search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முத்தாரம்மன்"

    குலசை கோவில் கிராமத்து கோவிலாக இருந்தாலும் சாதி, மத வேறுபாடின்றி எல்லாரும் அருள் பெற்று பங்கேற்கும் சக்தி தலமாக உள்ளது.
    1. குலசையை ஆண்ட பாண்டிய மன்னர்களுக்கும், மைசூர் பகுதியை ஆண்ட மன்னர்களுக்கும் முன்பு உறவு முறை ஏற்பட்டதாம். இதனால் தான் தசரா திருவிழா மைசூர் போலவே குலசையிலும் தோன்றியதாக சொல்கிறார்கள்.

    2. தமிழ்நாட்டில் எல்லா ஆலயங்களிலும் விழாக்கள் ஆன்மீக விழாக்களாக இருக்கும். ஆனால் குலசையில் நடக்கும் தசரா திருவிழா கிராமிய கலை விழா போல நடைபெறுகிறது.

    3. குலசேகரப்பட்டினத்தில் ஞானமூர்த்தீஸ்வரர் ஆலயம் தவிர சிதம்பரேஸ்வரர் ஆலயம் காஞ்சி விஜயகச்சி கொண்ட பாண்டீஸ்வரர் ஆலயம் என இரண்டு சிவாலயங்கள் உள்ளன.

    4. குலசையில் உள்ள விண்ணவரம் பெருமாள் கோவிலில் வழிபட்டால் திருப்பதி ஏழுமலையானை வழிபட்ட பலன்கள் கிடைக்கும்.

    5. குலசேகரப்பட்டினத்தில் வீரகாளியம்மன், பத்ரகாளியம்மன், கருங்காளியம்மன், முப்புடாரியம்மன், முத்தாரம்மன், உச்சினி மாகாளியம்மன், மூன்று முகம் கொண்ட அம்மன், வண்டிமறித்த அம்மன் என்று அட்டகாளிகளுக்கும் கோவில் உள்ளது.

    6. குலசை கோவில் கிராமத்து கோவிலாக இருந்தாலும் சாதி, மத வேறுபாடின்றி எல்லாரும் அருள் பெற்று பங்கேற்கும் சக்தி தலமாக உள்ளது.

    7. குலசை முத்தாரம்மன் கோவிலில் சமீபகாலமாக சிவாகமம், காமிகம் அடிப்படையில் பூஜைகள் நடத்தப்படுகின்றன.

    8. குலசை முத்தாரம்மன் ஆலயத்தில் தொடக்க காலங்களில் கொடி மரம் எதுவும் நிறுவப்படவில்லை. சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்பு தான் கொடி மரம் வைக்கப்பட்டது.

    9. பொதுவாக சிவாலயங்களில் லிங்கத்தை நோக்கியபடி நந்தி இருக்கும். ஆனால் குலசையில் அம்மனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால் நந்திக்கு பதில் சிம்மம் உள்ளது.

    10. குலசை ஆலயத்தில் மாத கடைசி வெள்ளிக் கிழமைகளில் பிரமாண்டமான விளக்கு பூஜை நடைபெறும். மாதந்தோறும் சுமார் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் இந்த பூஜையில் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது. விளக்கு பூஜையின் போது தரும் மாவை சாப்பிட்டால் எத்தகைய நோயும் குறிப்பாக வயிறு தொடர்பான நோய்கள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    11. குலசையில் சித்திரை மாதம் 1-ந் தேதி அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது.

    12. ஆங்கிலப் புத்தாண்டான ஜனவரி 1-ந் தேதி குலசை கோவிலில் லட்சார்ச்சனை, 508 பால்குடம், அன்னதானம் ஆகிய மூன்றும் சிறப்பாக நடைபெறும்.

    13. புத்தாண்டு சிறப்பு பூஜைகளை ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் உள்ள காமதேவன் குழு பொறுப்பு ஏற்று செய்கிறது. இந்த பூஜைக்கு குறைந்தபட்சம் ரூ.5 லட்சம் வரை செலவாகும் என்று கூறப்படுகிறது.

    14. சித்திரை மாதம் அஸ்தம் நட்சத்திர தினத்தில் குலசை முத்தாரம்மன் கோவில் வருஷாபிஷேகம் நடைபெறும்.

    15. ஒவ்வொரு மாதமும் கடைசி செவ்வாய்க் கிழமையன்று இரவு தேரோட்டம் நடத்தப்படுகிறது.

    16. தமிழ்நாட்டில் பொதுவாக சக்தி தலங்களில் கொடியேற்றம் நடை பெறாது. ஆனால் குலசை கோவிலில் கொடியேற்றம் நடத்தப்படுகிறது.

    17. அம்மை போட் டவர்கள் இத்தலத்தில் அம்மனை சுற்றி நீர் கட்ட செய்வார்கள். உடனே அம்மை இறங்கி விடும்.

    18. குலசை முத்தாரம்மனுக்கு மிகவும் பிடித்தது சிவப்பு சேலை, செவ்வரளி பூ மற்றும் எலுமிச்சை பழம் மாலை.

    19. நெல்லை மாவட்டம் பேட்டையை சேர்ந்த குறவர் இனத்தவர்கள் சுமார் ஆயிரம் பேர் கடந்த ஆடி மாதம் முதல் குலசையில் தங்கியுள்ளனர். குலசை முத்தாரம்மனை அவர்கள் தங்கள் குலதெய்வமாக கருதுகிறார்கள்.

    20. குலசை கோவிலில் விரதம் இருப்பவர்களில் சிலர் கடலில் குளித்து விட்டு சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு அங்கபிரதட்சனமாகவே முத்தாரம்மன் கோவிலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

    21. தமிழ்நாட்டில் உள்ள எல்லா வகை இசைக் கருவிகளையும் குலசை தசரா திருவிழாவில் பார்க்க முடியும்.

    22. குலசை கோவிலுக்கு சுமார் 800-க்கும் மேற்பட்ட தசரா குழுக்கள் வருகின்றன. சென்னை, மும்பையிலும் கூட குலசை தசரா குழுக்கள் உள்ளன.

    23. தசரா விழா கொடியேற்றம் நிகழ்ச்சிக்கே குலசையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரள்வது குறிப்பிடத்தக்கது.

    24. தசரா குழுக்களில் அதிக செலவு செய்யும் குழுவாக தாண்டவன்காடு தசரா குழு கருதப்படுகிறது.

    25. மகிஷாசூரனை முத்தாரம்மன் சம்காரம் செய்யும் நிகழ்ச்சி கோவில் முன்பு உள்ள குறுகலான தெருவில் தான் நடந்து வந்தது. கே.பி.கந்தசாமி அறநிலைத்துறை அமைச்சராக இருந்தபோது சம்ஹார நிகழ்ச்சி கடற்கரைக்கு மாற்றப்பட்டது.



    26. விஜயதசமியன்று நடக்கும் மகிஷாசூர வதம் நிகழ்ச்சி சிதம்பரேஸ்வரர் கோவிலுக்கும் அறம் வளர்த்த நாயகி கோவிலுக்கும் இடைப்பட்ட 3 கி.மீ. தூர கடற்கரையில் நடைபெறும்.

    27. சிவபெருமானிடம் முத்தாரம்மன் சூலம் வாங்கி சென்று மகிஷனை சம்ஹாரம் செய்வதாக வரலாறு உள்ளது. எனவே முத்தாரம்மன் ஏந்தி வரும் சூலத்துக்கும் சிறப்பு பூஜைகள் செய்வார்கள்.

    28. விஜயதசமி தினத்தன்று சரியாக இரவு 12 மணிக்கு மகிஷனை அம்பாள் சம்ஹாரம் செய்வாள்.

    29. மகிஷனை வதம் செய்த பிறகு முத்தாரம்மன் தேரில் பவனி செல்வாள். தமிழ்நாட்டில் அம்பாள் தேரில் ஏறி பவனி செல்வது இந்த தலத்தில் மட்டுமே நடைபெறுகிறது.

    30. சம்ஹார நாட்களில் முத்தாரம்மன் மிகவும் ஆவேசமாக காணப்படுவாள். எனவே 12-வது நாள் 108 பால்குடம் அபிஷேகம் செய்து அம்பாள் ஆவேசத்தை தணிப்பார்கள்.

    31. தசரா திருவிழாவுக்கு இந்த ஆண்டு 15 லட்சம் பக் தர்கள் வரை திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    32. நவராத்திரி நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் மண்டபத்தில் வைக்கப்படும் முத்தாரம்மன் உற்சவத்துக்கு 6 தடவை அபிஷேக, ஆராதனை பூஜைகள் நடத்தப்படும். பக்தர்கள் அதில் பங்கேற்று பலன் பெறலாம்.

    33. தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு அடுத்தப்படியாக உண்டியல் வருமானத்தில் குலசை முத்தாரம்மன் கோவில் 2-வது இடத்தில் உள்ளது.

    34. அம்மை போட்டு குணம் அடைந்தவர்கள் குலசை முத்தாரம்மன் ஆலயத்துக்கு வந்து கப்பி முத்து எனப்படும் ஆமணக்கு முத்தை கிலோ கணக்கில் வாங்கி காணிக்கையாகக் கொடுக்கிறார்கள்.

    35. தூத்துக்குடி மாவட்ட மக்கள் குலசை முத்தாரம் மனிடம் வேண்டிக் கொண்டு முட்டை, கோழி, மாடு, ஆடு போன்றவற்றை தானமாக கொடுப்பதை வழக்கத்தில் வைத்துள்ளனர். பக்தர்கள் கொடுக்கும் மாடுகளை பராமரிப்பதற்கு என்றே குலசையில் கோசாலை உள்ளது.

    36. குலசை முத்தாரம்மனுக்கு ரூ.1500 பணம் கட்டி சிறப்பு அபிஷேகம் நடத்தலாம்.

    37. புதிதாக கடை தொடங்கும் போதும், கிரக பிரவேசம் நடத்தும் போதும் முத்தாரம்மனுக்கு ஜவுளி எடுத்து கட்டுவதாக வேண்டிக் கொள்வார்கள். அதன்படி அம்பாளுக்கு 12 முழ சேலை, ஈசுவரனுக்கு 8 முழ வேட்டி எடுத்து காணிக்கையாக செலுத்துவார்கள்.

    38. குலசேகரப்பட்டினத்தில் உள்ள சிதம்பரேஸ்வரர் மற்றும் விண்ணவரம் பெருமாள் கோவில்களுக்கு சொந்தமான 35 அரிய சிலைகள் முத்தாரம்மன் ஆலயத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அந்த 35 சாமி சிலைகளுக்கும் தினமும் காலை, மாலை இரு வேளைகளில் பூஜைகள் நடத்தப்படுகிறது.

    39. தண்டுபத்தை சேர்ந்த ஒரு பக்தர் குலசை முத்தாரம்மன் கோவிலில் நவக்கிரக சன்னதி அமைத்து கொடுத்துள்ளார்.

    40. சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு குலசை முத்தாரம்மன் கோவில் தட்டாங்குடி கோவில் என்றழைக்கப்பட்டது.

    41. தசரா திருவிழாவுக்கு இந்த ஆண்டு சுமார் 350 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. பாதுகாப்புப் பணிகளில் சுமார் 2 ஆயிரம் போலீசார் ஈடுபட உள்ளனர்.

    42. சமீப காலமாக குலசை முத்தாரம்மன் கோவிலுக்கு செவ்வாய்க்கிழமைகளை விட ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் வருகிறது.

    43. குலசையில் இந்துக்கள் தவிர கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களும் வசித்து வருகிறார்கள். முத்தாரம்மனுக்கு அவர்களும் காணிக்கை செலுத்துவதுண்டு. இது மும்மத ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டாக உள்ளது.

    44. கடந்த சில ஆண்டுகளாக முத்தாரம்மன் அருள்பெற இளம் பெண்களும், காளி வேடம் போட தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    45. விரதம் இருந்து குலசைக்கு வரும் பெண்கள் அருள் வந்து கோவில் பிரகாரத்தில் ஆடுவதை பார்க்கலாம். அவர்களிடம் பொதுமக்கள் ஆர்வமாக குறி கேட்பார்கள்.

    46. குலசையில் தீயில் இறங்கும் பூக்குழி விழா நடத்தலாமா என்று ஆலோசித்தனர். பக்தர்களை கட்டுப்படுத்துவது கடினம் என்பதால் அந்த திட்டம் கைவிடப்பட்டது என்றாலும் ஆறுமுகநேரியில் தசரா குழுவினர் பூக்குழி விழாவை நடத்துகிறார்கள்.

    47. காளி வேடம் போடுபவர்களுக்கு கொலுசு, வளையல் மற்றும் மேக்கப் பொருட்களை வாங்கி தானமாக கொடுப்பதை தூத்துக்குடி மாவட்ட மக்கள் வேண்டுதலாக நிறைவேற்றுகிறார்கள்.

    48. காளி வேடம் அணிந்து வருபவர்களை மதியம் வீட்டுக்கு அழைத்து சாப்பாடு கொடுத்து, புடவை எடுத்து கொடுப்பதை மிகச் சிறந்த நேர்ச்சையாக கருதுகிறார்கள்.

    49. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சில பகுதி மக்கள் தங்கள் வயலில் அறுவடை நடந்ததும் முதல் படி நெல்லை குலசை முத்தாரம்மனுக்கு கொடுப்பதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.

    50. குலசை தசரா காரணமாக சென்னை, மதுரை, சேலம் உள்பட தமிழ்நாட்டில் உள்ள ஆடல், பாடல், நடன இசை கலைஞர்களுக்கு சுமார் ஒரு வாரம் பணி புரியும் வாய்ப்பும் கைநிறைய சம்பள பணமும் கிடைக்கிறது.
    நவராத்திரி விழாவே குலசேகரன் பட்டினத்தில் தசரா விழாவாக கொண்டாடப்படுகிறது. இத்தசரா விழாவிற்கு பின்னணியாக ஒரு புராணக்கதை கூறப்படுகிறது.
    நவராத்திரி விழாவே குலசேகரன் பட்டினத்தில் தசரா விழாவாக கொண்டாடப்படுகிறது. இத்தசரா விழாவிற்கு பின்னணியாக ஒரு புராணக்கதை கூறப்படுகிறது.

    முன்னொரு காலத்தில் வரமுனி என்றொரு முனிவர் தவலிமை மிக்கவராக இருந்தார். ஒருநாள் அவரது இருப்பிடம் வழியாக அகத்திய மாமுனிவர் வந்தார். தன்னுடைய ஆணவத்தால் அகத்திய முனிவரை மதிக்கத் தவறியதோடு அவமதியாதையும் செய்தார்.

    மனம் நொந்த அகத்தியர், வரமுனியை எருமைத்தலையும், மனித உடலும் பெற்று இறைவியால் அழிவாயாக குலசேகரன் பட்டினத் தில் எனச் சாபமிட்டார். அகத்திய முனிவரின் சாபத்தால் வரமுனி எருமைத்தலையும் மனித உடலும் பெற்று மகிசாசுரனாக மாறினார். தனது விடா முயற்சியால் பற்பல வரங்களைப் பெற்றார். முனிவராக வாழ்வைத் துவங்கிய வரமுனி, தனது வாழ்வின் பிற்பகுதியில் அசுரனாக வாழ்வை நடத்தினார்.

    மகிசாசுரனின் இடையுறுகளைத் தாங்க இயலாத முனிவர்கள் அன்னையை நோக்கி வேள்வி நடத்தி, மகிசனின் கொடுமைகளை நீக்கித் தர வேண்டினர். அவர்கள் நடத்திய வேள்வியில் தோன்றிய அன்னை பராசக்தி, மகிசாசுரனை அழிக்கப் புறப்பட்டாள். மகிசாசுரனை அழித்த 10-ம் நாள் தசரா விழாவாக கொண்டாடப்படுகிறது.

    தசரா விழாவின்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் விதம், விதமான வேடங்களை அணிந்து, வீடுதோறும் சென்று தர்மம் எடுப்பதை இன்றும் பார்க்கலாம்.
    தசரா விழாவின்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் விதம், விதமான வேடங்களை அணிந்து, வீடுதோறும் சென்று தர்மம் எடுப்பதை இன்றும் பார்க்கலாம். அவர்களுக்கு மக்கள் மனமகிழ்ச்சியுடன் அரிசி, பணம் காணிக்கையாக வழங்குவர். இதற்கு காரண காரியம் உண்டு. முற்காலத்தில் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் மாறுவேடத்தில் சென்று மக்களிடம் தர்மம் எடுத்ததாக ஐதீகம். இந்த ஐதீகப்படி உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் நலம் பெற வேண்டியும், நினைத்த காரியம் நிறைவேற வேண்டியும் மாறுவேடம் பூண்டு மக்களிடம் முத்தாரம்மனுக்கு காணிக்கை கொடுங்கள் என்று கேட்கிறார்கள். அம்மனே நேரில் வந்து கேட்பதாக கருதி மக்கள் தர்மம் செய்வார்கள்.

    திருமஞ்சணை பிரசாத மகிமை

    குலசை முத்தாரம்மன் கோவிலில் வழங்கப்படும் திருமஞ்சணை பிரசாதம் மகத்துவம் வாய்ந்தது. புற்றுமண், மஞ்சள்பொடி எண்ணெய் கலந்து அம்மனுக்கு இரவு சாத்தப்பட்டு, மறுநாள் பிரசாதமாக வழங்கப்படும். இந்த திருமஞ்சணை பிரசாதத்தை சிறிது உட்கொண்டு, நெற்றியில் பூசி கொண்டால் தீராத வியாதி தீரும். நலமெல்லாம் வந்து சேரும்.

    அன்னதானம்

    குலசை முத்தாரம்மன் கோவிலில் மதியம் தினமும் 1000 பேருக்கு அன்னதான திட்டத்தின்கீழ் அன்னதானம் வழங்கப்படுகிறது.

    குலசை கோவிலுக்கு வருபவர்கள் அம்மனை தரிசனம் செய்து விட்டு உடனே ஊர் திரும்பி விடலாம். பால்குடம் எடுப்பதாக வேண்டி கொண்டவர்கள் முதல் நாள் இரவு கண்டிப்பாக கோவிலில் தங்க வேண்டும்.

    நோய் தீர்க்கும் வேப்பிலை

    குலசை சன்னிதியில் பக்தர்களுக்கு மஞ்சள், திருநீறு, மஞ்சணை, வேப்பிலை பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த வேப்பிலையை சாப்பிட்டால் தீராத நோய்களும் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    மாவிளக்கு பூஜை

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமைகளில் மாவிளக்கு பூஜை நடைபெறும். இந்த பூஜையின்போது தரும் மாவை சாப்பிட்டால் தீராத நோயும், குறிப்பாக வயிறு தொடர்பான நோய்கள் குணமாகி நலம் கிடைக்கும் என பக்தர்கள் நம்புகின்றனர்.
    சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்பவர்கள் மாலை அணிந்து விரதம் கடை பிடித்து செல்வது போல குலசை முத்தாரம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களும் விரதம் இருந்து மாலை அணிகிறார்கள்.
    சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்பவர்கள் மாலை அணிந்து விரதம் கடை பிடித்து செல்வது போல குலசை முத்தாரம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களும் விரதம் இருந்து மாலை அணிகிறார்கள். ஆனால் இந்த பழக்கம் ஆதி காலத்தில் இருந்தே கடை பிடிக்கும் பழக்கம் அல்ல. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு உருவான பழக்கம்தான்.

    ஒரு தடவை குலசை கோவில் தசரா திருவிழா வுக்கு வந்த குறவர் இனத்தவர்கள் தங்கள் தயாரிப்பான பாசி மணி மாலைகளை விற்பதற்காக, ‘இந்த மாலையை வாங்கிச் சென்று கடல் தண்ணீரில் சுத்தம் செய்து ஆலயத்தில் வழிபாடு செய்து அணிந்தால் நினைத்தது நடக்கும்’ என்றனர்.
    அதை பக்தர்கள் ஆர்வமுடன் வாங்கி அணிந்தனர். அதன் பிறகே குலசை பக்தர்கள் மாலை அணியும் புதிய மரபு ஏற்பட்டது.

    காப்பு கட்டி வேடம் அணிவோர் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்

    தசரா திருவிழா நாட்களில் அன்னை முத்தாரம்மனின் அருள் வேண்டி காப்பு கட்டி வேடம் அணிவோர் கீழ்க்கண்ட விதிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அப்போதுதான் அன்னையின் பேரருளை பரிபூரணமாய் வேடம் அணிவோர் அடைய முடியும்.

    * வேடம் அணிபவர்கள் உடலும், உள்ளமும் தூய்மையாக இருத்தல் வேண்டும். காப்புக்கட்டிய பின்னரே வேடம் அணிதல் வேண்டும்.

    * வேடம் அணிபவர்கள் எந்த வேடம் அணிந்தாலும் அது புனிதமானது என்பதை உணர்ந்து அதன் புனிதத்தன்மையை பேணிப் பாதுகாக்கவேண்டும்.

    * வேடம்அணிபவர்கள் அன்னையின் நாமங்களை மட்டுமே உச்சரிக்க வேண்டும்.

    * வேடம் அணிபவர்கள் இரும்பினால் செய்யப்பட்ட ஆயுதங்களை ஏந்தி வரக்கூடாது.

    * காளி வேடம் அணிபவர்கள் பெண்களாக இருந்தால் 10 வயதிற்கு உட்பட்டவராகவும் அல்லது 50 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.

    காப்பு அவிழ்க்கும் வரை காத்திருக்க வேண்டாம்

    விரதம் இருந்து காப்பு கட்டி வேடம் அணிந்த பக்தர்கள் நள்ளிரவில் மகிசாசூரசம்காரம் முடிந்த பின் அம்மனுக்கு காப்பு அவிழ்க்கும் வரை காத்திருக்க வேண்டியதில்லை. தங்களது சொந்த ஊருக்கு செல்லலாம். அன்னை முத்தாரம்மனுக்கு காப்பு அவிழ்க்கும் நேரத்தை தெரிந்து கொண்டு அவரவர் சொந்த ஊரில் உள்ள கோவில்களில் காப்பு அவிழ்த்து கொள்ளலாம். கூட்ட நெரிசலை தவிர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு பக்தர்கள் ஓத்துழைக்க வேண்டும்.
    நவராத்திரி விழாவே குலசேகரன் பட்டினத்தில் தசரா விழாவாக கொண்டாடப்படுகிறது. முத்தாரம்மனுக்கு உகந்த இந்த 108 போற்றியை தினமும் சொல்லி வழிபாடு செய்து வரலாம்.
    1. ஓம் ஸ்ரீஞான அங்கையற்கண் அம்மையே  போற்றி
    2. ஓம் ஸ்ரீஞான அகிலாண்ட நாயகியே  போற்றி
    3. ஓம் ஸ்ரீஞான அருமையின் வரம்பே  போற்றி
    4. ஓம் ஸ்ரீஞான அறம்வளர்க்கும் அம்மையே  போற்றி
    5. ஓம் ஸ்ரீஞான அரசிளங் குமரியே  போற்றி
    6. ஓம் ஸ்ரீஞான அப்பர்ணி மருந்தே  போற்றி
    7. ஓம் ஸ்ரீஞான அமுத நாயகியே போற்றி
    8. ஓம் ஸ்ரீஞான அருந்தவ நாயகியே போற்றி
    9. ஓம் ஸ்ரீஞான அருள்நிறை அம்மையே போற்றி
    10. ஓம்ஸ்ரீஞான ஆலவாய்க்கரசியே  போற்றி - 10
    11. ஓம் ஸ்ரீஞான ஆறுமுகத்தின் அன்னையே போற்றி
    12. ஓம் ஸ்ரீஞான ஆதியின் பாதியே போற்றி
    13. ஓம் ஸ்ரீஞான ஆலால சுந்தரியே போற்றி
    14. ஓம் ஸ்ரீஞான ஆனந்த வல்லியே போற்றி
    15. ஓம் ஸ்ரீஞான இளவஞ்சிக் கொடியே போற்றி
    16. ஓம் ஸ்ரீஞான இமயத் தரசியே போற்றி
    17. ஓம் ஸ்ரீஞான இடபத்தோன் துணையே போற்றி
    18. ஓம் ஸ்ரீஞான ஈசுவரியே போற்றி
    19. ஓம் ஸ்ரீஞான உயிர் ஒவியமே போற்றி
    20. ஓம் ஸ்ரீஞான ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி -20
    21. ஓம் ஸ்ரீஞான எண்திசையும் வென்றாய் போற்றி
    22. ஓம் ஸ்ரீஞான ஏகன் துணையே போற்றி
    23. ஓம் ஸ்ரீஞான ஐங்கரன் அன்னையே போற்றி
    24. ஓம் ஸ்ரீஞான ஐயம் தீர்ப்பாய் போற்றி
    25. ஓம் ஸ்ரீஞான ஒப்பில்லா அமுதே போற்றி
    26. ஓம் ஸ்ரீஞான ஓங்காரசுந்தரியே போற்றி
    27. ஓம் ஸ்ரீஞான கற்றோருக்கு இனியோய் போற்றி
    28. ஓம் ஸ்ரீஞான கல்லார்க்கு எளியோய் போற்றி
    29. ஓம் ஸ்ரீஞான கடம்பவன சுந்தரியே போற்றி
    30. ஓம் ஸ்ரீஞான கல்யாண சுந்தரியே போற்றி -30
    31. ஓம் ஸ்ரீஞான கனகமணிக்குன்றே போற்றி
    32. ஓம் ஸ்ரீஞான கற்பின் அரசியே போற்றி
    33. ஓம் ஸ்ரீஞான கருணை யூற்றே போற்றி
    34. ஓம் ஸ்ரீஞான கல்விக்கு வித்தே போற்றி
    35. ஓம் ஸ்ரீஞான கனகாம்பிகையே போற்றி
    36. ஓம் ஸ்ரீஞான கதிரொளிச்சுடரே போற்றி
    37. ஓம் ஸ்ரீஞான கற்களை கடந்த கற்பகமே போற்றி
    38. ஓம் ஸ்ரீஞான காட்சிக்கிளியோய் போற்றி
    39. ஓம் ஸ்ரீஞான காலம் வென்ற கற்பகமே போற்றி
    40. ஓம் ஸ்ரீஞான முத்தார காமாட்சி அம்பிகையே போற்றி -40
    41. ஓம் ஸ்ரீஞான முத்தாரம்மா அம்பிகையே போற்றி
    42. ஓம் ஸ்ரீஞான கிளியேந்திய கரத்தோய் போற்றி
    43. ஓம் ஸ்ரீஞான குலச்சிறை காத்தோய் போற்றி
    44. ஓம் ஸ்ரீஞான குற்றம் பொறுக்கும் குணமே போற்றி
    45. ஓம் ஸ்ரீஞான கூடற்கலாப மயிலே போற்றி
    46. ஓம் ஸ்ரீஞான கோலப் பசுங்கிளியே போற்றி
    47. ஓம் ஸ்ரீஞான சம்பந்தன ஞானத்தாயே போற்றி
    48. ஓம் ஸ்ரீஞான சக்திவடிவே போற்றி
    49. ஓம் ஸ்ரீஞான சங்கம் வளர்த்தாய் போற்றி
    50. ஓம் ஸ்ரீஞான சிவகாம சுந்தரியே போற்றி -50
    51. ஓம் ஸ்ரீஞான சித்தம் தெளிவிப்பாய் போற்றி
    52. ஓம் ஸ்ரீஞான சிவயோக நாயகியே போற்றி
    53. ஓம் ஸ்ரீஞான சிவானந்த வல்லியே போற்றி
    54. ஓம் ஸ்ரீஞான சிங்கார வல்லியே போற்றி
    55. ஓம் ஸ்ரீஞான செந்தமிழ் தாயே போற்றி
    56. ஓம் ஸ்ரீஞான செல்வத்துக் கரசியே போற்றி
    57. ஓம் ஸ்ரீஞான சேனைத் தலைவியே போற்றி
    58. ஓம் ஸ்ரீஞான சொக்கர் நாயகியே போற்றி
    59. ஓம் ஸ்ரீஞான சைவநெறி நிலைக்கச்செய்தோய் போற்றி
    60. ஓம் ஸ்ரீஞான ஞானாம்பிகையே போற்றி -60
    61. ஓம் ஸ்ரீஞான ஞானப்பூங்கோதையே போற்றி
    62. ஓம் ஸ்ரீஞான தமிழர் குலச்சுடரே போற்றி
    63. ஓம் ஸ்ரீஞான திருவுடையம்மையே போற்றி
    64. ஓம் ஸ்ரீஞான திசையெல்லாம் புரந்தாய் போற்றி
    65. ஓம் ஸ்ரீஞான திரிபுர சுந்தரியே போற்றி
    66. ஓம் ஸ்ரீஞான திருநிலை நாயகியே போற்றி
    67. ஓம் ஸ்ரீஞான தீந்ர்தமிழ்ச் சுவையே போற்றி
    68. ஓம் ஸ்ரீஞான தெவிட்டாத தெள்ளமுதே போற்றி
    69. ஓம் ஸ்ரீஞான தென்னவன் செல்வியே போற்றி
    70. ஓம் ஸ்ரீஞான தேன்மொழியம்மையே போற்றி -70
    71. ஓம் ஸ்ரீஞான தையல் நாயகியே போற்றி
    72. ஓம் ஸ்ரீஞான நற்கனியின் சுவையே போற்றி
    73. ஓம் ஸ்ரீஞான நற்றவத்தின் கொழுந்தே போற்றி
    74. ஓம் ஸ்ரீஞான நல்ல நாயகியே போற்றி
    75. ஓம் ஸ்ரீஞான நீலாம்பிகையே போற்றி
    76. ஓம் ஸ்ரீஞான நீதிக்கரசியே போற்றி
    77. ஓம் ஸ்ரீஞான பக்தர்தம் திலகமே போற்றி
    78. ஓம் ஸ்ரீஞான பழமறையின் குருந்தே போற்றி
    79. ஓம் ஸ்ரீஞான பரமானந்த பெருக்கே போற்றி
    80. ஓம் ஸ்ரீஞான பண்மைதைந்த பெருக்கே போற்றி -80
    81. ஓம் ஸ்ரீஞான பவளவாய்கிளியே போற்றி
    82. ஓம் ஸ்ரீஞான பசுபதி நாயகியே போற்றி
    83. ஓம் ஸ்ரீஞான பாகம் பிரியா அம்மையே போற்றி
    84. ஓம் ஸ்ரீஞான ஞான பாண்டியா தேவியின் தேவி போற்றி
    85. ஓம் ஸ்ரீஞான பார்வதி அம்மையே போற்றி
    86. ஓம் ஸ்ரீஞான பிறவிப்பிணி தீர்ப்பாய் போற்றி
    87. ஓம் ஸ்ரீஞான பெரிய நாயகியே போற்றி
    88. ஓம் ஸ்ரீஞான பொன்மயிலம்மையே போற்றி
    89. ஓம் ஸ்ரீஞான பொற்கொடி அன்னையே போற்றி
    90. ஓம் ஸ்ரீஞான மங்கள நாயகியே போற்றி -90
    91. ஓம் ஸ்ரீஞான மழலைக்கிளியே போற்றி
    92. ஓம் ஸ்ரீஞான மனோன்மயித்தாயே போற்றி
    93. ஓம் ஸ்ரீஞான மண்சுமந்தோண் மாணிக்கமே போற்றி
    94. ஓம் ஸ்ரீஞான மாயோன் தங்கையே போற்றி
    95. ஓம் ஸ்ரீஞான மாணிக்க வல்லியே போற்றி
    96. ஓம் ஸ்ரீஞான மீனவர்கோன் மகளே போற்றி
    97. ஓம் ஸ்ரீஞான மீனாட்சியம்மையே போற்றி
    98. ஓம் ஸ்ரீஞான முழுஞானப் பெறுக்கே போற்றி
    99. ஓம் ஸ்ரீஞான முக்கண் சுடர்விருந்தே போற்றி
    100.  ஓம் ஸ்ரீஞான யாழ்மொழி யம்மையே போற்றி -100
    101. ஓம் ஸ்ரீஞான வடிவழ கம்மையே போற்றி
    102. ஓம் ஸ்ரீஞான வேலவனுக்கு வேல்தந்தாய் போற்றி
    103. ஓம் ஸ்ரீஞான வேதநாயகியே போற்றி
    104. ஓம் ஸ்ரீஞான சவுந்தராம்பிகையே போற்றி
    105. ஓம் ஸ்ரீஞான வையகம் வாழ்விப்பாய் போற்றி
    106. ஓம் ஸ்ரீஞான அம்மையே அம்பிகையே போற்றி
    107. ஓம் ஸ்ரீஞான அங்கையற்கண் அம்மையே போற்றி
    108. ஓம் ஸ்ரீஞானமூர்த்திஸ்வரர் சமேத முத்தாரம்மனே
     போற்றி! போற்றி!! போற்றி!!!
    ஸ்ரீ ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மனுக்கு உகந்த ஷோடச நாமாவளியை தினமும் சொல்லி வழிபாடு செய்தால் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும்.
    ஓ ஸிவாய நம
    ஓ மகேஸ்வராய நம
    ஓ வாமதேவாய நம
    ஓ கபர்திநே நம
    ஓ ஸங்கராய நம
    ஓ பக்தவத்ஸவாய நம
    ஓ ஸிவா ப்ரியாய நம
    ஓ ஸர்வஜ்ஞாய நம
    ஓ விஷ்வேஸ்வராய நம
    ஓ ம்ருத்ஹஜயாய நம
    ஓ பாஸவிமோசகயா நம
    ஓ ம்ருடாய நம
    ஓ ஹராய நம
    ஓ அபவர்கப்ரதாய நம
    ஓ ஞானமூர்த்திஸ்வராய நம
    நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி

    முத்தாரம்னே சரணம் 
    குலசேகரன்பட்டினத்தில் அன்னை முத்தாரம்மன் சுவாமி ஞானமூர்த்தீசுவரரோடு வடதிசை நோக்கி அமர்ந்து அருள்பாலிக்கின்றாள்.
    குலசேகரன்பட்டினத்தில் அன்னை முத்தாரம்மன் சுவாமி ஞானமூர்த்தீசுவரரோடு வடதிசை நோக்கி அமர்ந்து அருள்பாலிக்கின்றாள்.

    கர்ப்ப கிரகத்தில் சுவாமி அம்பாள் இருவரும் சுயம்பு மூர்த்திகளாக விளங்குகின்றனர். அம்பாள் தலையில் ஞானமுடி சூடி, கண்களில் கண்மலர் அணிந்து, வீரப்பல் புனைந்து, கழுத்தில் தாலிப்பொட்டும், மூக்கில் புல்லாக்கும் மூக்குத்தியும் தரித்து அழகுத் திருமேனியோடு விளங்குகின்றாள்.

    அன்னை முத்தாரம்மனுக்கு நான்கு திருக்கைகளும், வலப்புற மேல் திருக்கையில் நாகபாசமும், கீழ்த் திருக்கையில் திருநீற்றுக் கொப்பரையும் தாங்கியுள்ளாள்.

    சுவாமி ஞானமூர்த்தீசுவரருக்கு இரண்டு திருக்கைகள் மட்டுமே உள்ளன. வலப்புற திருக்கரத்தில் செங்கோல் தாங்கியுள்ளார். இடப்புறத் திருக்கையில் திருநீற்றுக் கொப்பரை ஏந்தியுள்ளார்.

    அம்பாள் வலது திருவடியை மடக்கி இடது தொடையில் வைத்த நிலையிலும், சுவாமி இடது திருவடியை மடக்கி வலது தொடையில் வைத்த நிலையிலும் ஞானபீடத்தில் அமர்ந்து ஏனைய திருவடிகளைத் தொங்க விட்ட நிலையில் அமர்ந்துள்ளனர்.
    ×