search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில்வே"

    பஞ்சாப் அமிர்தசரஸில் ஏற்பட்ட ரெயில் விபத்து குறித்து எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை என ரெயில்வே வாரிய தலைவர் அஷ்வானி லோஹானி தெரிவித்துள்ளார். #AmritsarTrainAccident
    புதுடெல்லி:

    பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பகுதியில் தசரா விழாவின் போது ஏற்பட்ட ரெயில் விபத்தில் 61 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

    இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து பேசிய ரெயில்வே வாரிய தலைவர் அஷ்வானி லோஹானி, விபத்தின்போது ரெயில் அதற்கு விதிக்கப்பட்டு இருந்த வேகத்திலேயே சென்று கொண்டிருந்ததாகவும், திடீரென ரெயிலை நிறுத்த முயற்சித்து இருந்தால் மிக மோசமான விளைவுகள் ஏற்பட்டு இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

    மேலும், இந்த தசரா கொண்டாட்டம் குறித்து எந்த வித தகவலும் ரெயில்வே துறைக்கு தெரிவிக்கப்படவில்லை எனவும், எந்த அனுமதியும் ரெயில்வே துறையிடம் பெறப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். #AmritsarTrainAccident
    2014-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை காணொளி காட்சி மூலம் ரெயில்வே நிகழ்ச்சிகளை துவக்கி வைக்க 13.46 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாக ரெயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. #MinistryofRailways #RTI
    மும்பை:

    மும்பையைச் சேர்ந்த மனோரஞ்சன் ராய் என்ற சமூக ஆர்வலர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் ரெயில்வே துறையின் செலவு குறித்து கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த ரெயில்வே அமைச்சகம், பயணிகளின் வசதிக்காக அதிக அளவில் பணம் செலவிடப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது.

    மேலும், கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை காணொளி காட்சி மூலம் ரெயில்வே நிகழ்ச்சிகளை துவக்கி வைக்க 13 கோடியே 46 லட்ச ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. புதிய ரெயில் பெட்டிகளின் துவக்க விழா, ரெயில் நிலையங்களில் புதிய பகுதி, கழிவறைகள் திறப்பு விழா என பல்வேறு நிகழ்ச்சிகள் காணொளி காட்சி மூலம் துவக்கி வைக்கப்பட்டது.

    காணொளி காட்சிக்கான கேபிள்கள் அமைப்பதிலும், மேடை, எல்.யி.டி. திரை போன்ற பலவற்றுக்கும் இந்த பணம் செலவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று ஆண்டுகளில் சுரேஷ் பிரபு ரெயில்வே துறை மந்திரியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #MinistryofRailways #RTI
    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்துக்கு ரெயில்கள் மூலம் அனுப்பப்படும் நிவாரணப் பொருட்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என ரெயில்வே மந்திரி பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார். #KeralaRains #KeralaFloods
    புதுடெல்லி:

    கடவுளின் தேசம் என அழைக்கப்படும் கேரள மாநிலத்தை சூனியம் சூழ்ந்ததுபோல, மழை வெள்ளத்தால் தற்போது அந்த மாநிலமே சேதமடைந்துள்ளது. பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி, பல லட்சம் மக்கள் தங்களது உடமைகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த மக்களுக்கும், கேரளாவுக்கும் உதவ பல்வேறு மாநிலங்களும், தொண்டு நிறுவனங்களும் முன்வந்துள்ளன. சமீபத்தில் கோவை மாநிலத்தில் இருந்து கேரளாவுக்கு 2 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டன. இதே போல், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரள மாநிலத்துக்கு நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு வருகிறது.



    இந்நிலையில், பல்வேறு மாநிலங்களில் இருந்து பொதுவுடைமை நிறுவனங்கள் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் ரெயில்கள் வழியாக கேரளாவுக்கு அனுப்பப்படும் நிவாரண பொருட்களுக்கு கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது என ரெயில்வே மந்திரி பியுஷ் கோயல் அறிவித்துள்ளார். #KeralaRains #KeralaFloods 
    ரெயில்வே துறை தனியார் மயமாக்குவதற்கான சாத்தியமே இல்லை என மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் இன்று தெரிவித்துள்ளார். #PiyushGoyal #Railways
    கவுகாத்தி :

    அசாம் மாநிலம், கவுகாத்தியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள செய்தியாளர்களிடம் வீடியோ கான்பரன்சிங் மூலமாக மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் இன்று உரையாடினார். 

    அதில், ரெயில்வே துறையை தனியார் வசம் ஒப்படைக்கும் எந்த திட்டமும் இல்லை. ஆனால், ரெயில் நிலையங்களின் மேம்பாடு, ரெயிலின் உள்கட்டமைப்பு, ரெயில் என்ஜின் தயாரிப்பு, ரெயில் பயணங்களின் போது வழங்கப்படும் உணவு போன்ற ரெயில்வேயின் முக்கியம் அல்லாத இதர பணிகள் தனியார் வசம் ஒப்படைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

    மேலும், குறைவான செலவில் நிறைவான ரெயில்வே சேவையை வழங்கும் பொருட்டு அதிகளவிலான ரெயில்களை மின்சாரத்தின் மூலம் இயக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக அவர் கூறினார். #PiyushGoyal #Railways
    ×