உரிமையாளருக்கு தலைவலியை ஏற்படுத்தி விடும். எனினும், சமீபத்தில் காரை திருடிய நபர், அதன் உரிமையாளருக்கு அசத்தலாக தகவல் ஒன்றை சுவற்றில் எழுதி வைத்துள்ளனர். இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    மார்ச் 20, 2023 ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட மாருதி பிரெஸ்ஸா ZXi மாடலை நபர் திருடியுள்ளார். அப்துல் அசிஸ் என்ற நபரின் காரை திருடிய மர்ம நபர், கார் நிறுத்தப்பட்டு இருந்த வீட்டின் சுவரில் ஆறுதல் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

     

    அதில், "உங்களது கார் மூன்று நாட்களில் திரும்ப கிடைத்துவிடும். வீணாக அழ வேண்டாம். காவல் துறையில் புகார் அளித்தால், கார் திரும்ப கிடைக்காது. இதனை வேறு யாரிடமும் கூற வேண்டாம். டென்ஷன் ஆகாதீர்கள்," என்று எழுதியுள்ளார்.

    எனினும், இந்த சம்பவம் குறித்து காரின் உரிமையாளர் காவல் துறையில் புகார் அளித்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சுவரில் அந்த வாசகத்தை எழுதியது யார் என்பதை கண்டறிய தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்தில் மாதிரிகளை ஆய்வு செய்துள்ளனர்.

    கார் திருடப்பட்ட சம்பவம் அசாம் மாநிலத்தின் தாராங் மாவட்டத்தில் ஏப்ரல் 25 ஆம் தேதி அதிகாலை அரங்கேறி இருக்கிறது. 

    Photo Courtesy: Rushlane

    • பழுது பார்ப்பதற்காக திருப்பூரில் உள்ள ஒர்க்ஷாப்பில் நிறுத்தி இருந்தார்.
    • அவிநாசிபாளையம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென காரின் முன் பகுதியில் இருந்து கரும்புகை கிளம்பியது.

     திருப்பூர் :

    மதுரையை சேர்ந்தவர் தேவேந்திரன் (வயது 30). இவர் கார் ஒன்றை வாங்கி அதனை பழுது பார்ப்ப தற்காக திருப்பூரில் உள்ள ஒர்க் ஷாப்பில் நிறுத்தி இருந்தார். இந்த நிலையில் நேற்று இரவு காரின் வேலை முடிந்து காரை எடுத்துக் கொண்டு மதுரைக்கு கொண்டு சென்றார்.

    திருப்பூர் அடுத்த அவிநாசி பாளையம் அருகே சென்று கொண்டி ருந்தபோது திடீரென காரின் முன் பகுதியில் இருந்து கரும்புகை கிளம்பி யது. இதனைப்பார்த்து சுதாரித்து கொண்ட தேவேந்திரன் உடனடியாக காரில் இருந்து இறங்கினார்.சிறிது நேரத்தில் கார் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக அருகில் உள்ள தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.இருந்த போதிலும் கார் முழுவதும் எரிந்து நாசமானது.இது தொடர்பாக அவிநாசிபா ளையம் போலீசார் வழக்குப்ப திவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிட்ரோயன் C3 ஏர்கிராஸ் மாடல் ஏழு பேர் அமரக்கூடிய இருக்கை அமைப்பில் கிடைக்கிறது.
    • மூன்றாம் அடுக்கு இருக்கைகளை இடவசதி தேவைப்படும் போது கழற்றி வைத்துக் கொள்ளலாம்.

    சிட்ரோயன் நிறுவனத்தின் முற்றிலும் புதிய எஸ்யுவி C3 ஏர்கிராஸ் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய கார் மூன்று அடுக்கு இருக்கைகளை கொண்டிருக்கிறது. இந்த கார் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

    C3 ஏர்கிராஸ் மாடல் C3 ஹேச்பேக் மாடலை விட நீளமாக இருக்கிறது. இந்த காரின் நீளம் 4.3 மீட்டர்கள் ஆகும். தோற்றத்தில் இந்த காரின் முகம் ஒரே மாதிரியே காட்சியளிக்கிறது. இதில் ஸ்ப்லிட் ரக ஹெட்லேம்ப்கள், கவர்ச்சிகரமான மோனோடோன் மற்றும் டூயல் டோன் நிற ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது.

     

    இந்த காரின் முன்புற கிரில் 2 ஸ்லாட் க்ரோம் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இதன் பம்ப்பர் பாடி நிறத்தால் ஆன பாகங்களை கொண்டிருக்கிறது. இத்துடன் பிளாக் கிலாடிங் உள்ளது. இத்துடன் வட்ட வடிவம் கொண்ட ஃபாக் லேம்ப்கள், சில்வர் ஃபாக்ஸ் பிளேட்கள் வழங்கப்படுகின்றன. பக்கவாட்டில் 17 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள், சதுரங்க வடிவம் கொண்ட டெயில் லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளது.

    டெயில்கேட் பகுதியில் C3 ஏர்கிராஸ் பேட்ஜ் மற்றும் ரியர் பம்ப்பரின் கீழ்புறத்தில் சில்வர் நிற ஸ்கிட் பிளேட்கள் உள்ளன. C3 ஏர்கிராஸ் மாடலின் மிகமுக்கிய அம்சம் மூன்றாம் அடுக்கு இருக்கைகள் ஆகும். இவற்றை அதிக இடவசதி தேவைப்படும் போது கழற்றி வைத்துக் கொள்ளலாம். சிட்ரோயன் C3 ஏர்கிராஸ் மாடல் ஏழு பேர் அமரக்கூடிய இருக்கை அமைப்பில் கிடைக்கிறது.

    இத்துடன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், 10 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் கனெக்டிவிட்டி, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, உயரத்தை அட்ஜஸ்ட் செய்யக்கூடிய சீட், மேனுவல் ஏசி, ஸ்டீரிங் மவுண்ட் செய்யப்பட்ட கண்ட்ரோல்கள் வழங்கப்பட்டுள்ளன.

    புதிய சிட்ரோயன் C3 ஏர்கிராஸ் மாடலில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 109 ஹெச்பி பவர், 190 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிது. 

    ×