search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பரதநாட்டியம்"

    பாரதிராஜாவின் 'பொம்மலாட்டம்' படம் மூலம் மிகவும் பிரபலமான ருக்மிணியின் பரத நாட்டியத்துக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. #Rukmini
    பாரதிராஜாவின் 'பொம்மலாட்டம்' படத்தில் நடித்தவர் ருக்மிணி. தொடர்ந்து ஆனந்த தாண்டவம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

    லண்டன், நெதர்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் பரதநாட்டிய பயிற்சி வகுப்புகள் நடத்திவருகிறார். நெதர்லாந்தின் 'கார்சோ டான்ஸ் தியேட்டர்' என்ற அரங்கில் உலகின் தலைசிறந்த டான்சர்கள் மட்டுமே நிகழ்ச்சி நடத்தமுடியும். சென்ற வருடம், ருக்மிணி அங்கே நடனமாடினார்.



    பரதநாட்டியத்தையும் பாலே டான்ஸையும் கலந்து, 'மாடர்ன் டான்ஸ்' என்று சொந்தமாக கொரியோகிராபி செய்து நடனமாடியிருந்தார். ருக்மிணியின் திறமையைப் பார்த்து வியந்து, இந்த வருடமும் கார்சோ டான்ஸ் தியேட்டரில் நடனமாட அழைத்துள்ளார்கள். சென்ற வருடம் சிறந்த நடனத்தை கொடுத்ததற்காக நெதர்லாந்தின் கவுரவ குடியுரிமையும் கொடுக்கப்போகிறார்கள்.

    சிவகங்கை அரசு இசைப்பள்ளியில் குரலிசை, பரதநாட்டியம், தவில், நாதசுரம் உள்ளிட்ட படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
    சிவகங்கை:

    சிவகங்கை அரசு இசைப்பள்ளியில் குரலிசை, பரதநாட்டியம், தவில், நாதசுரம் உள்ளிட்ட படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

    இதுகுறித்து அரசு இசைப்பள்ளி தலைமை ஆசிரியர் மீனலோசினி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு கலை மற்றும் பண்பாட்டு துறையின்கீழ் சிவகங்கையில் மாவட்ட அரசு இசைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 2018-19-ம் கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இங்கு குரலிசை(வாய்ப்பாட்டு), பரதநாட்டியம், தவில், நாதசுரம், தேவாரம், மிருதங்கம், வயலின் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. 12 முதல் 30 வயது வரையுள்ள மாணவர்கள் இதில் சேர்ந்துகொள்ளலாம்.

    இதில் சேர விரும்பும் நபர்கள் குரலிசை, பரதநாட்டியம், தேவாரம், வயலின், மிருதங்கம் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் சேர 7-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பரதநாட்டிய பிரிவில் ஆண்களும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். தவில், நாதசுரம் ஆகிய வகுப்புகளில் சேர கல்வித்தகுதி தேவை இல்லை.

    அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் 3 ஆண்டுகள் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி கட்டணமாக ஆண்டுக்கு ரூ.152 மட்டும். பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு இலவச பஸ் பயண அட்டை, கல்வி உதவித்தொகையாக மாதம் ரூ.400 மற்றும் அரசு மாணவர் விடுதி வசதி அளிக்கப்படும். எனவே இசை கல்வியில் ஆர்வம் உள்ளவர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் சிவகங்கை அரசு இசைப்பள்ளியில் நேரிடையாக விண்ணப்பித்து பயனடையலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
    ×