search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரபிக்கடல்"

    தமிழகம் மற்றும் புதுவை மீனவர்கள் அடுத்த 24 மணி நேரத்திற்கு அரபிக் கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது. #TNRains #IMD #Fishermen
    புதுடெல்லி:

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்தது. பின்னர் வங்கக்கடலில் உருவான டிட்லி புயல் வலுவடைந்து வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரையை தாக்கியது. இதன் காரணமாக இரு மாநிலத்திலும் பலத்த மழை பெய்தது. 

    இதற்கிடையே அரபிக்கடலில் உருவான லூபன் புயல் இன்று ஏமன் மற்றும் தெற்கு ஓமன் கடற்கரைகளில் கரை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இந்நிலையில் இந்திய வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடலோர ஆந்திரா, கேரளாவின் ஒரு சில இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதேபோல் கர்நாடகத்தின் தெற்கு உள் மாவட்டங்கள், கேரளா, தமிழ்நாடு மற்றும் புதுவையின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யலாம்.

    லூபன் புயல் இன்று ஏமன் மற்றும் தெற்கு ஓமன் கடற்கரைகளில் கரை கடக்கும் சமயத்தில் மணிக்கு 90 முதல் 100 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும். மேற்கு மத்திய அரபிக் கடல் மற்றும் தெற்கு ஓமன், ஏமன் கடற்கரைகளில் கடல் கொந்தளிப்பாக காணப்படும். ஏதன் வளைகுடாவிலும் இன்று இதன் தாக்கம் இருக்கும். 

    எனவே, அடுத்த 24 மணி நேரத்திற்கு மேற்கு அரபிக்கடல், தெற்கு ஓமன் கடற்பகுதி, ஏமன் கடற்பகுதி, ஏதன் வளைகுடா பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. 

    இதேபோல் அக்டோபர் 15, 16, 17 ஆகிய தேதிகளிலும் தமிழகம் மற்றும் புதுவையில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. 

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #TNRains #IMD #Fishermen
    அரபிக்கடலில் உருவான லூபன் புயல் நாளை பிற்பகல் ஏமன் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. #Luban #ArabianSea
    புதுடெல்லி:

    கேரளா அருகே அரபிக்கடலில் கடந்த வாரம் உருவான ‘லூபன்’ புயல் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் ஓமன் நாட்டு கடற்கரை நோக்கி நகர்ந்தது.

    லூபன் புயல் மணிக்கு 4 கி.மீ. வேகத்தில் மெதுவாக நகர்வதால் ஓமன் கடற்கரையை அடைய தாமதம் ஏற்படும் என்று வானிலை மையம் தெரிவித்து இருந்தது.

    இன்று காலை மேற்கு மத்திய அரபிக்கடலில் ஓமன் நாட்டின் சலாபா நகருக்கு கிழக்கு தென் கிழக்கே 410 கி.மீ. தொலைவிலும், ஓமன் நாட்டின் சோகோட்ரா தீவில் இருந்து கிழக்கு வடகிழக்கே 410 கி.மீ. தொலைவிலும், ஏமன் நாட்டின் அல் கைதாக் நகருக்கு கிழக்கு தென் கிழக்கே 550 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

    கோப்புப்படம்

    அதிதீவிர லூபன் புயல் நாளை பிற்பகல் ஏமன் நாட்டில் கரையை கடக்கும். அப்போது மணிக்கு 100 கி.மீ. முதல் 125 கி.மீ. வேகத்தில் காற்று வீசக் கூடும்.  பலத்த மழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.  #Luban #ArabianSea
    வருகிற 7-ம் தேதி அதீத கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளதால் ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. #TNRain #TNRedAlert
    புதுடெல்லி :

    தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் (5-ந்தேதி) குறைந்த காற்றழுத்த பகுதியாக உருவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த 48 மணி நேரத்தில் இது புயலாக மாறி வடமேற்கு திசையில் நகரும் எனவும் இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது.

    தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனையொட்டியுள்ள தமிழக கடலோரப் பகுதிகளில் மேலடுக்கு சுழற்சியினால் தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்துக்கு பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யும் என்றும், அதன் பிறகு மேலும் 3 நாட்களுக்கு பலத்த மழை நீடிக்கும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில், தமிழகத்தில் வரும் 7-ம் தேதி அதீத கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் சுமார் 25 செ.மீ அளவு மழை பெய்யும் என பேரிடர் மேலாண்மைத்துறை இயக்குனர் சத்திய கோபால் தெரிவித்துள்ளார். இதன்காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைத்திருக்கும்படியும், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் பேரிடர் மேலாண்மைத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

    குறைந்த நேரத்தில் மிக அதிகளவு கனமழை பெய்வதையே ரெட் அலர்ட் என அழைக்கப்படுகிறது. வானிலை மிகவும் மோசமாக இருக்கும் என்பதால் மக்கள் அபாயகரமான பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட போது மிக கனமழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது#TNRain #TNRedAlert
    தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டியுள்ள லட்சத்தீவு பகுதியில் புயல் சின்னம் உருவாகுவதால் தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #Cyclone #Monsoon #IMD
    சென்னை:

    இந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை கேரளாவிலும், கர்நாடகாவிலும் வரலாறு காணாத அளவுக்கு பெய்தது. தொடர்ந்து 4 மாதங்களாக நீடித்து வரும் பருவமழை வட மாநிலங்களில் முடிவுக்கு வந்துள்ளது.

    ஆனால் அரபிக் கடலையொட்டியுள்ள கர்நாடகா, கேரளா, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. அடுத்த 48 மணிநேரத்தில் தென்மேற்கு பருவமழை முழுவதுமாக முடிவுக்கு வருகிறது.

    அதன்பிறகு 6-ந்தேதி வாக்கில் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டியுள்ள லட்சத்தீவு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி அது புயல் சின்னமாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்பின்பு அடுத்த 48 மணிநேரத்தில் அது மேலும் வலுப்பெற்று வடமேற்கு திசையில் சென்றுவிடும் என்றும் கூறப்பட்டுள்ளது.


    இதன் காரணமாக 5-ந்தேதி காலை 8.30 மணி முதல் 6-ந்தேதி காலை 8.30 மணி வரை தமிழகம் மற்றும்புதுவையிலும், கேரளாவிலும் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அதன்பிறகு பலத்த மழைபெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே குமரிகடல் பகுதியில் இருந்து வடக்கு கேரளா வரை பரவிய மேலடுக்கு சுழற்சி தெற்கு மராட்டியம் வரை நீடிக்கிறது. இதேபோல் தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனையொட்டிய இலங்கை மற்றும் தமிழக கடலோர பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் அடுத்த 48 மணி நேரத்துக்கு தமிழகம் மற்றும் புதுவையில் அனேக இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல் குடி, குமரி மாவட்டம் தக்கலை ஆகிய இடங்களில் 7 செ.மீ மழை பெய்துள்ளது.

    குடவாசல், திருவாரூர், குழித்துறையில் 5 செ.மீ, திருமனூர், நாகர்கோவில், விளாத்திகுளம், கோவில் பட்டியில் 4 செ.மீ. மழையும், பெய்துள்ளது.

    சென்னையில் நேற்று காலையும், இன்று காலையும் லேசாக மழை தூறியது. பகலில் கோடை போல் கடும் வெயில் சுட்டெரிக்கிறது.

    சென்னை டி.ஜி.பி. அலுவலகம், புழல் ஆகிய இடங்களில் 1 செ.மீ. மழை பெய்தது. #Cyclone #Monsoon #IMD
    சாகர் புயல் காரணமாக இந்தியாவில் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, கோவா, மராட்டியம் மற்றும் லட்சத்தீவுகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் புயல் எச்சரிக்கை விடுத்துள்ளது. #Sagar
    திருவனந்தபுரம்:

    அரபிக்கடலில் ஏடன் வளைகுடா பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இது தற்போது புயலாக மாறி உள்ளது. இதற்கு வானிலை மையம் சாகர் என பெயரிட்டுள்ளது.

    இப்புயல் ஏடன் வளைகுடாவில் ஏமனுக்கு கிழக்கு-வடகிழக்கில் 390 கி.மீ. தொலைவிலும், ஸ்கோட்ரா தீவுகளில் இருந்து 560 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு திசை நோக்கி நகர்ந்து செல்ல வாய்ப்புள்ளது.


    இதன் காரணமாக ஏடன் வளைகுடா மற்றும் அதையொட்டி உள்ள மேற்கு மத்திய பகுதிகள் தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறைக்காற்று வீச வாய்ப்புள்ளது. 70 முதல் 80 கி.மீ. வேகத்திலும், புயலின் தாக்கம் அதிகரிக்கும்போது காற்றின் வேகம் 90 கி.மீட்டருக்கு அதிகமாகவும் வீச வாய்ப்புள்ளது. எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

    சாகர் புயல் காரணமாக இந்தியாவில் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, கோவா, மராட்டியம் மற்றும் லட்சத்தீவுகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் புயல் எச்சரிக்கை விடுத்துள்ளது. #Sagar
    அரபிக் கடலில் ஏடன் வளைகுடாவில் உருவான ‘சாகர்’ புயல் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்று வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.
    சென்னை:

    அரபிக் கடலில் ஏடன் வளைகுடாவில் ‘சாகர்’ என்ற புயல் உருவாகி உள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் சில இடங்களில் இன்று (வெள்ளிக்கிழமை)மழை பெய்யும் என்று வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.

    தமிழகத்தில் கடந்த வருடம் வடகிழக்கு பருவமழை பல மாவட்டங்களில் போதிய அளவு பெய்யவில்லை. இதன் காரணமாக கோடை காலத்தில் மழை பெய்யவேண்டும் என்று மக்களும் விவசாயிகளும் எதிர்பார்த்து உள்ளனர்.கடந்த சில நாட்களாக பல இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில் சென்னை வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தென் மேற்கு அரபிக்கடலில் ஏடன் வளைகுடா பகுதியில் புயல் ஒன்று உருவாகி உள்ளது. அதற்கு சாகர் என்று பெயரிடப்பட்டுள்ளது. கடந்த 2004-ம் ஆண்டில் இருந்து புயலுக்கு பெயர் வைக்கப்படுகிறது. இந்த புயல் 50-வது புயல் ஆகும்.இந்த புயலால் தமிழகத்திற்கு எந்த தாக்கமும் இல்லை. இந்த புயல் ஏமன் பகுதிக்கு கிழக்கில் 400 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இது தென் மேற்கு திசையில் நகர்ந்து ஏமனை நோக்கி செல்கிறது. எனவே, மீனவர்கள் தென் மேற்கு அரபிக்கடலுக்கு அடுத்து 2 நாட்களுக்கு செல்லவேண்டாம்.

    தமிழகத்தில் பெய்து வருவது கோடை மழையாகும். வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் தென் மாவட்டங்களில் சில இடங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) மழை பெய்யும்.இவ்வாறு எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார். நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-

    பெருங்களூர், சாத்தூர் தலா 5 செ.மீ., தர்மபுரி, வாழப்பாடி, ஆண்டிப்பட்டி தலா 4 செ.மீ., ஊட்டி, கழுகுமலை 3 செ.மீ., பேச்சிப்பாறை, திருச்சுழி, சிவகாசி, வெம்பாவூர், கோவை, சத்திரப்பட்டி (திண்டுக்கல் மாவட்டம்) தலா 2 செ.மீ., முத்துப்பேட்டை, பழனி, சேரன்மகாதேவி, திருப்பத்தூர்(சிவங்கை மாவட்டம்), பாம்பன், பாலக்கோடு, அரண்மனைப்புதூர், தேவகோட்டை, சின்னக்கள்ளாறு, பீளமேடு, சேந்தமங்கலம், சேலம், வால்பாறை, காமாட்சிபுரம், கமுதி, பையூர் தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது. 
    தென்மேற்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது. தமிழகத்தில் கோடைமழை தொடரும் என வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.
    சென்னை:

    தென்மேற்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது. தமிழகத்தில் கோடைமழை தொடரும் என வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.

    கடந்த வருடம் வடகிழக்கு பருவமழை சில மாவட்டங்களில் வழக்கமான அளவை விட கூடுதலாக பெய்தது. பொதுவாக கோடை மழையை பொதுமக்களும், விவசாயிகளும் எதிர்பார்ப்பது வழக்கம்.

    தமிழகத்தில் கோடைமழை கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது. இந்தநிலையில் வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:-

    தென்மேற்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது. அது வலுப்பெற்று அடுத்த 48 மணிநேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறப்போகிறது. அது மேற்கு, வடமேற்கு திசையில் நகரக்கூடும். இதன் காரணமாக மீனவர்கள் யாரும் தென்மேற்கு அரபிக்கடலில் மீன்பிடிக்க செல்லவேண்டாம்.

    குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்திற்கு எந்தவித தாக்கமும் இருக்காது. கோடை மழை தமிழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) பெய்யும்.

    தென் மாவட்டங்களிலும், வட மாவட்டங்களில் உள் பகுதிகளிலும் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உண்டு. இது முழுக்க முழுக்க கோடை மழை.

    இவ்வாறு வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.

    நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-

    பழனி 4 செ.மீ., குழித்துறை, உடுமலைப்பேட்டை தலா 3 செ.மீ., தோகைமலை, வால்பாறை, திருமங்கலம், கொடைக்கானல் தலா 2 செ.மீ., பொள்ளாச்சி, திருச்சி, நாகர்கோவில், ஓசூர், தென்காசி, அருப்புக்கோட்டை, பாப்பிரெட்டிப்பட்டி, திருப்பத்தூர், சேரன்மகாதேவி தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது. 
    ×