search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடனம்"

    பிரதமர் மோடி எழுதிய குஜராத்தி பாடலுக்கு பார்வையிழந்த மாணவிகள் ஒன்றுகூடி ‘கர்பா’ நடனம் ஆடிய வீடியோ வைரலாக பரவி வருகிறது. #Visuallychallengedgirls #songwrittenbyModi
    புதுடெல்லி:

    பிரதமராக பதவியேற்பதற்கு முன்னர் குஜராத் மாநில முதல் மந்திரியாக பதவி வகித்த பிரதமர் மோடி குஜராத்தி மொழியில் சில கவிதை தொகுப்புகளை இயற்றியுள்ளார்.

    அவ்வகையில், கடந்த 2012-ம் ஆண்டு  ‘குமே அய்னோ கர்போ’ என்ற தலைப்பில் பாடல் ஒன்றை அவர் எழுதியிருந்தார்.



    இந்நிலையில், நவராத்திரி விழாவையொட்டி அந்த பாடலுக்கு பார்வையிழந்த மாணவிகள் ஒன்றுகூடி ‘கர்பா’ நடனம் ஆடிய வீடியோ வைரலாக பரவி வருகிறது.

    அகமதாபாத் நகரில் உள்ள அந்த் கன்யா பிரகாஷ் குருஹ் பள்ளியை சேர்ந்த இந்த பார்வையிழந்த மாணவிகள் குஜராத்தில் மிகவும் பிரசித்தியான ‘கர்பா’ நடனத்தின் மூலம்  தனது பாடலுக்கு உயிரூட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, அந்த நடனக் காட்சி வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் இணைத்து வெளியிட்டுள்ளார். #Visuallychallengedgirls #songwrittenbyModi




    ஓடும் வாகனங்களில் இருந்து குதித்து சாலையில் நடனம் ஆடும் ‘கிக்கி சேலஞ்ச்’ வீடியோ வைரலாக பரவிவரும் நிலையில் நாட்டின் பல பகுதிகளில் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். #KikiChallenge
    புதுடெல்லி:

    கனடாவை சேர்ந்த பிரபல ‘ராப்’ இசை பாடகர் டிரேக் என்பவர் சமீபத்தில் ‘கிக்கி சேலஞ்ச்’ என்ற பெயரில் சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஓடும் காரில் இருந்து திடீரென சாலையில் கீழே குதித்து தனது மிகப்பிரபலமான ‘இன் மை பீலிங்ஸ்’ என்னும் பாடலுக்கு நடனமாடும் அந்த காட்சி சமூக வலைத்தளங்கள் மூலம் வைரலாக பரவி வருகிறது.

    ‘கிக்கி சேலஞ்ச்’ என்று அழைக்கப்படும் இதைகண்டு உலகம் முழுவதும் பலர் இதுபோல் ஓடும் வாகனங்களில் இருந்து திடீரென கீழே குதித்து நடுச்சாலையில் நடனடமாடும் வீடியோக்களை பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்ட்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். அவர்களின் நண்பர்கள் மூலம் அந்த காட்சிகள் விரும்பப்பட்டும், பகிரப்பட்டும் வருகிறது.


    ஒரு வீடியோவில் சாலையில் நடனம் ஆடும் ஒரு பெண்ணின் கைப்பை பறிபோவதும், இன்னொருவர் ஆடும்போது கார் மோதி தூக்கி எறியப்படும் அசம்பாவித காட்சிகளும் பரவி வருகிறது. இந்த சவாலை ஏற்று நடிகை ரெஜினா நடனம் ஆடிய வீடியோவும் சமீபத்தில் வெளியானது.

    இந்நிலையில், இந்த ’கோரக்கூத்தை’ பார்த்து இந்தியாவிலும் சிலர் இதுபோன்ற விபரீத முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஏற்படும் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் டெல்லி, மும்பை, பெங்களூரு, உத்தரப்பிரதேசம், சண்டிகர் காவல்துறையினர் பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.

    குறிப்பாக, டெல்லியில் ஆம்புலன்ஸ் கதவு திறந்திருக்க ஓடும் அந்த வாகனத்தின் பக்கவாட்டில் ஒருவர் நடனமாடும் காட்சியை வெளியிட்டுள்ள டெல்லி போலீசார், ‘சாலையில் நடனமாடுவது உங்களுக்கான புதிய  (மரணத்தின்) கதவுகளை திறந்துவிடும் "Dancing on the roads can open new doors for you." என பதிவிட்டுள்ளனர்.

    அன்புள்ள பெற்றோரே.. உங்கள் குழந்தைகளின் வாழ்வில் எல்லா சேலஞ்களிலும் நீங்கள் துணையாக இருங்கள். ஆனால், கிக்கி சேலஞ்சில் இருந்து குழந்தைகளை காப்பாற்றுங்கள் என உத்தரப்பிரதேசம் மாநில போலீசார் எச்சரித்துள்ளனர். இதேபோல் மும்பை, சண்டிகர் மற்றும் பெங்களூரு நகர காவல் துறையினரும் எச்சரிக்கை செய்திகளை வெளியிட்டுள்ளனர். #Kikidancechallenge #PoliceissueKikiadvisories
    ×