search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கால்பந்து"

    வாழப்பாடியில் ஐவர் அணி கால்பந்து போட்டி நடைபெற்றது.

    வாழப்பாடி:

    வாழப்பாடி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் என்.ஜி.ஆர்., 149 கபடி குழு மற்றும் அண்ணாமலை ஜூவல்லர்ஸ் சார்பில் ஐவர் அணி கால்பந்து போட்டி 2 நாட்கள் நடைபெற்றது.

    தொடக்க விழாவிற்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கலைஞர்புகழ் தலைமை வகித்து, போட்டியை தொடங்கி வைத்தார்.

    பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் எம்ஜிஆர் பழனிசாமி, சாய்பாபா அறக்கட்டளை தலைவர் ஜவஹர் ஆகியோர் வீரர்களை வரவேற்றனர். போட்டியில், சேலம், நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த 25 அணிகள் பங்கேற்றன.

    இதில் சேலம் அவரஞ்சிஅம்மா அணி முதல் பரிசும், 149 அணி 2-ம் பரிசும், வாழப்பாடி கருடன் 3-ம் பரிசும், வித்யா மெமோரியல் அணி 4-ம் பரிசும் பெற்றன.

    வெற்றி பெற்ற அணிகளுக்கு, கோப்பைகள், ரொக்கப்பரிசு மற்றும் சிறந்த வீரர்களுக்கு பதக்கங்களை பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் எம்.கோபிநாத், ஆர்.குணாளன், கால்பந்து குழு நிர்வாகிகள் ராம், உதயகுமார், நித்தீஸ் ஆகியோர் வழங்கி பாராட்டினர்.

    21 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இந்தியா - சீனா இடையிலான கால்பந்து ஆட்டம் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்தது.
    ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கு தயாராகும் விதத்தில் இந்திய கால்பந்து அணி பல்வேறு நாட்டு அணிகளுடன் விளையாட திட்டமிட்டுள்ளது.

    இதன் ஒரு அங்கமாக இந்திய அணி சீனாவுக்கு எதிராக நட்பு ரீதியிலான போட்டியில் விளையாட விரும்பியது. இந்த ஆட்டம் சீனாவில் உள்ள சுஜோவ் நகரில் நடைபெற்றது.

    21 ஆண்டுகளாக இந்தியா - சீனா அணிகள் நேருக்கு நேர் மோதியது கிடையாது. தற்போது இன்று மோதியது. இதில் இந்தியா வெற்றி பெறுமா? என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் போட்டி வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்தது.
    பிபா கால்பந்து இ-உலகக்கோப்பை தொடரில் உலகம் முழுவதும் இருந்து 2 கோடி பேர் கலந்து கொண்ட நிலையில், சவுதியை சேர்ந்த எமெஸ்டாஸ்ட்ரி சாம்பியன் பட்டத்துடன் ரூ.1.7 கோடி பரிசுத்தொகையை தட்டிச்சென்றுள்ளார். #FIFAeWorldCup
    லண்டன்:

    உலகக்கோப்பை கால்பந்து தொடர் சமீபத்தில் முடிவடைந்தது. களத்தில் விளையாடுபவர்களுக்கான உலககோப்பை அது என்றால், கம்ப்யூட்டரில் விளையாடுபவர்களுக்காகவும் ஒரு உலககோப்பை நடந்துள்ளது. நீங்கள் கம்ப்யூட்டர் கேம் பிரியர் என்றால் உங்களுக்கு இஏ (EA) என்ற நிறுவனத்தின் கிரிக்கெட், கால்பந்து உள்ளிட்ட கேம்கள் தெரிந்திருக்கும்.

    அந்த இஏ நிறுவனம் சமீபத்தில் பிபா கால்பந்து இ-உலகக்கோப்பை தொடரை நடத்தியது. உலகம் முழுவதும் இருந்து இந்த தொடரில் சுமார் 2 கோடி பேர் கலந்து கொண்டனர். பல சுற்றுகளாக நடந்த இந்த தொடரில் நேற்று இறுதிப்போட்டி லண்டனில் நடந்தது.



    பரபரப்பாக நடந்த இறுதிப்போட்டியில் சவுதி அரேபியாவை சேர்ந்த எமெஸ்டாஸ்ட்ரி என்பவர் 4-0 என்ற கோல் கணக்கில் ஸ்டீபனோ என்பவரை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். மேலும், அவருக்கு 2.5 லட்சம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.1.7 கோடி) பரிசுத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. 

    இஏ நிறுவனம் நடத்திய பல கால்பந்து தொடர்களில் எமெஸ்டாஸ்ட்ரி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
    ரஷிய அதிபர் புதின் டிரம்புக்கு பரிசாக கொடுத்த கால்பந்தை அதிகாரிகள் சோதனைக்கு உள்படுத்தியுள்ள நிலையில், அதில் ஒட்டுக்கேட்கும் கருவிகள் இருக்கலாம் என குடியரசு கட்சி செனட்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். #TrumpPutinSummit
    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் டிரம்ப் - ரஷிய அதிபர் புதின் ஆகிய இருவரும் கடந்த 12-ம் தேதி பின்லாந்து நாட்டில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பின் போது, புதின் டிரம்புக்கு கால்பந்து ஒன்றை பரிசளித்தார். பொதுவாக அமெரிக்க அதிபருக்கு வரும் எல்லா பரிசுப்பொருட்களும் சோதனைக்கு உள்படுத்தப்படுவது வழக்கம்.

    தற்போதும் அதேபோல, அந்த கால்பந்தை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில், டிரம்ப் சார்ந்த குடியரசு கட்சியை சேர்ந்த செனட்டர் லிண்ட்சே கிரகாம் டிரம்ப் - புதின் சந்திப்பை கடுமையாக விமர்சித்து ட்வீட்டியிருந்தார்.

    “ஒருவேளை நான் அந்த கால்பந்தை பெற்றிருந்தால், அதில் ஒட்டுக்கேட்கும் கருவிகள் உள்ளதா என்பதை சோதனைக்கு உள்படுத்தி இருப்பேன். மேலும், அதனை ஒருபோதும் வெள்ளை மாளிகைக்குள் அனுமதித்து இருக்க மாட்டேன்” என கிரகாம் ட்வீட் செய்துள்ளார்.
    ஆஸ்திரேலியாவில் கால்பந்து போட்டி நடைபெற்று கொண்டிருக்கும் போது மைதானத்தினுள் நுழைந்த கங்காரு கால்பந்து விளையாடிய வீடியோ வைரலாக பரவி வருகிறது. #Kangaroo
    கான்பெரா:

    ஆஸ்திரேலியா தலைநகர் கான்பெராவில் நேற்று பெண்களுக்கான கால்பந்து பிரீமியர் லீக் போட்டி நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கங்காரு ஒன்று மைதானத்துக்குள் நுழைந்தது. அதனை கண்ட அனைவரும் மைதானத்தை விட்டு வெளியேறினர். கங்காரு மைதானத்தை குதித்து குதித்து சுற்றி வந்தது.  

    பின்னர் கங்காருவிடம் பந்தை எறிந்தனர். கங்காரு அந்த பந்துகளை காலால் எட்டி உதைத்தது. அதன் பின் மைதானத்தை சுற்றி வந்தது. இதனால் போட்டி 20 நிமிடம் தாமதமானது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் கங்காருவை வேனில் ஏற்றி அழைத்து சென்றனர். கங்காரு சிறிது விளையாடி அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தியது.

    இதுகுறித்த சமூக ஊடகங்களில் பதிவு செய்யப்பட்டது. அதனை பார்த்த அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர். வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கங்காரு கால்பந்து விளையாடி மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது. #Kangaroo

    ×