search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உருவபொம்மை"

    மகாராஷ்டிரா மாநிலத்தில் தசரா விழாவை முன்னிட்டு மனைவிகளால் பாதிக்கப்பட்ட ஆண்கள் சூர்ப்பனகையின் உருவ பொம்மையை எரித்து கொண்டாடினர். #Dussehra #Maharashtra
    மும்பை:

    தசரா விழா என்பது ஒவ்வொரு ஆண்டும் ராவணனின் உருவ பொம்மையை எரித்து கொண்டாடப்படும் விழா ஆகும். ராமருக்கும், ராவணனுக்கும் ஏற்பட்ட போரின் நினைவாய் இந்த விழா கொண்டாடப்படுகிறது.

    இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பாட்னி பிதிட் புருஷ் சங்கத்னா என்ற அமைப்பானது மனைவிமார்களால் அதிகம் பாதிக்கப்பட்ட ஆண்கள் இணைந்து உருவாக்கிய அமைப்பு ஆகும். இந்த அமைப்பு வருடந்தோறும் ராவணன் உருவ பொம்மைக்கு பதிலாக சூர்ப்பனகையின் உருவ பொம்மையை எரித்து தசரா கொண்டாடி வருகின்றனர்.

    இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் பரத் புலாரே பேசுகையில், இந்தியாவில் உள்ள அனைத்து சட்டங்களும் பெண்களுக்கு ஆதரவாகவும், ஆண்களுக்கு எதிராகவும் இருப்பதாகவும், அதனை பலரும் துஷ்பிரயோகம் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

    இந்த கொடுமையை கண்டிப்பதன் ஒரு பகுதியாகவே சூர்ப்பனகையின் உருவபொம்மையை எரித்து தசரா கொண்டாடப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். #Dussehra #Maharashtra
    ×