என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 159151
நீங்கள் தேடியது "ஹாலெப்"
உலக தரவரிசையில் டாப்-8 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்கும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து ஹாலெப் காயம் காரணமாக விலகியுள்ளார். #SimonaHalep
சிங்கப்பூர்:
உலக தரவரிசையில் டாப்-8 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்கும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 28-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் இருந்து ‘நம்பர் ஒன்’ வீராங்கனை சிமோனா ஹாலெப் (ருமேனியா) முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்கு பதிலாக கிகி பெர்டென்ஸ் (நெதர்லாந்து) சேர்க்கப்பட்டுள்ளார். #SimonaHalep

ரோஜர்ஸ் டென்னிஸ் தொடரில் ருமேனிய வீராங்கனை சிமோனா ஹாலெப், பிரான்ஸ் வீராங்கனை கார்சியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். #RogersCup #SimonaHalep
மாண்ட்ரியல்:
ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டி கனடாவின் மாண்ட்ரியல் நகரில் நடந்து வருகிறது. இதில் முதல் தரநிலை வீராங்கனையான சிமோனா ஹாலெப் (ருமேனியா) தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். நேற்று பெண்கள் ஒற்றையர் பிரிவு 3-ம் சுற்று ஆட்டத்தில் சிமோனா ஹாலெப் 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வீனஸ் வில்லியம்சை (அமெரிக்கா) தோற்கடித்து காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் சிமோனா ஹாலெப், பிரான்ஸ் வீராங்கனை கரோலினா கார்சியாவை எதிர்கொண்டார். மிகவும் விறுவிறுப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் துவக்கம் முதலே ஹாலெப்பின் ஆதிக்கம் இருந்தது. முதல் செட்டை சற்று போராடி கைப்பற்றினாலும், இரண்டாவது செட்டை எளிதாக வென்றார் சிமோனா. இறுதியில் 7-5 6-1 என்ற செட்கணக்கில் ஹாலெப் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
இன்று நடைபெற உள்ள அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் பார்த்தியை ஹாலெப் எதிர்கொள்ள உள்ளார். இவர் காலிறுதி ஆட்டத்தில் நெதர்லாந்தின் கிகி பெர்டென்சை நேர்செட்களில் வீழ்த்தியவர் ஆவார். எனவே, இன்றைய அரையிறுதி ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. #RogersCup #SimonaHalep

பிரெஞ்சு ஓபன் சாம்பியனான கார்சியாவை ரோஜர்ஸ் கோப்பை தொடரில் தொடர்ந்து இரண்டு முறை சிமோனா ஹாலெப் வீழ்த்தி உள்ளார்.
இன்று நடைபெற உள்ள அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் பார்த்தியை ஹாலெப் எதிர்கொள்ள உள்ளார். இவர் காலிறுதி ஆட்டத்தில் நெதர்லாந்தின் கிகி பெர்டென்சை நேர்செட்களில் வீழ்த்தியவர் ஆவார். எனவே, இன்றைய அரையிறுதி ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. #RogersCup #SimonaHalep
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை சிமோனா ஹாலெப் 3-வது சுற்றில் தோல்வியை தழுவினார்.
லண்டன்:
‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முதல்நிலை வீரர் ஸ்பெயினின் ரபெல் நடால் 6-1, 6-2, 6-4 என்ற நேர் செட்டில் அலெக்ஸ் டி மினாரை (ஆஸ்திரேலியா) எளிதில் வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார். ஜூவான் மார்ட்டின் டெல் போட்ரோ (அர்ஜென்டினா), மிலோஸ் ராவ்னிக் (கனடா) ஆகியோரும் தங்களது 3-வது சுற்றில் வெற்றி கண்டனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் சமீபத்தில் பிரெஞ்ச் ஓபனை வென்றவரும், ‘நம்பர் ஒன்’ வீராங்கனையுமான சிமோனா ஹாலெப்(ருமேனியா) 3-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவினார். அவரை தரவரிசையில் 48-வது இடத்தில் உள்ள சு-வெய் ஹிசை (சீனதைபே) 3-6, 6-4, 7-5 என்ற செட் கணக்கில் 2 மணி 20 நிமிடங்கள் போராடி வீழ்த்தினார். 32 வயதான சு-வெய், விம்பிள்டனில் முதல் முறையாக 4-வது சுற்றை எட்டினார். போட்டித் தரநிலையில் முதல் 10 இடங்களை பெற்ற வீராங்கனைகளில் தற்போது 9 பேர் தோற்று வெளியேறி விட்டது குறிப்பிடத்தக்கது.

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் நடால், ஹாலெப் 2-வது சுற்றில் வெற்றி பெற்றனர். #Wimbledon2018 #SimonaHalep #RafaelNadal
லண்டன்:
‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் 2-வது சுற்றில் ‘நம்பர் ஒன்’ வீரர் ஸ்பெயினின் ரபெல் நடால் 6-4, 6-3, 6-4 என்ற நேர் செட்டில் கஜகஸ்தான் வீரர் மிகைல் குகுஷ்கினை தோற்கடித்தார். மற்றொரு ஆட்டத்தில் 3 முறை சாம்பியனான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-1, 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ஹோராசியா ஜிபல்லோசை (அர்ஜென்டினா) பந்தாடினார்.
2017-ம் ஆண்டு விம்பிள்டனில் இறுதிச்சுற்று வரை முன்னேறியவரான 5-ம் நிலை வீரர் மரின்சிலிச்(குரோஷியா) 6-3, 6-1, 4-6, 6-7 (3), 5-7 என்ற செட் கணக்கில் தரவரிசையில் 82-வது இடம் வகிக்கும் அர்ஜென்டினாவின் குடோ பெல்லாவிடம் வீழ்ந்தார். இந்த ஆட்டம் 3 மணி 13 நிமிடங்கள் நீடித்தது. இதே போல் இத்தாலி வீரர் தாமஸ் பாபியானோ 7-6 (7), 7-6(6), 6-3 என்ற நேர் செட் கணக்கில் முன்னணி வீரர் வாவ்ரிங்காவுக்கு (சுவிட்சர்லாந்து) அதிர்ச்சி அளித்தார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) 3-6, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் கிளாரி லுவை (அமெரிக்கா) போராடி வீழ்த்தி 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
‘நம்பர் ஒன்’ புயல் சிமோனா ஹாலெப் (ருமேனியா) தன்னை எதிர்த்த சாய்சாய் ஜெங்கை (சீனா) 7-5, 6-0 என்ற நேர் செட்டிலும், சுலோவக்கியாவின் சிபுல்கோவா 6-3, 6-4 என்ற நேர் செட்டில் ஹோகன்னா கோன்டாவையும் (இங்கிலாந்து) தோற்கடித்து 3-வது சுற்றை உறுதி செய்தனர்.
ஆண்கள் இரட்டையர் முதலாவது சுற்றில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி- விஷ்ணு வர்தன் கூட்டணி 7-6 (7-5), 6-4, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் மார்கஸ் டேனியல் (நியூசிலாந்து)- வெஸ்லி கூலோப் (நெதர்லாந்து) இணையை வென்றது.
மற்றொரு ஆட்டத்தில் சென்னையைச் சேர்ந்த ஜீவன் நெடுஞ்செழியன், அமெரிக்காவின் கிராஜிசெக்குடன் இணைந்து களம் இறங்கினார். இவர்கள் 6-7 (5), 6-7 (3), 6-7(2) என்ற நேர் செட் கணக்கில் நெதர்லாந்தின் சான்டர் அரென்ட்ஸ்- மிடில் கூப் இணையிடம் தோற்று வெளியேறினர். #Wimbledon2018 #SimonaHalep #RafaelNadal #tamilnews

பாரிசில் நடைபெற்றுவரும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டியில் முகுருசாவை வீழ்த்திய சிமோனா ஹாலெப் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றினார். #SimonoHalep #GarbineMuguruza #FrenchOpen2018
பாரீஸ்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இப்போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்று ஆட்டத்தில் முதல் நிலை வீராங்கனையான சிமோனா ஹாலெப், 3-ம் நிலை வீராங்கனையான கேப்ரின் முகுருசாவை எதிர்கொண்டார். இப்போட்டியில் ஹாலெப் அதிரடியாக விளையாடினார்.
முதல் செட்டை ஹாலெப் 6-1 என எளிதாக கைப்பற்றினார். தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டிலும் அதிரடியாக விளையாடிய ஹாலெப் அந்த செட்டை 6-4 என கைப்பற்றினார். இதன்மூலம், 6-1, 6-4 என்ற நேர் செட்கணக்கில் வெற்றி பெற்ற ஹாலெப் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
மற்றொரு அறையிறுதி ஆட்டத்தில், அமெரிக்காவின் கீஸ், சக நாட்டு வீராங்கனையாக ஸ்டீபென்ஸ் உடன் பலப்பரீட்சை செய்து வருகிறார். இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்கள் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டத்துக்காக ஹாலெப் உடன் மோத உள்ளார். #SimonoHalep #GarbineMuguruza #FrenchOpen2018
பாரிசில் நடைபெற்றுவரும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் முகுருசா, ஹாலெப் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேற்றியுள்ளனர். #SimonoHalep #GarbineMuguruza #FrenchOpen2018
பாரீஸ்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இப்போட்டிகள் காலிறுதி சுற்றை எட்டியுள்ளன.
இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்று ஆட்டம் ஒன்றில் முதல் நிலை வீராங்கனையான சிமோனா ஹாலெப், 12-ம் நிலை வீராங்கனையான ஏஞ்சலிக் கெர்பரை எதிர்கொண்டார். இப்போட்டியின் முதல் செட்டை கெர்பர் 7-6 என்று போராடி கைப்பற்றினார்.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டை ஹாலெப், 6-3 என கைப்பற்றி போட்டியை சமனாக்கினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஹாலெப் மூன்றாவது செட்டையும் 6-2 என கைப்பற்றினார். இதன்மூலம், 6-7 (7-2), 6-3, 6-2 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்ற ஹாலெப் அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றார்.
மற்றொரு காலிறுதி சுற்று ஆட்டத்தில், 3-ம் நிலை வீராங்கனையான கேப்ரின் முகுருசா, ரஷியாவின் மரியா ஷரபோவாவை எதிர்கொண்டார். இப்போட்டியில், அதிரடியாக விளையாடிய முகுருசா 6-2, 6-1 என்ற நேர் செட்களில் எளிதாக வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் அரையிறுதிப் போட்டியில், ஹாலெப் - முகுருசா, கீஸ் - ஸ்டீபென்ஸ் ஆகியோர் பலப்பரீட்சை செய்கின்றனர். #SimonoHalep #GarbineMuguruza #FrenchOpen2018
இத்தாலி ஓபன் டென்னிசில் ரபெல் நடால், சிமோனா ஹாலெப் கால்இறுதிக்கு முன்னேறினர். #RafaelNadal #SimonaHalep
ரோம்:
இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் அனெட் கோன்டாவீட் (எஸ்தோனியா) 6-2, 7-6 (3) என்ற நேர் செட் கணக்கில் வீனஸ் வில்லியம்சுக்கு (அமெரிக்கா) அதிர்ச்சி அளித்து கால்இறுதிக்கு முன்னேறினார். பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான ஜெலினா அஸ்டாபென்கோ (லாத்வியா) தன்னை எதிர்த்த ஜோஹன்னா கோன்டாவை (இங்கிலாந்து) 2-6, 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெளியேற்றினார். தோல்வியை தழுவிய கோன்டாவுக்கு நேற்று பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
சிமோனா ஹாலெப்புடன் (ருமேனியா) மோத இருந்த அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ் விலா பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக கடைசி நேரத்தில் விலகினார். இதனால் ஹாலெப் விளையாடாமலேயே கால்இறுதியை எட்டியதுடன், தரவரிசையில் ‘நம்பர் ஒன்’ இடத்தையும் தக்கவைத்துக் கொண்டார். ஸ்விடோலினா (உக்ரைன்), ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி பெற்றனர்.
ஆண்கள் ஒற்றையர் 3-வது சுற்றில் 2-ம் நிலை வீரர் ரபெல் நடால் 6-4, 6-1 என்ற நேர் செட்டில் டெனிஸ் ஷபோவலோவை (கனடா) விரட்டி கால்இறுதிக்குள் நுழைந்தார். மரின் சிலிச் (குரோஷியா), காரெனோ பஸ்தா (ஸ்பெயின்), போக்னினி (இத்தாலி), டேவிட் கோபின்(பெல்ஜியம்) ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி கண்டனர்.
இரட்டையர் 2-வது சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, பிரான்சின் ரோஜர் வாசெலின் ஜோடி 6-7 (5), 4-6 என்ற நேர் செட்டில் பாப்லோ கியூவாஸ் (உருகுவே)- மார்செல் கிரானோலர்ஸ் (ஸ்பெயின்) இணையிடம் தோற்று நடையை கட்டியது. #RafaelNadal #SimonaHalep

மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி கால்இறுதி ஆட்டத்தில் நம்பர் ஒன் வீராங்கனை சிமோனா ஹாலெப், செக்குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவாவிடம் தோல்வி அடைந்தார். #SimonaHalep #MadridOpen
மாட்ரிட்:
மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் 2 முறை சாம்பியனும், ‘நம்பர் ஒன்’ வீராங்கனையுமான சிமோனா ஹாலெப் (ருமேனியா), 6-ம் நிலை வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவாவை (செக்குடியரசு) சந்தித்தார். இதில் பிளிஸ்கோவா 6-4, 6-3 என்ற நேர் செட்டில் ஹாலெப்புக்கு அதிர்ச்சி அளித்து அரைஇறுதியை எட்டினார். இதன் மூலம் மாட்ரிட் ஓபனில் தொடர்ச்சியாக 15 ஆட்டங்களில் வெற்றி கண்டிருந்த ஹாலெப்பின் ‘வீறுநடை’ முடிவுக்கு வந்தது.
ஆண்கள் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் கைல் எட்மன்ட் (இங்கிலாந்து) 6-3, 6-3 என்ற நேர் செட்டில் டேவிட் கோபினை (ஸ்பெயின்) வெளியேற்றினார். இன்னொரு ஆட்டத்தில் கனடா வீரர் டெனிஸ் ஷபோவலோவ் 6-4, 6-4 என்ற நேர் செட்டில் சக நாட்டவர் மிலோஸ் ராவ்னிக்கை வீழ்த்தினார்.
இதன் இரட்டையர் 2-வது சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, பிரான்சின் ரோஜர் வாசெலின் கூட்டணி 6-4, 6-7 (4), 5-10 என்ற செட் கணக்கில் ரவென் கிளாசென் (தென்ஆப்பிரிக்கா)- மைக்கேல் வீனஸ் (நியூசிலாந்து) ஜோடியிடம் போராடி வீழ்ந்தது. #SimonaHalep #MadridOpen
மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் 2 முறை சாம்பியனும், ‘நம்பர் ஒன்’ வீராங்கனையுமான சிமோனா ஹாலெப் (ருமேனியா), 6-ம் நிலை வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவாவை (செக்குடியரசு) சந்தித்தார். இதில் பிளிஸ்கோவா 6-4, 6-3 என்ற நேர் செட்டில் ஹாலெப்புக்கு அதிர்ச்சி அளித்து அரைஇறுதியை எட்டினார். இதன் மூலம் மாட்ரிட் ஓபனில் தொடர்ச்சியாக 15 ஆட்டங்களில் வெற்றி கண்டிருந்த ஹாலெப்பின் ‘வீறுநடை’ முடிவுக்கு வந்தது.
கரோலினா
மற்றொரு கால்இறுதியில் கிகி பெர்டென்ஸ் (நெதர்லாந்து) 4-6, 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் முன்னாள் நம்பர் ஒன் புயல் மரிய ஷரபோவாவை (ரஷியா) தோற்கடித்தார்.ஆண்கள் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் கைல் எட்மன்ட் (இங்கிலாந்து) 6-3, 6-3 என்ற நேர் செட்டில் டேவிட் கோபினை (ஸ்பெயின்) வெளியேற்றினார். இன்னொரு ஆட்டத்தில் கனடா வீரர் டெனிஸ் ஷபோவலோவ் 6-4, 6-4 என்ற நேர் செட்டில் சக நாட்டவர் மிலோஸ் ராவ்னிக்கை வீழ்த்தினார்.
இதன் இரட்டையர் 2-வது சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, பிரான்சின் ரோஜர் வாசெலின் கூட்டணி 6-4, 6-7 (4), 5-10 என்ற செட் கணக்கில் ரவென் கிளாசென் (தென்ஆப்பிரிக்கா)- மைக்கேல் வீனஸ் (நியூசிலாந்து) ஜோடியிடம் போராடி வீழ்ந்தது. #SimonaHalep #MadridOpen
×

X