search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெண்கலம்"

    இளையோர் ஒலிம்பிக்கில் தமிழக தடகள வீரர் பிரவீன் வெண்கலப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். #YouthOlympic #PraveenChitravel
    பியூனஸ் அயர்ஸ்:

    3-வது இளையோர் ஒலிம்பிக் (யூத்) போட்டி அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்சில் நடந்து வருகிறது. இதில் இந்திய நேரப்படி நேற்று முன்தினம் இரவு நடந்த ஆண்களுக்கான டிரிபிள் ஜம்பில் (மும்முறை நீளம் தாண்டுதல்) கியூபா வீரர் அலெக்ஜான்ட்ரோ டியாஸ் (34.18 மீட்டர்) தங்கப்பதக்கமும், நைஜீரியாவின் எம்மானுல் ஒரிட்ஸ்மீவா (31.85 மீட்டர்) வெள்ளிப்பதக்கமும் கைப்பற்றினர்.

    தமிழகத்தை சேர்ந்த பிரவீன் வெண்கலப்பதக்கத்தை தட்டிச்சென்றார். இந்த போட்டி புதிய விதிமுறைப்படி இரண்டு பகுதியாக நடத்தப்பட்டது. இதன்படி முதல் பகுதியில் அதிகபட்சமாக 15.84 மீட்டர் தூரமும், 2-வது பகுதியில் அதிகபட்சமாக 15.68 மீட்டர் தூரமும் தாண்டினார். ஆக மொத்தம் 31.52 மீட்டர் நீளம் தாண்டிய பிரவீன் 3-வது இடத்தை பிடித்து பதக்கத்தை சொந்தமாக்கினார். அவர் சர்வதேச அளவில் வென்ற முதல் பதக்கம் இதுவாகும். ஏற்கனவே பள்ளிகளுக்கு இடையே நடந்த கேலோ விளையாட்டில் தங்கம் வென்று இருந்தார்.

    17 வயதான பிரவீன் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அம்மாப்பேட்டை என்ற ஊரைச் சேர்ந்தவர். அவரது தந்தை சித்திரைவேல் விவசாய கூலித்தொழிலாளி. பிரவீனின் சாதனை குறித்து அவருக்கு பயிற்சி அளித்து வரும் இந்திரா சுரேஷ் கூறியதாவது:-

    பிரவீன் சென்னையில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு சிறப்பு விடுதியில் தங்கியிருந்து 7-ம் வகுப்பு படித்த போது, அவரது திறமையை கண்டு வியந்தேன். அதைத் தொடர்ந்து அவர் மீது தனிகவனம் செலுத்தி பயிற்சி கொடுத்தேன். அந்த சமயம் நான் எஸ்.டி.ஏ.டி.யில் (சென்னை) தடகள பயிற்சியாளராக பணியாற்றி கொண்டிருந்தேன். பிறகு நான் நாகர்கோவிலுக்கு இடம் மாறிய போது, பிரவீனும் அங்கு வந்து உங்களிடம் தான் பயிற்சி பெறுவேன் என்று கூறினார். அதனால் அவருக்கு தொடர்ந்து பயிற்சி கொடுக்க முடிவு செய்தேன். பிரவீன் மட்டுமல்ல, அவரது இளைய சகோதரரும் என்னிடம் தான் பயிற்சி எடுத்து வருகிறார்.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தவர், பிரவீன். அவரது தந்தை விவசாய தினக்கூலி. தந்தையின் வருமானம் பிரவீனின் தடகள பயிற்சிக்கு போதுமானதாக இல்லை. போட்டிகளில் பங்கேற்க ஒரு சிலர் அவருக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.

    பிரவீனிடம் அபாரமான திறமை இருக்கிறது. கடினமாக உழைக்கக்கூடியவர். எப்போதாவது தான் சொந்த ஊருக்கு செல்வார். மற்றபடி அவரது தந்தை தான் இங்கு வந்து பார்த்து செல்வார். அவரை சீனியர் போட்டியில் தேசிய அளவிலான சாம்பியனாக உருவாக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதன் பிறகு இந்தியாவுக்காக ஆசிய விளையாட்டு மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கெடுக்க செய்ய வேண்டும்.

    பிரவீன் தற்போது கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள கல்லூரியில் விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் பி.ஏ. முதலாமாண்டு படித்து வருகிறார். தேர்வு எழுதுவதற்காக மட்டுமே அங்கு செல்வார். அதற்குரிய அனுமதியை அந்த கல்லூரி நிர்வாகம் வழங்கி இருகிறது. மற்ற நேரங்களில் அவர் நாகர்கோவிலில் தங்கியிருந்து பயிற்சியில் ஈடுபடுவார்.

    இவ்வாறு இந்திரா கூறினார். 
    ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் சரத் கமல்- மணிகா பத்ரா ஜோடி, டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றது. #AsianGames2018 #IndiaTableTennis
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று டேபிள் டென்னிஸ் போட்டியில் கலப்பு இரட்டையர்களுக்கான ஆட்டங்கள் நடைபெற்றன. இதில், இந்தியாவின் சரத் கமல்-மணிகா பத்ரா ஜோடி சிறப்பாக விளையாடி காலிறுதிக்கு தகுதி பெற்றது.

    காலிறுதியில் சரத் கமல்-மணிகா பத்ரா  ஜோடி, வடகொரியாவின் ஜி சாங் அன்- ஹியோ சிம் சா ஜோடியை எதிர்கொண்டது. இப்போட்டியில் கடுமையாகப் போராடிய இந்திய ஜோடி, 4-11 12-10 6-11 11-6 11-8 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் பதக்கத்தை உறுதி செய்தது. 

    அதன்பின்னர் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் சரத் கமல்- மணிகா பத்ரா ஜோடி, சீனாவின் வாங் சுகின்- சன் யிங்ஷா ஜோடியுடன் மோதியது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தின் துவக்கத்தில் பின்தங்கிய இந்திய ஜோடி முதல் இரண்டு செட்களையும் இழந்தது. அதன்பின் சுதாரித்து ஆடி, மூன்றாவது செட்டை வசமாக்கியது. 

    அதே வேகத்துடன் இந்திய ஜோடி முன்னேறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்திய ஜோடியின் வேகம் குறைந்தது. அசுர வேகத்தில் ஆடிய சீன ஜோடி, அடுத்தடுத்து 2 செட்களை கைப்பற்றியது. இதன்மூலம் 9-11, 5-11, 13-11, 4-11, 8-11 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்ற சீன ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. போராடித் தோல்வி அடைந்த இந்திய ஜோடிக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. 

    முன்னதாக டேபிள் டென்னிஸ் பிரிவில் இந்திய ஆண்கள் அணி வெண்கலப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. #AsianGames2018 #IndiaTableTennis
    ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற தமிழக டென்னிஸ் வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரனுக்கு 20 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என தமிழக முதல் வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். #AsianGames #PrajneshGunneswaran #EdappadiPalanisamy
    சென்னை:

    இந்தோனேசிய தலைநகர் ஜெகார்த்தாவில் ஆசிய விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தமிழக வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் வெண்கல பதக்கம் வென்றார்.

    இந்நிலையில், ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கலம் வென்ற டென்னிஸ் வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரனுக்கு ரூ.20 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.



    இதுதொடர்பாக, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரஜ்னேசுக்க் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறுகையில், ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கலம் வென்றதற்கு வாழ்த்துக்கள். தமிழக அரசு சார்பில் ரூ. 20 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும். மேலும், ஊக்கமுடன் செயல்பட்டு மேலும் பல வெற்றிகளை தேடித்தர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். #AsianGames #PrajneshGunneswaran #EdappadiPalanisamy
    ஆசிய விளையாட்டுப் போட்டியில், இந்திய ஷ்குவாஷ் வீரர் சவுரவ் கோஷல் அரையிறுதியில் தோல்வி அடைந்ததால் வெண்கலப் பதக்கம் வென்றார். #AsianGames2018 #SauravGhoshal
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய ஸ்குவாஷ் வீரர் சவுரவ் கோஷல் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதிசெய்திருந்தார்.  

    இந்நிலையில் இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்திய வீரர் சவுரவ் கோஷல் ஹாங்காங் வீரரான சங் மிங்கிடம் 2-3 என்ற கணக்கில் தோல்வியடைந்ததால் அவருக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

    இதன்மூலம் இந்தியா 6 தங்கம், 5 வெள்ளி, 17 வெண்கலம் என மொத்தம் 28 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.

    இன்று ஒரே நாளில் ஷ்குவாஷ் போட்டிகளில் இந்திய வீரர்கள் மூன்று வெண்கல பதக்கங்கள் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
     #AsianGames2018 #SauravGhoshal
    ×