search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேளாண்மைத்துறை"

    சேலம் மாவட்டத்தில் வேளாண்மைத்துறை மூலம் ரூ.138.39 கோடி மானியம் வழங்கப்படும் என்று கலெக்டர் ரோகிணி தெரிவித்துள்ளார். #SalemCollector
    சேலம்:

    வேளாண்மை துறை மானியம் குறித்து மாவட்ட கலெக்டர் ரோகிணி தெரிவித்ததாவது:-

    சேலம் மாவட்டத்தில் 11 வட்டாரங்களில் 161 நீர் வடிப்பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு 72578 எக்டர் நிலப்பரப்பில் இயற்கை வள மேம்பாட்டு பணிகளில் நிலம் சமன்படுத்துதல், கல்வரப்பு அமைத்தல், பண்ணைக்குட்டை, கசிவு நீர்குட்டை அமைத்தல், தடுப்பணை கட்டுதல், பண்ணை உற்பத்தி பணிகளில் பழமரக்கன்றுகள் நடவு செய்தல், பண்ணைக்கருவிகள் வழங்குதல் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டு பணிகளில் தையல் எந்திரங்கள் வழங்குதல், சுய உதவிக்குழுக்களுக்கு சுழல் நிதி வழங்குதல் ஆகிய 10,112 பணிகளுக்காக ரூ.56.10 கோடி செலவிடப்பட்டது.

    வோளாண் பொறியியல் துறையின் மூலம் சூரிய சக்தியில் இயங்கும் 5 எச்பி, 7.5 எச்பி மற்றும் 10 எச்பி திறனுடைய திறந்தவெளி கிணறு மோட்டார் பம்புகள் மற்றும் ஆழ்துளை கிணறு மோட்டார் பம்புகள் மாநில அரசின் நிதியிலிருந்து 40 சதவீதமும், மத்திய அரசின் நிதியிலிருந்து 20 சதவீதமும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக்கழகத்தின் மூலம் 30 சதவீதம் என 90 சதவீதம் மானியமாகவும் விவசாயிகளின் பங்களிப்பு 10 சதவீதமுமாக இந்த மோட்டார் பம்புகள் வழங்கப்படுகிறது.

    வேளாண் எந்திர மயமாக்கும் திட்டத்தின் மூலம் அதிகபட்சமாக அனுமதிப்படும் மானிய தொகையாக 35 பிஎச்பி டிராக்டர் ரூ.63,000 மானியமும், தட்டு வெட்டும் கருவிக்கு (3 எச்.பி. மேல்) ரூ.20,000 மானியமும், தட்டு வெட்டும் கருவிக்கு (5 எச்பி வரை) ரூ.25,000 மானியமும், கலப்பை (5 எச்.பி) ரூ.19,000 மானியமும், கலப்பை (9 கொளு) ரூ.44,000 மானியமும், டிஸ்க் கலப்பைக்கு ரூ.44,000 மானியமும் உள்பட பல மானியமும் வழங்கப்படுகிறது.

    மேலும், இது தொடர்பான விபரங்களுக்கு வேளாண் இணை இயக்குநர், செரி ரோடு, சேலம்1. என்ற முகவரியை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்தார். #SalemCollector
    ×