என் மலர்
நீங்கள் தேடியது "கண்டனம்"
- வீட்டில் தனியாக வசித்து வந்த ஒரு வயதான தம்பதியினர் அடித்துக் கொலை.
- சீர்கெட்டுப் போய் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கையும் தாமதிக்காமல் நெறிப்படுத்த வேண்டும்.
திமுக ஆட்சியில் சிறு குழந்தைகள் முதல் வயதானோர் வரை எவருக்கும் பாதுகாப்பு இல்லை என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த ஒரு வயதான தம்பதியினர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள, செய்தியை அறிந்து கடும் அதிர்ச்சியுற்றேன்.
தமிழகத்தையே உலுக்கிய பல்லடம் மூவர் கொலை வழக்கிலேயே இன்னும் எவ்வித தடயத்தையும் திமுக அரசு கண்டுபிடிக்காத நிலையில் கொங்குப் பகுதியில் மீண்டும் மீண்டும் அரங்கேறி வரும் இதுபோன்ற கொடூரச் சம்பவங்கள் நம்மை அச்சத்தில் உறைய வைப்பதோடு, திராவிட மாடல் ஆட்சியில் சிறு குழந்தைகள் முதல் வயதானோர் வரை எவருக்கும் பாதுகாப்பில்லை என்ற கசப்பான உண்மையையும் நமக்கு உணர்த்துகிறது.
எனவே, தமிழகத்தில் இத்தனை துணிச்சலாக அதிகரித்து வரும் கொலை, கொள்ளைக் குற்றங்களால் பொதுமக்களுக்கு சட்டம் ஒழுங்கின் மீதான நம்பிக்கை முற்றிலுமாக சிதைந்து விடும் அபாயம் உள்ளதால், இந்தக் கொடும் குற்றத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனே கண்டுபிடித்து கைது செய்வதுடன், சீர்கெட்டுப் போய் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கையும் தாமதிக்காமல் நெறிப்படுத்த வேண்டுமென தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- நிர்மலா சீதாராமனின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ், திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.
- நிதியமைச்சர் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்ட அனைத்து திட்டங்களையும் தர்மமாக வழங்கியது போல் காட்டினார்.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு நேற்று முன்தினம் தொடங்கியது அப்போது தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி மறுப்பு விவகாரத்தை கையில் எடுத்த திமுக எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
இதற்கு பதில் அளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான், "தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை மாநில அரசு பாழடித்து வருகிறது. தமிழக எம்.பி.க்கள் நாகரீகமற்றவர்கள், ஜனநாயக விரோதமானவர்கள்" என்று தெரிவித்தார்.
இதனையடுத்து, திமுக எம்.பி.க்களின் கடும் கண்டனத்தை அடுத்து தமிழ்நாட்டு எம்.பி.க்கள் நாகரீகமற்றவர்கள் என்று பேசியதை திரும்பப் பெற்றுக்கொள்வதாக தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
இந்நிலையில், நேற்று மாநிலங்களவையில் உரையாற்றிய தர்மேந்திர பிரதான், "யாருடைய மனதும் புண்படும்படி பேசி இருந்தால் 100 முறை கூட மன்னிப்பு கேட்க தயார். பிரதமர் மோடி தலைமையிலான அரசு தமிழருக்கும், தமிழகத்திற்கும் எதிரானது அல்ல" என்று தெரிவித்தார்.
இதனையடுத்து, மாநிலங்களவையில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், "தமிழ்நாட்டின் கல்வித்தரம் கொரோனா நோய்த்தொற்றிற்கு பிறகு பின்தங்கியுள்ளது. 3 ஆம் வகுப்பு மாணவர்களால் 1 ஆம் வகுப்பு பாட புத்தகத்தை கூட படிக்க முடியவில்லை.
திமுக எம்பிக்கள் அநாகரீகமான முறையில் நடந்து கொண்டார்கள் என தர்மேந்திர பிரதான் பேசியதை திரும்பபெறக் சொல்கிறீர்கள். ஆனால், தமிழ் படித்தால் பிச்சைக்கூட கிடைக்காது என்றும் தமிழை காட்டுமிராண்டி மொழி எனக் கூறியவரின் (பெரியார்) படத்திற்கு மாலை போடுகிறீர்கள்" என அவர் தெரிவித்துள்ளார்.
நிர்மலா சீதாராமனின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ், திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து வெளியே வந்து செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி எம்.பி கூறியதாவது:-
பாஜக அரசு, தினமும் தமிழ்நாட்டையும், எதிர்க்கட்சியினையும், எதிர்க்கட்சித் தலைவர்களையும் இழிவு செய்கிறது. இன்று மாலை எதிர்க்கட்சித் தலைவர் இழிவுப்படுத்தப்பட்டார். நேற்று தமிழ்நாடு எம்.பி.க்கள் இழிவுப்படுத்தப்பட்டனர்.
நிதியமைச்சரும் அனைத்து அமைச்சர்களும் ஒரு நிகழ்ச்சி நிரலைப் பெற்று, தமிழக அரசை அவமதிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
நேற்று, நிதியமைச்சர் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்ட அனைத்து திட்டங்களையும் தர்மமாக வழங்கியது போல் காட்டினார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க வினர் கலந்து கொண்டனர்.
- தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.
நாகர்கோவில்:
பால் விலை, மின் கட்டணம், சொத்து வரி, வீட்டு வரி உயர்வை கண்டித்து பாரதிய ஜனதா வினர் தமிழகம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தி னர். குமரி மாவட்டத்தில் 26 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய பா.ஜ.க சார்பில் அகஸ்தீஸ்வரம் சந்திப்பில் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் சுயம்பு தலைமை வகித்தார். அகஸ்தீஸ்வரம் ஒருங்கிணைந்த ஒன்றிய பார்வையாளர் சுபாஷ், தென்தாமரைகுளம் பேரூராட்சி தலைவி கார்த்திகா பிரதாப், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வளையாபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தி னராக மாநில செயலாளர் மீனாதேவ் கலந்து கொண்டு பேசினார்.
அகஸ்தீஸ்வரம் பேரூர் தலைவர் பாரத் நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் திர ளான பா.ஜ.கவினர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் நிறை வில் தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.
தக்கலை தெற்கு ஒன்றிய பாஜக சார்பில் இரணியல் சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது பேரூர் பாஜக தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார் ஒன்றிய தலைவர் பத்மநாபன் பேரூர் தலைவர் ஸ்ரீகலாமுருகன் மாவட்ட செயலாளர் பிரியா சதீஷ் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன் கலந்து கொண்டார்.ஒன்றிய துணை தலைவர் கிருஷ்ணகுமார் மாவட்ட பார்வையாளர் குமார் தாஸ் பொது செயலாளர் வக்கீல் பத்மகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர் கூட்டத்தில் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ராஜாக்கமங்கலம் சந்திப்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய பாஜக தலைவர் பொன் சுரேஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய பொதுச் செயலாளர் செந்தில் அதிபன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட் டத்திற்கு குமரி பா. ரமேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.மாவட்ட கல்வியாளர் பிரிவு தலைவர் டாக்டர் சிவக்குமார், ராஜக்கமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதீஸ்வரி சுகுமார், கணபதிபுரம் பஞ்சாயத்து தலைவர் ஜெயஸ்ரீ, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ஹேமா, பாஜக ஒன்றிய செயலாளர் ஜெயஸ்ரீ, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன் ஒன்றிய செயலாளர் தாமோதரன் ஊராட்சி மன்ற துணை தலைவர்கள் செல்லத்துரை, ரமேஷ் முன்னாள் வந்திய கவுன்சிலர் சுகுமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆசாரிபள்ளம் சந்திப்பில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு மேற்கு மாநகர பாஜக தலைவர் சிவசீலன் தலைமை தாங்கினார்.மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயராம் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் மோகன்ராஜ், மாமன்ற உறுப்பினர் ஆன்றோடைல்ஸ்டைனா ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
போராட்டத்தில் மாநகர பொதுச்செயலாளர்கள் வேலானந்தன், பிரஜாபதி, பொருளாளர் ராஜுவ் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிவ பிரசாத் மாநகர தொழில் பிரிவு தலைவர் முத்துகிருஷ்ணன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜெயந்தி உட்பட நூற்றுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.
குளச்சல் காமராஜர் பஸ் ஸ்டாண்டில் நகர தலைவர் கண்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில செயற்குழு உறுப்பினர் குமாரதாஸ், நகர பார்வையாளர் சிவகுமார் பிரபு, மாவட்ட பிரசார அணி முன்னாள் தலைவர் ஜெயபிரகாஷ், நகர பொதுச்செயலாளர் ஜெனோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர பொதுச்செயலாளர் பிரதீப்குமார் வரவேற்று பேசினார்.மாவட்ட முன்னாள் தலைவர் பொன் ரெத்தினமணி, கவுன்சிலர்கள் சுரேஷ்குமார், சுஜித்திரா, முன்னாள் கவுன்சிலர் விஜயராணி மற்றும் ஜஸ்டின் செல்வகுமார், பகவதியப்பன், ஜெயச்சந்திரன், ராஜன், சூர்யா முருகன், அல்போன்ஸ், ஜாண்சன், டிக்சன், பெருமாள், துரைராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கேரளாவில் இருப்பது போன்று தனி நலவாரியம் அமைக்க வேண்டும்.
- அடையாள அட்டை வழங்க வேண்டும்
நாகர்கோவில்:
தமிழ்நாடு சுமைப்பணி தொழிலாளர்களுக்கு கேரளா வில் இருப்பது போன்று தனி நலவாரியம் அமைக்க வேண்டும். அடை யாள அட்டை வழங்க வேண்டும் என்பது உட்பட 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நாகர்கோவில் வேப்பமூடு பூங்கா முன்பு இன்று கண்டன ஆர்ப்பா ட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் அய்யப்பன் தலைமை தாங்கி னார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் தங்க மோகனன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் சந்திரபோஸ், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் பொன் சோபன ராஜ், மாநில குழு உறுப்பினர்கள் இந்திரா, சித்ரா மற்றும் நிர்வாகிகள் நாகராஜன், பொன் சுந்தர், மாரிமுத்து, பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியு றுத்தி கோஷங்கள் எழுப்ப ப்பட்டன.
- பாரதிய ஜனதா கவுன்சிலர்கள் இன்று கழுத்தில் ‘மப்ளர்’ அணிந்து வந்திருந்தனர்.
- பா.ஜ.க. கவுன்சிலர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
நாகர்கோவில்:
மாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்க வந்த பாரதிய ஜனதா கவுன்சிலர்கள் மீனா தேவ், முத்துராமன், வீர சூர பெருமாள், அய்யப்பன், ரமேஷ் ஆகியோர் இன்று கழுத்தில் 'மப்ளர்' அணிந்து வந்திருந்தனர். கூட்டம் தொடங்கியதும் கவுன்சிலர் மீனாதேவ் பேசுகையில், நாகர்கோவில் அனாதை மடம் மைதானத்தில் இருந்து மணலை அப்புறப்படுத்து வதற்கு ரூ.25 லட்சம் செலவு செய்யப்பட்டு உள்ளது.
இது மாநகராட்சிக்கு மிகப்பெரிய இழப்பாகும். வருவாய் வரக்கூடிய இந்த திட்டத்தில் மாநகராட்சிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஊழல் நடந்து உள்ளது. தேசியக் கொடி ரூ.20 லட்சத்தில் வாங்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதிலும் ஊழல் நடந்து உள்ளது, இதற்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.
அப்போது மற்ற பா.ஜ.க. கவுன்சிலர்கள் நாகர்கோவில் நடந்த தி.மு.க. கூட்டத்தில் பாரதிய ஜனதாவினரை சீவி விடுவதாக கூறிய மேயரை கண்டிக்கிறோம் என்று கூறினார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தான் நாங்கள் கழுத்தில் 'மப்ளர்' அணிந்து வந்ததாகவும் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து பா.ஜ.க. கவுன்சிலர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் கூட்ட அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு தி.மு.க. கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து தி.மு.க., பாரதிய ஜனதா கவுன்சிலர்களுக்கிடையே சலசலப்பு ஏற்பட்டது.
பின்னர் பா.ஜ.க. கவுன்சி லர்கள் கூட்டரங்கை விட்டு வெளியேறி போராட்ட த்தில் ஈடுபட்டனர். கையில் கோரிக்கை பதாகைகளை கையில் ஏந்தியவாறு அவர்கள் கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
- நுகர்பொருள் வினியோகஸ்தர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது
- மாநில பொதுச்செயலாளர் கைது
திருச்சி:
திருச்சி மாவட்ட தமிழ்நாடு நுகர் பொருள் வினியோகஸ்தர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் கவுரவ தலைவர் உஸ்மான்அலி தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் அகரம் சிவக்குமார் வரவேற்றார். மாவட்ட துணைத்த லைவர்கள் ராம்குமார், நாகராஜ், மாவட்டச் செயலாளர் அண்ணா துரை, துணை செயலாளர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், திருச்சியில் இருபாலர் மதுக்கூட கேளிக்கை விடுதி நடத்த அனுமதி அளித்ததை கண்டித்து, போராட்டம் நடத்திய தமிழ்நாடு நுகர்பொருள் வினியோகஸ்தர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ராஜசேகரன் மீது பொய்வழக்கு போட்டு, அவரை கைது செய்ததற்கு கண்டனம் தெரிவித்தும், அவரை நீதிமன்ற காவலில் இருந்து விரைவில் விடுதலை செய்ய அரசுக்கு வலியுறுத்தி தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
- மாவட்ட இளைஞர்காங்கிரஸ் கூட்டம் நடந்தது.
- பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில், கிழக்கு மாவட்ட இளைஞர்காங்கிரஸ் கூட்டம் மாவட்ட தலைவர் சரத்குமார் தலைமையில் நடந்தது.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் நடராஜன், தமிழ்நாடு இளைஞர்காங்கிரஸ் பொதுச் செயலாளர் விக்னேஷ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கிருஷ்ணகிரி வடக்கு மாவட்டத்தில் பூத் கமிட்டி உறுப்பினர்கள் நியமிப்பது, வருகிற 16-ந் தேதி மாவட்ட செயற்குழு கூட்டம் நடத்துவது, ஓசூர்-கிருஷ்ணகிரி-ஜோலார்பேட்டை ரெயில் திட்டம் வர கடுமையாக பாடுபட்ட காங்கிரஸ் எம்.பி., செல்லகுமாருக்கு பாராட்டு தெரிவிப்பது, இத்திட்டத்தை, தான்கொண்டு வந்ததாக கூறும் பா.ஜனதா செய்தி தொடர்பாளரும், முன்னாள் எம்.பி.,யுமான நரசிம்மனுக்கு கண்டனம் தெரிவிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் கிருஷ்ணகிரி வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராஜ்குமார், பர்கூர் சட்டசபை தொகுதி தலைவர் கார்த்திக், அஜித் பாஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அகஸ்தீஸ்வரம் ஒன்றிய கழகசெயலாளர் ஜெஸீம் தலைமையில் நடந்தது
- பொதுமக்களை பாதிக்கும் விலைவாசி உயர்வை கண்டித்து நடந்தது
கன்னியாகுமரி:
அஞ்சுகிராமத்தில் பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு உள்பட பொதுமக்களை பாதிக்கும் விலைவாசி உயர்வை கண்டித்தும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்தும் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அஞ்சு கிராமம் பேரூர் செயலாளர் ராஜபாண்டியன் தலைமை தாங்கினார். ஜெயலலிதாபேரவை செயலாளர் மணிகண்டன், ஒன்றிய கழக பொருளாளர் டாக்டர் பாலமுருகன், மாவட்ட மகளிர் அணி இணை செயலாளர் சோபி, அமைப்புசாரா ஓட்டுநர் அணி செயலாளர் வைகுண்ட மணி, அகஸ்தீ ஸ்வரம் ஒன்றிய மகளிர் அணி துணைச் செயலாளர் அருள் செல்வி, கவுன்சிலர் மீனாஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர்களாக அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அதி முக செயலாளர் ஜெஸீம் முன்னாள் நாகர்கோவில் நகர கழகசெயலாளர் சந்துரு என்றஜெயச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்கள்.இந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள் சுந்தரம் பிள்ளை, கவுன்சிலர் ராமச்சந்திரன், விஜயன், ஆட்டோ பரமசிவன், விஷ்ணு, அஞ்சை சுரேஷ், சுந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர். அழகப்பபுரத்தில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு பேரூர் செயலாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார்.பேரூர் அவை தலைவர் பத்மநாபன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினர்களாக அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ஜெஸீம் முன்னாள் நகரக் கழகச் செயலாளர் சந்துரு ஆகியோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் ஜெரோம், செல்வி, பெமியா, குமார், சுரேஷ், ஆன்றனி, தவராஜா, சுனிதா உள்பட பலர் கலந்து கொண்டனர். மயிலாடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை பேரூர் செயலாளர் மனோகரன் தலைமை தாங்கினார். பேரூர் அவைத் தலைவர் சிந்தாமணி, மயிலாடி பால் கூட்டுறவு சங்கத் தலைவர் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
- திரளான நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும்
- நாகர்கோவில் வடக்கு மண்டல பூத் கமிட்டி கூட்டத்தில் தீர்மானம்
நாகர்கோவில்:
குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. நாகர்கோவில் மாநகராட்சி வடக்கு மண்டல பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் நேற்று நடந்தது.
கூட்டத்துக்கு 11-வது வார்டு கவுன்சிலரும், வடக்கு மண்டல பொறுப்பாள ருமான ஸ்ரீலிஜா தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகே சன் முன்னிலை வகித் தார். முன்னாள் அமைச்சர் பச்சைமால் சிறப்பு விருந்தி னராக கலந்துகொண்டு பேசினார்.
மாணவரணி செயலா ளர் மனோகரன், அண்ணா தொழிற்சங்க செய லாளர் சுகுமாரன், மண்டல பொறுப்பாளர்கள் முகேஷ்வரன், ஜெய கோபால்,ஜெவின் விசு, கவுன்சிலர்கள் அக்ஷ்யா கண்ணன், சேகர், கோபால கிருஷ்ணன், ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் கே.சி. யூ.மணி, முன்னாள் நகர செயலாளர்கள் சந்தி ரன், சந்துரு நிர்வாகிகள் ரபீக், கோட்டார் கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மிக்கேல்ராஜ் நன்றி கூறினார்.
விலைவாசி உயர்வு மின் கட்டண உயர்வை கண்டித்து குமரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில்அண்ணா விளை யாட்டு அரங்கம் முன்பு வருகிற 13-ந்தேதி நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண் டும். பாராளுமன்ற தேர் தலை எதிர்கொள்ளும் வகையில் பூத் கமிட்டியில் பொறுப்பாளர்களை நிய மிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.
- ஆக்கூர் கடைவீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
- தமிழக ஆளுநரின் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்தும், தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும் என வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, செம்பனார் கோயில் ஒன்றியம், ஆக்கூர் கடைவீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்க்கு கட்சியின் செம்பனார்கோவில் ஒன்றியச் செயலாளர் கே.பி.மார்க்ஸ் தலைமை வகித்தார்.
மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் வீ.எம்.சரவணன், கண்ணகி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்துக்கொண்டு கண்டன உரையாற்றினர்.
தமிழ்நாடு என்று சொல்ல மறுக்கும், தமிழ்நாட்டு மக்களையும், மரபுகளையும் மதிக்காத, அரசியலமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொள்ளும் தமிழக ஆளுநரின் நடவடிக்களுக்கு கண்டனம் தெரிவித்தும், அவர் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும் என வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்துக்கொண்டு கண்டன உரையாற்றினர்.
- மார்த்தாண்டம் பஸ் நிலையம் முன்பாக மறை மாவட்ட இறைமக்கள் சார்பாக போராட்டம் நடைபெற்றது.
- முதன்மை பணியாளர் ஜார்ஜை மீண்டும் பணி அமர்த்தும் வரை போராட்டம் தொடரும் என கோஷங்கள் எழுப்பினர்.
கன்னியாகுமரி:
காரங்காடு மறைவட்ட முதன்மை அருட்பணியாளர் ஜார்ஜை பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும், மீண்டும் அவரை பணி அமர்த்த வேண்டும் எனவும் மார்த்தாண்டம் பஸ் நிலையம் முன்பாக மறை மாவட்ட இறைமக்கள் சார்பாக போராட்டம் நடைபெற்றது.
குழித்துறை மறை மாவட்ட போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் மரிய சேவியர் ராஜன் தலைமை தாங்கினார். மறை வட்ட போராட்ட குழு துணை தலைவர்கள் வர்க்கீஸ், அருள்ராஜ், ராஜா டைட்டஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போராட்ட குழு செயலர் டென்னிஸ் ஆன்றனிஸ், அருள்பணியாளர்கள் ராபர்ட், சேவியர் மைக்கேல், போராட்டக்குழு நிர்வாகிகள் கிறிஸ்டோபர், மைக்கேல்தாஸ், ஜெரோம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் முதன்மை பணியாளர் ஜார்ஜை மீண்டும் பணி அமர்த்தும் வரை போராட்டம் தொடரும் என கோஷங்கள் எழுப்பினர்.
- 1982-ம் ஆண்டு மண்டைக்காட்டில் ஏற்பட்ட கலவரம் மதத்தின் அடிப்படையில் ஏற்பட்டது அல்ல.
- 8-ந் தேதி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குமரி மாவட்டம் வருகிறார்.
நாகர்கோவில்:
தி.மு.க. குமரி கிழக்கு மாவட்ட செயலாளரும், நாகர் கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ் ஒரு அறிக்கை விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
வெள்ளிமலை ஆசிரம சுவாமி சைதன்யானந்தா மகராஜ் மண்டைக்காடு கோவிலில் நடைபெறுகின்ற சமய சொற்பொழி தொடர் பாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லினுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்து இருக்கிறார். அவருக்கு எனது கண்டனத்தை தெரி வித்துக் கொள்கிறேன். 1982-ம் ஆண்டு மண்டைக் காட்டில் ஏற்பட்ட கலவரம் மதத்தின் அடிப்படையில் ஏற்பட்டது அல்ல. அது ஒரு சிறிய பிரச்சினை ஏற்பட்டது. இப்போது கன்னியாகுமரி மாவட்டம் அமைதி பூங்காவாக உள்ளது.
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்று 20 மாதத் தில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு வழிகாட்டுதலின் பேரில் குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களும் குடமுழுக்கு நடந்து கொண்டு இருக்கிறது. அதிக நிதியை தமிழக முதல்வர் குமரி மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்துள்ளார்.
இந்து சேவா சங்கம் என்ற பெயரில் அறநிலை யத்துறை கோவில்க ளில் உள்ள கட்டிடங் களை கையகப்படுத்தி கோவிலில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளும் இந்து சேவா சங்கம் நடத் தியது என கூறி வந்தனர். புகாரின் பேரில் தமிழக முதல்வர் நிகழ்ச்சிகளை அறநிலையத்துறை நடத்தும் என அறிவித்துள்ளார்.
மண்டைக்காட்டில் ஹைந்தவ சேவா சங்கம் நடத்தும் சமய மாநாட்டில் உள்ள போஸ்டரில் பாரதிய ஜனதா நிர்வாகிகள் பெயரை போட்டுள்ளனர். இதனால் இந்து சமய மாநாடா? அரசியல் மாநாடா? என்று தெரிந்து கொள்ள வேண் டும். மார்ச் 5-ந் தேதி மாசி கொடைவிழா சிறப்பாக நடக்கும்.
நிகழ்ச்சிக்கு இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வருகை தருகிறார். அனைத்து அமைச்சர்களும் கலந்து கொண்டு விழா சிறப்பாக நடக்கும். 8-ந் தேதி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குமரி மாவட்டம் வருகிறார். உங்கள் பேச்சை குறைத் துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.