search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 158947"

    கார் மற்றும் மோட்டார் சைக்கிளை ஒதுக்கிவிட்டு பாரம்பரிய பயணத்துக்காக ரூ.10¾ லட்சத்தில் இரட்டை மாட்டுவண்டியை தொழிலதிபர் வாங்கினார். #Bullockcart

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள ஒண்ணுபுரம் கிராமத்தில் வசிப்பவர் மார்கபந்து (வயது 58). இவர் பட்டு சேலை தயாரித்து விற்கும் நிறுவனம் நடத்தி வருகிறார்.

    நவநாகரீக காலத்திலும் இவர் பழமையையே விரும்பி வருகிறார். சாதாரண கூலித்தொழிலாளி முதல் நிறுவன உரிமையாளர்கள் வரை மோட்டார்சைக்கிள், கார் போன்ற வாகனங்களில் பயணம் செய்யும் நிலையில் மார்கபந்து அதனையெல்லாம் விரும்புவதில்லை.

    நமது பழமை, பாரம்பரியத்தை போற்றி பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் மாட்டுவண்டி வாங்க முடிவு செய்தார். அது தேக்குமரத்தில் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என நினைத்த அவர் சேலத்திலிருந்து ரூ.8 லட்சம் மதிப்பில் ஆர்டர் கொடுத்து இரட்டை மாட்டுவண்டியை வாங்கினார். இந்த வண்டிக்காக ரூ.2¾ லட்சத்தில் 2 காங்கேயம் காளைகளையும் வாங்கினார்.

    இந்த மாட்டு வண்டிக்கும், காங்கேய காளைகளுக்கும் தனது ஊரில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் பூஜை செய்தார். பின்னர் அந்த மாட்டு வண்டியில் குடும்பத்துடன் பயணம் செய்தார்.

    பழைய ஜமீன் பரம்பரையை சேர்ந்தவர்களும் நிலக்கிழார்களும், நாட்டாண்மைகளும் இதுபோன்ற வண்டிகளில் பழங்காலத்தில் பயணம் செய்ததை பொதுமக்கள் சினிமாவில் மட்டுமே பார்க்க முடியும். இந்த நிலையில் மார்கபந்து தேக்குமரத்தினாலான மாட்டு வண்டியில் காங்கேய காளைகளை பூட்டி அதில் பயணம் செய்ததை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து பாராட்டினர். #Bullockcart

    கேரள கவர்னர் மாளிகைக்கு சொந்தமான கார் வேகமாக சென்றதற்காக மோட்டார் வாகன துறை அபராத நோட்டீஸ் அனுப்பிய நிலையில், சமரசமின்றி அபராதத்தை கட்ட அதிகாரிகளுக்கு கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.
    திருவனந்தபுரம்:

    கடந்த ஏப்ரல் மாதம் கேரள கவர்னர் சதாசிவம் பயணிக்கும் மெர்சீடிஸ் கார் ராஜ்பவன் அருகே வேகமாக சென்றுள்ளது. வேகமாக செல்லும் வாகனங்களை அடையாளம் காட்ட அங்கு பொருத்தப்பட்டுள்ள கேமரா, கவர்னரின் காரை புகைப்படம் எடுத்து மோட்டார் வாகன துறைக்கு அனுப்பியுள்ளது.

    இதனை அடுத்து, வேகமாக சென்றதற்காக ரூ.400 அபராதம் கட்ட வேண்டும் என கவர்னர் மாளிகைக்கு மோட்டார் வாகன துறை நோட்டீஸ் அனுப்பியது. தான் காரில் இல்லை என்றாலும், கவர்னர் மாளிகைக்கு சொந்தமான கார் என்பதால், அந்த அபராதத்தை எவ்வித சமரசமும் இல்லாமல் கட்ட வேண்டும் என கவர்னர் சதாசிவம் உத்தரவிட்டுள்ளார்.

    ஒரு நாளைக்கு இதுபோல மூன்றாயிரம் கார்கள் பிடிபடுவதாகவும், இதன்மூலம் மாதம் இரண்டு கோடி வரை அபராதம் வசூலிக்கப்படுவதாகவும் மோட்டார் வாகன துறை தெரிவித்துள்ளது. 
    இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் கேப்டன் கூல் என செல்லமாக அழைக்கப்படும் டோனியின் கார் மற்றும் மோட்டார் சைக்கிளின் தொகுப்புகள் அனைவரையும் வியப்படையச் செய்கின்றன. #MahendraSinghDhoni ‏
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனியின் முழுப்பெயர், மகேந்திர சிங் டோனி. ஆனால் இவரது சிறப்பான மற்றும் நிதானமாக கேப்டன் பண்பு காரணமாக கேப்டன் கூல் என ரசிகர்கள் செல்லமாக அழைக்கின்றனர். பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங்கில் தனித்திறமை கொண்டவர். கிரிக்கெட் மீது மிகுந்த அன்பு கொண்ட டோனி, அதே காதலை கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் மீதும் வைத்திருக்கிறார்.

    டோனி பொதுவாக சொகுசு கார்கள் மீது ஆர்வம் கொண்டவர். அவரிடம் பல கார்கள் உள்ளது. அவற்றை குறித்து விரிவாக பார்ப்போம்.

    ஹம்மர் H2:


    டோனியிடம் உள்ள கார்களில் மிகவும் கவர்ச்சியான கார் இதுவாகும். தனது சொந்த ஊரில் டோனி இதனை அதிகம் பயன்படுத்துவார். இது சாலையில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திழுக்கும்.

    மகேந்திரா ஸ்கார்பியோ:


    இது டோனியிடன் உள்ள மிக எளிமையான கார். இது சாதாரணமாக ஸ்கார்பியோ போன்று இல்லாமல் டோனிக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. நான்கு பேர் அமரக்கூடிய இந்த காரில் பல சிறப்பு அம்சங்கள் உள்ளன.

    ஆடி Q7:


    ஆடி கார் ஜெர்மன் நாட்டில் உற்பத்தியாகும் சொகுசு கார். இது அவர் அதிகமாக பயன்படுத்தும் கார்களில் ஒன்று. இது பழைய மாடல் கார்.

    லண்ட் ரோவர் பிரீலண்டர் 2:


    இதுவும் மிகச்சிறந்த சொகுசு கார். இதன் சிறப்பு அம்சங்கள் மிகவும் பிரபலமானது.

    டோனியிடம் உலகின் மிகச்சிறந்த பல மோட்டார் சைக்கிள்கள் உள்ளன.

    யமகா RD350:



    டோனிக்கு மிகவும் பிடித்த பைக் இது. அவரிடம் இரண்டு யமகா உள்ளது. அவர் பல முறை இதனை சுத்தம் மற்றும் சரி செய்வார். இவர் வாங்கிய முதல் பைக் இது. அதனை 4,500 ரூபாய்க்கு வாங்கினார்.

    கான்பிடரேட் ஹெல்காட் X32:


    இது மிகவும் அரிய பைக்காகும். இது மிகவும் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் டோனி பல முறை ரேஸ் செய்துள்ளார். இதன் மதிப்பு 50 லட்சம் ரூபாயாகும்.

    ஹார்லி-டேவிட்சன் பட்பாய்:


    இந்த பைக்கில் டோனி தனது சொந்த ஊரை சுற்றி வருவார். இதை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்.

    பிஎஸ்ஏ கோல்ட்ஸ்டார்:


    இது அவருடைய மோட்டார் சைக்கிள் தொகுப்புகளில் தலைச்சிறந்தது.

    கவாசாகி நின்ஜா ZX14R


    இது மிகச்சிறந்த மோட்டார் சைக்கிள்.

    யமகா FZ-1:


    டோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அதனால் அதிக நாட்கள் சென்னையில் தங்குகிறார். ஸ்டேடியத்திற்கு இந்த பைக்கில் தான் வருகிறார்.

    கவாசாகி நின்ஜா H2:


    இது டோனி சமீபத்தில் வாங்கிய பைக். பைக்கின் புகைப்படங்களை டோனி தனதுசமூக ஊடகங்களில் பதிவு செய்தார். இதன் மதிப்பு 30 லட்சம் ரூபாயாகும். #MahendraSinghDhoni
    ×