search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கற்றாழை"

    • சோற்றுக் கற்றாழை மடலை இரண்டாகப் பிளந்து உள்ளே சிறிதளவு வெந்தயத்தை வைத்து மூடி விடவும்.
    • இரண்டு நாட்கள் கழித்து ஊறிய வெந்தயத்தை எடுத்து தேங்காய் எண்ணெயில் போட்டு அதை தேய்த்து குளிக்க நரை முடியும் கறுப்பாகும்.

    "குமரியை உண்டால், குமரியை வெல்ல முடியும்" என்கிறது சித்த மருத்துவம். குமரி என்பது சோற்றுக் கற்றாழையின் மற்றொரு பெயர்.

    தரிசு நிலத்தில் விளையும் இந்த செடிக்கு ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் உண்டு. கற்றாழை ஜெல்லை (சோறு) சுத்தமான நீரில் 7 முறை கழுவி சுத்தம் செய்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர உங்கள் இளமை என்றும் ஊஞ்சலாடிக் கொண்டே இருக்கும். உடலில் கஸ்தூரி மணம் வீசும். சருமம் வறண்டுபோகாமல் ஈரப்பதத்துடன் ஜொலிக்கும்.

    கற்றாழை ஜெல்லை பசு மோரில் கலந்து குடித்து வர உடல் சூட்டினால் முகத்தில் வரும் பருக்கள், வெயிலினால் தோலில் ஏற்படும் அலர்ஜி மற்றும் கருந்திட்டுக்கள் மறைந்து போகும்.

    இதன் ஜெல்லை முகத்தில் தேய்த்துக் கழுவி வந்தால் முகம் அப்பழுக்கில்லாத பளிங்கு போல் ஜொலிக்கும்.

    கற்றாழை மடலைக் கீறி சாறு எடுத்து, அதை தேங்காய் எண்ணெயுடன் கலந்து 40 நாள் வெயிலில் வைத்து இதை தலைக்கு தொடர்ந்து தேய்த்து வாருங்கள். தலைமுடி நன்கு செழித்து வளரும்.

    கற்றாழையின் சோற்றைத்தலையில் தேய்த்து அரை மணிநேரம் ஊற வைத்துக் குளிக்க தலையில் ஏற்படும் பொடுகு, சிரங்கு குணமாகும்.

    சோற்றுக் கற்றாழை மடலை இரண்டாகப் பிளந்து உள்ளே சிறிதளவு வெந்தயத்தை வைத்து மூடி விடவும். இரண்டு நாட்கள் கழித்து ஊறிய அந்த வெந்தயத்தை எடுத்து தேங்காய் எண்ணெயில் போட்டு அதை தேய்த்து குளிக்க நரை முடியும் கறுப்பாகும்.

    இச்செடியின் மடலில் உள்ள சோற்றை எடுத்து தண்ணீரில் நன்கு அலசி அதை சாப்பிட்டு வர குடல் புண், மூல நோய் மாறும். மலச்சிக்கல் தீரும்.

    வாடிச் சருகான கற்றாழை மடலை தீயில் கருக்கி, தேங்காய் எண்ணெயோடு கலந்து தீப்புண்களில் மீது பூசி வர விரைவில் புண் ஆறும்.

    கற்றாழை மடலில் சிறு துண்டு எடுத்து இரண்டாக பிளந்து சோற்றுப் பகுதியை தீயில் வாட்டி உடல் பொறுக்கும் சூட்டில் அடிப்பட்ட இடத்தில் இதை வைத்து ஒத்தடம் கொடுக்க வலி, வீக்கம் மட்டுமல்ல இரத்தக் கட்டும் மாறும்.

    தீய சக்திகள், கண் திருஷ்டி இவைகளை அண்டவிடாது என்ற நம்பிக்கையின் காரணமாக வீட்டின் முன்புறம் வளர்க்கப்படுகிற அல்லது கட்டித் தொங்க விடப்படுகிற இந்த செடி மாட்டுத் தொழுவங்களில் கால்நடைகளுக்கு உண்ணி பற்றாமல் இருப்பதற்காகவும் தொங்க விடப்படுவது உண்டு.

    -ப்யாரீப்ரியன்

    பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுவது கர்ப்பப்பை தொடர்பான பிரச்னைகளால்தான். பெண்களின் இந்த பிரச்சனைகளுக்கு கற்றாழை நிரந்தர தீர்வு தருகிறது.
    பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுவது கர்ப்பப்பை தொடர்பான பிரச்னைகளால்தான். சீரற்ற மாதவிலக்கு, அடிவயிற்றில் வலி, கர்ப்பப்பையில் கட்டி, தொற்று, கர்ப்பப்பைப் புற்றுநோய் என அவர்களின் வாழ்க்கைத்தரத்தையே குறைக்கும் அளவுக்குக் கர்ப்பப்பைப் பிரச்சனைகளும் அதிகரித்துள்ளன.

    இவற்றைச் சரிசெய்ய, மூலிகைகளிலேயே மிக முக்கியமானதாக இருக்கிறது சோற்றுக் கற்றாழை என்ற குமரி. இது உணவாகிய மருந்து, மருந்தாகிய உணவு என்ற சிறப்புகளைக்கொண்டது. பூப்பெய்தும்போது, ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாகவும் புரோஜெஸ்ட்ரான் குறைவாகவும் இருக்கும். மெனோபாஸ் சமயத்தில் ஈஸ்ட்ரோஜன் குறைவாகவும், புரோஜெஸ்ட்ரான் அதிகமாகவும் சுரக்கும்.

    இது இயற்கையின் நியதி. இந்த சமநிலை மாறாமல் இருந்தால், பிரச்சனைகள் எதுவும் இல்லை. ஒருவேளை சமநிலை மாறிவிட்டால், சீரற்ற மாதவிலக்கு, கருவுறுதலில் பிரச்சனை, கருக்கலைதல், கட்டி உருவாகுதல், மார்பகம் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் போன்ற பிரச்சனைகள் தலை தூக்கும். இதற்காக, ஹார்மோன் மாத்திரைகளைக் கொடுத்து சமநிலை செய்ய முயற்சி செய்தாலும், பக்கவிளைவுகள் ஏற்படலாம்.

    இதற்கு எல்லாம் விளைவுகள் இல்லாத எளிய தீர்வாக இருக்கிறது கற்றாழை. வாரம் மூன்று நாட்கள், கற்றாழையை சாப்பிட்டுவர, இயற்கையாகவே ஹார்மோன்களின் செயல்பாடுகள் சமநிலையாகும். மேலும், மூளை தொடர்பான ஹார்மோன்களும் சிறப்பாகச் செயல்படும் என்கிறது சமீபத்திய ஆய்வுகள்.

    கற்றாழையில் உள்ள சபோனின் (Saponin) என்ற கசப்புத்தன்மை, செல்கள் அதிகம் பெருகுவதைத் தடுக்கிறது. இதனால், மார்பக புற்றுநோய் வராமல் பாதுகாக்கும். மக்னீசியம், செலினியம், பொட்டாசியம் போன்ற தாது உப்புக்கள் புற்றுநோய் செல் வளர்ச்சியைக்கூட கட்டுக்குள் வைத்திருக்கும். கர்ப்பப்பையில் கட்டியிருப்பவர்கள், 48 நாட்கள் கற்றாழை ஜூஸ் குடித்துவர, கட்டிகள் கரைந்திருப்பதை ஸ்கேன் ரிப்போர்ட்டில் பார்க்கலாம்.
    ×